அறம் வாசக நண்பர்களே,

சாவித்திரி கண்ணன்

www.aramonline.in மூன்றாம் மாதத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது..!

பொய்மைகளாலும்,மாயைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஊடகச் சூழலுக்குள் ஒளிபாய்ச்சும் ஒரு சிறு அகல்விளக்காய் அறம் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. அந்த சுடரின் வீரியத்தை நீங்கள் நாளும் பல கட்டுரைகளில் பார்த்து வருகிறீர்கள்! பரப்பியும் வருகிறீர்கள்!

பொது நலன் சார்ந்து, எந்த சமரசத்திற்கும் இடமில்லாமல் வெளிவரும் அறம் இணைய இதழை தொடர்ந்து வரச் செய்வது வாசகர்கள் பங்களிப்பில் தான் உள்ளது.

சமூகத்திற்கான தேவை என்னவென்று நாம் உழைத்துக் கொண்டிருந்தால், நமக்கான தேவையை அந்த சமூகமே அக்கறை எடுத்துப் பார்த்துக் கொள்ளும் என்ற ஒரு நம்பிக்கையில் தான் திட சித்தத்துடன் நான் இயங்கிக் கொண்டுள்ளேன்!

தொடர்ந்தும்,பரந்தும் வாசகர் எண்ணிக்கை வளர்வது மகிழ்ச்சியளிக்கிறது! எனினும் விளக்கென்றால், அது தொடர்ந்து சுடர்விட – உயிர்த்திருக்க – எண்ணெய் வேண்டுமல்லவா? திரியை தூண்டிவிட அவ்வப்போது விரல் வேண்டுமல்லவா?

’’அதை யாராவது சிலர் தராமலா போய்விடுவார்கள்..மற்றவர்கள் தரட்டுமே…,’ என்று மிகப் பெரும்பாலோரும் நினைப்பதாகத் தெரிகிறது. அதே சமயம் அத்திபூத்தது போல எதிர்பார்க்காத இடத்திலிருந்து ஒருசில ஆதரவு கரங்கள் கிடைக்கின்றன! அது மிகவும் நெகிழ்ச்சியளிக்கிறது.

அறத்தை தொடர்ந்து வாசிக்கும் ஒவ்வொருவருமே – இது ஒரு சமூகக் கடமை என்று கருதும்பட்சத்தில் – தங்கள் சக்திக்கேற்றவாறு – பெரிதாகவோ, சிறிதாகவோ ஒரு பங்களிப்பை தொடர்ந்து தர திடசித்தம் கொள்ள வேண்டும். – அதுவும் காலந்தாழ்த்தாமல் செய்ய வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக உங்கள் முன்பு வைக்கிறேன்!

https://aramonline.in/support-aram/

googlepay 9444427351

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time