இனங்களுக்கு இடையிலான போரா? மதங்களுக்கு இடையிலான போரா? யூத மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் மூன்றுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பாலஸ்தீனத்தின் ஜேருசலேம் அமைந்ததுள்ளது மட்டுமல்ல, இஸ்ரயேலர், பாலத்தீனியர்களுக்கும் இது தான் புனித தலம்! இங்கு நடந்தது என்ன? இது ஏன் தொடர்ந்து அமைதியை தொலைத்துக் கொண்டிருக்கும் பூமியாக உள்ளது?
அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆக்டோபஸ் கரங்களோடு குரூர குணத்துடன் பல அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கும் பல இனங்களை அழித்து, அங்கு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இன்றளவும் பாலஸ்தீன பிரச்சினையில் இஸ்ரேல் என்ற நாட்டையும் உருவாக்கி, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது இரும்பு பிடியில் வைத்துள்ளது.
ஓர் இனம் அழித்து ஒழிக்கப்பட்ட வரலாறு தொடர்ந்து உலகில் நடைபெற்றும் வந்திருக்கிறது. இன ஒழிப்பு என்பது ஆட்சியாளர்களின் கோரமுகம். குரூரமானது, வக்கிரமானது. ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆதிக்கத்தில் உள்ளோருக்கு ஒரு நொடிப் பொழுதில் ஏற்படாது. பல நூற்றாண்டுகளாக தோன்றி அது வெளிப்படும். இது தலைமுறை, தலைமுறையாக வளர்த்தும் எடுக்கப்படும்.
இலங்கையின் இனவெறுப்பு, சிங்கள இனத்தில், சிங்கள பௌத்த மத நூலான மகா வம்சத்தில் இருந்து தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய இனவெறுப்பு பூர்வ குடிமக்களான “அபார்ஜீனிஸ்” தொல்குடிகளின் வரலாற்றில் இருந்து தொடங்கியது! சுமார் 25,000 ஆண்டு கால பழமையானது. ஆனால், இதோடு எந்த தொடர்பும் இல்லாத பிரிட்டிஷ் அரசால் “அபார்ஜீனிஸ்” மக்களுக்கு இழைத்த கொடுமைகள் சொல்லி மாளாது. அபார்ஜீனிஸ் மக்களுக்கு, நீர் நிலைகளில் கொடிய விஷத்தை கலந்து, நீர் அருந்திய மக்களை கொத்து கொத்தாய் கொன்றழித்தன ஆதிக்க சக்திகள். வரலாற்றின் பக்கங்களில் இஸ்ரேல் என்ற நாட்டினை உருவாக்கி ஆதிக்க சக்திகள், அது உலகத்தில் நடத்திய கொடுமைகள் ஏராளம். மேற்கு ஆசியாவில் தொடங்கியது இஸ்ரேல்- அராபிய யுத்தம். சிலரால் இது யூதர்கள் – முஸ்லீம் சண்டை என விவாதிக்கப்பட்டது.
விவிலிய நூலின் முற்பகுதிக்கு பழைய ஏற்பாடு என்று பெயர். இப்பகுதியில் தீர்க்கதரிசிகள், மன்னர்கள், வீரர்களின் வரலாறு அடங்கியுள்ளது. ஆதாம், ஏவாள் தோற்றமும், மனிதகுல வளர்ச்சியும் இதில் வர்ணிக்கப்படுகின்றன. யூதர்களின் தெய்வம் எகோவா. எகோவா என்றால் ஆதிதெய்வம், ஏகதெய்வம் என்று பொருள். யூதர்கள் மற்ற மதத்தினரையும், வேதங்களையும், பிசாசுகளின் பல வடிவங்களாக கருதுகிறார்கள். யூதர்கள் தங்களை மட்டுமே தேவனுடைய பிள்ளைகளாக கருதுகிறார்கள். இவர்கள் மற்ற மதத்தினருடன் கலப்பதில்லை. தனித்தே வாழ்ந்தும் வந்தார்கள்.
யூதர்கள் ராஜ்யத்தை முதன்முதலாக அமைத்தவர் “ஆபிரகாம்” என்று கருதுகிறார்கள். இந்த ஆபிரகாம் எகிப்து மன்னனின் கவர்னராக பாலஸ்தீனத்தை நிர்வகித்து வந்தது வரலாற்றுப்படியும் உண்மை தான். யூதர்களின் ராஜ்ய அமைப்பு ஆபிரகாம் பதவியேற்றதிலிருந்து தான் தொடங்குகிறது எனலாம். பாலஸ்தீனம் என்று இன்று அழைக்கப்படும் இதே பகுதிக்கு “பிலிஸ்டைன்” என்பது தான் அன்றிருந்த பெயர். இது பின்னர் திரிந்திருக்ககூடும். பாலஸ்தீனம் புல்வெளி படர்ந்த நாடு, ஆனால் ஒருபகுதி பாலையும், பாறையையும் சார்ந்த நாடாகும். ஆடு மேய்ப்பதே இங்கு முக்கிய தொழிலாக இருந்தது. எனவே ஆடு மேய்ப்பவருக்கு உரிய அமைதி, பச்சாதாபம், பக்தி உணர்ச்சி தொடக்க காலத்தில் இருந்தது.
அராபிய நாடுகளில் முகமது நபியின் தோற்றத்திற்கு முன்னால் குழுச்சண்டைகள், வகுப்புச் சண்டைகள் மிகுந்திருந்ததாக வரலாற்றுச் செய்திகள் உள்ளன. இவர்களுக்கென ஒரு மதம் பிறக்கவில்லை இவர்களை யூதர்கள் வெறுத்தே வந்தனர். ஆண்டவனின் பிள்ளையாக இயேசு பிறந்துவிட்டார் என்பது கிறிஸ்துவர்களின் வாதம்.
இதற்கு அடுத்து வந்த முகமது நபி தான் அல்லாவின் (ஆண்டவனின்) பிள்ளை என்பது இஸ்லாமியர்களின் வாதம்; இன்னும் பிறக்கவில்லை பிறப்புக்காக காத்திருக்கிறோம் என்பது யூதர்களின் வாதம், இதுதான் இந்த மூன்று பிரிவினருக்குமிடையில் உள்ள அடிப்படையான வேறுபாடு வேறு வகைகளில் வேற்றுமை குறைவு ஆகையால் தான் பழைய ஏற்பாடு இந்த மூன்று மதத்தாருக்கும் பொதுவாக இருக்கிறது.
இயேசுநாதர் தனது பத்தாவது வயதிலேயே யூத வேதாந்திகளுடன் எருசலேமில் வேதாந்த சர்ச்சையில் இறங்கிய காரணத்தால் இயேசுநாதரை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். இயேசுநாதர் சிந்திய ரத்தம் யூதர்களின் ரத்தவெறிக்கு பொட்டிட்டு காட்டிய சான்றாகும். யூதர்கள் வட்டித்தொழில் செய்வதும் அதன் மூலம் உலகம் முழுவதும் பரவி பணம் கொழுத்த வரலாறும் உண்டு. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் Shylock கதாபாத்திரம் இதற்கு சான்று, யூதர்கள் மத இனவெறி மிக்கவர்கள். உலகில் இவர்களால் வெறுக்கப்பட்ட தங்களின் இனத்தின் பெருமைகளை நிலைநாட்ட தங்களுக்கு துணையாக இயேசுநாதர் – யூதர், காரல் மார்க்ஸ் – யூதர், ஐன்ஸ்டைன் – யூதர் போன்றவர்களை பயன்படுத்திக் கொண்டனர்.
இக்கருத்தை பரப்பும் இயக்கமான “சியான்” இயக்கம் தோன்றி பாலஸ்தீனத்தை மீட்டு இஸ்ரவேலர்களின் ஆட்சியை அமைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு இயங்க தொடங்கியது. 1939 – 1945-ல் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது ஈவிரக்கமற்ற முறையில் யூதர்களின் அறைக்குள் நச்சுப்புகையை செலுத்திக் கொன்றன, இட்லரின் படைகள். தங்கள் கண் முன்னால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட யூதர்களின் மீது ஐரோப்பிய மக்கள் இரக்கம் கொண்டனர்!
இதன் விளைவாக 1948-ல் இஸ்ரேல் நாடு என்பது உருவாக்கப்பட்டது. எகிப்தின் ஒருபகுதியும் ஜோர்டானின் ஒரு பகுதியும் இணைந்து இஸ்ரேல் நாட்டை உருவாக்கினார்கள். பழைய “பாலஸ்தீனம்” புதிய இஸ்ரேல் ஆயிற்று~ இந்த நிலப்பரப்பில் 15 லட்சம் அராபிய மக்கள் குடியிருந்து வந்தனர். இஸ்ரேல் நாட்டை அமைக்கும் போதே, ”பூர்வீக குடிகளான 15 லட்சம் அராபியர்களும், பூரண குடியுரிமையும், சம அந்தஸ்தும் கொடுக்கப்பட வேண்டும்” என்ற நிபந்தனையை ஏற்றனர் யூதர்கள். அதன் பின்னர் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 15 லட்சம் யூதர்களை “சியான்” இயக்கம் இஸ்ரேல் செல்ல அனுமதித்தது.
Also read
ஆனால், குடியேறி இருப்பிடத்தை உறுதி செய்த பின் சில காலத்திற்குள், யூதர்கள் தங்களது இனவெறுப்பு அரசியலை முன்னிறுத்தி, அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கான உரிமைகளை மறுத்து அராபிய இனவெறுப்பு அரசியலை மேற்கத்திய நாடுகளின் துணையுடன் இன்றளவும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இனவெறுப்பு, மதவெறுப்பு என்றைக்குமே ஆபத்தான போக்காகும்! மனிதகுலம் வாழ்வாங்கு வாழ, இனவெறுப்பை, மத வெறுப்பை இல்லாது ஒழித்திடுவோம்.
கட்டுரையாளர்; தி. மருதநாயகம்
ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர்,
நல்ல கட்டுரை. – பீட்டர்
நபிகள் நாயகம் தன்னை கடவுளின் குழந்தையாகக் கூறிக் கொள்ளவில்லை. அவரது வழித்தோன்றல்களும் அவ்வாறு கூறவில்லை. அவர் இன்றளவும் தீர்க்கதரிசி மாத்திரமே.(Prophet).
விவிலியத்தின் பழைய ஏற்பாடு இம்மூவருக்கும் பொதுவானது. பழைய ஏற்பாட்டின் கடைசி இரண்டு தீர்க்கதரிசிகள் டேனியல் & ஜக்கிரியா இருவரும் மெஸையா வெகு விரைவில் யூதகுலக்தில் உதிப்பார் என்று கூறுகிறார்கள். ஆனால், நிஜமான மெஸையாவிற்கு முன்பாக வேறொரு போலி நபர் (அந்திக் கிறிஸ்து/Antichrist) தன்னை மெஸையாவாக அறிவித்துக் கொண்டு பெருவாரியான மக்களைத் தன் மார்க்கத்திற்குத் திருப்பிக் கொண்டு போய்விடுவார். அதன் பின்னர் நிஜ மெஸையா வந்து உலகை உய்விப்பார் என்று தீர்க்கதரிசனம் சொல்கிறது. பழைய ஏற்பாடு இதோடு முடிவடைந்து விடுகிறது.
அடுத்த சில நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த நபிகள் அவர்கள், இதை சுட்டிக் காட்டி, பழைய ஏற்பாட்டிற்கும் இயேசு நாதருக்கும் இடைப்பட்ட காலத்தில் வேறு எந்த அந்திக் கிறிஸ்துவும் வராததாலும், இயேசு நாதரை வழிபட ஆரம்பித்து பெருவாரியான மக்கள் வேறொரு மார்க்கத்தை புதிய ஏற்பாட்டின் படி துவக்கியதாலும் (ஆனாலும் பழைய ஏற்பாட்டை முழுதும் துறக்கவில்லை எனினும்) இயேசுநாதர் ஒன்று மற்றும் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் இல்லை அவர் தான் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட அந்திக்கிறிஸ்துவாக இருக்க வேண்டும் என்றும் போதித்தார்.
உண்மையில் பழைய ஏற்பாடு மற்றும் திருக்குர்ஆன் இடையில் பெரிய வேறுபாடுகள் கிடையாது என்று தான் கூறுகின்றனர்.
கிறித்தவர்களைத் தவிர மற்ற இரண்டு பிரிவினருமே மெஸையா இனிமேல்தான் வரப்போகிறார் என்பதில் ஒருமித்த கருத்து கொண்டவர்கள் தான்.