மோடி,அம்பானி,அதானி உருவபொம்மைகள் எரிக்க தமிழக விவசாயிகள் திட்டம்!

சாவித்திரி கண்ணன்

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் அனைத்து தரப்பு விவசாயிகளிடமும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.ஆகவே, தாங்களும் தாங்கள் வாழும் இடத்திலேயே டெல்லிவிவசாயிகளுக்கு ஆதரவாக எழுச்சிகரமாக போராட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது.தற்போது தமிழகத்தில் அங்குமிங்குமாக சில விவசாய அமைப்புகள் போராடிவருகின்றன. எனினும் அதை வலுவாக பெரிய அளவில் ஒருங்கிணைத்து செய்ய தமிழக விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

விவசாயிகள் போராட்டம் கட்சி எல்லைகளைக் கடந்து நடந்தாலும், அந்தந்த கட்சியில் உள்ள விவசாயிகள் இதில் பெருந்திரளாக பங்கெடுத்து வருகின்றனர். பாஜகவைத் தவிர்த்த அனைத்து கட்சிகளும் டெல்லியில் வீதியில் போராடும் விவசாயிகளுக்கு அனுசரணையாக தண்ணீர்..உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை செய்கின்றனர்.

டிசம்பர் 2  நேற்று மாலை அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் பணிக்குழு, பஞ்சாப் கிசான் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, ராஷ்ட்ரிய கிசான் மகா சங்கம் மற்றும் பாரதிய கிசான் யூனியனின் பல்வேறு குழுக்கள் சார்பில் தில்லி, சிங்கூ எல்லையில் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘தில்லி செல்வோம்’ என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தையும், நாடு முழுவதும் நடைபெற்றுவரும் கிளர்ச்சிப் போராட்டங்களையும்,  ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (ஒருங்கிணைந்த விவசாய சங்கங்களின் பேரணி/ஆர்ப்பாட்டம்) என்னும் பதாகையின்கீழ் தீவிரப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து தொழில் அதிபர்கள் அம்பானி,அதானி உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை அழிப்பதாலும்,விவசாயிகள் உரிமைகளை பறித்து இந்த கார்ப்பரேட்டுகளிடம் கொடுக்க திட்டமிட்டிருப்பதாலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ,அகில இந்திய அளவில் சுமார் 500 விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து டெல்லியில் வெற்றிகரமாக போராட்டம் நடத்தி வரும் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு AIKSCC – தமிழ் நாடு அமைப்பின் செயற்குழு கூட்டம் இன்று (டிசம்பர்-3) நடந்தது. இதில் இடதுசாரி கட்சிகளான சிபிஐ,சிபிஐ(எம்), சிபிஐ(எம்.எல்),எஸ்யுசிஐ ஆகியவற்றின் விவசாய அணித் தலைவர்கள்,விசிகவின் விவசாய அணி,தமிழ் நாடு விவசாயிகள் சங்கம்,உழவர் உழைப்பாளர் கட்சி போன்றவற்றின் தலைவர்கள் கூடி டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் செய்ய வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

செயற்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில்  03/12/2020 அன்று முற்பகலில் நடைபெற்றது.

நடந்த வேலைகள் பற்றியும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைகள் குறித்தும் கலந்து பேசி முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், எடுக்கபட்ட முடிவுகளாவன;

1.டிசம்பர் 5ல் தமிழகமெங்கும் பிரதமர் மோடி, அம்பானி, அதானி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிப்பு

2.டிசம்பர் 9 முதல் தமிழகமெங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம்.

மேலும் அவர்கள் தங்கள் அறிக்கையில், நவம்பர்-26 ஆம் தேதி முதல் “தில்லிக்கு செல்வோம்”(டெல்லி சலோ) என்ற முழக்கத்தினை முன்வைத்து பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பிகார், மகாராஷ்ட்ரா, கருநாடகம்,உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் வந்து குவிந்து வருகின்றனர்.

விவசாய போராட்டத்தில் வீரியத்துடன் பெண்கள்! – அவதூறுகளும்,அநீதிகளும்.

மத்திய பாஜக அரசு அனைத்து திசைகளிலிருந்தும் வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தியுள்ளது.

இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி நுழைவு வாயிலில்,

அதே இடத்தில் தங்கியிருந்து வெட்ட வெளியில் உண்டு,கழித்து,உறங்கி எட்டு நாட்களாக மூன்று வேளாண் விரோத சட்டங்களையும், மின்திருத்த மசோதா2020 ஐயும் திரும்பப் பெறும் வரை ஊர் திரும்ப மாட்டோம் எனப் போராடி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை இழுத்தடித்து வருகிறது  பாஜக அரசு.

இந்திய விவசாயத்தை கார்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து இந்திய விவசாயிகளை கார்பரேட் அடிமைகளாக மாற்றும் 3 வேளாண் விரோத சட்டங்களையும்,

வேளாண்மைத் தொழிலுக்கு உயிர் நாடியாக இருக்கும் மின்சாரத்தை வணிகப் பண்டமாக்குகிற மின் மசோதா2020 ஐயும் பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த சட்டங்களால் தமது வாழ்வாதரம் முற்றாக அழிந்து விடும் என்பதை உணர்ந்த விவசாயிகள்

கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர்.

ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

வாட்டுகிற கடுங்குளிரில் வெட்ட வெளியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடியின் அரசு,  அம்பானி,  அதானி போன்ற கார்பரேட்களின் கொள்ளைலாபத்திற்காக மட்டுமே  செயல்படுவதால்,

இந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையில்  டிசம்பர் 5 ஆம் தேதி இந்தியா முழுவதும் பிரதமர் மோடி, அம்பானி, அதானி ஆகியோரின்  உருவபொம்மைகளை எரித்து, எதிர்ப்பு தெரிவிப்பதென AIKSCC அகில இந்திய செயற்குழு அறிவித்துள்ளது.-

AIKSCCயின்  தலைமைக்குழு முடிவிற்கிணங்க  டிசம்பர் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி,அம்பானி, அதானி ஆகியோர் உருவபொம்மைகள் எரிப்புப் போராட்டம் நடத்துவது.

டிசம்பர் 9/2020 முதல்  தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முன் தொடர் காத்திருப்புப் போராட்டம்!

இந்திய விவசாயிகளை கார்பரேட் முதலாளிகளுக்கு அடிமைப்படுத்தும்

மூன்று வேளாண் விரோத சட்டங்கள் நிறைவேற மாநிலங்களவையில் துணை செய்தது எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு.

இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த அதிமுக அரசு

இந்திய விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

வேளாண் விரோத சட்டங்களை எதிர்ப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

என்ற கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர்-9 /2020 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் தொடர்காத்திருப்புப் போராட்டம் தொடங்குவது.

விவசாயிகளின் நியாயமான இந்தப் போராட்டங்களுக்கு அனைத்து சிவில், சமூக, அரசியல் இயக்கங்களும் மற்றும் மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் முழு ஆதரவளிக்குமாறும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

‘அறம்’சாவித்திரி கண்ணன்

 

.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time