உணவுக்கும் உயர் ரத்த அழுத்தத்திற்கும் இவ்வளவு சம்பந்தமா?

-நாகப்பன் சூரியநாராயணன்

அடிக்கடி பிளட் பிரஷர் உங்களுக்கு எகிறுகிறதா? தலை சுற்றல் மயக்கம் வருகிறதா? சிம்பிளா அதுக்கு ஒரு தீர்வு இருக்கு! உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்ய உணவு முறையில் சில மாற்றங்களை செய்ய முடிந்தாலே போதுமானது! செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?

நமது உடலின் இரத்த அழுத்தம் 120க்கு 80 அதாவது சிஸ்டாலிக்120ம் டயஸ்டாலிக் 80ம் இருக்கிறது சமநிலையான இரத்த அழுத்தம் அப்படின்னு சொல்றாங்க. இந்த எண்ணிக்கை உயரும் போது உயர் இரத்த அழுத்தம் அப்படின்னு குறிப்பிடுறாங்க. தீவிரமாக விளையாடும் போதோ அல்லது பரபரப்பாக வேலையைச் செய்யும் போதோ கொஞ்சம் இரத்த அழுத்தம் உயரத்தான் செய்யும். இது இயல்பானதுதான். ஆனால்  சிலருக்கு எப்போதும் இரத்த அழுத்தம் அதிகமாகவே இருக்குது. அவர்களுக்கு  “உயர் இரத்த அழுத்த நோய்” பாதிப்புன்னு சொல்றாங்க. மாறி வரும் உணவுப் பழக்க வழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றால உயர் இரத்த அழுத்தத்தால பாதிக்கப்படுறவங்களோட எண்ணிக்கை அதிகரிச்சுக்கிட்டே போகுது.

உயர் இரத்த அழுத்தம் தொடர்பான அறிவியல் ஆய்வுகள் என்ன? எந்த எந்த உணவுப் பழக்கங்களை உடையவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்குது? உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவங்க என்ன என்ன உணவுகளை எடுத்துக்கணும்? எப்படி இந்த நோய் வராம நம்மை காப்பாற்ற முடியும் என்பதையும் விரிவாக அறியலாம்.


பால் மற்றும் பால் பொருட்களான தயிர், ‍வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி (Cheese) இதையெல்லாம் சாப்பிடுறவங்களை லேக்டோ வெஜிடேரியன் என்று அழைக்கிறார்கள். இவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வரக் காரணம் பால், பால் பொருட்களால அவங்க உடம்புல சேர்கின்ற விலங்குக் கொழுப்பு அப்படிங்கிறதை Plood Pressure in Vegetarians அப்படிங்கிற 1974ஆண்டு நடந்த இந்த ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.
(https://academic.oup.com/aje/article-abstract/100/5/390/48649)

இதே லேக்டோ வெஜிடேரியன்கள் என்றாவது  ஒருநாள் இறைச்சி சாப்பிட்டுப் பார்க்கலாம் அப்படின்னு இறைச்சி சாப்பிட்டா அவங்களுக்கு உடனே இரத்த அழுத்தம் கூடுகிறது அப்படிங்கிறத The relation of protein foodsin Hypertension அப்படிங்கிற  இந்த ஆய்வு தெளிவாக விளக்குது. இதன் மூலமாக இறைச்சிக்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் நேரடியான தொடர்புகள் உள்ளது என்பது தெளிவாகிறது.

(https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1655032/pdf/calwestmed00219-0008.pdf)


110க்கு 70 அப்படிங்கிற இலட்சிய சமநிலை இரத்த அழுத்தம் வாழ்நாள் முழுவதும் எந்த இனக்குழுவுக்கு இருக்குதுன்னு பார்த்தால் சீனாவின் சில இனக்குழுக்களுக்கு இந்த சரியான இரத்த அழுத்தம் அவங்க வாழ்நாள் முழுவதும் இருக்குது. இதுக்கு காரணம் அவர்கள் முழுமையான தாவர உணவுல இருக்காங்க. எப்போதாவது இறைச்சி சாப்பிடுறாங்க. ஆனால் நாள் தோறும் அவங்க உணவுல இறைச்சியோ, பாலோ, பால் பொருட்களோ, முட்டையோ கிடையாது. Blood Pressure Amongst Aborigins Ethnic Groups of Szechwan (ஸ்செச்வான்)  Province, West China அப்படிங்கிற இந்த ஆய்வு விளக்கமாகச் சொல்கிறது. (https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(00)86708-2/fulltext)

வயதானால் உயர் இரத்த அழுத்த நோய் வரும். நாற்பது வயதில் இதெல்லாம் சாதாரணம். வயது ஆக ஆக நோய்கள் வரும் என நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் வயது கூடக் கூட இரத்த அழுத்தம் மிகச் சரியான சமநிலையில சில இனக் குழுக்களுக்கு மட்டும் இருக்கிறது அப்படிங்கிற வியப்பான உண்மையை அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
Blood Pressure in the  African native அப்படிங்கிற ஆய்வை கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் c.p.Donnison , B.S. Lond  ஆப்பிரிக்க மக்களின்உணவுப் பழக்கத்தை ஆய்வு செய்து வயதானவர்கள் சரியான இரத்த அழுத்தத்துடன் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

சோளத்தை முதன்மையான உணவாகவும், அதோட தானியங்கள், லெகூம்ஸ்ன்னு சொல்ற பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள், இயற்கையாக விளையும் கீரைகள் இதைத்தான் அதிக அளவில் உணவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் இந்த ஆப்பிரிக்க மக்கள். இறைச்சி உணவு என்பது எப்பொழுதாவது நடைபெறும் விருந்துகளில் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. அன்றாட உணவில் பாலோ, பால் பொருட்களோ, இறைச்சியோ, முட்டையோ இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

வெஜிடேரியன் உணவு முறையில இருக்கிறவங்கள்லயே பால், முட்டை இதையெல்லாம் சாப்பிடாமல் முழுமையான தாவர உணவுகளை சாப்பிடுறவங்களுக் இரத்த அழுத்தம் சரியான சமநிலையில இருக்குது,  Low blood pressure in vegetarians: effects of specific foods and nutrients அப்படிங்கற இந்த ஆய்வு உறுதிப்படுத்துது. இந்த ஆய்வு 1988ஆம் ஆண்டு வெளி வந்தது. அப்போ பிளாண்ட் பேஸ்டு டயட் அப்படிங்கற சொல்லாடல் கிடையாது. அவங்க ஸ்ட்ரிக்ட் வெஜிடேரியன் , வீகன் (Vegan) அப்படிங்கற சொல்லாடலை ஆய்வாளர்கள் பயன்படுத்தி இருக்காங்க. இந்த ஆய்வை ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவரும் ஆய்வாளருமான டாக்டர் Frank M.Sacks அவர்கள் செய்திருக்கிறார். இரத்த அழுத்தத்தைக் குறித்து பல ஆய்வுகளை செய்தவர் டாக்டர் பிரான்க் எம் சாக்ஸ் அவர்கள்.
https://academic.oup.com/ajcn/article-abstract/48/3/795/4716538

கலிபோர்னியாவில் உள்ள ரோமா லிண்டா என்ற ஊரில் உள்ள (seventh-day adventists in loma linda california)முழுமையான தாவர உணவில் இருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வாழும் பகுதி.

முழுமையான தாவர உணவில் இருக்கும் பொழுது இரத்த அழுத்தம் சரியான அளவுல இருக்கிறது என்பதை இந்த ஆப்பரிக்க அமெரிக்கர்களை ஆய்வு செய்து கண்டறிந்து இருக்கிறார்கள். மேலும் முழுமையான தாவர உணவில் இருக்கும் பொழுது  உடல் பருமன், கார்டியோவாஸ்குலர் டிசீஸ்னு சொல்லக் கூடிய இதயநோய்கள், நீரிழிவு நோய், போன்றவற்றிலிருந்தும் முழுமையான பாதுகாப்பை அளிக்குது. Beyond Meatless, the Health Effects of Vegan Diets: Findings from the Adventist Cohorts என்பதை இந்த ஆய்வு விளக்கமாக எடுத்துரைக்கிறது.
https://www.mdpi.com/2072-6643/6/6/2131/htm

மேலும் இந்த ஆய்வு வெஜிடேரியன் உணவு முறையில் உயர் இரத்த அழுத்தத்தின் அபாய அளவு 55விழுக்காடு  குறைக்கிறது என்பதையும்,   இறைச்சி, முட்டை, பால் ‍இதையெல்லாம் உணவுவல இருந்து நீக்கி முழுமையான தாவர உணவு முறையில் (Whole Food Plant Based) இருந்தால் உயர் இரத்த அழுத்ததின் அபாயம் 75விழுக்காடு  குறைகிறது என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.


இறைச்சி, முட்டை, பால், சோடியம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் (processed foods), உப்பு இதையெல்லாம் உங்க உணவுல இருந்து நீக்கினால் உங்களுக்கு இரத்த அழுத்தம் 110 / 70 அப்படிங்கிற இலட்சிய அளவை அடையும். அப்படி இரத்த அழுத்தம் சம நிலையில இல்லையென்றால் பிளாக்ஸ் சீடுஸ்ஸ் (Flax seeds) இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இரண்டுல இருந்து மூன்றுமடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக இருக்குது பிளாக் சீடுஸ். Potent Antihypertensive Action of Dietary Flaxseed in Hypertensive Patients அப்படிங்கிறதை இந்த ஆய்வு விளக்குகிறது.
https://www.ahajournals.org/doi/full/10.1161/HYPERTENSIONAHA.113.02094

தர்பூசணிப் பழங்களை உண்ணும் பொழுது உயர் இரத்த அழுத்தம் குறைகிறது என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.
https://academic.oup.com/ajh/article/25/6/640/160387?login=true

ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கிலோ தர்பூசணிக்கு மேல சாப்பிடக் கூடாது அப்படிங்கிற கட்டுப்பாட்டையும் இந்த ஆய்வு நமக்கு விதிக்கிறது.

பச்சைக் காய்கறிகள் வேக வைத்த காய்கறிகள் இரண்டுமே உயர் இரத்த அழுத்தத்தை குறைக்குது. ஆனால் பச்சைக் காய்கறிகளை சாலட் (Salad) மாதிரி சாப்பிடும் பொழுது இரத்த அழுத்தம் குறைவது சிறப்பாக இருக்குது. Relation of raw and cooked vegetable consumption to blood pressure: the INTERMAP Studyஅப்படிங்கிற இந்த  ஆய்வு தெளிவாக விளக்குகிறது.
https://www.nature.com/articles/jhh2013115

பால் மற்றும் பால் பொருட்கள், இறைச்சி, முட்டை, மீன் போன்ற அதிக அளவு கொழுப்புள்ள, நார்ச்சத்துக்கள் அற்ற உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.
அதிக அளவு நார்ச்சத்துள்ள உணவுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். நார் சத்துகள் அப்படின்னாலே காய்கறிகளும், பழங்களும்தான்.


ஊறுகாய், சாஸஸ், கெட்சப், சிப்ஸ், போன்ற எல்லாப் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் (Processed Foods) சோடியம் அதிக அளவில் இருக்குது. இந்த சோடியம் நிறைந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். உலர்ந்த பழங்கள், பீன்ஸ், லெகூம்ஸ் வகைப் பருப்புகள், குடைமிளகாய் (Bell Pepper), வாழைப்பழம் போன்ற பொட்டாஷியம் நிறைந்த உணவுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கச் செய்யும்.

உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள், அல்லது உயர் இரத்த அழுத்தம் வரக் கூடாது என்று நினைப்பவர்கள் உடனடியாக உங்கள் உணவு முறையை மாற்றுங்கள். முழுமையான தாவர உணவை ஏற்று உயர் இரத்த அழுத்தத்தைக் குறையுங்கள். முழுமையான தாவர உணவை உங்கள் வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொள்ளுங்கள். இறைச்சியை, இறைச்சி உணவை எப்பொழுதாவது ஒரு கொண்டாட்டத்திற்கான உணவாக வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் அதிக அளவில் விபரங்களைப் பெற Whole Food Plant Based Diet என்று இணைய தளங்களிலும், YouTube போன்ற சமூக ஊடகங்களிலும் தேடுங்கள்.

கட்டுரையாளர்; நாகப்பன் சூரியநாராயணன்

ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் நியூட்ரிஷியன் அறிவியலில் சான்றிதழ் பெற்றவர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time