சங்கீத மேதைமையில் கேள்விக்கு அப்பாற்பட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி! ஆனால், அவர் ஏன் தான் பிறந்த இசைவேளாளர் குலத்தின் அடையாளத்தை மறைக்க நிர்பந்திக்கப்பட்டார்! பிராமணர்கள் ஏன் அவருக்கு புனித பிம்பத்தை கட்டமைத்து, தங்களவராக சித்தரித்தனர். டி.எம்.கிருஷ்ணா பேசிய உண்மை சுடுகிறதா..? ஒரு அலசல்;
”எம்.எஸ். அம்மாவை இழிவாக பேசிவிட்டார், அவரது நம்பகத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டார்… ஆகவே, டி.எம்.கிருஷ்ணாவிற்கு மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருதை வழங்கக் கூடாது” என முழங்குகிறார்கள் சிலர்! இவர்கள் நீதிமன்றம் சென்று ‘இந்தாண்டுக்கான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரிலான ‘சங்கீத கலாநிதி’ விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது’ என்ற நீதிமன்ற உத்திரவையும் பெற்று விட்டனர்.
உண்மையில் டி.எம்.கிருஷ்ணா, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவை கடுகளவும் தவறாக பேசியதில்லை, எழுதியதில்லை. மாறாக, மிக உயர்வாகவே எம்.எஸ் அம்மாவை கொண்டாடி வந்துள்ளார்! அப்படியானால், ஏன் பல கர்நாடக சங்கீத கலைஞர்கள் கிருஷ்ணாவை இவ்வளவு எதிர்க்க வேண்டும்? என்றால், கிருஷ்ணா சில மறைக்கப்பட்ட உண்மைகளை பேசினார். எம்.எஸ் அம்மாவிற்கு இழைக்கப்பட்ட அநிதிகளை – குறிப்பாக யாரும் பேச மறுக்கும் எம்.எஸ் அம்மா தன் சுயத்தை இழக்க நேர்ந்த துயரத்தை – அவர் துணிச்சலாக வெளிப்படுத்தினார். ஆகவே, இவர்கள் பதற்றமடைகிறார்கள்!
இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக கட்டமைத்து வைத்திருந்த எம்.எஸ். அம்மாவின் பிம்பத்தை உடைக்கிறார். இசைக் குயிலாய், காற்றிலே வரும் கீதமாய் வலம் வந்த எம்.எஸ் அவர்களை கூண்டுக் கிளியாக்கி, எம்.எஸ்சின் சுயத்தை அழித்த, அவரது கணவர் சதாசிவத்தின் சுயநலத்தை அம்பலப்படுத்தியது தான் பிழையாகிவிட்டது.
உண்மையில் கிருஷ்ணா, எம்.எஸ் அம்மாவை இழிவுபடுத்தி இருந்தால் கூட, இவர்கள் அதற்கு இவ்வளவு ரியாக்ஷன் தந்திருப்பார்களா? என்பது தெரியாது. அவர் எம்.எஸ் அம்மாவை ஒரு இசைக் கலைஞனாக உள்ளார்ந்து உள்வாங்கி, உன்னதமான நிலையை எட்டி இருக்க வேண்டிய எம்.எஸ்சின் வளர்ச்சியை தடுத்து, அவருக்கு புனிதப்படுத்தப்பட்ட பிம்பத்தை கட்டமைத்து, அவரை தெய்வீக பொம்மையாக வலம் வர வைத்த கயமையை தோலுரித்து காட்டியது தான் இவர்களுக்கு பிரச்சினை.
எம்.எஸ்.சுப்புலட்சுமி- டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் தற்போதைய பிராமணர் சமூகம் இரு கூறாக பிரிந்து எதிர் எதிர் நிலை எடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.
”எம்.எஸ்.எஸ் குறித்து கிருஷ்ணா ‘கேரவான்’ இதழில் எழுதியதிலோ, எம்.எஸ்.எஸ் அவர்களின் நூல் வெளியீட்டில் பேசியதிலோ எந்தத் தவறும் இல்லை. காலங்கடந்தேனும் சில யதார்த்தங்களை நாம் ஏற்க மறுப்பதில் நியாயமில்லை” என சொல்பவர்கள் மியூசிக் அகாதெமி மற்றும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் குழுமத்தினர்.
”அய்யகோ உண்மைகளை பேசுவதா? பொய்மையை கட்டமைத்து பாதுகாப்புச் சுவர் அமைக்காவிட்டால், நாம் கட்டமைத்த பிம்பம் கலைந்துவிடாதா?” என்போர் பழமைவாதிகள்- இவர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர் துக்ளக் குருமூர்த்தி.
இந்தப் பிற்போக்கு கூட்டத்தினர் கிருஷ்ணாவிற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான ‘சங்கீத கலாநிதி’ விருதை தரக் கூடாது என நெருக்கடி தந்து பிரச்சினையாக்கியதால் இந்த ஆண்டு மியூசிக் அகாதெமியில் ஆண்டு விழா நடத்துவதற்கு துக்ளக் நிர்வாகத்தினர் தந்த முன் பணத்தை திருப்பி தந்துவிட்டது மியூசிக் அகாதெமி. அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்தக் கூட்டத்தினர் எம்.எஸ்.எஸ்சின் வளர்ப்பு பேரனை தூண்டிவிட்டு, நீதிமன்றம் சென்று, ‘கிருஷ்ணாவிற்கு, எம்.எஸ். பெயரில் விருது தரக் கூடாது’ என தீர்ப்பை பெற்று விட்டனர்.
துரதிர்ஷ்டவசமாக நீதிமன்றம் சில உண்மைகளை கவனிக்கத் தவறிவிட்டது. இதோ அந்த உண்மைகளை நாம் இங்கே கவனப்படுத்துவோம்;
எம்.எஸ்.சுப்புலட்சுமி என்ற குஞ்சம்மா ஒரு பிறவி இசைமேதை! காரணம், அவரது குடும்பமே ஒரு இசை வேளாளர் குடும்பமாகும். அவரது பாட்டி அக்கம்மா ஒரு வயலின் கலைஞர், தாயார் சண்முக வடிவோ ஒரு பிரபல வீணைக் கலைஞர். இந்தப் பின்னணியில் குழந்தை பருவத்திலேயே குஞ்சம்மா கேட்பவர் மயங்கும் இசைப் பாடகியாக அறியப்பட்டு இருந்தார். 10 வயதில் அவர் பாடிய ’மரகத வடிவும்,செங்கதிர் வேலும்’ என்ற முருகன் பாடல், கிராமபோன் ரெக்கார்ட் விற்பனையில் சக்கை போடு போட்டது.
11 வயதில் பொது நிகழ்வில் படத் தொடங்கி, 13 வயதிலேயே தமிழகம் அறிந்த வரவேற்புக்குரிய பாடகியானார். இதனால் அவரது பதினாறு, பதினெழு வயதுள்ளபதின்ம பருவத்திலேயே சென்னை மியூசிக் அகாதெமியில் அவர் பாடுகிறார் என்றால், கூட்டம் அலை மோதும் அளவுக்கான சொந்த கச்சேரியை நடத்தினார். 20 வயதில் அன்றைய புரட்சிகர இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் சேவாசதனம் படத்தில் நடித்து புகழ் பெற்ற கதாநாயகியானார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக தன் தாயைப் பிரிந்து தன்னந்தனியாக மதுரையில் இருந்து சென்னை வந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அந்த அளவுக்கு வாழ்க்கை குறித்த சுய தேடலும், தன் நம்பிக்கையும் அவரிடம் இருந்துள்ளது.
1940 ல் சகுந்தலை என்ற படத்தை சதாசிவம் தயாரிக்கிறார். அதில் துஷ்யந்தனாக நடித்தவர் பிரபல சங்கீத மேதையும், அன்றைய பிரபல கதாநாயகனுமான ஜி.என்.பாலசுப்பிரமணியம். இந்த ஜோடிக்குள் ஒரு நெருக்கமும்,பிணைப்பும் உருவாகிறது. பார்ப்பனரான ஜி.என்.பிக்கு தன் சமூகம் இந்த திருமணத்தை அங்கீகரிக்குமா என்ற தயக்கம் இருந்தது. எம்.எஸ்.எஸ்சின் காதல் கடிதங்கள் அவரது மனதை உருக்கினாலும் தடுமாறினார்.
சதாசிவத்திற்கு ஆரம்பம் முதலே எம்.எஸ்.எஸ் மீது ஆசை இருந்தது. ஆனால், அவர் திருமணமானவர் என்பதால் அது தடையாக இருந்தது. இந்தப் படப்பிடிப்பின் போதே சதாசிவத்தின் மனைவி இறந்து விடவே, அவர் அவசர, அவசரமாக திருநீர்மலை அழைத்துச் சென்று எளிய முறையில் திருமணத்தை நடத்தி, எம்.எஸ்.எஸ்சை உரிமையாக்கிக் கொள்கிறார்.
இதற்கிடையில் ஆனந்தவ்விகடனில் விளம்பர நிர்வாகியாக இருந்த பிசினஸ்மேன் சதாசிவம் தன் நண்பர் கல்கியோடு பிரிந்து வந்து தனிப் பத்திரிகை தொடங்கும் போது, ‘சாவித்திரி’ என்ற படத்தில் நடித்து, எம்.எஸ்.எஸ் தந்த பணத்தைக் கொண்டே கல்கி இதழை தொடங்கினார்.
அதற்கு பிறகு எம்.எஸ்.எஸ் மீராவில் நடித்த போது, இசை அமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமனாக இருந்தாலும், தன்னுடைய பாடலுக்கான மெட்டை அவரே உருவாக்கிப் பாடினார். அதில் வரும் காற்றினிலே வரும் கீதம் போன்ற பாடல்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளன. இதே படம் இந்தியிலும் வெளியாகி அகில இந்திய புகழ் பெறுகிறார். ஆனால், இதற்கு பிறகு சதாசிவம் எம்.எஸ்சை நடிக்க அனுமதிக்கவில்லை.
மீரா படத்தில் கிருஷ்ணன் புகழ் பாடும் மீரா பஜனை பாடல்களை பாடி புகழ்பெற்ற எம்.எஸ்சை பக்தி பாடல்களுக்கான ஸ்பெசலிஸ்ட்டாக்கி, பஜ கோவிந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம், சுப்ரபாதம்.. என்பதாக இசை தட்டுகளைக் கொண்டு வந்தது தொடங்கி, கச்சேரிகளுக்கு கால்ஷீட் தருவது தொடங்கி என்னென்ன பாடல்களை பாட வேண்டும் என்பது வரை அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, எம்.எஸ்.எஸ்சை வெறும் பதுமையாக்கி வைத்து விட்டார் சதாசிவம். எம்.எஸ்சுக்கு ‘அப்பழுக்கற்ற ஒரு பிராமண இல்லத்தரசி’ என்ற தோற்றத்தை கட்டமைத்தார் சதாசிவம்.
இந்த நிர்பந்தத்தால், தான் பிறந்த குலத்தின் தொடர்புகளை முற்றிலும் துண்டித்துக் கொண்டு, தன் புகழாலும், கொட்டோ கொட்டு என்று கொட்டிய வருமானத்தாலும் தான் சார்ந்த சமூகத்திற்கு ஏதொன்றும் செய்ய முடியாதவராகப் போனார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இது எந்த அளவுக்கு அவரை பாதித்து இருக்குமோ தெரியாது. எம்.எஸ் அவர்கள் 1944 லேயே இசை கச்சேரிகள் மூலம் இரண்டு கோடிகள் திரட்டித் தந்தவர். இப்படி வாழ்நாளெல்லாம் பல நூறு கோடிகள் சம்பாதித்தார். அதை அவர் கணவர் சதாசிவமே நிர்வகித்தார். இதில் பெருமளவு பயன் பெற்றது பிராமண குலத்தாரே!
ஏனென்றால், அவரது இளம் பருவத்தில் அவர் பிரபல நாட்டிய மேதையும், தன்னுடைய இசை வேளாளர் குலத்தை சேர்ந்தவருமான பால சரஸ்வதியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் எம்.எஸ்.எஸ். இந்த இருவரும் சேர்ந்து அடிக்காத லூட்டியில்லை. அன்றே நைட் டிரஸ்சில் எம்.எஸ்.எஸ் பால சரஸ்வதியுடன் சேர்ந்து சிகரெட்டை வாயில் வைத்தபடி புகைப்படம் எடுத்துள்ளார் என்றால், என்ன சொல்வது?
பாலசரஸ்வதி என்ற மாபெரும் நாட்டிய மேதை கடைசி வரை தன் சுயத்தை இழக்கவில்லை. ‘சதிராட்டம்’ என்ற தங்கள் தாசி குலத்தின் நாட்டியத்தை தங்களிடமே எடுத்து, அதற்கு ‘பரத நாட்டியம்’ என்ற புதுப் பெயர் சூட்டி, மேட்டுக்குடி கலாச்சாரத்திற்கானதாகவும், வர்த்தக லாபமீட்டும் தொழிலாகவும் மாற்றிய ருக்குமணி அருண்டேலின் பித்தலாட்டத்தை பாலசரஸ்வதி ஏற்கவில்லை. இந்திய திரையுலக மேதை சத்தியஜிரே அவர்கள் பாலசரஸ்வதி பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்தார். ”பாலசரஸ்வதி உண்மையான நாட்டிய கலையின் வடிவம்” என்றார்.
‘அவரது நாட்டியத்தில் உள்ள நளினத்தையும், உயிர்ப்பையும் வேறெவர் நாட்டியத்திலும் பார்க்க முடியாது’ என அன்றைய நாளில் பார்த்தவர்கள் போற்றினார்கள். அவர் மட்டும் பார்ப்பனர்களோடு சமரசம் செய்து கொண்டிருந்தால், இன்றைய கலாஷேத்திராவின் நிறுவனராக ருக்குமணி அருண்டேல் இருந்திருக்க முடியாது. எம்.எஸ்.எஸ் எப்படி கர்நாடக இசையின் அடையாளமாகி புனித பிம்பம் பெற்றாரோ, அதே போல பரத நாட்டிய கலையின் தெய்வீக வடிவமாக கொண்டாடப்பட்டு இருப்பார் பாலசரஸ்வதி.
அவர் தான் ‘பரதநட்டியம் என்ற பித்தலாட்ட பெயர் சூட்டலையே’ எதிர்த்தாரே! அதனால், தான் பாலசரஸ்வதி அவர்கள் கடைசி காலத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு,வறுமையில் வாட நேர்ந்தது. ஆனால், கடைசி வரை சுயத்தை இழக்காமல், சமரசத்திற்கு ஆளாகாமல் கம்பீரமாக வாழ்ந்து மறைந்தவர் பாலசரஸ்வதி.
ஆனால் எம்.எஸ்சின் நிலை என்ன..?
’’ஒரு கலைஞர் தன் கலையில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டால் தான் உன்னத சிகரங்களை விரும்பியபடி தொட முடியும். அது எம்.எஸ்.எஸ்க்கு வாய்க்கவில்லை. இங்கு தான் எம்.எஸ்.எஸ் குரலில் முன்பிருந்த கட்டற்ற தன்மை காணாமல் போனதாக கிருஷ்ணா சொல்கிறார். அது சுதந்திரமாக பறந்து கொண்டிருந்த பட்டத்தின் மீது ஒரு கல்லை கட்டிவிட்டதை போல இருந்தது…! இதில் அவரது இசையின் ஆதாரத் தன்மை பாதிக்கப்பட்டது. மீராவுக்கு பிறகு இந்தியா முழுமையிலும் கிட்டதட்ட ஒரு துறவி போல ஆகிவிட்ட அவரது புதிய அந்தஸ்த்தை அவரது இசை பிரதிபலிக்க வேண்டி இருந்தது. தமது சமகாலத்தவரான டி.கே.பட்டம்மாள் கர்நாடக இசை கச்சேரிகளில் தன் விருப்பப்படி பாடுவதை போல, எம்.எஸ்சால் பாட முடியாமல் போனது.
கணவரின் விருப்பப்படியும், கச்சேரிகளில் வந்து உட்காரும் அதிகார மைய பிரபலங்களின் ஆசைகளை நிறைவேற்றத் தக்க வகையில் அதிரடியாக கணவர் தரும் கட்டளைகளை ஏற்று பாட வேண்டியவராகவும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் நிர்பந்திக்கப்பட்ட போது, ஒரு கலைஞராக அவர் மனம் எப்படி துன்புற்று இருக்குமோ தெரியவில்லை” என்கிறார் கிருஷ்ணா.
‘‘அவர் வாழ்க்கை எப்போதும் வேறொருவரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. அவர் கணவர் சொல்வதைச் செய்வதற்காகத் தன் தனிப்பட்ட ஆளுமையை விட்டுக் கொடுத்தார். அவரால் தன் சுயத்தை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எம்.எஸ்ஸின் கணவரான சதாசிவம் கட்டமைத்த பிம்பமே அவர் மீது படர்ந்திருந்தது. அதற்குள்ளாகவே அவர் வாழ்ந்தார். இசை சார்ந்து அவர் ஒரு பாதுகாப்பான அறைக்குள் பூட்டப்பட்டிருந்தார். சதாசிவம், ராஜாஜியின் சுதந்திரா கட்சியின் அதிகார வட்டாரங்களில் பிரபலமானவர். இதனால் எம்.எஸ். தன் கணவர் ஏற்பாடு செய்த கூட்டங்களில் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார்”
”தனது மிகப் பெரிய இல்லமான கல்கி தோட்டத்திலும், அதிகார வட்டத்தினர் இல்லங்களுக்கும் சென்று எம்.எஸ். பாடினார். பல பெரும் புள்ளிகளை மகிழ்விப்பதற்காக இந்தக் கச்சேரி ஏற்பாடு பெரும்பாலும் இருந்தது. எம்.எஸ்.ஸின் இயக்குநரும், திரைக்கதாசிரியரும் அவரின் கணவர் சதாசிவம்தான். ஒரு கச்சேரியில் எந்த ராகத்தைப் பாட வேண்டும், எந்தப் பாடலைப் பாட வேண்டும் என்பதையெல்லாமும் சதாசிவமே தீர்மானித்தார். கச்சேரி நடக்கும் போதே சதாசிவத்திடமிருந்து உத்தரவுகள் வரும். எம்.எஸ்ஸை அறிந்தவர்கள் இந்தக் குறுக்கீடுகள் அவரைத் தொந்தரவு செய்ததாகத் தெரிவித்தார்கள். எம்.எஸ் போன்றதொரு கலைஞரை, இசைக் கலைஞராக அல்லாத ஒருவர் அது கணவராகவே இருந்தாலும், நிர்ணயித்த விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டது ஏற்றுக் கொள்ளவே முடியாது” என்கிறார் கிருஷ்ணா.
”எம்.எஸ். மன உறுதி மிக்கவர். வலிமையானவர். கவனக் குவிப்பும் அர்ப்பணிப்பும் துணிச்சலும் கொண்டவர். அன்பும் பணிவும் மிகுந்தவர். சிறிதும் கடுமை காட்டாமல் மென்மையாகப் பேசுபவர். யாருக்கும் எந்தத் தீமையும் நினைக்க மாட்டார். அவரின் சிரிப்பு அவர் இருக்குமிடத்தை ஒளிரச் செய்யும். முழுமையான ஈடுபாட்டுடன் எம்.எஸ். பாடும்போது அவர் கண்களை மூடிக் கொள்வார். தம்மில் கரைந்து விடுவார். அவரின் இசை நம்மை எப்போதும் வசீகரிக்கத் தவறியதில்லை. அதே நேரம் அந்த இசையரசி ஒரு பெரும் புதிராகவும் இருந்தார்..!? எம்.எஸ்ஸை யாராலும் எளிதில் அணுக முடியாது. அவர் துன்புற்ற ஆத்மா அல்ல. ஆனால், அவருக்குள் ஒரு சோகம் எப்போதும் குடியிருந்தது. அவரது வாழ்வில் செலுத்தப்பட்ட கட்டுப் பாடுகளால் அந்தச் சோகம் அவருக்குள் உருவாகியிருக்கலாம்” என்கிறார் கிருஷ்ணா.
என்னை பொறுத்த வரை மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் அந்த காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியை பேட்டி எடுக்க செல்லும் போது, பக்கத்திலேயே அமர்ந்து சதாசிவம் கடுமை காட்டிய அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அதே போல பிரபல எழுத்தாளர் நா.பார்த்தசாரதி கல்கி இதழில் இருந்து வெளி வந்து, ‘என் ராஜீனாமா’ என்ற தலைப்பில் தாமரை இதழில் எழுதினார். பின் நாளில் இது புத்தகமாகவே வந்தது. அதில் கல்கி நிறுவன முதலாளி தன் மனைவியை ‘சோரம் போனவள்’ எனக் குறிக்கும் வகையில் ஆபாச அர்ச்சனை செய்து கொண்டே, வெளியில் புனித பிம்பத்தை கட்டி அமைத்ததை அம்பலப்படுத்தி இருந்தார்.
Also read
இன்றைக்கு மிக நல்ல மனிதராக அறியப்பட்ட பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தன் கணவரிடம் இருந்து பிரிந்து தனித்து வாழும் முடிவை எடுக்கிறார். என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. ஆனால், அவரது சுதந்திரத்தை அவரது கணவரான ரகுமானும், இந்த சமூகமும் கேள்வியில்லாமல் ஏற்கிறது. இது போன்ற சூழல் எம்.எஸ்.எஸ் வாழ்ந்த காலத்தில் இல்லை. இருந்திருந்தால் அவர் என்ன முடிவு எடுத்திருப்பாரோ?
தனக்கு கட்டமைக்கப்பட்ட ‘தெய்வீக பிம்பத்திற்காக தன் சுயத்தை இழக்கும் தியாகத்திற்கு’ உடன்பட்டிருப்பாரா? இல்லை, ‘உண்மையான சுயமே முக்கியம்’ என தீர்மானித்திருப்பாரா? தெரியவில்லை.
’’இங்கே உண்மைகள், யதார்த்தங்கள் தேவையில்லை. எங்கள் பிழைப்புக்கு செளகரியமாக நாங்கள் கட்டமைத்த பிம்பத்தை கலைப்பாயோ’’ என்பது தான் இந்த பிற்போக்கு கூட்டத்தின் கோபத்திற்கு காரணமாகும்.
சாவித்திரி கண்ணன்
பிராமணர் அல்லாத இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு அவர் பெயரில் பிராமணருக்கு சமமாக அதே துறையில் நினைவுச் சின்னம், அறக்கட்டளைகள், விருது வழங்குதல் கூடாது என்ற சதித்திட்டத்தின் பகுதிதான் அவர் எழுதி வைத்த உயிலாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
மேலும் இசை வேளாளர் குடியில் பிறந்தவர் பெயரில் பிராமணருக்கு விருது வழங்குவது ஏற்க இயலாது என்பதால் அவரை வைத்தே அப்படி ஒரு உயிலை பதிவு செய்தனரா? என்ற சந்தேகம் வலுக்கிறது.
ஏகலைவன் தானாகவே முன்வந்து, தன் கட்டை விரலை தானே வெட்டி கணக்கைத் தந்தான் என்று நம்மை நம்பி வைத்தவர்கள் இதை ஏன் செய்திருக்கக் கூடாது.
See this is the problem secular and liberls. Problem of t m k is to mud slinging the dead and the art. Is more absurd than the tmk
டி. எம் கிருஷ்ணா ஒன்னும் யோக்கிய மனிதனில்லை. இந்து குடும்பத்தை சார்ந்தவராக இருப்பதால் அவருக்கு விருது முடிவு. அவரை விட சிறப்பானவர்கள் உண்டு.. உங்களுக்கு என்ன பிடிவாதம். எம்.எஸ் அம்மாவை பிராமணர்கள்
கட்டாயப்படுத்தியதாக ஒரு பிமாபத்தை உண்டாக்குறீங்க. இதில் உங்கள் சொந்த மற்றும் என். ராம். குழுவினரின் வெறுப்பு தெரிகிறது. ஆயிரம் ஆண்டுகள் கொலை செய்து கற்பழித்து தர்மத்தை அழித்து, இந்த நாட்டில் இல்லாத வந்தேறி மதங்களை சேர்ந்தவர்கள் தங்களது இனத்தை விதைத்து பெருக்கியவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டு குலாவுவீர்கள். அவர்களின் கிரிமினல் தவறுகளை புறம் தள்ளி
மதசார்பின்மை பேசுவீர்கள். அவர்களது பெண்களுக்கு , ஆண்களால் நடத்தப்படும் துயரங்கள் பற்றி வாய் திறக்க துணிவற்ற கோழைகள் நீங்கள். மனிதநேயமற்ற மதவாதிகளான
அவர்கள் பற்றி ஓரு வார்த்தை எழுத நடுங்கும் நீங்கள் எம்.எஸ். சுயத்தை இழந்தார்னு உங்களுக்கு தோன்றியதை எழுதி பார்ப்பண எதிர்ப்பு என்ற செத்துப்போன வாதத்தை பேசினால் வெறும்பயல்கள் கை தட்டுவார்கள்.
தொடை நடுங்கி பயங்கொள்ளிகள் ஆகிய நீங்கள் என்றும் எதிர்ப்பது -“””அடிச்சா ஏன்னு கேக்க நாதியற்றவர்களாக உள்ள பிராமணரையே!!”””
காசுக்கு காசு, கட்டுரைக்கு கட்டுரை.
Stop this nonsense and concentrate on what you know. We all know how MS was accorded a wonderful reception wherever he went and specially among music aficianados. And the aficianados include brahmins christians, kongu vellalar , chettiyars, Naidus and whoever other than the monkey dravidas who hate Hinduism and more so the brahmins. Screwball your logic and pack your bags
Hinduism..Do you mean the name given by the British.? Dragging unwanted names and ideologies is the typical art of certain category of people in this nation. Truth by slippering them hurts them.
தன்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட துக்ளக் ஆசிரியர் சோ விற்கு துரோகம் இழைக்கும் வகையில் சோ வின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தார் யாரும் துக்ளக் பத்திரிகை அலுவலகத்தில் நுழைய முடியாதபடிவஞ்சகம் செய்தவர் ஆடிட்டர் என்று கூறிக்கொள்ளும் குருமூர்த்தி. இப்படிப்பட்ட குணம் கொண்டவர் ஒருவரின் திறமையை மதித்து கொடுக்கும் உயர்ந்த விருதுக்கு ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அந்த விருதை கொடுக்க கூடாது என்று போராட்டம் நடத்துவது மிக கேவலமான செயல். கிருஷ்ணாவுக்கு எம் எஸ் சின் பெயரில் விருதை தராமல் வேறு பெயரில் விருதை தரலாம் என்ற நீதிமன்றத்தின் உத்தரவுதான் இந்த வழக்கில் ஒரு ஆறுதலான விஷயம்.
It is being wrongly portrayed that the High Court has restrained Music Academy from awarding Sangita Kalanidhi award to TM Krishna. The essence of judgement is
1. Music Academy can confer the award of Sangita Kalanidhi to TM Krishna.
2. The mirror award instituted by The Hindu can also be given with the cash award but the name of MSS should not be used.
3. The restrain not to use MS in the award is not specific to TM Krishna alon. Nobody can institute such award in her name, in view of the express direction to the contrary by MS in her will. The court ruled what has been written in the will prevail in respect of using her
4. The restraint not to give to TM KRishna has nothing to do with whatever he might have spoken about MS whether good or bad. The court was concerned about only the will.
5. In so for as the Sangita Kalanidhi award, the court ruled MS grandson has no locus, as it clearly spelt it was the prerogative of the Executive committee of Music Academy
6. The only thing in favour of the grandson was that it ruled that he has locus standi to contest whether the award could be given in the name of MS or not, which itself was contested by THe Hindu.
In total, it was a well written judgement. Definitely not against TM Krishna as being projected.
It’s unnecessary to drag Bharata Ratna M.S. Amma into any sort of controversy. She was not merely an actress or a singer like modern film stars or musicians. She represented the ideal womanhood, grace and everything that’s gentle. Those who spoke so venomously against a particular caste or creed receive the award from the same class and in the name of same person accepted by thousands to be of that class. It’s pretty politics. What the author writes is merely a perverted view to satisfy some vested interest.
Why was the award announced so many months before the event? Just because the powerful media/ Press wanted to create a rift among people before the Loksabha elections.
Why should the Academy be run and managed by those without any background in the field, just like the sports bodies? They want the money from the community who throng to listen to the music, but they insult the community, just like the political parties of TN do.
If a wife earn money, husband will utilize or manage, the same happens with husband money. Also did she utilize for the brahmin community? Can u list out who are all benefited or how does brahmin community benefited using her money earned? Don jus make content without proof.
அம்மா எம்.எஸ்.சுப்புலட்சுமி ஒரு இசை வேளாளர் என்பது எனக்கு இந்த கட்டுரை படிக்கும் வரை தெரியாது. இந்தப் பதிவு என்னை ஆச்சரியத்திற்கு தள்ளியது, இசை மேதை பற்றி அவ்வளவு தகவல்கள்.
தோழியுடன் அவர் புகை பிடித்து அரட்டை அடிக்கும் காட்சி அவர் எவ்வளவு பெரிய புரட்சியாளர் என்று தெரிய வருகிறது. அவரது பெயரில் விருது உருவாக்கப்பட்டு தொடர்ந்து இசை கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.. ஆனால் இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் வரை சென்று தடுத்து விட்டனர். நல்ல நேரம் தடுத்தது அவர்களே. நம்மவராக இருந்திருந்தால் ஒரு பிரளயமே வெடித்திருக்கும்.
ஒருவருக்கு கொடு என்று சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் கொடுக்காதே என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை. கட்டுரையில் சொல்லப்பட்ட பல விவரங்களை நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டதாகவே தெரிகிறது. மறுபரிசீலனை செய்து அவருக்கு விருதினை வழங்குவதற்கு உரியவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.