கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டுமின்றி, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள்,புண்கள், புரைகள், வீக்கம், குருதி வடிதல் போன்ற நோய்களுக்காக மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றது.
தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை கீழா நெல்லியாகத் தான் இருக்கும்.
மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி என்று பலருக்கும் தெரியும். ஆனால், உட்கொள்ளும் முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது. சித்த மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மூலிகைகள் தான். மூலிகைகள் இன்றி சித்த மருத்துவம் இல்லை என்றே கூறலாம். ஒவ்வொரு உள்ளுருப்பையும் பாதுகாக்க ஒவ்வொரு மூலிகைகைகளை நமது சித்தர்கள் நமக்கு காட்டிச் சென்றுள்ளனர்.
சிறுநீரகத்தைக் காக்கும். சிறுநீரகத்துக்கு ஏற்ற சிறுபீளை, நெருஞ்சில், அதியமான் நெடுநாள் வாழ ஒளவை வழங்கிய ஆயுள் காக்கும் நெல்லி ,மற்றும் அதன் வகைகள்,
ஆண்மைக் குறைவைப் போக்கும் பூனைக்காலி,
கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கப் பயன்படும் அசோக மரம்,
புற்று நோயைப் புறக்கணிக்க உதவும் கொடிவேலியும், நித்திய கல்யாணியும்,
இதயத்திற்கு செம்பருத்தி,
மூளைக்கு வல்லாரை என இவ்வாறு வகைப்படுத்தி உள்ளனர்.
இவை அத்தனையும், நம் பாட்டிமார்களும், தாத்தாவும் காலம் காலமாக நமக்கு அவர்கள் அனுபவித்ததை நமக்கு சொல்லி வந்தவைகள் தான். ஆனால், இப்போது முதியோர் சொல்லுக்கு அத்தனை மதிப்பில்லாமல் போய்விட்டது .
நமது உடலில் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு கீழாநெல்லி தான் காக்கும் நண்பன். மிகக் கொடிய நோய்களுக்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருந்தாலும் கூட, ‘முதலில் வேர் பாரு, தழை பாரு மிஞ்சினா மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரு’ என்பது சித்தர்களின் வழி. இலைகளில் இருக்கும் வைத்திய முறைகள்,நோய்களை வராமல் தடுக்கும் இயற்க்கை முறை. உணவிலேயே சரிப்படுத்த நாம் எடுக்கும் முதல் வழி.
இதன் வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி, கீழ்வாய்
நெல்லி. காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி.
இது ஒரு குறுஞ்செடி, இரண்டு அடி வரை வளரும். மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்த சிறு இலைகளை உடையது.
இலைக் கொத்தின் அடிப்புறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். கீழா நெல்லி என அதானால் தன பெயர் வந்தது போலும்.
கீழா நெல்லி தான் என்பதறுகு, காய்கள் கீழ்நோக்கி அடிப்புறத்தில் இருக்கின்றனவா என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் தான் இதனைப் பயன் படுத்த வேண்டும்.
செடி முழுதும், தண்டு, வேர், மற்றும் இலைகள் அனைத்தும் பயன் தரும். மஞ்சக் காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.
கீழாநெல்லி செடி, 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த அதை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.
இது ஒரு அனுபவ வைத்தியம்.காலம் காலமாக பயன்பாட்டில் உள்ளது .
கீழாநெல்லி தைலமாகவும் செய்து பயன்ப்படுத்தப் படுகிறது. நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லி வேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்கு கால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்து கலக்கிக் கொதிக்க வைத்து வடித்து தலை முழுகி வரலாம்.
நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து 2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக் காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும்.
இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக் குளிக்கச் சொறி சிரங்கு, நமச்சல் தீரும். கீழாநெல்லி அரைத்து இத்துடன் வில்வ இலைச்சாறு கறிப்பான் இலைக்சாறு, நாயுருவி வேருடன் பிடுங்கி அதனை இடித்து இவற்றை எல்லாம் சேர்த்து வடிகட்டி ஒரு நாளைக்கு 2 வேளை தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வர தீராத மஞ்சள் காமாலை நோய் தீரும்.
கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் C, இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது.
நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை பறந்தே போய்விடும்.
பொதுவாக கல்லீரலுக்கும் கண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகையினால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டு வரலாம்.
பொதுவாக இரவு படுக்கப் போகும் முன்பு, இரு கண்களையும் குளிர் நீரால் கழுவி, சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலம் கண்களுக்குக் குளிர்ச்சியும், ஒருவித புத்துணர்ச்சியும் கிடைத்து, கண்களின் உட்புறத்திலுள்ள நரம்புகளுக்குச் சக்தி கிடைத்து தூய்மைப் படுத்தி கண்களைப் பாதுகாக்கிறது.
நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சேர்த்து 2 குவளை நீரில் போட்டு ஒரு குவளையாகக் காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும்.
Also read
கீழாநெல்லியில் 3 பங்கு தண்ணீர் சேர்த்து, 1 பங்கு நீராக சுண்ட காய்ச்சி குடித்து வந்தால், சிறுநீரக கற்களும் உடைந்து வெளியேறிவிடும். இந்த கீழாநெல்லி இலையை அரைத்து காயங்கள் மீது வைத்து கட்டினால் விரைவில் குணம் பெறலாம்..
இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக பார்வை கோளாறு தீரும்.
கிழா நெல்லியை வாரம் ஒரு முறையாவது உபயோகித்து வர கல்லிரல் வலுவாக இருக்கும். கல்லிரலுக்கு அதிக வேலைகள் உள்ளன. இதயமும், கல்லிரலும் ஒன்று தான் இருக்கிறது. எனவே அவைகளை கவனமுடன் வருமுன் காப்பது மிக அவசியம்.
மரத்தில் இருக்கும் நெல்லி போல் , கீழே இருக்கும் நெல்லியும் அருமருந்து தான் ! கண்டால் வீடாதீங்க !
அண்ணாமலை சுகுமாரன்
Leave a Reply