சர்வதேச சூழல் விதிகளின்படி வனம், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் சூழலியல், இயற்கை பேரழிவு போன்ற அத்துமீறல்களுக்கு கூட சட்ட அங்கீகாரம் தந்து திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறார்கள். 26.5 சதவிகித நீர்நிலைகளை அழிக்க முடிவு செய்திருப்பது நடக்குமா? இல்லை நீதிமன்றம் தடுக்குமா? ஒரு அலசல்;
INTERNATIONAL IMPORTANCE வன (உயிர்) விலங்குகள் (Act.1926) ஆளக்கூடிய இடங்களை, 1926 ரீ செட்டில்மெண்ட் ரிஜிஸ்தர் சர்வே அளவுகள் படி பாதுகாக்க வேண்டும்.
பரந்தூர் பசுமை வழி விமான நிலைய நிலைய திட்டத்திற்கு, மத்திய அரசின் துறை ரீதியான அனுமதிகள் அடுத்தடுத்து கிடைத்து வருவதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சகம், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், இந்திய வானிலைத் ஆய்வுத்துறை, வருவாய்த் துறை, விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு இயக்குனரகம், நிதி ஆயோக், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளும் முதற்கட்டமாக இசைவளித்துள்ளது பேரதிர்ச்சி தருவதாக உள்ளது.
போதுமான ஆய்வுகளை நடத்தாமலே, இப்படி சகலதுறைகளும் சகட்டுமேனிக்கு கண்ணை மூடிக் கொண்டு அரசுக்கு ஜால்ரா போடுவது இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சி தானா? என்ற கேள்வி எழுகிறது.
அதிகாரத்தில் இருப்பவர்கள் சூழலியல், இயற்கை பேரழிவு போன்ற அத்துமீறல்களுக்கு கூட சட்ட அங்கீகாரம் தந்து விட துடிக்கிறார்கள் போலும். இதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.
சென்னை சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை சுமார் முப்பது. இதன் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் சென்னை உயர்நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளிடம் எழுப்பிய (15) பதினைந்து. சந்தேக கேள்விகளை நியாயப் படுத்தியது.
அதில் இரண்டு பிரதான சந்தேக கேள்விகளை மட்டும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தோடு ஒப்பிட்டுகிறோம்.
ஒன்று,
What would be the impact of the proposed project on Forest lands, Water Bodies, Wild Life, flora and fauna as admittedly the proposed alignment passes through all these areas; எட்டு வழி பசுமை சாலை திட்டத்தால் வனநிலங்கள், நீர்நிலைகள், வனவிலங்குகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவைகளுக்கு ஏற்படும் தாக்கங்களை ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், இச்சாலை இப்பகுதிகள் வழியாகத் தான் செல்கிறது என்பதாகும்.
நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டும் நீர்நிலைகள் WATER BODIES மற்றும் வன (உயிர்) விலங்குகள் WILDLIFE என்பனவற்றில் வன (உயிர்) விலங்குகள் குறித்து மட்டுமே. இப்போது அதிகமாக பேச வேண்டியுள்ளது. இதற்கான வன (உயிர்) விலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 – ன் பார்வைகள் நம்மை பிரம்மிக்க வைக்கிறது!
இச்சட்டம் வனவிலங்கு WILDLIFE என்பதற்கு, எந்தவொரு வாழ்விடத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எந்தவொரு விலங்கு, நீர்வாழ் அல்லது நில தாவரங்களையும் உள்ளடக்கியது என்று பொருள் படுத்துகிறது.
அதே போல் விலங்கு ANIMAL என்பதற்கும் நீர்நில வாழ்வன, பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன மற்றும் அவற்றின் குஞ்சுகளை உள்ளடக்கியது, மேலும் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றில், அவற்றின் முட்டைகளையும் உள்ளடக்கியது என்று பொருள்படுத்துகிறது.

மேலும், நிலம் LAND என்பதற்கு கால்வாய்கள், சிற்றோடைகள் மற்றும் பிற நீர் வழித்தடங்கள், நீர்த்தேக்கங்கள், ஆறுகள், ஓடைகள் மற்றும் ஏரிகள், செயற்கையாகவோ அல்லது இயற்கையாகவோ இருந்தாலும் இவற்றோடு சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநிலங்கள் மற்றும் கற்பாறைகள் மற்றும் பாறைகளையும் உள்ளடக்கியது என்று பொருள் படுத்துகிறது.
இச்சட்டம் தான் சார்ந்த உடமைகளுக்கு சேதாரம் பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் இதற்கென்று உருவாக்கப்பட்ட, தலைமை வனவிலங்கு காப்பாளர் கொண்ட ஓர் வாரியம் சார்ந்தது என்கிறது.
மேலும் தான் சார்ந்த உடைமைகள் குறித்த கல்வி, வழித்தோன்றல் ஆராய்ச்சிகள் சார்ந்து கட்டுமான பணிகளை வேண்டுமானால் அதுவும் இயற்கை வாழ்வியல் சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு மேற்கொள்ளலாம் என்கிறது.
Articles 21, 37, 47, 48-A and 51-A(g) of the constitution of India. gives a Clear mandate to the state to protect and improve the environment and to safeguard the forests and wildlife of the country. It is the duty of every citizen of india to protect and improve the natural environment including Forests lakes rivers compassion for living creatures. The “precautionary principal ” makes it mandatory for the state Government to anticipate, prevent and attack the cause of environment degradation.
இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் 21, 37, 47, 48-A and 51-A(g) வரையறுத்த நிர்ணயம் செய்த, அரசு நிர்வாக கட்டமைப்பின் கடமைகள் மட்டுமின்றி ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமைகளைத்தான் பின்னாளில் வன (உயிர்) விலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 முன்மொழிந்துள்ளது என்பேன்.
எனவே தான், எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கு நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போட்டன. நீதிமன்றங்களின் இம்முடிவுகள் தற்போதைய பரந்தூர் விமான நிலைய திட்டத்தையும் கட்டுப்படுத்தும் என்பது தெரிந்தும் அதே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, தமிழக அரசும் மத்திய அரசும் 26.5 சதவிகித நீர்நிலைகளை அழிக்க முடிவு செய்திருப்பது வேதனையானது. கண்டிக்கத்தக்கது.
நீதிமன்றங்களின் சந்தேக கேள்வி இரண்டு,
Whether there is any hidden agenda for the proposed project and whether it was intended to benefit a chosen few;
எட்டு வழி பசுமை சாலை திட்டத்தில் ஒரு சிலரின் ஆதாயங்களுக்கான செயல்திட்டம் மறைந்து உள்ளதோ என்கிற நீதிமன்றங்களின் சந்தேக கேள்விகள் பரந்தூர் திட்டத்திற்கு நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் ஒத்துப் போகிறது. காரணம், வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை மட்டுமின்றி அச்சுறுத்தல் சம்பவங்களும் நடந்து வருகின்றன ஜனநாயகத்தில் பதிமூன்று கிராம மக்கள் திட்டமிட்டு தனிமைப்படுத்தபடுதல் என்பது நியாயமா? அரசின் முடிவுக்கே விட்டு விடுவோம்.
Link ஒன்று:-
https://rsis.ramsar.org/ris/2481
Link இரண்டு:-
https://www.asichennai.gov.in/sites_full_list.html
LINK மூன்று:-
https://en.m.wikipedia.org/wiki/List_of_Ramsar_sites_in_India
LINK இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை 3081 ஏக்கர் சதுப்பு நிலம், சென்னை கிண்டி செயிண்ட் தாமஸ் பகுதியில் தொடங்கி கிளாம்பாக்கம் தாண்டியும் பரவி கிடந்த MEGALITHIC CISTS and CAIRNS மெகாலிதிக் கலாச்சாரத்தின் அடையாளங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்றே தெரியவில்லை.
Also read
பரந்தூர் திட்டத்திற்கான பதிமூன்று கிராமங்களில் பரந்தூர் கிராமத்திற்கு மட்டும் நான்கு பகுதிகள் கொண்ட வரைபடங்கள்.. இதில் A & B பகுதிகளை மட்டும் கையகப் படுத்துவோம் என்கிறார்கள். நாம் இக்கட்டுரையில் நான்கு பகுதி வரைபடத்தையும் காட்டியுள்ளோம். மேலும் 13 கிராம வரைபடத்தையும் பார்த்தோ மையானால் அங்கே கொத்து கொத்தாய் நீர் ஆதாரங்களும் வளங்களும் உள்ளன. இவற்றை அழித்தோ, நீரோட்டத்தை திசை திருப்பியோ விமான நிலையம் வந்தால், மழை காலத்தில் விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாறாது நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பெற்றவர்களிடம் இருந்து அந்த அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நீதிமன்றங்களை நாட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அ.வை. தங்கவேல்
நீதிமன்றங்களை நாட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று கட்டுரையாளர் தங்கவேல் முடித்து இருக்கிறார். நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிப்பதே அரசியல் தானே. பொறுப்பு வந்தவுடன் அவர்கள் மாறி விடுகிறார்கள். ஜனநாயகத்தின் நாம் நான்காவது தூண் என்று நமக்கு நாமே பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். அறம் இணையதளத்தில் இதுவரை பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று சுமார் மூன்று அல்லது நான்கு கட்டுரைகள் இடம்பெற்று இருக்கும். கண்டிப்பாக இன்றைய அரசியன் காதுகளில் அவை ஒலித்து இருக்கும். சில தினசரி பத்திரிகைகளிலும் பரந்தூர் மக்களின் எதிர்ப்பு குறித்து செய்திகள் வந்திருக்கின்றன. அனைத்தையும் அரசு துச்சம் என மதித்து இன்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறது. நடந்த ஆட்சியும் நடக்கிற ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் அப்போதுதான் பரந்தூர்விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும். நீதிமன்றத்திற்கு செல்வதால் எந்த பயனும் இல்லை அவர்கள் மத்திய மாநில அரசுகளின் நண்பர்களே. கொலை கொள்ளை விவாகரத்து போன்ற வழக்குகளில் மட்டும் அவர்கள் தங்கள் நேர்மையை கடைப்பிடிப்பார்கள் அதில் கூட அரசியல் புகுந்தால்? மற்றபடி அவர்கள் அரசின் செல்ல பிள்ளைகளே.
In this project protected by god only. in this sitution we are சப்போர்ட் to paranthur makalukaga