நெல் வாங்க நெருக்கடி தரும் கலெக்டர்! சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கண்டனம்.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் நெல் விற்கச் செல்லும்போது அசல் சிட்டா-அடங்கல் ஆவணம் வேண்டுமென   மாவட்ட ஆட்சியர் கெடுபிடி செய்வதாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சிவ இளங்கோ கண்டன அறிக்கை வெளியிடுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடந்துவரும் இந்த வேளையில், தஞ்சை உள்ளிட்ட பெரும்பாலான . டெல்டா மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்க செல்லும்போது விவசாயிகளிடம் நகல் (Xerox) சிட்டா- அடங்கல் இருந்தால் போதும் என்ற உத்திரவு அங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் Direct Purchase Centre- (DPC)ல் நெல்லை விற்க செல்லும்போது அசல் சிட்டா-அடங்கலை சமர்பிக்க வேண்டுமென்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்திரவு போட்டுள்ளார்.

இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே குறுவை அறுவடை செய்து அந்த ஈரமான நெல்லை காயவைத்து DPC-க்கு கொண்டுவருவதற்குள் விவசாயிகள் பல சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். இதில் மேலும் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சிட்டா-அடங்கல் Original வாங்கவேண்டும் என்றால், ஏற்கனவே Original சிட்டா-அடங்கல் வாங்கித்தான் வங்கி கடன் பெற்றிருக்கிறார்கள். காப்பீடு (Insurance) எல்லாம் கட்டியிருக்கிறார்கள். அதனால் சிட்டா – அடங்கலின் நகல் போதும் என்று சென்ற ஆண்டு வரை இருந்தது. தற்போது புதிதாக இதுபோன்று அசல் சிட்டா-அடங்கல் வேண்டுமென்றால் மீண்டும் கிராம நிர்வாக அலுவலரிடம் செல்லவேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராமங்களில் தங்கி பணிபுரிவதில்லை. ஆனால் சட்டம் அந்தந்த வருவாய் கிராமங்களில் தங்கி பணிபுரிய வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் அவர்கள் அவ்வாறு பணி செய்யாத காரணத்தினால் எளிதில் சென்று சிட்டா-அடங்கல் வாங்கமுடிவதில்லை. மேலும் அவ்வாறு வாங்கினாலும் ஒரு சிட்டா-அடங்கலுக்கு ரூபாய் 200 முதல் 500 வரை இலஞ்சமாக கொடுக்க வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். ஆதலால் சென்ற ஆண்டு இருந்தது போலவே சிட்டா-அடங்கலின் நகல் இருந்தால் போதுமென்று உத்திரவை மீண்டும் பிறப்பிக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்திரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் சிட்டா-அடங்கல் கணினியில் இறக்குமதி செய்துக் கொண்டு அதை சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சொல்லுகிறார். ஆனால் சொந்த நிலம் உள்ளவர்கள் அவ்வாறு செய்ய முடியும் ஆனால் பெரும்பாலானவர்கள் குத்தகைக்கு சாகுபடி செய்துவருவதால் கணினியில் சிட்டா-அடங்கல் இருக்காது. அதற்கு நேரடியாக கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து தான் சிட்டா-அடங்கல், விவசாய சான்று வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் இன்றைக்கு விவசாயிகள் சிரமப்படும் அவலநிலை உள்ளது. அதனால் இதனை மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

வெளிதாலுக்கா, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து வரும் நெல் மூட்டைகளை தடுப்பதற்காக தான் original சிட்டா-அடங்கல் வாங்கும் முறையை கொண்டுவந்துள்ளோம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சொல்லுகிறார். மேலும் காப்பீடு பயிர் கணக்கிடுவதில் குளறுபடிகள் வருவதாகவும் சொல்கிறார். ஆனால் இது போன்ற குளறுபடிகளை, Original சிட்டா- அடங்கல் விவசாயிகளிடமிருந்து பெறுவதன் மூலம் 100 சதவீதம் தடுப்பதற்கு வாய்ப்பில்லை. மாறாக தமிழ் நாடு முழுவதும் இ-அடங்கல் நடைமுறையை உறுதியாக அமல்படுத்துவதன் மூலமே இதை தடுக்க முடியும். மேலும் தற்போது நாடாளுமன்றத்தில் ஏற்றப்பட்ட, எந்த விவசாய விளைப் பொருளையும் நாட்டில் எங்கு வேண்டுமானலும் விற்பனை செய்யலாம் என்ற வேளாண் சட்ட மசோதக்கு எதிராக திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை மாற்றியமைக்க சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்துகிறது.

இது குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் திரு. காமராஜ் அவர்களிடமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக பொது மேலாளர் (வணிகம்) அவர்களிடமும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் தொடர்புகொண்டு பேசினோம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் திருவாரூர் மண்டல மேலாளரை தொடர்புகொண்டோம் எடுக்கவில்லை. இதை படிக்கும் அனைவரும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்கண்ட அலுவலரிடம் பேச வேண்டுகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. உணவு துறை அமைச்சர்- காமராஜ் – 98424 13434
  2. மாவட்ட ஆட்சியர் – திருவாரூர் – ஆனந்த்- 94425 75575 / 94441 78000
  3. நுகர்பொருள் வாணிபகழக பொது மேலாளர்- வி.மீணாட்சி சுந்தரம்-94458 61671
  4. நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் – திருவாரூர் மண்டலம்- 94422 55542

கிராம சபை ரத்துக்கு கண்டணம்

கிராம சுயராஜ்யத்தை வலியுறுத்தியவர் மகாத்மா காந்தி அவரது பிறந்த நாளன்று கூடவிருந்த கிராமசபைக் கூட்டத்தை அதிரடியாக தமிழக அரசு ரத்து செய்துவிட்டது. இதனால், பல்வேறு பிரச்சினைகள்,தேவைகள், நெருக்கடிகள் குறித்து பேசிவிவாதித்து தீர்வு காணமுடியாமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று தன்னாட்சி இயக்கம், அறப்போர் இயக்கம் தோழன் இயக்கம்,மக்களின்குரல்,சட்ட பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஏற்பாடு செய்துள்ளன.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time