நீட் விலக்கு வாங்கித் தருவோம் என்றனர். இன்று மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதி அனுப்பி விட்டு சும்மா இருந்தால் எப்படி? பாஜக அரசின் இழுத்தடிப்பு வேலைகளை அம்பலப்படுத்தி போராட வேண்டாமா..? தமிழகத்திற்கான கல்வி கொள்கை உருவாக்க குழு விவகாரம் கவலை அளிக்கிறது. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆவேசம்!
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் நிர்வாகிகள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அதன் பொதுச் செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேட்டியளித்தார்.
இருமுறை ஆளுநர் அனுமதிக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் தற்போதைய நிலை,
”தேசிய கல்விக் கொள்கை 2020 க்கு மாற்றாக, புதிய கல்விக் கொள்கை உருவாக்குவோம்’’ என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன திமுக, இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போதைய நிலைமை என்ன? என்பது குறித்தும் தம் உள்ளக் குமுறல்களை ஆவேசமாக வெளிப்படுத்தினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்கள் பெற்று அந்த ஆதாரங்கள் அடிப்படையில் பேசினார்.
பேட்டியின் போது அவர் கூறியது:
“நீட்’ என்பது மருத்துவ படிப்புக்கான தேர்வு அல்ல. இது “சந்தையின் சூதாட்டம்”(Gamble of Market) என்பதை கடந்த கால நிகழ்வுகள் நிரூபணம் செய்து விட்டன.
நீட் தேர்வில் 720 க்கு குறைந்தபட்சம் 138 எடுத்தால் போதும், மருத்துவ படிப்பில் சேரும் தகுதி வந்து விடுகிறது நிர்வாக கோட்டாவில் சேரும் மாணவர்களுக்கு. மாநில அரசுக்குள்ள ஒதுக்கீடு போக கணிசமான இடங்கள் மேனேஜ்மென்ட் ஒதுக்கீடுக்கு போகிறது.
இதில் சேர்ந்து படிக்க ஒரு மாணவர் குறைந்தபட்சம் 13 லட்சம் முதல் 25 லட்சம் வரை பணம் வேண்டும். ஏற்கனவே கோச்சிங் சென்டர்கள் லட்சக்கணக்கில் கட்டணம் பெறுகின்றன. இதை நாம் அனுமதித்துக் கொண்டே இருக்க போகிறோமா?
” தி.மு.க. ,தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி,
நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி அது கடந்த 2021 செப்டம்பர் மாதம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் அதை அனுப்பாத நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் சட்டமன்றத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, சில மாதங்கள் வரை அதை அவர் கிடப்பில் வைத்திருந்து குடியரசு தலைவருக்கு அனுப்பினார். அந்த மசோதா தற்போது மத்திய உள்துறை அமைச்சரகத்தில் உள்ளது.
அந்த மசோதா குறித்து ஒன்றிய அரசின் ஆயுஷ் துறை, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை ஆகியவை விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு அடுத்தடுத்து கடிதங்கள் அனுப்பி வைத்தன. அவற்றிற்கு தமிழக அரசு பதில் கடிதங்கள் அனுப்பி உள்ளது.
இதில் வியப்பு என்ன என்றால், ஆயுஷ்துறை முதலில் கேட்ட அதே விளக்கத்தைத் தான் வேறு வார்த்தைகளில் இரண்டாவது கடிதத்திலும் கேட்டிருந்தது. அதற்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டிய தமிழக அரசு இரண்டு மாதம் அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளது.
பொதுவாக உள்துறை அமைச்சகம் இது போன்ற விவகாரங்களில் மற்ற துறைகளின் கருத்துகளைக் கேட்டு வாங்கி அது தான் பதில் தயாரித்து அனுப்புவது வழக்கம், இந்த விவகாரத்தில் ஒரு “போஸ்ட்மேன்” பணி போல செயல்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து வந்த நான்கு கடிதத்தில் ஒன்றில் கூட இந்த மசோதா அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்ற கருத்து இல்லை.
அரசமைப்புச் சட்டம் 254 (1) ஐ குறிப்பிட்டு, ஒன்றிய அரசின் கொள்கைக்கு முரணாக உள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இப்படி ஏற்படும் முரண்பாட்டை தீர்த்து வைக்கும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் 254(2) பிரிவு குடியரசு தலைவருக்கு வழங்கி உள்ளது. இந்த பிரிவு ஒன்றிய அரசின் கண்களுக்கு ஏன் தெரியவில்லை.?
சட்டமன்ற மசோதாவை அமித்ஷா தலைமையிலான இந்த அமைச்சரகம் தங்கள் வசம் இப்படி வைத்திருப்பது ஜனநாயக நடைமுறைக்கு உகந்தது அல்ல.
இந்திய அரசுக்கு அதற்குரிய இறையாண்மை இருப்பது போல மாநில அரசுக்கும் உள்ளது . மக்களுக்கும் உள்ளது. அந்த மக்கள் அரசமைப்பு சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் கேட்கும் போது, அதைக் கொடுப்பது தானே மத்திய அரசின் தார்மீக கடமை. ஒரு மாநில அரசின் சட்டமன்றம் ஏகோபித்து அனுப்பிய மசோதாவை இப்படி அலைக்கழிப்பு எந்த விதத்தில் நியாயம்?
தமிழகத்தில் மாணவர்கள் நீட் பிரச்சனையால் செத்துக் கொண்டிருக்கிறார்கள், மனக் கவலையில் உழல்கிறார்கள். அப்படி இருக்கும் போது இதில் காலம் கடத்துவது நியாயமா?
நீட் டை அறிமுகம் செய்தபோது,” திறமைக்கு முக்கியத்துவம் கிடைக்கும், வணிகத்தை ஒழிக்கும்” என்றெல்லாம் கூவினார்கள்.
இன்றைக்கு குறைந்த பட்ச மதிப்பெண்ணும், பெரும் பணத்தையும் கையில் வைத்திருப்பவர்கள் மருத்துவ இடங்களை நிரப்பிக் கொண்டிருக்கும் அவல நிலைமையை பார்க்கிறோம்.
அண்மையில் பொருளாதாரத்தின் நலிவுற்ற ஒரு மாணவர் 534 மதிப்பெண் பெற்றும் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அவருடைய பெற்றோர் இன்னொரு முறை நீட் தேர்வு எழுது என்று முடிவு செய்தனர். இதையடுத்து அவருக்கான இடம் காலி என்று அறிவிக்கப்பட்டு அவரை விட குறைந்த மதிப்பெண் பெற்ற ஆனால் பணவசதி மிகுந்த ஒரு மாணவர் அந்த மருத்துவ சீட்டை பெற்றார்.
என்ன கொடுமை பாருங்கள்.! இங்கு பணம் பிரதானமாகி விட்டது. மாணவர்களுடைய கனவு கலைகிறது, அவர்களுடைய இளமை பறி போகிறது.
அண்மையில் தமிழக ஆளுநர் ரவி எதற்காக ஐந்து மாதம் வரை இந்த மசோதாவை கிடப்பில் வைத்திருந்தார்?.ஆளுநருக்கு ஒரு பிரச்சனையில் முடிவெடுக்க கால நிர்ணத்தை வகுத்திட வேண்டும். அதேபோல குடியரசு தலைவருக்கும் கொண்டு வர வேண்டும்.
நீட்டை பொருத்தவரை தமிழ்நாடு மாணவர்கள் நலன் குறித்து ஒன்றிய அரசு கொஞ்சமும் கவலைப்படவில்லை.இனி, இப் பிரச்சனையை மக்களிடம் கொண்டு போவது தான் ஒரே வழி.
இப் பிரச்சனையில் மத்திய அரசின் ஒவ்வொரு அசைவுகளையும், செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும், தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி தமிழக அமைச்சர்கள் இதைப் பேச வேண்டும். இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவை பெற வேண்டும். மற்ற மாநில சட்டமன்றங்களில் நீட் விலக்கு தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்ற தூண்ட வேண்டும்.
ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில், மக்கள் தங்களுக்கு எதிராக திரும்பி விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் கடைசியாக மத்திய ஆட்சியாளர்கள் வழிக்கு வந்தார்கள். இந்த விவகாரத்திலும் மக்களின் எழுச்சி மட்டுமே அவர்களை வழிக்கு கொண்டு வரும்.!
தமிழக மக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இன்னொரு பெரும் ஆபத்து ஒன்றிய அரசின் 2020 கல்வி கொள்கை. தேசிய கல்விக் கொள்கை 2020 க்கு மாற்றாக நம் மாநிலத்துக்கு என்று புதிய கொள்கையை வகுப்போம் என்று சொல்லி தான் 2021 தேர்தலில் திமுக வாக்கு கேட்டது. மக்களும் ஓட்டு போட்டார்கள். தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கடமை இந்த அரசுக்கு உள்ளது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இது தொடர்பாக இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கையை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.மாநிலத்துக்கு ஏற்ப கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழுவை ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்து தான் அமைத்தார்கள். அந்தக் குழுவில் தகுதி படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதே சமயம் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ நிறைவேற்றுவதற்காக ஒன்றிய அரசு செய்து வரும் அதிவேக நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல், இந்த அரசும், இக்குழுவும் இருப்பது தான் மிகவும் வியப்பாக உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ நடைமுறை படுத்தும் நோக்கில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும், அரசின் முதன்மைச் செயலாளர்களுக்கும் தொடர்ந்து அறிக்கைகளை ஒன்றிய அரசு அனுப்பிக் கொண்டே இருக்கிறது. “சாரதி “என்னும் தூதர்களை நியமித்துள்ளது.
இதற்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு இதுவரை எடுக்கவில்லை. தமிழகத்தில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாதிரி பள்ளிகள் சமச்சீர் கல்விக்கு எதிரானது என்பது கூடவா இந்த அரசுக்கு தெரியாது? மாநிலத்துக்கு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க தமிழக அரசு ஏற்படுத்திய குழுவில் இருந்து அண்மையில் ஜவகர் நேசன் விலகி விட்டார். அவருக்கு பதிலாக இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர். என்ன நோக்கத்திற்காக இந்த குழு தொடங்கப்பட்டுள்ளதோ, அது விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை 2020 இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கூறுக்கே எதிரானது ஆகும். இந்தி படிக்க வைப்பது , சமஸ்கிருத சனாதனப் பண்பாட்டை உருவாக்குவது அதுதான் மறைமுகத் திட்டம். பள்ளிக்கூட மட்டத்திலேயே தொழில் கல்வியையும் கொடுக்கிறோம் என்று சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்தும் கல்வி திட்டம் அது. 10 +2 முறையை ஒழித்து, க்யூட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பி .ஏ. வரலாறு கூட படிக்க முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்த உள்ளார்கள்.
அந்த தேர்வில்கூட சமஸ்கிருதத்தை நுழைக்கும் திட்டம் உள்ளது. நம்முடைய கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் விரைவில் அவர்களுடைய கட்டுப்பாட்டில் போகும் அபாயம் உள்ளது. அதற்கான வேலைகள் அத்தனையையும் வேகமாக செய்கிறது ஒன்றிய அரசு.
இதற்கான எதிர் வினைகள் இங்கு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. ஆகவே, உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலத்துக்காக தீவிரமான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். மாநிலக் கல்வி கொள்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினருடன் முதல்வர் நேரடியாக பேசி உண்மை நிலவரங்களை அறிய வேண்டும்.
Also read
திறமை வாய்ந்த மருத்துவர்களை கொண்ட அரசு மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறைக்கும் மருத்துவர் கிடைக்காமல் செய்து, இவற்றை தனியார் வசம் நோக்கி தள்ளும் சதி தான் ” நீட் “தேர்வு என்ற புரிதலை தமிழகத்தில் உள்ள சாமானிய மக்களுக்கும் உணர்த்த வேண்டிய கடமை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு உள்ளது.
சென்ற அதிமுக ஆட்சியில் 37 எம்.பிக்கள் இருந்தும் எதுவும் செய்யவில்லை என திமுக கூறியது. இன்றோ, திமுகவிற்கு மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலுமாக 54 எம்.பிக்கள் உள்ளனர். நீங்க ஏன் இப்போது எதுவும் செய்யவில்லை?
அதை இப்போதாவது செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இதே போல, தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ தடுத்து நிறுத்தும் முக்கிய கடமையும் முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது.” இவ்வாறு கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறினார்.
எழுத்தாக்கம்; மூர்த்திலட்சுமி.
Tie me up and abuse me http://prephe.ro/Phqn
தூங்குபவரை எழுப்பலாம்.
தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியுமா???
இதுதான் இன்றைய மாநில அரசு நிலை.
இதென்ன முட்டாள் தனமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் தமிழர்க்கான கல்விக்கான எதிரியே திமுக தான்.திமுக அல்ல எந்த கொம்பனாலும் NEET தேர்வை ஒழித்து கட்ட முடியாது.இது ஒரு குஜராத்திய சதி திட்டம்.திமுகவிற்கு இது ஒரு துருப்பு சீட்டு.அடுத்த வாக்குறுதி மத்திய அரசுக்கு எழுதி இருக்கிறோம்.எப்படியும் இன்னுமொரு ஐந்தாண்டு காலத்தில் NEET யை நீக்கி விடுவோம். Neet யிர்க்கான பயிற்சியாளர்கள் கோட்டா என்னும் இடத்தில் இருந்து வருகிறார்கள்.கோட்டா ஆட்களால் எடுக்க படும் பயிற்சி மிகவே சிறப்பு.இது தான் இன்றைய நீட் பயிற்சிக்கான நிலைப்பாடு.இந்த கோட்டா எங்குள்ளது.ராஜஸ்தானில் உள்ள ஒரு வறண்ட பகுதி.
கல்வியில் முன்னேறிய மாநிலம் எங்கள் தமிழகம் என்று கூறும் நாம், இந்த மருத்துவ நுழைவு தேர்வை (NEET) எதிர்ப்பது கேவலமாக இல்லையா ?
இந்த நுழைவு தேர்வை வேண்டாம் என்று தொடர்ந்து கொடிபிடிப்பது வெட்ககேடானது. தமிழக மாணவர்களை குறைத்து மதிப்பிடும் செயல் என்பதை நீட்-ல் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் உணருவது எந்நாளோ
You made some clear points there. I looked on the internet for the subject and found most persons will agree with your blog.