அவன் காட்டுமிராண்டி என்றால், நாம் நாட்டுமிராண்டியா?

செழியன். ஜா

’’ஏன் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கிறீங்க…’’

’’ஐயோ…அவன் காட்டுமிரண்டித்தனமாக நடந்துக்கிறவனாச்சே…’’

’’நீங்க படிச்சவரு தான…பிறகு ஏன் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாக ’பிகேவ்’ பண்றீங்க…’’

இதெல்லாமே… காட்டுவாசிகளைப் பற்றிய அறியாமையில் அடிக்கடி நம்மிடையே வெளிப்படும் வார்த்தைகள்…!

சமீபத்தில் ஒரு பிரபல எழுத்தாளர் கூட அவரது கட்டுரையில் அடிக்கடி காட்டுமிராண்டி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்.

இது அவருக்குப் பிடித்த சொல்லாக இருக்கலாம். தவறு செய்பவர்களைப் பார்த்து ஏன் காட்டுமிராண்டி மாதிரி செய்கிறாய் என்று குறிப்பிடும் சொல்லாக இவற்றைப் பயன்படுத்தி வருகிறோம்.

காட்டு மிராண்டி என்பது மிக ஆபத்தான சொல்லா? இந்த வார்த்தை காடு, அங்கு வாழும் மனிதர்களைக் குறிக்கிறதா? காட்டில் வாழும் மனிதர்கள் பயங்கரமானவர்களா? அல்லது காடுவாழ் உயிரினங்கள் ஆபத்தானவையா…? இப்படி நிறைய கேள்விகளை எழுப்புகிறது இந்தச் சொல். காட்டுமிராண்டி என்றால் என்ன என்பதை முழுமையாகப் பார்த்துவிடுவோம்.

காட்டில், தாவரங்களைச் சாப்பிடும் உயிரினங்கள், மாமிசங்களைச் சாப்பிடும் உயிரினங்கள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு.நமக்கு நன்கு தெரிந்த பெரிய உயிரியான யானை தாவரங்களைச் சாப்பிடுபவை. பொந்தில் வாழும் உருவில் சிறிய உயிரியான ஆந்தை மாமிசங்களைச் சாப்பிடக்கூடியவை. மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்களுக்கு இரை இயற்கையாக என்ன படைக்கப்பட்டதோ அவற்றையே சாப்பிடும்.பலமனிதர்களைப் போல் சிலவருடங்கள் மாமிசம் சாப்பிடுவது, திடீரென்று மனது மாறி சைவம் பக்கம் கவனம் வைப்பது என்று உலகில் எந்த உயிரினமும் தன் இரையை மாற்றிக் கொள்வது கிடையாது. ஆரம்பம் முதல் இறப்புவரை ஒரேவித இரை உண்ணும் பழக்கம் உடையவை.

மான், காட்டுஎருது இன்னும் பலஉயிரினங்களைக் கொன்று சாப்பிடும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் பற்றி தொடக்கத்திலிருந்தே நமக்கு அச்சுறுத்தலாக, பயமாகவும் இருந்து வந்துள்ளது. ஒரு உயிரினத்தைக் கொன்று சாப்பிடுவதால் இந்த விலங்குகளைப் பயங்கரமானவை, இரக்கக்குணம் இல்லாதவை என்ற எண்ணமும் மனிதர்கள் மூளையில் பதிந்துவிட்டது. காட்டுமிராண்டிவார்த்தையின் தொடக்கம் இங்கிருந்தே ஆரம்பித்திருக்கலாம்.

காட்டில்உள்ளஉயிரினங்களுடன் வாழ்பவர்கள் பழங்குடிமக்கள். இவர்களுக்கு வாழ்வே காடு தான்.விலங்குகளும்-பழங்குடிகளும் சேர்ந்ததேகாடாகும். பழங்குடிகளால் காட்டுக்கு, காட்டுயிர்களுக்கு எந்தவித ஆபத்தும், அழிவும் ஏற்படுவதில்லை.. இயற்கையுடன் இணைந்தவாழ்க்கைதான் பழங்குடிகளுக்கு. இவர்கள் உணவு காட்டில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சில உயிரினங்களாகும். அங்கு உள்ள பொருட்களை நகரச் சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்து வேண்டியதை வாங்கி செல்வார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறை நகரத்தில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

விலங்குகள்-பழங்குடிகள் வாழும் இடம்தான் முழுமையானகாடு..

இப்பொழுதுநாம்காட்டுமிராண்டிஎன்பதற்குவருவோம்

காட்டில் வாழும் மனிதன் மிருகங்களோடு வாழக் கூடிய ஆளாக உள்ளான். அவன் நம்மைப் போல மிருகங்களைக் கண்டு அஞ்சுவதில்லை.அவனுக்கு அனைத்து மிருகங்களுமே ஒரு சக உயிர் தான்!

மிருகம் + ஆள் என்ற என்னும் சொற்ப்பிணைப்போடு பார்த்தால்,அவன் மிருகங்களை ஆளுமை செய்யத் தெரிந்தவன் என்பது தான் புரிதலாகிறது.

காட்டுவாசி மிருகங்களையே நேசிக்கக் கூடியவன்,பலதரப்பட்ட சின்னஞ்சிறு உயிரினங்கள் தொடங்கி பெரிய விலங்குகள் வரை அனைத்தும் அவன் நேசத்திற்குரியவை! ஆக, இயல்பின்படி பார்த்தால் நாட்டில் வாழும் நம்மை விட காட்டுவாசி அன்பு நிறைந்தவன்,வீரமானவன்,ஆயினும், எந்த விலங்கினத்திற்கும் வலிந்து சென்று தீமை செய்யாதவன்.

விலங்குகளின் செயல்களைப் பார்ப்போம்.

மாமிசத்தை உண்ணும் புலி என்றும் தாவரங்களை சாப்பிடுவது கிடையாது. புலி கோபப்பட்டோ,பழி வாங்கும் உணர்விலோ மானைக் கொல்வது இல்லை. அதன் இரைமான். அதனால்மானைசாப்பிடுகிறது. புலியின் இரையை யார் உருவாக்கியது? இயற்கையேயாகும். அதே இயற்கை புலியைவிட அதிகபலம் உடைய யானைக்கு தாவரங்களை இரையாக உருவாகியுள்ளது. எதற்கு இயற்கை இந்த முரண்பாடானச் செயலை செய்ய வேண்டும்.புலியையும் தாவரத்தையே உணவாகக் கொள்ளும் இயல்பில் படைத்தது இருக்கலாமே. மான் இனம் தப்பித்து இருக்குமல்லவா?

காட்டின் சமன்பாடு இங்கு தான் வருகிறது.. தாவரங்கள் அதிகமாகிச் செல்லக்கூடாது என்று யானை, மான், எருது போன்றவை தாவரங்களைச் சாப்பிட்டு அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. மான், எருது எண்ணிக்கை அதிகமாகி செல்லக் கூடாது என்று சிங்கம் புலி, சிறுத்தை அவற்றை இரையாகச் சாப்பிட்டு அதன் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது. அங்கு வாழும் பழங்குடிகள் தாவரங்களையும், சில உயிரினங்களையும் உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்தசுழற்சி பலஆயிரம் ஆண்டுகளாக காட்டில் நடைபெற்று வருகிறது. இதில் காட்டு மிராண்டித்தனமென்று எதுவும் இல்லை. உயிர் வாழ்தலின் தேவைக்கு அதனதன் இயல்பிற்கேற்ப உணவு இயற்கையால் படைக்கப்பட்டுள்ளது.

.இயற்கைக்குமுரணாகசெய்யாதஉயிரினங்களைகாட்டுமிராண்டிஎன்றுதவறாகமனிதர்கள்சித்தரிப்பதால்மனிதனாகியநம்மைநகரமிராண்டிஎன்றுசொல்லலாமா?

மனிதர்களுக்கு மனப்பிறழ்வு ஏற்படும். அப்படி ஏற்பட்டவர்களை பைத்தியம் பிடித்து உள்ளது என்று சொல்வார்கள். அப்படி இல்லாத மனிதனை பார்த்து சொன்னால் எப்படி சரியில்லையோ,அதேதான் காட்டுமிராண்டி என்ற வார்த்தையை சிறிதும்தொடர்பில்லாதவிலங்குகள், பழங்குடிகளைப் பார்த்துச் சொல்வதும் ஆகும்.. மனிதர்கள் செய்யும் தவறுக்கு அவர்களை திட்டுவதற்கு புதிதாக வார்த்தைகளை கூட உருவாக்கிகொள்ளலாம். அதை விட்டு காட்டுமிராண்டி என்ற சொல்லை சொல்லி காட்டுயிர்களை, பழங்குடிகளை தேவையில்லாமல் தவறாக சித்தரிப்பது சரியன்று.அப்படியானால், நாட்டில் வாழ்பவர்களை நாட்டுமிராண்டி எனக் குறிப்பிடலாமா?

அனைத்து விலங்குகளின் செயல்பாடுகளும் இயற்கை விதிப்படியே இருப்பதால் அதில் குற்றம் காண் ஒன்றுமில்லை.அதேபோல காட்டில் வாழ்பவர்களை காட்டுவாசி என்பது தவறாகாது.ஏனெனில்,அச் சொல் அங்கு வாழ்பவர் என்ற பொருளை மட்டுமே தருகிறது.

ஆக,காட்டுமிராண்டி என்பது விலங்குகள், பழங்குடிமக்களை குறிக்காது. இது தங்களுக்கு நாகரீகமிருப்பதாகக் கருதிக் கொள்ளும் மனிதர்கள் தங்கள் அறியாமையில் உருவாக்கிக் கொண்ட வார்த்தையாகும்.

காட்டுமிராண்டி வரிசையில் கழுதைக்குதெரியுமா கற்பூராவாசனை?, நன்றி கெட்டநாயே போன்றவார்த்தைகள் மிகப் பிரபலம். கழுதைக்கு எதுக்கு கற்பூரவாசனை தெரியவேண்டும். சிறிது யோசித்தாலும் இந்த வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்தி இருப்போம்..’’ நன்றி கெட்ட மனிதனே’’ என்று சொல்லலாமே ? அதைவிட்டு கடைசி வரை நாய் தன் இயல்பில் வாழ்கிறது அதை தவறாக நன்றிகெட்டநாயே ஏன் சொல்ல வேண்டும்.

இதற்கு மிகச் சுலபமாக சொல்ல வேண்டுமென்றால் எந்த உயிரினமும் மனிதனிடம் சண்டைக்கு வரப் போவதில்லை. இவை மனிதனுக்கு மிகவசதியாக இருப்பதால் பெரும்பாலும் தவறானவார்த்தைகளை பயன்படுத்த அந்த வார்த்தையை உயிரினங்கள் மீது சேர்த்து திட்டுகிறோம்.

’’ஏய்நாயே…’’என்று ஒருவரை பார்த்து திட்டினால் அதை கேட்பவருக்கு மிகுந்த கோபம்வரும். சண்டையாக மாறும். பல இடங்களில் இந்த சிறுசண்டை கொலை வரையும் சென்றுள்ளது. ஆக, இந்த பூமியில் உள்ள உயிரினமான நாய் என்ற வார்த்தையே ஒருவருக்கு கோபம் வந்து சண்டை வருகிறது என்றால் நாம்எவ்வளவு தவறான வார்த்தைகளை விலங்குகள் மீது சேர்த்து பேசி வருகிறோம். அந்தவிலங்குகள் சண்டைக்குவராது என்ற ஒரே நம்பிக்கைதானே இதற்கெல்லாம் காரணம்.

இந்த உலகில் எந்த உயிரினத்தைம் தவறாக இயற்கை படைக்கவில்லை. மனிதன் செய்யும் தவறுக்கு இந்த விலங்குகளை தவறாக புரிந்து கொள்வது சரியில்லை.  நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் முடிந்த அளவு விலங்குகளை பயன்படுத்தாமல் இருப்பது நாம் அந்த விலங்குகளுக்கு செய்யும் நன்மையாகும்..

பாறு கழுகுகளின் (பிணம்திண்ணிகழுகுகள்) இயற்கையான இரை இறந்த விலங்குகளின் உடல்களை சாப்பிடுவதேயாகும். இதன் மூலம் அந்த இடமும் சுத்தமாகும்.. ஆனால், ஒரு முக்கிய நாளிதழில் இந்த கழுகு படம் கார்டூனாக வரைந்து அதன் உடலில் தீவிரவாதம் என்று எழுதி, ஓடிக்கொண்டு இருக்கும் கோழிகுஞ்சுகளை கொன்று சாப்பிடுவதுபோல் வரைந்து இருந்தனர். அந்தக் கோழிகுஞ்சுகள் ராணுவீரர்களாக குறிக்கப்பட்டிருந்தது.  கழுகைத் தீவிரவாதியாகவும், கோழி குஞ்சுகள் ராணுவிரர்களாகவும் அந்த கேலிச் சித்திரம் குறித்தது..

இந்தப் படத்தை பார்க்கும் மக்களுக்கு இந்த கழுகை தவறாகவே எண்ணத் தோன்றும். இந்தபடம் இரண்டு தவறுகளை குறிக்கிறது. ஒன்று, பயங்கரவாதியை கழுகோடு ஒப்பிடுகிறது. பயங்கரவாதிக்கும் இந்த கழுகுக்கும் என்ன தொடர்பு. ஒரு பயங்கரவாதி போல் யாரையும் கழுகு கொல்வதில்லையே. இரண்டாவது, உண்மையில் இறந்த உடலை மட்டுமே உண்ணக்கூடியவை பாறுகழுகுகள் அதனால்தான் பிணம்திண்ணி கழுகுகள் என்ற பெயரும் உள்ளது. ஆனால், உயிருடன் ஓடிக்கொண்டு இருக்கும் கோழிகுஞ்சுகளை கொன்று சாப்பிடுவது போல் வரைந்து இருப்பது இரண்டாவது தவறாகும்..

இதனால் மக்கள் மத்தியில் இந்த பறவை பற்றிய எண்ணம் இன்னும் தவறாகவே தோன்றும். எந்த விதத்திலும் தொடர்பு இல்லாது ஒரு பறவையை இப்படி சித்தரிப்பதன் வழியே நாம் அவற்றுக்கு செய்யும் மிகப்பெரியதீங்கேயாகும். இந்தசெயல் பாறுகழுகுகளுக்கு தெரியுமா ? நிச்சயமாக இல்லை. இன்றும் எங்கோ ஒருஇடத்தில் இறந்த யானை, புலி போன்றவற்றை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். இப்படித்தான் காட்டில் உள்ள பல உயிரினங்களை தவறாக சித்தரித்து பலஆண்டுகளாக மனிதர்கள் தினமும் பேசி வருகிறார்கள்.

காட்டுமிராண்டி என்ற ஒரு உயிரினம் காட்டில் இல்லை என்பதே நிதர்சனம்.

[email protected]

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time