உலகின் மிகப் பெரும் மரண வியாபாரி பில்கேட்ஸ்!

-சாவித்திரி கண்ணன்

உலக மக்கள் தொகையை குறைப்பது ஆதிக்க வர்க்கங்களின் நோக்கங்களில் பிரதானமானது. முன்பு போர்கள் மூலம் அதை செய்தார்கள். தற்போது நோய் தொற்றை பரப்பி தடுப்பூசிகள் மூலம் அதைச் செய்கிறார்கள். இதில் முன்னணியில் இருக்கும் பில்கேட்ஸ், மருத்துவ சாம்ராஜ்யத்தை கைப்பற்றி, இந்த உலகையே ஆட்டுவிக்கிறார்!

முதலில் சாப்ட்வேர் எனப்படும் கணினி மென்பொருள் உற்பத்தியில் உலகிலேயே முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸ், பிறகு வெவ்வேறு துறைகளில் தன் கவனத்தை பதித்தார்! அந்த வகையில் விவசாயம், மருத்துவம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தும் இவர், அவற்றை முன்னெடுத்துச் செல்லும் விதமாக சமூக சேவகராகவும், பரோபகாரியாகவும் அவதாரம் எடுத்தார். அதற்காக, ‘பில் & மெலண்டினா பவுண்டேஷன்’ என்ற ஒன்றை உருவாக்கினார். ஒரு வகையில் பலரை ஈவு இரக்கமின்றி அழித்து, உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை கட்டமைத்த பில்கேட்ஸ்க்கு, அந்த அவப் பெயரில் இருந்து விடுவித்துக் கொள்ளவும் இந்த அவதாரம் அவருக்கு பேருதவி புரிகிறது.

பில்& மெலண்டினா தொண்டு நிறுவனத்தின் ஒரு பகுதி.

இவரது மைரோசாப்ட்வேர் நிறுவனத்தின் தயாரிப்புகள் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளின் பாடத் திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அவருடைய மென்பொருள்களைத் தான் பல கல்வி நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் உலகை எப்போதும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்டமைக்கும் சமூகச் சூழலுக்கான அடித்தளத்தை பில்கேட்ஸ் உருவாக்கி உள்ளார்.

எப்போதும் வெளிப்படைத் தன்மையற்றதாகவே அவரது நகர்வுகள் இருக்கின்றன! உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனாவிற்கு எதிரான வேக்சின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில்  பில்கேட்ஸ் முக்கிய பங்கு வகித்து வகித்தார். தனது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு கொரோனா வேக்சினை கிட்டதட்ட திணித்தார் பில்கேட்ஸ் என்று தான் சொல்ல வேண்டும்! உலகின் 67 சதவிகித நாடுகளை முழு தடுப்பூசி திட்டத்தையும் அமல்படுத்தும்படி செய்து, இவர் அள்ளிய தொகைக்கு அளவில்லை.

பில் கேட்ஸ் தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி, மொத்தம் 7 நிறுவனங்களை இதற்காக உருவாக்கினார். கொரோனாவை தடுப்பதற்காக இந்த 7 நிறுவனங்களும் தனி தனியாக வெவ்வேறு மருந்துகளை கண்டுபிடிக்குமாம். இதில் 2 நிறுவனத்தின் மருந்துகள் கடைசியாக தேர்வு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்துகளை சோதனை செய்ய பல ஏழை நாட்டு மக்களை அவர் நுட்பமாக பயன்படுத்துகிறார்.

ஆப்பிரிக்க நாட்டு குழந்தைகளை பலிகடாவாக்கும் பில்கேட்ஸ்!

முக்கியமாக தன்னுடைய தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆப்ரிக்காவில் எபோலாவிற்கு எதிராக மருந்துகளை அனுப்பினார்..! நைஜீரியாவில் போலியோவை ஒழிக்க மருந்துகளை அனுப்பினார். தென் அமெரிக்காவில் மருந்துவ ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி அளித்தார். சார்ஸ் வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சிகளுக்கு அவ்வப்போது இவரின் தொண்டு நிறுவனம் நிதி உதவிகளை வழங்கி வருவது போன்ற எல்லாவற்றுக்குள்ளும் ஆபத்தான உள் நோக்கங்கள் அடங்கி உள்ளன!

கொரோனா வேக்சின் உற்பத்திக்காக கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர் வரை இவரது தொண்டு நிறுவனம் முதலீடு செய்தது. கொரோனா வேக்சின் ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஜெர்மனி நிறுவனமான க்யூர் வேக் நிறுவனத்தில் சுமார் 40 மில்லியன் டாலரை பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார்.

அதோடு ஆக்ஸ்போர்ட் – ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் வேக்சின் ஆராய்ச்சிக்கும், உலக சுகாதார மையத்தின் பல்வேறு வேக்சின் ஆராய்ச்சிக்கும் பில்கேட்ஸின் முதலீடும் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் இந்த வேக்சின் பார்முலா மற்றும் பேட்டன்ட் மற்ற நாடுகளுக்கு செல்வதை பில்கேட்ஸ் அனுமதிக்கவில்லை. குறிப்பாக ஆக்ஸ்போர்ட் வேக்சினை ஓபன் மார்கெட்டிற்கு கொண்டு செல்ல ஆஸ்டர்செனகா நிறுவனம் விரும்பிய போது அதை பில்கேட்ஸ் தடுத்துவிட்டார்.

ஏப்ரல் 2020 காலகட்டதிலேயே உலகம் முழுக்க கொரோனா பரவ பில் கேட்ஸ் தான் காரணம் என்று அன்றைய அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பர் ரோஜர் ஸ்டோன் பகிரங்கமாக தெரிவித்தார்! அப்போது அவர் கூறியதாவது; இந்த வைரஸ் பரவியதிலும் அது உருவானதிலும் பில் கேட்சுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். இதுகுறித்து விவாதம் செய்யவேண்டும். நான் சொல்லும் கருத்தை சிலர் தவறு என்று சொல்வார்கள், சிலர் சரியென்று சொல்வார்கள். ஆனால் நான் சொல்வதை விவாதம் செய்தே ஆக வேண்டும். பில் கேட்ஸ் மற்றும் சில பணக்காரர்கள் மருந்துகளை விற்பனை செய்யவும், மக்கள் கையில் மைக்ரோசிப்களை பொருத்தவும், அவர்களை எப்போதும் கண்காணிக்கவும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளனர் என்று நம்புகிறேன். இதனால் தான் கொரோனா பரவுகிறது என்று நான் நினைக்கிறேன். என் உயிரே போனாலும் நான் தடுப்பூசிகளை போட மாட்டேன். எனக்கு நேசமானவர்களையும் போட அனுமதிக்கமாட்டேன் என்றார். இவரது பேச்சுக்கு அமெரிக்காவில் கணிசமான மக்கள் ஆதரித்தனர்.

காரணம், உலகில் கொரோனா பரவும் முன்பே அதை பற்றி 2015-லேயே நிகழ்ச்சி ஒன்றில் நாம் எபோலா என்ற பெரிய வைரஸில் இருந்து தப்பி விட்டோம். ஆனால் எப்போதும் இப்படி தப்பிக்க முடியாது. வரும் நாட்களில் பெரிய வைரஸ் வரலாம். அது உலகம் முழுக்க பரவலாம். ஏன் உருமாற்றம் கூட அடையலாம். இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் பெருந்தொற்றுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டு இருந்ததை மக்கள் மறக்கவில்லை. அவர் சொன்னபடியே 2019 இறுதியில் கொரோனா பெருந்தொற்று வந்ததும், உலகம் முழுக்க அவரருடைய தடுப்பூசிகள் விற்பனையானதும் நிகழ்கால வரலாறாகும்.

இதற்காக அவர் பெரும் பிரச்சாரத்தையே மேற்கொண்டார். இந்திய பிரதனர் மோடி உள்லிட்ட பல நாட்டுத் தலைவர்களை தான் பேசுவதை நம்ப வைத்தார்.

”மக்கள் கொரோனாவால் பலியாவதை தடுக்க வேக்சின் உதவும். அதே போல் அவர்களின் உடல்நிலை மோசமாவதை தடுக்கவும் வேக்சின் உதவும். ஏனென்றால், இது மிக வேகமாக பரவுகிறது. கொஞ்சம் வீரியம் கூடுதலாக இருந்தாலும் ஆபத்து தான்! மாஸ்க் அணிய வேண்டும், வெளியே செல்வதை குறைக்க வேண்டும், உட்புற கூட்டங்களை குறைக்க வேண்டும். வேக்சின் போட வேண்டும். பூஸ்டர் போடுவது சிறந்த தடுப்பை கொடுக்கும்…’’ என்றார்.

‘கொரானாவில் பலியானவர்களை விட, அதற்கான தடுப்பூசியால் பலியானவர்களே அதிகம்’ என்ற உண்மை தற்போது உலக அளவில் வெளிப்பட்டு வருகிறது. நமது தமிழகத்திலேயே இதற்கான கருத்துக் கணிப்பை நடத்தினால், கொரானா ஊசி போட்டதால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரத்தம் உறைதல், மாரடைப்பு போன்ற பின் விளைவுகளால் ஒவ்வொரு தெருவிலும் ஒரு சிலரேனும் இறந்துள்ளனர். உடனடி நினைவுக்கு வரும் உதாரணங்கள்; சினிமா நடிகர் விவேக், சினிமா இயக்குனர் கே.வி. ஆனந்த் ஆகிய இருவரும் ஆரோக்கியகாமவே இருந்தனர். தடுப்பூசி போட்டதால் இறந்தனர். தடுப்பூசியின் விளைவுகள் இன்னும் பலரை தொடர்ந்து பாதித்து வருகிறது.. என்பது கண் கூடான உண்மையாகும்.

கொரோனா தடுப்பூசியின் விளைவால் வைரஸ்கள் உருமாறி ஒமிக்ரான் வைரஸ்கள் உருவாகி ஏராளமான நாடுகளை பாதித்தன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அதிதீவிரமாக அமல்படுத்திய கேரளாவைத் தான் ஒமிக்ரான் கூடுதலாக தாக்கியது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதிலும் நல்ல பணம் பார்த்தார் பில்கேட்ஸ்! ஒமிக்ரான் பற்றி பில்கேட்ஸ் குறிப்பிடுகையில், இதில் ஒரே நல்ல விஷயம் இருக்கிறது. ஓமிக்ரான் மிக வேகமாக பரவுகிறது. இதனால் விரைவில் இது ஆதிக்கம் மிக்க கொரோனாவாக மாறும். அப்படி மாறினால் அதன்பின் அலை ஏற்படும். அலை ஏற்பட்டால் அது 3 மாதங்கள் மட்டுமே நீடிக்கும்…என்றெல்லாம் நைச்சியமாக பேசினார்.

எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்று நினைக்கும் போது தான் இந்த பெருந்தொற்றின் மிக மோசமான பகுதிக்கு நாம் வந்து இருக்கிறோம். ஓமிக்ரான் நம்முடைய வீடுகளை தாக்க போகிறது. என்னுடைய நெருங்கிய நண்பருக்கு ஓமிக்ரான் உள்ளது.  ஓமிக்ரான் மிக வேகமாக பரவுகிறது. வரலாற்றில் இப்படி ஒரு வைரஸ் பரவியதே இல்லை. இன்னும் சில நாட்களில் இந்த வைரஸ் உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இருக்கும். இந்த ஓமிக்ரான் உங்களை எவ்வளவு பாதிக்கும் என்பது தான் புதிராக உள்ளது. நாம் இதை மிக மிக சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். எனச் சொல்லி தன் வியாபாரத்தை விரிவுபடுத்தினார்.

இந்தியா தடுப்பூசியை அதிகம் பயன்படுத்தியமைக்கு மோடியை சந்தித்து பாராட்டிய பில்கேட்ஸ்!

பில் கேட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை மிக தவறான காரியங்களுக்கு அவர் பயன்படுத்துகிறார் என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது. இதற்கு தோதாக வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களிடம் வெளிப்படையாகவே பாலியல் மற்றும் உடலுறவு சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டே தேர்வு செய்கிறார்கள்.

அதுவும் எப்படிப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளனர் என அறிந்தால் அதிர்ச்சியில் நாம் உறைந்து போவோம். பெண்களிடம் அவர்களின் பாலியல் தொடர்புகள், ஆபாசப் படங்கள் பார்க்கும் ஆர்வம் குறித்தெல்லாம் கேள்விகள் கேட்கப்படுகிறது. இதோ சில உதாரணங்கள்;

# வாழ்கையில் என்றாவது போதைப்பொருளைப் பயன்படுத்தி உள்ளீர்களா.?

# எப்போதாவது திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்துள்ளீர்களா..?

# உங்கள் மொபைல் போனில் நிர்வாண புகைப்படங்கள் இருக்கிறதா..?

# பணம் ஈட்ட ஹோட்டல்களில் டான்ஸ் ஆடியதுண்டா..?

உங்களுக்கு பாலியல் நோய்கள் வந்ததுண்டா..?

இது போன்ற கேள்விகள் வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆண்களிடம் கேட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி தகவல்கள் கற்பனையோ, வதந்தியோ அல்ல! தி வால் ஸ்டிரீட் ஜெர்னல் இதழே இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தாங்கள் நேரடியாக நேர்காணல் செய்தால் அது விவாத பொருளாகும் என்பதால், வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனம் வழியாக இப்படியான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டு வேலைக்கு பெண்களை தேர்ந்தெடுப்பவர்கள், எந்த நோக்கத்திற்காக ஆள் எடுக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

பில்கேட்ஸ் குறித்து இங்கே நான் விவரித்தவை மிகக் குறைவே! ‘பணம், பணம்,பணம்.. அதன் மூலம் அதிகாரம்’ என சதா சிந்திக்கும் பெரும் பணக்காரர்கள் யாருமே அதற்காக மனித குலத்திற்கு எந்த பேரழிவையும் ஏற்படுத்த தயங்கியதில்லை என்பதற்கு நிகழ்கால நிதர்சனமாகத் திகழ்கிறார் பில்கேட்ஸ்.

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time