‘கேரள ஸ்டோரி’ சமூக ஊடகத்தின் கொந்தளிப்புகள்!

-அஜிதகேச கம்பளன்

சுகிப்தோ சென் என்பவர் இயக்கத்தில் ‘கேரள ஸ்டோரி’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இந்த்துத்துவ அமைப்பினர் வரவேற்கின்றனர். பிரதமர் மோடியே புகழ்ந்துள்ளார். அதே சமயம் இந்த படத்தை எதிர்த்து, இஸ்லாமியர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த படம் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளன! திமுக, அதிமுக இரண்டும் இது வரை எந்த விமர்சனமும் வைக்கவில்லை. இந்த சர்ச்சைக்குரிய படம் சமூக வளைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் முகநூல் பதிவுகள் சிலவற்றை இங்கே தந்துள்ளோம்.

பி.பி.சி தமிழ் முகநூல் பதிவு;

“சமூக சிக்கல்களை ஆராய்வதில் ஆர்வம் காட்டாமல், மோசமாக உருவாக்கப்பட்டு இருக்கும் வெற்றுக் கூச்சல்”

தமிழக தேர்தல் களம் முக நூல் பதிவு;

இதுக்கு ஏன் பாய் இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிக்கினு கீர?

கேரளா ஸ்டோரி பட்த்தே தடை செய்யணும் அதானே ? பாய் அதெல்லாம் உள்ளுக்குள்ளே அர்சியல் கீது‌பாய்

நாங்கோ தடே பண்ணா அப்பாலே எங்க ஆளுங்க ஊட்டுக்கு ரெய்டு உடுவானுங்கோ கவ்னர வச்சி‌படா பேஜார் குட்பானுங்கோ இத்தே பிரிஞ்சிக்கோ பாய்

இந்த காண்டுல என் புள்ள ரிலீஸ் பண்ணிக்கீர பொன்னியின் செல்வன்‌2 பட்த்த பாக்காத போய்டாதே

அப்படியே தேர்தல் வரச்சொல்லோ சூரியன் மேலேயே குத்திடு இன்னா வர்ட்டா

கிருஷ்ணமூர்த்தி எஸ்.

அண்டப் புளுகா…ஆகாசப் புளுகா?

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில்.. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு.

# 32,000 பெண்கள் கேரளாவில் இருந்து ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர் என்ற கருத்து நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் உயர் நீதிமன்றத்தில் வாக்குறுதி.

படத்துக்கு கேடி ஜி முட்டு கொடுக்கும்போதே தெரியும்.. புளுகு மூட்டை சங்கிகள் கேரளா ஸ்டோரில எப்படி பித்தலாட்ட கணக்கு காட்டியிருக்கானுங்கன்னு.

படார்ன்னு கால்ல விழுந்துட்டான் பாருங்க.

பூமொழி

இஸ்லாத்திற்கு எதிரான வன்மம் மிகுந்த தி கேரளா ஸ்டோரி போன்ற இட்டுக்கட்டப்பட்ட கோடானக்கோடி கதை மயிர்களைக்கண்ட இஸ்லாத்திற்கு, இதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.

இந்த கதைப்படம் தமிழகத்தில் திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்க வாய்ப்புண்டு என்று, தமிழக உளவுத்துறை எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாமல், டிஜிபி சைலேந்திரபாபு இந்தக் கதைப்படத்திற்கு சொம்பு தூக்குவது,

மதசார்பற்ற, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பளிப்பதாக, அரணாக இருப்பதாக பிதற்றிக்கொள்ளும் திராவிட மாடல் திமுக அரசுக்கு, கிஞ்சிற்றும் அழகல்ல.

இந்த படத்தை வெளியிடுவது சமூக நல்லிணக்கத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளதாம்!

 பிரபல எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்

ஓடிடி, இன்டர்நெட் காலத்தில் மதவெறுப்பைத் தூண்டும் த கேரளா ஸ்டோரி படத்தை மட்டுமல்ல எந்தப் படத்தையும் தடை செய்வது சாத்தியமேயில்லை. படத்தின் அரசியலைக் கடுமையாக விமர்சித்து எழுதவேண்டும். படத்தைப் பொதுமக்கள் பகிஸ்கரிக்குமாறு கோரவேண்டும். இப்படித்தான் கேரள அரசு முடிவெடுத்திருக்கிறது. இதுவே கருத்துரிமை. இதுவே மனித குல அமைதியின் பாதை.

கோவை சம்சுதீன் தமிழ்நாடு

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஒட்டப்பட்டு இருந்த அனைத்து போஸ்டர்களையும் காவல்துறை கிழித்துள்ளது ..

இது காவல்துறையின் ஒரு தரப்பு ஆதரவு என்ற நிலைப்பாடு வெட்ட வெளிச்சம் ஆகிறது.

முதல்வர் குறித்து அவதூறு வீடியோக்கள் சுமார் 386 காணொளிகளை நீக்கி யூடியூப் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்த. தமிழக அரசு மற்றும் காவல்துறை.

ஒரு சமுதாயத்தின் மாண்பையே சீர்குலைக்கும் வகையில் பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு திரைக்கதையை அனுமதித்துள்ளதும் அதற்கு பாதுகாப்பு அளிப்பதும் எந்த வகை நியாயம் என்பது புரியவில்லை …

கப்பி குளம் ஜே.பிரபாகர்

எளிய கணக்குதான்..

பெரும்பான்மை சாதி, மதம் தான் MLA, MP, அமைச்சர்கள் ஆக முடியும்.

ஆக, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எதிர்க்க எதிர்க்கத்தான், தேர்தல் அரசியலில் பாஜக விற்கான ஓட்டு வங்கி அதிகரிக்கும்.

இந்திய தேர்தல் முறையில் 20% முதல் 30% வாக்குகள் பெற்றாலே ஆட்சி அமைத்து விட முடியும்.

அதற்கான செயல்திட்டங்களை மட்டுமே பாஜக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதில் பாஜக உறுதியாகவே உள்ளது.

பிபிசி ஆவணப்படத்தை தடை செய்து விட்டு, காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி திரைப்படங்களை கொண்டாடுவது தேர்தல் அரசியலின் கணக்குதான் அதாவது சிறுபான்மைக்கு எதிராக பெரும்பான்மையை ஒன்றிணைப்பது. அதில் 20 விழுக்காடு ஆதரவு கிடைத்தால் போதும் ஆட்சியில் தொடர்ந்து இருக்கலாம்.

கோபால் ராஜன்;

கேரளா ஸ்டோரி படத்தை புறக்கணிப்போம்.

படத்தை திரையிடும் தியேட்டர்களும், புறக்கணிக்கப்பட வேண்டும்.

ஹே ராம் படத்தையும், தசாவதாரம் படத்தையும், திரௌபதி படத்தையும் சகித்துக் கொண்ட மனங்கள் கேரளா ஸ்டோரிக்கு கொந்தளிக்கவா போகிறது?

ஆழ்மனம் இந்துத்வாவை அங்கீகரிக்கிற உணர்வுமட்டம், அடிப்படை மக்களின் நலனை காக்க அதிகார அரசியலுக்கு எதிரான கூட்டிணைந்த போராட்டத்தின் வழியே மட்டுமே மறுதலிக்கப்படும்.

மக்களை பிளவுபடுத்தும் மக்கள் விரோத பண்பாட்டையும் முன்னிறுத்தும் திரைப்படங்கள் உருப்பெறுவதை மறுதலிக்கும் திரைக்கலைஞர்கள் கூட்டு உருப்பெற வேண்டும்.

சனநாயகக் குரல் அனைத்து துறைகளிலும் ஆட்கொள்வதே சமூகப்பிளவில் குளிர் காயும் தேச துரோக மதவாத, சாதிய ஆதிக்க சக்திகளின் அதிகாரத்தை நிலை குலையச் செய்யும்.

காவி-கார்ப்பரேட் ஒருங்கிணைந்த அதிகாரத்தை தகர்க்கும்.

அப்துல் சுக்குர் சுக்குர்

கேரளா ஸ்டோரி’ படம் சொல்லும் தேசத்திற்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும் எதிரான அவதூறு. கேரளாவில் 32,000ம் பெண்களை மதம்மாத்தி தீவிரவாத அமைப்பில் சேர்த்தார்களாம்.

இப்படி திரைப்படம் பரப்பும் அவதூறுக்கு ஆதாரம் உண்டா?

உளத்துறைக்கே தெரியாத, இந்திய தேசிய ரகசிய கண்காணிப்பு புலனாய்வு முகமைகளுக்கே தெரியாத அவர்களிடமே இல்லாத இந்த விசயம்

படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு தெரிந்தது எப்படி?

முஸ்லீம்களை கொச்சைபடுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், எளிதாக மதம்மாறி விடக்கூடிய சுய சிந்தனையற்றவர்களாக, தீவிரவாதியாகுமளவு கீழானவர்களாக இந்துக்களை சித்தரிப்பதும், கேரள உளவுத்துறை நாட்டின் உயரிய உளவு அமைப்புகளின் மற்றும் நாட்டின் வலிமையையும் பாதுகாப்பு அம்சங்களையுமே கேள்விக்குள்ளாக்குகிறது படம்.

இதற்காக இப்படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் படக்குழுவினர் எந்த தீவிரவாத அமைப்பிடம் எவ்வளவு பணம் பெற்றனரோ?

இருபிரிவினருக்கெதிரான வெறுப்பு கலவரத்திற்கு திட்டமிட்டு தேச அமைதியை சீர்குலைக்க சதிசெய்தது போன்ற வழக்குகளின்கீழ் (படக் குழுவினர்) கைது செய்யப்பட்டு கடும் தண்டணை வழங்கப்பட வேண்டும்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time