தொட்டால் சிணுங்கி ஒரு அற்புதமான மூலிகை!

அண்ணாமலை சுகுமாரன் 

ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒருசேர நன்மைகளை வாரி வழங்கக்கூடிய மூலிகைகளுள் ஒன்றுதான், தொட்டாசிணுங்கி…!

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose, 30 நவம்பர் 1858 – 23 நவம்பர் 1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். என்று வரலாறு கூறுகிறது . அதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது . வெளி  உலகிற்கு அது புதிய செய்தியாக இருந்தது . ஆனால் நமக்கு இந்த உண்மை முன்பே தெரியும் .
தாவரங்கள் நிலையானதாகவும், தரையில் வேரூன்றியதாகவும், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருப்பதாகவும் தோன்றலாம். இருப்பினும், இது  உண்மை இல்லை . அவைகளுக்கு உயிர் இருக்கிறது என்றால் , அவைகளுக்கு உணர்வுகளும் , தனிப்பட்ட அறிவும் நிச்சயம் இருக்கும் . நாம் இந்த வாரத்தில் அத்தகைய உணர்வுள்ளொரு மூலிகை தாவரதைபற்றியும் , அதன் மருத்துவ பண்புகளைப் பற்றியும் காண இருக்கிறோம்.

நம்மிடையே காலம் காலமாக  தொட்டால் சிணுங்கி , தொட்டால் வாடி , தூங்கு முஞ்சி மரம் போன்ற உணர்வை வெளிக் காட்டும் தாவரங்கள் உண்டு , அருகில் போனால், கிளைகளால் கட்டி அனைத்து உறிஞ்சி கொள்ளும் மனிதரைக்  கொல்லும் மரங்களைப்  பற்றிய கதைகளும் உண்டு .

நாம் இப்போது தொட்டால் சிணுங்கி  பற்றியும் , அதன் அபூர்வ மருத்துவ குணங்களையும் , அதன் மேல் மக்களுக்கு உள்ள அபூர்வ ஆற்றல் பற்றிய நம்பிக்கைகளையும் பார்க்க இருக்கிறோம் .

நாம் அனைவரும் தொட்டா சிணுங்கியை தொட்டு கொண்டு விளையாட மட்டும் தான் செய்துள்ளோம். ஆனால், இந்த சாதராண தொட்டா சிணுங்கியில் நம்மை ஆச்சிரியப்படுத்தும் அளவுக்கு நன்மைகளும்,  மருத்துவ குணங்களும் தொட்டா சிணுங்கியில் அமைந்துள்ளது
நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது என்று நம்பப்படுகிறது . இது ஆகர்ஷன சக்தி உடையதாகக் கருதபடுகிறது . இதை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள் ஆற்றல் பெருகுமாம்.

உடல் சூடு அதிகம் பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். றுநீர் எரிச்சல் குணமாகும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். இதற்க்கு காம வர்த்தினி என்ற பெயரும் உண்டு.

தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். வயிற்றுப் புண்ணும் ஆறும்.

குழிப்புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்புண்ணில் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி  வந்தால், சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.

மேனியில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில், இவ்விலையைப் பறித்து வந்து,  அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.

தொட்டாலே, அப்படியே சுருங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த இலைகள்.. தொட்டாற்சுருங்கி, தொட்டால் சிணுங்கி, தொட்டா வாடி இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி இன்னும் எத்தனையோ பெயர்கள் இந்த மூலிகைக்கு உள்ளன..

எங்கெல்லாம் ஈரப்பதம் நிறைந்திருக்கிறதோ, அங்கெல்லாம் தாராளமாக வளரக்கூடியது, இந்த செடிகள். சின்னச் சின்ன முட்களும், ஊதா கலர் பூக்களும் நிறைந்திருக்கும். சாயங்காலம் ஆகிவிட்டால், இந்த செடியின் இலைகள் தானாகவே மூடிக் கொள்ளுமாம். அதேபோல, யாராவது விரல்களில் தொட்டாலும், மூடிக் கொள்ளும்.. அதேபோல, சிறு அதிர்வு வந்தாலும், மறுபடியும், இலைகளை மூடிக் கொள்ளுமாம்.

மாதவிடாய்: பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் அதிக உதிரப்பெருக்கு இருந்தால், இந்த தொட்டால் சிணுங்கி இலையை பறித்து சுத்தம் செய்து, சின்ன வெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து, மோரில் கலந்து தந்தாலே போதுமாம்.. ரத்தப் பெருக்கு கட்டுப்படுவதுடன், வயிறுவலியும் தீரும்.

ஆனால், மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே, இந்த பானத்தை குடித்து வந்தால், இன்னும் பலன் அதிகமாக கிடைக்கும். அல்லது இந்த செடியிலிருந்து சாறு எடுத்து, 4 ஸ்பூன் சாற்றில், 2 ஸ்பூன் தேன் கலந்து, தினமும் 3 வேளைகள் குடித்தாலும், அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

பசும்பால்: இந்த இலையை அரைத்து பசும்பலில், 15 கிராம் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.. அதே போல, உடல்சூட்டினால் ஏற்படும் பிரச்சனைகள், சிறுநீர்கடுப்பு, மூலநோய், வயிறு எரிச்சல், போன்றவற்றுக்கு மிகப்பெரிய பலனை இந்த தொட்டால் சிணுங்கி தருகிறது.

இந்த சேடியின் வேரையும், இலையையும் காயவைத்து, பொடி செய்து, சலித்து வைத்து கொண்டு, 15 கிராம் பசும்பாலில் கலந்து குடித்தாலே, சிறுநீர் தொந்தரவுகள், மூலப்பிரச்சனைகள் தீருமாம். அல்லது இந்த இலையை மட்டும் ஒரு பிடி எடுத்து அரைத்து, மோரில் கலந்து குடித்தாலும், வயிற்று கடுப்பு குணமாகுமாகும்.. வயிறு புண்களும் ஆறும்.

சர்க்கரை நோய்: அல்லது இந்த செடியின் வேர் மட்டும் எடுத்து, தண்ணீர் விட்டு, சுண்ட கொதிக்க வைத்து, தினமும் 3 வேளை அரை அவுன்ஸ் குடித்து வந்தாலும் சிறுநீர் கடுப்பு தீரும். அடைப்பட்ட சிறுநீரும் முழுவதுமாக வெளியேறும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த தொட்டா சிணுங்கி வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. இவர்களும், இந்த செடியின்இலை, வேர் இரண்டையுமே காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலே, சர்க்கரை நோய் கட்டுக்குள் வருமாம். அல்லது இந்த முழு தாவரத்தையும் உலர்த்தி, தூள் செய்து, தினமும் ஒரு ஸ்பூன் காலையில் வெந்நீருடன் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலும், நீரிழிவு நோய் கட்டுப்படும்.

காக்கா வலிப்பு, பக்கவாதம், போன்றவற்றை போக்கவல்லது இந்த தொட்டா சிணுங்கி.. அத்துடன், உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி, புண்களையும் ஆற்றக் கூடியது.

குளிர்ச்சி தரக்கூடிய இந்த இலையை அரைத்து, சருமத்தில் பூசிவந்தால், நமைச்சல், அரிப்பு, தேமல் போன்றவைகளை நீங்கும். அல்லது இந்த இலையின் சாறு மட்டும் எடுத்தும் சருமத்தில் தடவி வரலாம் அல்லது, இந்த இலைகளை பறித்து சாறு எடுத்து, புண்கள் மீது தடவி, அதில் ஒரு வெற்றிலையை வைத்து கட்டிவந்தாலும், புண்கள், காயங்கள் விரைவில் ஆறும்.

கை, கால் மூட்டு வீக்கம், அலர்ஜி, தோல் தடிப்புகள் குணமாக வேண்டுமானால், இந்த இலையை அரைத்து விழுதுபோல பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால், விரைவில் பலன் கிடைக்கும்.

ஆரோக்கியம்: உடலில் எங்காவது வலி ஏற்பட்டால், இந்த இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஒத்தடம் தந்தால் போதும். உள்ளுக்குள் மருந்தாக எடுக்கும்போது, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த தொட்டால் சிணுங்கியை பயன்படுத்தினால், முழு ஆரோக்கியத்தையும் பெறலாம்.

இது ஒரு பூக்குந் தாவரம். இதன் இலைகள் சாதாரண நிலையில் பகலவனின் ஒளியை உள்வாங்கும் படியும் அவையே பிறப் பொருள் அல்லது நாம் தொடும் போது இலைகளை தன்னகத்தே இழுத்துக் கொள்ளும். இதன் காரணமாகவே தொட்டாற் சிணுங்கி/தொட்டால் வாடி என்றும் அழைக்கப்படுகிறது.

தரையில் அழகாகப்படர்ந்து பூத்து , நாம் தொட்டு  விளையாடும் இந்த அபூர்வ மூலிகையின் மருத்துவ குணங்கள் அதிசயதக்கவை . தொட்டால் பூ மலரும் , தொடாமல் நான் மலர்ந்தேன் என்ற பழைய பாட்டுபோல் , தொட்டாலும் , அதை உண்டாலும் சக்தி தரும் அபூர்வ மருத்துவ செடி இது .தொட்டால்; வசியம் செய்யும் மூலிகை இது .. இனி பார்த்தால் விடமாட்டீர்கள் என நினைக்கிறேன் !

அண்ணாமலை சுகுமாரன் 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time