நோயற்ற வாழ்வுக்கு சீதாப்பழம் சிறந்தது!

அண்ணாமலை சுகுமாரன்

சீதாப்பழம் சுவைமிக்கது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கு தலை சிறந்த பழமாகும். பெரு நகரங்களில் இதன் பயன்பாடு குறைந்து வருவது கவலையளிக்கிறது. இத்தனை நலன்கள் இதில் இருப்பது பலருக்கு தெரியாது. மிகக் குறைந்த செலவில் மிகச் சிறந்த பலன்களை நாம் இந்த பழத்தில் பெறலாம்;

பெயர் தான் சீதாப்பழம் , ஆனால், பார்க்க கரடு முரடாக இருக்கும் ஒருமிக இனிய பழமே சீதாப்பழம் ! எப்படி இந்த பெயர் வந்தது என்பது ஒரு புரியாதபுதிராகவே உள்ளது.

ஒரு வேளை சீதளப்பழம்  என்பது மருவி சீதாப் பழம் ஆகி இருக்கலாம். சீதளப்பழம் அல்லது சீதாப்பழம் (Sugar apple,custard apple), தாவர வகைப்பாடு : Annona squamosal. வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.


பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக் காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழில் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது. இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். இது இந்தியாவிலும் ,விளைகிறது தமிழ்நாடு, ஆந்திராவில்  விளைச்சல் அதிகம் .

சீதாப்பழத்தின் இனிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு கூட தீங்கு செய்யாது.. அதில் கொட்டி கிடக்கும் சத்துக்கள் அப்படி..! சீதாப்பழத்தின் பலன்கள் ஏராளம். சீதாப் பழத்தை ஆங்கிலத்தில் Custard Apple என்பார்கள்.

இதை உண்பது எளிதான காரியம் அல்ல. சற்று பொறுமை வேண்டும், கொஞ்சம் கடினம் தான். ஆனால், இதில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதிலுள்ள இனிப்பு சுவையுடன், மற்ற பழங்கள் போட்டி போட முடியாது. அத்தனை இனிப்பாக இருக்கும்.


வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்களுக்கு பஞ்சம் இல்லாமல் சீதாப்பழத்தில் கொட்டி கிடப்பதால் ஊட்டச்சத்துக்களின் புதையலாகக் கருதப்படுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம் ஆகியவை சீதா பழத்தில் மிகுந்து காணப்படுகின்றன. இந்த பழம் நம்முடைய எலும்புகளை வலுவாக்கும். வீக்கம், மாதவிடாய் முன் நோய்க்குறி (pms) போன்ற நோய்களை குணமடைய செய்ய உதவும்.

சீதா பழத்தின் சுவை,  சத்துக்கள் காரணமாக அதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  விரும்பி எடுத்து  கொள்வார்கள். ஆனால், நீரழிவு நோய் வந்தவர்கள் பழங்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனென்றால் பருவகால பழங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சட்டென ஏற்றிவிடும். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் வைட்டமின் பி6 சீதா பழத்தில் உள்ளது.

சீதாப் பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் சீதாப்பழத்தை சாப்பிடுதல் நல்லது . ஏனெனில், இது அவர்களின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.

எடை குறைக்க நினைப்பவர்கள் சீதாப் பழம் உண்ணலாம். சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும்.


சீதா பழம் எனும் கஸ்டர்ட் ஆப்பிளில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இதன் காரணமாக நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். பசி எடுக்காது. இதனால் அதிகம் உணவு சாப்பிடாமல் இருக்கலாம்.  அக்தனால், எடையை கணிசமாக குறைக்க முடியும்.

1) மன நலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

2)  இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் கண் பார்வை மேம்படுகிறது.

3) ரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவை அதிகரிக்கும்

4) புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

5) அசிட்டிட்டிக்கு நல்லது. செரிமானத்தை மேம்படுத்துகிறது.

6) அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.

7) தோலின் வறட்சியைப் போக்கி பொலிவாக வைத்துக் கொள்ளும்.

8) அல்சர், அசிடிட்டி பிரச்சினைகளுக்கு தீர்வாகும்.

9) ரத்ததில் ஹீமோகுலோபின் அளவை அதிகரிக்கும்.

10) இதயத்தை பாதுகாக்கும்.


சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது. காய்கள் மரத்தில் பழுக்காது என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது பழுக்கவைத்து  உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம். அதுவே பதமாகும் .

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம்.

இதில் இருந்து கிடைக்கும் அன்னோனா முரிகாட்டா  எனும் மருத்துவ பொருள்  தலைவலி , தூக்கமின்மை, சிறுநீர்ப்பை அழற்சி, கல்லீரல் கோளாறுகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைகளில் இதன் இலைகள் பொதுவாக அழற்சி எதிர்ப்பு, ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் ஆண்டிடிசென்டெரிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன . இது அசிட்டோஜெனின்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது , அவை சாதாரண செல்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத நிலையில், கட்டி உயிரணுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சைட்டோடாக்ஸிசிட்டியைக் காட்டுகின்றன. .நிறைய ஆய்வுகள் தொடர்கின்றது .

சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கிறது . தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.  இதன் விதைகளில் இருந்து கிடைக்கும் தைலம் தலையில் உள்ள பேனை ஒழிக்கும்

இது மலிவான பழம் , ஏழைகளுக்கு ஏற்றபழம் !

அண்ணாமலை சுகுமாரன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time