வாசிப்பவர்களால் வாழ வேண்டும் அறம்!

-சாவித்திரி கண்ணன்

அன்பு நண்பர்களே,

அறம் இணைய இதழ் தொடங்கி அடுத்த மாதத்தில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக இதழ்களில் தனக்கென ஒரு தனித்துவத்துடன் அறம் வந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்!

சமூகத் தளத்திலும், அரசியல் தளத்திலும் நிகழ்பனவற்றை உள்ளதை உள்ளபடி உண்மைத் தேடலுடன் பகிர்ந்து வருகிறோம்! உண்மை தான் முக்கியம் , அதில் சமரசமோ, சார்புத் தன்மையோ தலையிட அனுமதிப்பதில்லை.

இன்றைய பெரு நிறுவனங்களின் ஊடகங்கள் அதிகார மையங்களை சார்ந்து இயங்குவதால் தொடர்ந்து பற்பல மாயைகளை கட்டமைத்து உண்மைகளை உணரவிடாமல் மக்களை குழப்பி வருகிறார்கள். அங்கே பணியாற்றும் பத்திரிகையாளர்கள் தாங்கள் விரும்பினாலும் உண்மைகளை எழுதவோ, பேசவோ முடிவதில்லை.

ஊடகம், ஊடகவியாலாளர் என்பதையே அதிகார மையங்களை நெருங்கி அண்டி பிழைப்பதற்கான கருவியாக சாதுரியமாக சிலர் இயங்குகின்றனர்.

இத்தகைய சூழல்களுக்கு இடையில் உண்மையின் சிறு ஒளிக் கீற்றாக அறம் ஒளி பாய்ச்சி வருகிறது. பொருளாதார ரீதியாக எந்த அரசியல் இயக்கங்களையோ அல்லது அதிகார மையங்களையோ சாராதிருப்பதால் தான் இது சாத்தியமாகிறது. ஆகவே, படிக்கும் வாசகர்கள் தான் அறம் தொடர்ந்து வர பங்களிப்பு தர வேண்டும்.

எந்த நற்காரியத்தையும் விலகி நின்று பார்வையாளர்களாக பார்த்து கடந்து விடுகிறார்கள் பெருந்திரள் மக்கள்! பல்லாயிரக் கணக்கில் வாசகர்கள் இருந்தும், விரல்விட்டு எண்ணத்தக்க வெகு சிலரே அறத்திற்கு தொடர்ந்தும், அவ்வப்போதும் தங்கள் பங்களிப்பை தங்கள் சமூக கடமையாக உணர்ந்து தருகிறார்கள். இப்படியான நண்பர்கள் தரும் உற்சாகம் – நாம் சமூக மனசாட்சியுடன் ஒத்திசைந்து இயங்கும் போது –  சமூகம் அறத்தை அரவணைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

ஆனால், மிகச் சிலரே இந்த பங்களிப்பை செய்வதால் மிகவும் சோர்வும் பல நேரங்களில் மனதை அழுத்துகிறது. அறம், தன் சுயபலத்துடன் இயங்க, இதை வாசிக்கும் வாசகர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அறத்தின் ஒளிச் சுடர் அணையாமல் தொடர்ந்து ஒளிவீச மாதா மாதமோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்தோ எண்ணெய் வார்த்திடுங்கள்!

அறத்தை வாசிக்கும் சமூக நலன் சார்ந்து சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது. ஆகவே, அவரவர் சக்திக்கு உட்பட்டு தொடர்ந்து உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துங்கள் நண்பர்களே!

www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி சப்கிரைப்ஸ் செய்துவிட்டீர்கள் என்றால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் உடனுக்குடன் அனுப்பப்பட்டுவிடும்!

சாவித்திரி கண்ணன்

ஆசிரியர் – அறம் இணைய இதழ்

https://aramonline.in/support-aram/

Google pay 9444427351

Bank Name: STATE BANK OF INDIA

Account Name: ARAM ONLINE

Bank Account No: 39713109068

Branch: SHASTHRI NAGAR

IFSC code:SBIN0007106

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time