மவுனித்து இருப்பது, மறைமுகமாக செல்வாக்கான கொலை குற்றவாளிக்கு உதவுவது, அரசு நிர்வாகத்தை இந்த அநீதிக்கு அரண் தந்து நிறுத்துவது என்பதில் ஸ்டாலின் தீவிரம் காட்டுகிறார்! மாணவி எழுதப்பட்டதாக சொல்லப்பட்ட கடிதம் போர்ஜரி என்பது தற்போது தடயவியல் துறை மூலம் அம்பலப்பட்டுவிட்டது.
கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தில் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பே அவசரப்பட்டு நீதிபதி கைது செய்யப்பட்டிருந்த பள்ளிக் கூட நிர்வாகிகளுக்கு ஜாமீன் கொடுத்தார்!
கொடுத்ததோடு நில்லாமல், பள்ளி நிர்வாகிகளுக்கு நற்சான்றிதழ் பத்திரமும் வாசித்தார். கூடுதலாக நீதிபதி, மாணவியின் கடிதம் என நிர்வாகத்தால் தரப்பட்ட – காகிதத்தில் எழுதப்பட்டிருப்பதைக் கொண்டு தீர்ப்பே வாசித்து விட்டார். போதாக்குறைக்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மீது கருணை மழையும் பொழிந்துவிட்டார்!
அந்தக் கடிதமானது தடயவியல் துறையில் (forensic department) தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு நேற்றைய தினம் தான் கோர்ட்டுக்கே சீல் வைத்த கவரில் அனுப்பபட்டு உள்ளதாம்!
நாம் விசாரித்த வகையில், ”அது போர்ஜரி கடிதம் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை” என பாரன்சிக் வட்டாரத்தில் தெரிவித்தனர். ‘மாணவி எழுதிய நோட்டு புத்தகங்களை வைத்து பார்த்ததில் மாணவி கையெழுத்தும், கடிதத்தில் உள்ள கடித எழுத்துக்களுக்கும் ஏழாம் பொருத்தம்’ இது தெளிவுபடுத்தபட்டு உள்ளதாம்!
அந்த சீல் வைத்த கவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்து ஆகிவிட்டது. இனி நீதிபதி உண்மைகளை உள்ளபடியே எடுத்துரைத்தால் தான் உண்டு! இந்த உண்மையை சுலபத்தில் வெளியே சொல்ல மாட்டார்கள்! ஆனால், ஒரு விஷயம் உளவுத் துறையின் நெருக்குதலைக் கூட பொருட்படுத்தாமல் ‘நேர்மையாக ரிப்போர்ட்’ தந்த அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தமிழகமே தலை வணங்க கடமைப்பட்டு உள்ளது.
மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை தொடர்பான கெமிக்கல் ‘அனாலிசஸ் ரிப்போர்ட்’ மட்டும் இன்னும் கூட வெளியே தெரியாமல் கமுக்கமாக வைத்துள்ளனர். முதன்முதலாக அது மாணவியின் வயிற்றில் மதுபானம் இருப்பதை அம்பலப்படுத்தியது நினைவிருக்கலாம். பிறகு, ‘அது சம்பந்தமாக யாரும் பேசக் கூடாது’ என கறாராக மறுத்துவிட்டனர். இன்னும் எத்தனையத்தனை உண்மை மறைப்புகளும், புதைப்புகளும் தொடருமோ…?
மாணவியின் அம்மா செல்வி, ”அந்த கையெழுத்து என் மகளுடையது அல்ல” என்றும், ”என் மகள் சிவப்பு மை கொண்ட பேனாவை பயன்படுத்துவதில்லை” என்றும் சொன்னது நினைவிருக்கலாம்!
மாணவி உடுத்தி இருந்த ஆடைகள் முதலில் சென்னைக்கு தான் கொண்டுவரப்பட்டதாம். பிறகு, அதை ”சென்னையில் ஆய்வு செய்ய வேண்டாம், விழுப்புரத்திற்கு அனுப்புங்கள்” என சொல்லி விட்டார்களாம்!
கடிதம் பொய் என்றால், பொய்யான கடிதத்தை தர வேண்டிய அவசியம் ஏன் வந்தது? இந்த பொய்யான கடிதம் மாணவியின் கொலையை மட்டும் மறைக்கவில்லை. அந்த புனைவில் சிக்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி ஆசிரியர்கள் எதிர்காலமும், நற்பெயரும் சேர்ந்தே பாதிக்கப்பட்டு உள்ளது.
மாணவியின் தோழிகளை விசாரித்த நீதிமன்றம், அந்த விசாரணையின் உண்மையை வெளி சொல்லாமல் வைத்துள்ளது. இன்னும் சொல்வதென்றால், அந்த குழந்தைகளிடம் பெற்ற வாக்குமூலங்களை மறைப்பது என்பது அந்த நிர்வாகத்தை காப்பாற்றும் முயற்சியாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.
சி.பி.சி.ஐ.டி அனைத்து உண்மைகளையும் விசாரித்து அறிந்து விதிர்விதிர்த்து அமைதி காக்கிறது. ஆட்சித் தலைமையின் நோக்கத்திற்கு எதிராகவே உண்மைகள் உள்ளன! ஒட்டுமொத்த காவல்துறையும் உலகறிந்த ஒரு கொலை கும்பலை – அதுவும் குழந்தைகளைக் கொன்ற கும்பலை -பாதுகாப்பதில் முழு மூச்சாக இறங்கியுள்ளது.
எல்லாவற்றுக்கும் காரணம் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆர்.எஸ்.எஸ் காரர். பாஜகவின் முக்கியஸ்தர் என்பது மட்டுமே! ஒட்டுமொத்த தமிழக மக்களும் உள்ளம் நொந்து, நாளும் இந்த கொலை தொடர்பான திமுக அரசின் நகர்வுகளை வேதனையோடு பார்த்தும், கேட்டும் வருகிறார்கள்! தமிழக அரசின் வழக்கறிஞர் முழுக்க, முழுக்க நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகிகளுக்கு ஆதரவான நிலை எடுத்து பேசுவதையும், நீதிபதிகளுக்கு தவறான தகவல்களை தந்து, நீதிமன்றத்தை திசை திருப்புவதையும் காணும் போது உள்ளம் பதைக்கிறது.
உலகம் முழுக்க பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப போஸ்ட் மார்ட்டத்தில் அவர்கள் கேட்கும் ஒரு மருத்துவரை இணைத்துக் கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதி மற்றும் நீதியாகும். ஆனால், தமிழக அரசு அதை பிடிவாதமாக மறுத்துவிட்டது. அப்போதே, ‘இதில் உண்மை வெளிவருவதற்கு அரசுக்கு விருப்பமில்லை’ என்பது பட்டவர்த்தனமாக புரிந்து போனது!
அய்யா ஸ்டாலின் அவர்களே, இந்த ஆர்.எஸ்.எஸ் கொலை பாதகர்களுக்கு துணை போவதற்காகவா திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நாங்கள் எழுதினோம். உங்கள் ஆட்சி தமிழகத்தில் அவர்களின் ஆதிக்கத்திற்கு தடையாக இருக்கும் என நம்பித் தானே – திராவிடக் கட்சி – என நம்பித் தானே ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்தோம்.
ஓட்டு போட்ட மக்களையும், ஆட்சிக்கு வர உழைத்த கட்சிக்காரர்களையும், தோழமை இயக்கங்களையும் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டீர்களே!
எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் 356 பேரை சிறை கொட்டடியில் சாதி ஆதிக்க, மத ஆதிக்க சக்திகளின் ஆசைக்காக வைத்துள்ளீர்களே! அவர்களில் பலரின் கைகளை உடைத்து உள்ளீர்களே! எவ்வளவு பாதுகாப்பற்ற முறையில் இன்று தமிழகம் உள்ளது என்பதை நினைத்து பார்த்தாலே அதிர்ச்சியாக உள்ளது.
ஒரு கலவரம் நடந்தால் அதற்கு விசாரணைக் கமிஷன் அமைத்து உண்மையை கண்டு பிடிப்பார்கள்! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அப்படித்தான் விசாரணை கமிஷன் அமைத்து உண்மைகள் வெளிவந்தன. அப்படி உண்மைகள் வெளிவந்துவிடக் கூடாது என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத் தானே சிறப்பு காவல் படையை அமைத்து அவர்களை மத ஆதிக்கவாதிகளின் கைக்கூலியாக செயல்பட வைத்துவிட்டீர்கள்? ஏன், அந்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேட்டிவ் போலீஸ் இது வரை அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான இரு சக்கர வாகனங்களை எரித்து அழித்த நிர்வாகத் தரப்பு குண்டர்கள் ஒருவரை கூட கைது செய்யவில்லை..?
பொதுமக்கள் பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கும் போது பள்ளிக் கூடத்தில் முன் கூட்டியே தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களையும், பின்புற வாசல் வழியாக நுழைந்தவர்களையும் குறித்த செய்திகளை ஏன் காவல்துறை இன்று வரை மறைக்கிறது?
Also read
நடைபெற்ற அதிபயங்கர தீ வைப்பு சம்பவங்களில் கொலைக் குற்றவாளி யுவராஜின் தளபதி ராஜசேகரனின் தீரன் சின்னமலை பேரவை அமைப்பினரின் கைவரிசையை திமுக அரசாங்கம் மறைப்பது ஏன்? மகாபாரதி பள்ளியின் அதிபர் மோகன் செய்த சதிச் செயல்கள் என்னென்ன? இவை எதுவுமே வெளியே வராதா..?
செல்வமும், செல்வாக்கும் மிகுந்த சாதிய சக்திகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து ஏழை, எளிய மக்களுக்கு எதிராக பெரும் அநீதிக்கு துணை போவது நிச்சயமாக திராவிட மாடல் ஆட்சியல்ல! நாடறிந்த ஒரு கொலையை மறைப்பதில் – அதுவும் ஆர்.எஸ்.எஸ்காரர் கொலைக் குற்றத்திற்கு துணை போவது – திராவிட இயக்கத்திற்கு பேரிழுக்கு ஆகும்! இது, மதவாத சக்திகள் தமிழகத்தில் தங்கு தடையின்றி காலூன்றவே துணை புரியும்! நேரடி பாஜக ஆட்சியை விட அவர்களின் அடிமைகள் ஆட்சி மிக ஆபத்தானது!
மகாகவி பாரதியின் வரிகள் தாம் நினைவுக்கு வருகிறது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் – ஆனால்,
தர்மம் மறுபடியும் வென்றே தீரும்!
ஒன்றுளதுண்மை! ஒன்றுளதுண்மை!- அதைக்
கொன்றிடலொண்ணாது, குறைத்திடலொண்ணாது!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
உங்கள் கட்டுரையைப் படித்தாலும் ஆதிக்க ஆளும் ஆட்சியாளர்களின் உள்ளம் உறுத்துமா? தெரியவில்லையே!
Government is trying to protect one individual and his team. It is gaining bad name from common public. people are losing with law and peace maintaining agency of TN. Only GOD will have to save TN.
fggfg
உங்கள் நேர்மைக்கு பாராட்டு. இவர்கள் RSS-ன் அடிவருடி, பிஜேபியின் கொத்தடிமை என்பதை இனியாவது தெரிந்துகொள்ளுங்கள். பணம் பதவி மட்டுமே அவர்களுக்கு தேவை…கொள்கை என்பது கொள்ளையடிப்பது மட்டுமே.
இவர்கள் இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்க மாட்டார்கள்! இறுதியில் குழந்தை தாயின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாள் என முடித்து விடுவார்கள்..அதற்காக தாயின் மீது அடுக்கடுக்காக அவச்சொற்கள் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே தெரிகிறது இந்த வழக்கு செல்லப்போகும் விதம்
Continue your good work against fake politicians!
நன்றி ஐயா ஏழை மக்களின் மனகுமுறளை அழகாக எடுத்துரைத்தீர்கள்
உங்களது அறப்போர் தொடரட்டும்- எங்களது ஆதரவு எப்போதும் உண்டு-
ஸ்ரீமதியின் அகால மரணம்- அதை மூடி மறைக்க, தமிழக அரசின் ஆதரவு ஒரு எதிர்பாராத நிலைப்பாடு ஆகும். தனிப்பட்ட நபர் கொடுக்கும், மது-மாது விருந்துகளும், பணமும், பல லக்ஷ தமிழர்களின் ஓட்டைவிட, வலிமையானது என்று தெரிகிறது. Keep-up your whistle blowing service.
ஸ்ரீமதி அகால மரணம்- pt 1 உண்மை தண்ணீரில் மிதக்கும் பந்து
இது ஒரு, திட்டமிடப்படாத, போதையில் செய்யப்பட்ட கொலை. திட்டமிட்டு மறைக்க, தற்கொலை என்று திசை திருப்ப, போலீஸ் தரப்பில், நிர்வாக தரப்பில், நீதிமன்றத்தில் உள்ள, சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிக்க, முயற்சிகள் நடக்கின்றன.இந்த முயற்சி தண்ணீரில் மிதக்கும் ஒரு பந்தை, கையை வைத்து அமுக்குவது போன்றது.ஓரிடத்தில் அமுக்கினால், சிறிது தள்ளி மறுபடியும் மேலே வரும். உண்மையை, மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
ஸ்ரீமதி மரணம் அடைந்தது between 11 pm to 12 pm on 12-07-2022. விருந்து நடந்த இடத்தில், பெண்ணை அழைத்து, போதை கொடுத்து, நிர்வாணமாக்கினர். பலாத்கார முயற்சி செய்யும்போது, பெண்ணுக்கு போதை சிறிது தெளிந்து, தப்ப முயன்றதால், தாக்கினர். எதிர்பாராத விதமாக பெண் இறந்து விட்டாள்.
கொலை என்று தெரிந்தவுடன், சாந்தியும் ரவியும், வழக்கம்போல், தற்கொலை நாடகம் நடத்தலாம். ஏழை குடும்பம். கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆட்கள். சில நாட்கள் கூவிவிட்டு, ஓய்ந்து விடுவார்கள். பணத்தை வைத்து அமுக்கி விடலாம். போலீஸ்தான் நம் கையில் இருக்கிறதே. ஆனால் சரண், சக்தி இங்கு இருக்கவேண்டாம். Finger print எடுத்தால் மாட்டி கொள்வார்கள், என்பதால், அவர்களை தலை மறைவாக்கினர். அடுத்து, ரயில்வே track ( Yuvaraj ஸ்டைல்), தூக்கு, விஷம், மற்றும் கிணற்றில் வீசுவது போன்றவை, ஆராயப்பட்டன. கடைசியில், மூன்றாம் மாடியில் இருந்து வீசிவிட்டு, பெற்றோர்களுக்கு தகவல் சொல்வது. அவர்கள் வந்தவுடன், உடனடியாக Post martum செய்து, பாடியை பார்சல், செய்துவிட வேண்டும். Hospital நிர்வாகமும், நமது கையில்தான் உள்ளது., என்று சாந்தி திட்டமிட்டார்.
உடனே, மன்னங்கட்டி, கிருத்திகா, சாந்தி, ஜபடவ்ப்ரியா ஆகியோர், பிணத்துடன் அருகில் உள்ள 3 மாடி கட்டிடத்திற்கு, தூக்கி சென்றனர். அப்போது ஏற்பட்ட ரத்த கரைகள்தான், படியிலும், சுவரிலும். 3 வது மாடிக்கு சென்ற பிறகுதான், அங்குள்ள GRILL தடையை பார்த்தார் சாந்தி..மேலும், அங்கு நின்று பிறகு குதிக்க வாட்டம் இல்லை, யாரும் நம்ப மாட்டார்கள். ஆகவே, பிணத்தை, SCHOOL வளாகத்தில் இருந்து, அப்புறபடுத்தி, உடனடியாக, பிணவறையில், சேர்த்து விட்டால், பிறகு யாரும், எதுவும் கேட்க முடியாது. POSTMARTUM DOCTORS நமது கையில். கமுக்கமாக, அமுக்கி விடலாம், என்று சாந்தி திட்டமிட்டார். ஆனால், அவர் திட்டம் செல்வியிடம் பலிக்கவில்லை. sELVI ஒரு Mcom பட்டதாரி. நாட்டு நடப்பு அறிந்தவர்.
பிணத்தை, கண்களில் காண்பிக்காமல், கூறு போட்ட பிறகு, பார்சல் செய்து கொடுத்து விடலாம் என்ற திட்டம், செல்வி கூப்பாடு போட்டு ஊரை கூட்டிவிட்டதால், பிணவறையை திறந்து, செல்வியும் அவரது உறவினர்களும் bodyயை பார்க்கும்படி செய்து விட்டது. ஸ்ரீமதியின் அலங்கோல நிலையை பார்த்தவுடன், செல்வி, இது கொலைதான், கற்பழித்து கொன்று இருக்கிறார்கள். ஆகவே post martum செய்யும்போது, எனது தரப்பில் ஒரு மருத்துவரை அனுமதிக்க வேண்டும், என்று செல்வி, கூறினார். அப்படி அனுமதித்தால், கதை கந்தலாகிவிடும், என்பதால், நிர்வாகம், போலீஸ் மூலம் அனுமதிக்கவில்லை. மேலும், சின்ன சேலம் போலீஸ், ரவிகுமாரின் கையில். ரவிக்குமாருக்கு, போலீஸ், கோர்ட், எல்லாம் அத்துபடி. யுவராஜ்தான் குரு. காவல் காக்கி சட்டைக்கும், வக்கீல் கருப்பு கோட்டிற்கும், நாங்கள் அஞ்சமாட்டோம். -, என்பதுதான் அவர்கள் கொள்கை.
ஆகவே sec 174ல் சந்தேக மரணம் என்று பதியபட்டது. 13ம் தேதி, செல்வி பள்ளிக்கே சென்று, குதித்த இடத்தை காண்பிக்குமாறும், ஸ்ரீமதி தோழியர்களை, காண்பிக்குமாறும் கேட்டு ரகளை செய்தார். இதையும், சாந்தி எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஒரு இடத்தை காண்பித்தனர். அங்கு ரத்த கரைகள் இல்லை. நின்று பிறகு குதிக்குமாறு, இடமும் வாகாக இல்லை. நிலைமை, பெரிதாவதைக் கண்ட சாந்தி, செல்வி குரூப்பை, இன்ஸ்பெக்டர் மூலம் வரவழைத்து, பண பேரம் செய்தனர். அதற்கும் செல்வி மசியவில்லை. எனக்கு நீதிதான் வேண்டும். காசு அல்ல, என்று செல்வி உறுதியாக தெரிவித்து விட்டார்.
Whatts app மூலம் தமிழ்நாடு முழுவதும் பரவி விட்டது.செல்வி போன்ற பணத்தால் மடக்க முடியாத நபர்கள், அதிகாரவர்க்த்திலும் ( நல்லம்ம நாயடு, குன்ஹா, சஹாயம் போன்றவர்கள்) உள்ளதால், ரவி உடனே டெல்லி சென்று, அரசியல்., அழுத்தம் கொடுக்க முயன்றார். ரகளை அதிகமாகி விட்டதால், சின்னசேலம் போலீஸ், sec 174 ல் இருந்து sec 305 மற்றும் juvanile justice act போதை மருந்து சிறார்களுக்கு கொடுத்தல் sec 65 மாற்றம் செய்யும்படி ஆகியுள்ளது.
கைது ஆனபின் ரவி, சாந்தி, சிவ சங்கர், கிருத்திகா, ஹரி பிரியா ஆகியோருக்கு, ஜாமீன் கீழ் கோர்ட்டால் மறுக்கப்படுகிறது. ஆனால், வக்கீல்கள், உயர் நீதி மன்றத்தில், CPCID case sec 174 க் காட்டி, இரண்டு தோழியர்களின் வாக்குமூலம் வாங்கி, அரைகுறையாக உள்ளpost Martem reports ஐ, காண்பித்து, ஜாமீன் வாங்கியுள்ளனர். 1. இது கொலைதான். இந்த காயங்கள் எதுவும் மேலிருந்து கீழே விழுவதால் ஏற்படாது. மூக்கின் உள்புறம் எலும்பு உடைந்து இருப்பது, வாயையும் மூக்கையும், யாரோ அமுக்கியதால் ஏற்பட்டுள்ளது.அதனால்தான் மலம் வெளியேறி இருக்கிறது.
2. கை எலும்புகள் உடையவில்லை. ஆனால் விலா எலும்புகள், சீராக, இரும்பு ஆயுதத்தால் தாக்க பட்டுள்ளன. விழுந்து இருந்தால் முதலில் கைகள் உடைந்து இருக்கும்.
3. கற்பு அழிப்பு நடந்ததாக தெரியவில்லை. ஆனால் பலாத்காரம் நடைபெற்றுள்ளதை, மார்பில் மற்றும் உடம்பில் உள்ள, நக கீறல்கள் உறுதி படுத்துகின்றது.
4. Body குப்புற கிடந்ததாக தெரிகிறது. அப்படியானால், ஒரே சமயத்தில் விலா எலும்பு வலது புறமும், மண்டைகாயம், பின்புறம் இடது புறத்தில் எப்படி ஏற்படும்.
5. Crime site ஐ பார்க்கும்பொழுது, 3வது மாடியில், grill வழியாக நுழைந்து, நிற்பதுகூட முடியாது. அப்புறம் குதிப்பது எப்படி சாத்தியம்.
6. Crime சைட்டில் இரத்த கரைகள், எதுவுமே இல்லை.
7. Swab test, Chemical reports ஆகியவைகள், வராத நிலையில், Post Martum reports முழுமை அடையவில்லை. ஆகவே அதை Base ஆக வைத்து, ஜாமீன் வழங்கியது, தவறு. ஏற்க முடியாது. உடனடியாக Bail Cancel செய்ய வேண்டும்.
8. முதல் post martum reportil virginity test எடுக்காமல் விட்டது, , pelvic எலும்புகள் intact ஆக இருந்தது என்று பொய் கூறியது போன்றவைகளுக்கு, மருத்துவர்கள், மேல், நடவடிக்கை பாய வேண்டும். , Pelvic எலும்புகள், தாக்கப்பட்டால்தான் உடையும். விழுந்தால், முதலில் கால் எலும்புகள்தான் உடையும்.
9. ஆடைகள் அணிந்த நிலையில் விழுந்து இருந்தால், நகக் குறிகள், மார்பகம் மற்றும் உடல் பகுதிகளில், சிராய்புக்கள் இரத்தம் வரும்படி ஏற்படாது. உடைகளில், சேதம் எதுவும் இல்லை.
10. நிர்வாகம் கூறியபடி இது “ தற்கொலை” என்றால் ,என்ன நடந்தது என்பது ஸ்ரீமதிக்குதான் 100% தெரியும். நிர்வாகம் அப்பாவி என்றால், ஆரம்பம் முதல், இன்று வரை, ஏன் ஒதுங்கி, ஒளிய வேண்டும். A to Z. CCTV கிளிப்பிங்க்ஸ் (12-07-2022- 12 am to 13th 12am) உள்ளதை, செல்வி Family க்கு ஒரு copy கொடுத்து விட்டால், இன்றோடு கேசையே முடித்து விடலாமே. இதில் நிர்வாகம் ஏன் பம்முகிறது.
ஆகவே 2 க்கு மேற்பட்ட ஓநாய்கள், பெண்ணை நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்யும்போது, போதையில் அடித்து கொலை செய்துள்ளனர். ஓநாய்களை, போலீஸ் அன்போடு, பாத் ரூமில், வழுக்கி விழச் செய்தால், உண்மைகளும், ஆதாரங்களும், வந்து கொட்டும். மாலினி, ஜபடவப்ரியா, முதல்வர் ஆகியவர்களை காவலில் எடுத்து, போலீஸ் அன்போடு, மாவு கட்டு போட, முயன்றாலே, ஆதாரங்களும், சாட்சியங்களும், கிடைக்கும்.
முதலில் தற்கொலைக்கு காரணம்,” காதல் தோல்வி” என்றது நிர்வாகம்- அது எடுபடாததால் “ “டீச்சர்களின் கொடுமை” என்றது. அதுவும் எடுபடாததால்” தாயாரின் கொடுமை” என்பது எடுக்கப்பட்டு, நடிகர்கள் தேர்வு, நடைபெறுகின்றது. பள்ளியை, தாக்கியதும், ஸ்ரீமதியின் தாயார்தான், என கதை, வசனம், தயாரிக்கப் பட்டு வருகிறது. அதற்கு நூல் விட்டு பார்க்க, சவுக்கு, கார்த்திக் போன்ற U tubers, நிர்வாகம் மற்றும் போலீஸ், நியமித்து உள்ளது.
பேசாமல், ஓநாய்கள், போதையில் கொலை செய்துவிட்டோம் என்று, approver ஆகி விட்டால், தண்டனையாவது குறையும். இல்லாவிட்டால் கோகுல்ராஜ் கேஸ்படி தண்டனைதான். 2 ஆயுள். appeal period க்கு ஜாமீனும் கிடைக்காது.
4 சந்தேக மரணம் என்பதை முன்னிலை படுத்தி, High Court ல் Bail Petition போட்டு, ஜாமீன் பெற்று உள்ளனர். CPCID 30th ஜூலை வரை, எந்த ஆணியும் பிடுங்கவில்லை. ஏனெனில், Toxicality report, swab test report வரவில்லை. CPCID, ஒப்புக்காக, போலீஸ் விசாரணை 3 நாட்கள் என்று கேட்டது. ஒரு நாள் என்று கோர்ட் அனுமதித்தது. அதிலும், அரை நாளில். விசாரணை முடிந்தது என்று கூறி, திருப்பி அனுப்பி விட்டனர். அந்த அரை நாளும், நிர்வாகம், ஜாமீன் விஷயமாக, விவாதித்தனர் என்று, தெரிகிறது.
ஸ்ரீமதியின், தற்கொலை கடிதம், அவர் கையெழுத்து இல்லை என்று தாயார் செல்வி கூறுகிறார். High கோர்ட்டிலும், “ Expert “ opinion தாக்கல் செய்ய படவில்லை. Dr. புகழேந்தி, சொல்வது போல், கம்ப்யூட்டர் டெஸ்டிங் மூலம்தான், இதை ஆராய வேண்டும்
Bail order மூலம், உயர் நீதி மன்றம் சொல்வது.
1. இது தற்கொலைதான்.
2. Teachersகளை, காரணம் காண்பிப்பது, ஏற்க முடியாது.
3. வேறு காரணம் என்ன என்பதை விசாரிக்கவும். சில சமயங்களில், புகார் செய்பவரே, குற்றவாளி ஆகலாம்.
மக்கள் கருத்து:-
..
இந்த கேசை, உடனடியாக sec 302 கொலை கேசாக மாற்றி, போக்சோ சட்டம், மற்றும் குண்டாஸ் சட்டம் பாயவேண்டும். இல்லாவிட்டால், தற்கொலை கேஸ் என்று 2 வருடம் இழுத்துவிட்டு, விடுதலை செய்து விடுவார்கள். பிறகு, கொலை என்று, மாற்றுவது , அதற்கு ஆதாரங்கள் தேடுவது, கடினம் ஆகும். இப்போதுதான்,( Call ஹிஸ்டரி – Cell Phones -)செல்வி, சாந்தி, ரவிகுமார், கிருத்திகா, ஜபதவ்ப்ரியா, மாலினி, Doctors of Kallakurichi, Police officers, சரண், சக்தி, Principal, செல் phones களை, ஆய்வு, செய்வது சுலபம்.
ஆகவே உடனடியாக, supreme கோர்ட்டில் மனு செய்து கீழமை நீதி மன்றம், sec 302 Pocso விற்குமாற்ற உத்தரவு வாங்கவேண்டும்., இப்போது முதலே மாற்ற வேண்டும். இதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள், சங்கந்தின் உதவியை,பெற, சங்கர சுப்பு, பாப்பா மோகன் , இரத்தினம் போன்றவர்கள், முயன்றால், நலமாக இருக்கும்.
பணம் பெரிதல்ல. நீதிதான் வேண்டும் என்று உறுதியாக நிற்கும் ஏழை செல்விக்கு நல்ல வருமானம் மக்கள் வரிபணத்தின் மூலம், பெரும், அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதித்துறை அதிகாரிகள், ஆகியோர், மனசாட்சியின்படியும், சட்டத்தின்படியும், தேசத்தின், ஜனநாயகத்தின் படியும், கடமை ஆற்றி, நீதி கிடைக்குமாறு செய்யவேண்டும். சோரம் போய் விடக்கூடாது. நேரான வழியில் வரும் வருமானம், உங்களுக்கு போதும். சோரம் போய், அதன் மூலம் வரும் வருமானம், உங்களுக்கோ, உங்கள் வாரிசுகளுக்கோ ஒட்டாது.
Great salute to your detailed write-up
Sems
The truth that this girl did not jump and this is not a suicide is clearly hidden in her first postmortem it self. The high court and the honorable judge mechanically without reading the postmortem, granted the bail! This is a homicide with aggravated penetrating sexual assault and should be punished with life without parole
https://youtu.be/mtGl2jFU1BE
மிக ஆழமான மற்றும் தெளிவா கட்டுரை. மிக்க நன்றி அய்யா!!
DMK = BJP
நீதிதுறைக்கு சரியான சூடு கொடுத்துள்ளீர்கள்.
தெளிவா கட்டுரை
செல்வமும், செல்வாக்கும் மிகுந்த சாதிய சக்திகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து ஏழை, எளிய மக்களுக்கு எதிராக பெரும் அநீதிக்கு துணை போவது நிச்சயமாக திராவிட மாடல் ஆட்சியல்ல! நாடறிந்த ஒரு கொலையை மறைப்பதில் – அதுவும் ஆர்.எஸ்.எஸ்காரர் கொலைக் குற்றத்திற்கு துணை போவது – திராவிட இயக்கத்திற்கு பேரிழுக்கு ஆகும்! இது, மதவாத சக்திகள் தமிழகத்தில் தங்கு தடையின்றி காலூன்றவே துணை புரியும்! நேரடி பாஜக ஆட்சியை விட அவர்களின் அடிமைகள் ஆட்சி மிக ஆபத்தானது!