கேரளத்தைப் பற்றி மிகப் பெரிய பொய்களைச் சொன்ன கேரளா ஸ்டோரீஸ் சினிமாவின் இரண்டாம் பாகம் போல இருக்கிறது ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ படத்திற்கான ஜெயமோகன் விமர்சனம்;அப்பட்டமான பார்ப்பனியப் பார்வை, வர்ணாசிரமக் கண்ணோட்டம் ஜெயமோகனிடம் தென்படுகிறது எனக் காட்டமாக விமர்சித்துள்ளது பிரபல நாளிதழான மலையாள மனோரமா.
மலையாள எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் உண்ணி . ஆர் , மலையாள மனோரமாவில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது;
ஜெயமோகன் எழுதிய குறிப்பை ( மொழிபெயர்ப்பு ) வாசித்தேன். அது அவ்வளவொன்றும் விஷமம் இல்லாதது அல்ல.
# சுற்றுலா வரும் கேரளப் பொறுக்கிகள் குடிக்கிறார். சட்டத்தை மீறுகிறார்கள்.
# கேரளத்துக் கடற்கரைகளில் மாலை நேரங்களில் ஆண்களோ பெண்களோ நடமாட முடியாது.
# எர்ணாகுளத்தை மையமாகக் கொண்டு இளைஞர்களின் போதைக் கும்பல்.
# வெடிவழிபாடு, ஜல்லிக் கட்டு, ஒழிவு திவசத்தே களி ஆகிய படங்கள் குடியையும், விபச்சாரத்தையும் பொதுமைப்படுத்துகின்றன.
குடிப்பவர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்ற பரிசுத்த வாதம் பார்ப்பனியத்தின் வாதமே. மலையாளிகளில் கள்ளிறக்கும் தொழிலைச் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆண் பெண் பேதமின்றி, மது அருந்துபவர்களும் இருக்கிறார்கள். சாதிப்படி நிலையில் மேலே நிற்பவர்கள் இதை அருவெருப்புடன் பார்க்கிறார்கள். ஒதுக்கப்பட்டவர்களின் நாகரிகமில்லாத களியாட்டமாகவே இதைப் பார்க்கிறார்கள். இந்தப் பார்ப்பனிய உணர்வுதான் ஜெயமோகன் வாதத்தின் பின்னணி.
‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ என்ற நண்பர்களின் குழாம் அடித்தட்டு வாழ்க்கையை வாழ்பவர்கள். அவர்கள் எல்லாரையும் குடிகாரர்கள் என்றும் பொறுக்கிகள் என்றும் காட்ட வேண்டியது வர்ணாசிரமத்தை இறுகப் பிடித்திருக்கும் இந்த எழுத்தாளனுக்குத் தேவையாக இருக்கிறது. ஆனால் ஆபத்தான கட்டத்தில் தனது நண்பனைக் காப்பாற்றுகிற மனிதாபிமானத்தை இந்த ஆசாமி பார்ப்பதில்லை. இப்படிப் பட்டவர்கள் செத்துத் தொலைவது நல்லது என்று இவர் கருதுகிறார். அதை இயற்கையின் நீதியாகவும் பார்க்கிறார். இயற்கையின் நீதி பிரளய தாண்டவமாடியபோது, மலையாளிகளும், தமிழரும் பரஸ்பரம் கைநீட்டித் தொட்டுக் கொண்டார்கள். அவர்களில் குடிகாரர்களும், விபச்சாரிகளும் இருந்தார்கள்.
கேரளக் கடற்கரைகளில் மாலை நேரங்களில் செல்லப் பயமாக இருக்கிறதாம்…! நீங்கள் கோழிக்கோட்டுக்கோ, வர்க்கலைக்கோ, போர்ட் கொச்சிக்கோ போயிருக்கிறீர்களா?
எர்ணாகுளத்தை மையமிட்டு இளைஞர்களின் குடிகாரக் கும்பல் இருக்கிறதாம். உங்களுக்குள்ளற இருக்கும் கிழவனுக்கு இளைஞர்கள் மேல் ஏன் இத்தனை வெறுப்பு? உங்களைப் போல கீழ்மைக்கு அடிமையாகாமல் மலையாளி இளைஞர்கள் தங்களை நிரந்தரமாக நவீனப்படுத்திக் கொள்வதாலா?
சினிமாவுக்கு எழுத கேரளத்துக்கு வந்த உங்களுக்குத் திரைக்கதை எழுதத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு தவிர்த்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கான பழிவாங்குதல் தானா இந்த வசை மாரி?
நீங்கள் குறிப்பிட்ட ஒழிவு திவஸத்தே களி’யை எழுதியவன் நானே. அதில் சாதி வெறியில் ஒரு தலித்தை ( அதுவும் நண்பனை) க் கொல்வதை நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்கு உள்ளேயிருக்கும் வர்ண பேதம் அதைப் பார்க்காது.
அடிக்கிற போலீஸ்காரனை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள். அடித்தும், உருட்டியும் கொன்ற போலீஸ்காரர்களை அடங்கச் சொன்ன மூத்த எழுத்தாளர்கள் எங்களுக்கு இருந்தார்கள். படிக்கல் ஒரு நாய், அழுகிப் போன நாய்’ என்று போலீஸ் அதிகாரிக்கு எதிராக எழுதிய என்.என் கக்காடு எங்களுக்கு இருந்தார்.
உங்களைப் போல அதிகாரத் திமிருடன் இருப்பவர்களுக்கு அம்பேத்கர் சொன்ன ‘மைத்ரி’ என்னவென்று புரியாது. ஈ.வெ.ரா பெரியாரைப் புரியாது. நாளை நீங்கள் கேரளத்தின் கவர்னர் ஆனாலும், நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்.
கேரளத்தைப் பற்றி மிகப் பெரிய பொய்களைச் சொன்ன ‘கேரளா ஸ்டோரிஸ்’ என்ற சினிமாவின் தொடர்ச்சியாகவே ஜெயமோகனின் குறிப்பைக் கருத வேண்டும். இல்லையென்றால் ‘ஆனை டாக்டர்’ லட்சக்கணக்காக பிரதிகள் விற்றன என்று சொல்லும் பொய்யைப் போல ( லட்சக்கணக்கில் விற்ற பிரதி ‘ஆடுஜீவிதம்’ மட்டுமே ) மேலும் பொய்களையே சொல்லிக் கொண்டிருப்பார்.
கட்டுரையாளர்; உண்ணி. ஆர்.
மலையாள எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர். ஏழு சிறுகதைத் தொகுப்புகளும் ஒரு நாவலும் வெளிவந்துள்ளன. ‘பாதுஷா என்ற கால் நடையாளன்’ தமிழில் வெளியாகியுள்ள அவரது சிறுகதைகளின் தொகுப்பு. சாப்பா குரிசு சார்லி, முன்னறியிப்பு முதலான படங்களின் திரைக்கதை உரையாடல் அவருடையவை.
தமிழில்: பார்கவி.
மஞ்சுமெல் பாய்ஸ் படம் சில குறைபாடுகளோடு இருந்தாலும் வரவேற்கத்தகுந்த படைப்பே. ஜெ.மோ. சொல்வது போல, கேரள இளைஞர்களை அது கொச்சைப்படுத்தவில்லை. மாறாக, படத்திற்கு விமர்சனம் எழுதுவதாகச் சொல்லி ஜெ.மோ.தான் கேரளத்தின் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கொச்சைப்படுத்துகிறார். அதை சரியாக வெளிப்படுத்துகிறது இக்கட்டுரை.
3% of snakes are very poisonous like these sludge.
ஏண்டா ஒருத்தர் ஒரு கருத்த சொன்னா உடனே பார்ப்பனிய னு சொல்ல வேண்டியது… உனக்கு படம் எடுக்க சுதந்திரம் இருந்தா கருத்து சொல்ல எல்லோருக்கும் சுதந்திர ம் உண்டு
உங்கள் ஜெயமோகன் விமர்சனக் கட்டுரை குறித்த பார்வை சரியே.. ஆனால் குடிப்பது தவறு என்று கூறியதால் மட்டுமே அவர் சனாதனியா.. ? வள்ளுவர் புலால் மறுத்தல் கொல்லாமை, கள்ளுண்ணாமையை வலியுறுத்துகிறார்.. அவர் சனாதனியா? பதின்மூன்றாம் நூற்றாண்டில் வேள்வியில் உயிர்ப் பலி இடுவது வழக்கம் என பரிமேலழகர் பதிவு செய்கிறார். எனவே பார்ப்பனியத்துக்கும் புலால் உண்ணாமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய நிலையை வைத்து பார்க்கக் கூடாது .
ஜெயமோகன் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதுகிறேன் என்று பெயரில் ஒரு மாநில மக்களின் மீது சேற்றை வாரி வீசியிருக்கிறார்…!
இவரது விமர்சனம் இவரது தரத்தை காட்டுகிறது, இவரே ஒரு மஞ்சள் எழுத்தாளர் தான்.
இவரை போன்ற தரம் தாழ்ந்த மனிதர்களை சமூகத்தில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்…!
ஜெயமோகன் தான் மட்டும்தான் இலக்கிய எழுத்தாளர் என கர்வம் கொண்டுள்ளார்.அவரது சிறுகதைகள்.சினிமாவை சீரியலிக எடுத்தது போல உள்ளன.மிகப்பெரிய வாசகர் தளத்தை கொண்டவர் சுஜாதா.அவரை வணிக எழுத்தாளர் என கொச்சைப்படுத்துகிறார்.இவர் ஏன் சினிமாவுக்கு எழுதுகிறார்.கண்காட்சியில் ஸ்டால் போடுகிறார்.பணத்துக்காகத்தானே.எழுத்துலகில் அரசியல்வாதிகள் போல் குடும்பத்தை திணிக்கிறார்.தன்னைச் சுற்றிலும் ஜால்ரா கோஷ்டியை உருவாக்கி வைத்துள்ளார்.
உயிர்கள் என்றாலே.. மனிதர்கள் மட்டும் அல்ல.. அந்த பதிவில் கூறப்பட்டுள்ள வற்றை முழுவதும் ஆராய்க…
ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவரவர் கருத்துக்களிருக்கும். அது அவரவர் சுதந்திரம். திரு. ஜயமோகன் சொல்வதால் மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்திற்கோ, கதைக்கோ பாதிப்பு உண்டானதா? இல்லை. அதை அழகான இயல்பான திரைப்படமாகத்தான் பார்க்கின்றோம். அவர் கருத்து சொல்லிப்போகட்டுமே! நமக்கென்ன பிணக்கு?! இதை ஊதிப்பெரிதாக்குதல் தான் ஊடகபார்ப்பனியம்!.