தடுப்பூசி தொடர்பான ஆர்வங்கள், விவாதங்கள் வேகம் பெற்றுள்ளன!
”தடுப்பூசி வந்தால் நிம்மதிப்பா..அதப் போட்டுகிட்டு எங்க வேணா பழையபடி போகலாம்…எவ்வளவு நாள் பயந்து,பயந்து வெளியில போறது’’ என பலர் நினைக்கின்றனர்.
இன்னும் சிலர் வீட்டைவிட்டு வெளியேறப் பயந்து முடங்கியுள்ளனர்.
வெளியே வருபவர்களும்,பயங்கர முன்னெச்சரிக்கையுடன், பதற்றத்துடன் நடமாடிக் கொண்டுள்ளனர்.
ஆகவே, தடுப்பூசி வந்தால் நல்லது என நினைப்பது ஆச்சரியமில்லை!
அப்படிப்பட்டவர்கள் இந்த கட்டுரையை மூன்று நிமிஷம் படியுங்கள்.
எல்லா கொடிய நோய்களும் நாம் சூழலியலுக்கு செய்யும் தவறுகளாலும், நமது பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறைகளிலிருந்து விலகியதாலும் வந்தவையே!
எந்த ஒரு தடுப்பூசியுமே பாதுகாப்பானதில்லை.
பக்கவிளைவில்லாத தடுப்பூசி என்று ஒன்றுமே இல்லை.
ஒவ்வொரு தடுப்பூசி கண்டுபிடிப்பிற்காகவும் பலியாகின்ற, சோதனைக்கு உட்படுத்தி பாதிப்படைகின்ற லட்சோபலட்ச எளியவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கு வழக்கில்லை. ஒவ்வொரு தடுப்பூசியும் பத்து,பதினைந்து ஆண்டுகால டிரையலுக்கு பிறகே ஒரளவு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் காசு பார்க்கும் ஆசையில் அரசுகளுக்கு நெருக்கடி தந்து தங்கள் மருந்தை திணிக்கின்றன.
சமீபத்தில் தன் மன்றத்து நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் பேசியதை நினைவுபடுத்துகிறேன்;
”கொரானாவிற்கு தடுப்பூசி ரெடி பண்ணிட்டாங்க, ஆனாலும் அது என் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளுமா என்பதில் பலத்த சந்தேகம் உள்ளது. அதனால் என்னைப் போல உள்ள ஒருவருக்கு போட்டு டெஸ்ட் பண்ணிட்டு தான் முடிவு சொல்லமுடியும்னு டாக்டர்கள் சொல்றாங்க..’’
இதிலே இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எல்லோர் உடலுக்கும் ஒரே மருந்து ஏற்புடையதல்ல, ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆகவே ரொம்ப முக்கியமானவர்களுக்கு மட்டுமே, இந்த உண்மை பகிரப்படுவதோடு, அப்படிப்பட்டவர்களுக்காக இன்னொரு நபரை பலியாக்கவும் தயங்குவதில்லை மருத்துவர்கள்.
அத்துடன் மற்றொரு விஷயத்தையும் கவனப்படுத்துகிறேன். ’இதை முதலில் டாக்டர்களுக்கும், காவல்துறை உயர் நிலையில் இருப்பவர்களுக்கும் போடக் கூடாது’ என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
”தடுப்பூசியால் பாதிப்படைபவர்களை காப்பாற்ற, பாதிப்பால் கலவரங்கள் உருவானால் அடக்க’’ என்ற காரணங்களுக்காக என்று சொல்லப்பட்டாலும், ’தாங்கள் அதில் பலிகடாவாகக் கூடாது’ என அவர்கள் நினைப்பதே பட்டவர்த்தனமான உண்மையாகும்! அதாவது, தாங்களே நம்பிக்கையாய் ஏற்கமுடியாத ஒன்றைத் தான் அவர்கள் மற்றவர்களுக்கு போடுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, உலகில் உள்ள சுமார் 200 நாடுகளில் அதிகபட்சம் பத்து நாடுகளே கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன! அதிலும், நான்கு நாடுகளே அதிகம் பாதிப்பு கொண்டுள்ளன. ஆகவே, தற்போது கொரானாவிற்கு தடுப்பூசி என்ற ஒன்று அவசியமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவரே கேள்வி எழுப்பி உள்ளார். மிகப் பல நாடுகளில் கொரானா கட்டுப்பாட்டுடன் தான் உள்ளது.
இந்தியாவிலேயே நமது அனுபவப்படி கொரானாவிற்கு பலியானவர்களில் சுமார் 95 சதவிகிதமானவர்கள் ஏற்கனவே சில நோய்களில் பாதிக்கப்பட்டதால் தான் பலியானார்கள். கொரானாவில் பலியானவர்களை விட குணமானவர்கள் எண்ணிக்கை பலமடங்கு என்பது தெளிவாகிறது. கொரானா வராமல் தவிர்க்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுமான பாரம்பரிய உணவு பழக்க,வழக்கங்களை அனுசரித்து, கொரானாவை முறியடிக்கும் வாழ்க்கை முறைகளை மக்கள் கைகொள்ள தொடங்கிவிட்டனர்.
மற்ற பல நோய்களோடு ஒப்பிடுகையில் கொரானாவில் பாதிக்கப்பட்டவர்களும், பலியானவர்களும் மிகக் குறைவு தான்!
சமீபத்தில் சென்னை அண்ணா நகரில் கொரானா தடுப்பூசி போட்ட ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையான பாதிப்புகளை சொன்னதை பல ஊடகங்கள் மறைத்துவிட்டன. வெகுசிலவே எழுதின.கவனப்படுத்தின.
Also read
கீழ்கண்ட புள்ளிவிபரங்கள் கொரானாவிற்கு அப்பனுக்கு அப்பனான நோய்கள்! இப்படியான நோய்களில் ஒரு ஆண்டுக்கு இறப்பவர்கள் எண்ணிக்கையை கவனித்தால், கொரனா என்பது பயப்பட வேண்டியதல்ல என்பதும், பயப்படுத்த பயன்பட்ட நோய் தான் என்பதும் விளங்கும்.
நோய்களும், மரணங்களும்!
இதய நோய்கள் – 1.9 கோடி
# புற்று நோய் – 96 லட்சம்
# சுவாசக் கோளாறு,நுரையீரல்அடைப்பு – 65 லட்சம்
# காச நோய் – 30 லட்சம்
# வயிற்று போக்கு – 25 லட்சம்
# சக்கரை நோய் – 24 லட்சம்
# சிறுநீரக கோளாறு -22 லட்சம்
ஆனால், கொரானாவிற்கு இது வரை பலியானவர்கள் 14.6 லட்சம் தான். இதுவும், அடுத்த ஆண்டிற்குள் கால்வாசியாக குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், டெல்லிக்கு வெளியே வெட்ட வெளியில் சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் விவசாயிகள் ஒன்றாகக் குழுமி சேர்ந்து போராடி வருகின்றனர். அவர்கள் முகக் கவசம்,சானிடைசர் போட்டுக் கொண்டு போராடவில்லை. கொரானாவை அவர்கள் தங்கள் கால்தூசுக்கு சமானமாக கருதியிருந்தால் ஒழிய இப்படி வீதியில் பெருங்கூட்டமாக இருக்கமுடியாது. இந்த விவசாயிகள் நாளும்,பொழுதும் இயற்கையோடும், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களோடும் உறவாடுபவர்கள். அதாவது,சேற்றில் கால்வைத்து உழைப்பவர்கள்! மரத்தடி மண்ணில் படுத்து தூங்கி எழுபவர்கள்! தங்களை கொரானாவால் ஒன்றும் செய்யமுடியாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இயல்பாக உண்டாகிவிட்டது. அவர்களைப் போல வே சுகாதாரத்துறையில் பணியாற்றும் லட்சோப லட்சம் தூய்மை பணியாளர்கள் நாள்தோறும், தெருக்கூட்டி, குப்பை அள்ளி ஈடுபடுகிறார்கள்! இது போல அன்றாட கூலிகள் கோடானுகோடிமக்கள் கொரானாவிற்கு பயமின்றி பணியாற்றுவதால் மட்டுமே இந்த உலகம் உயிர்ப்போடு உய்த்திருக்கிறது!
ஆகவே, கொரானாவைக் கொண்டு கொலைகார கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க நாம் துணைபோகக் கூடாது. கமிஷன்,கரப்ஷன் இல்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை என்பது நமது அனுபவத்தில் தெரிந்த உண்மையாகும்! ஆகவே, கொரனாவிற்கு தடுப்பூசி என்று வந்தால், அதை விருப்படுபவர்களுக்கு மட்டுமே போட வேண்டும். அனைவருக்குமாக திணிக்க கூடாது என்பதில் நாம் உறுதிகாட்ட வேண்டும்.
‘அறம்’ சாவித்திரி கண்ணன்
Leave a Reply