திமுக ஆட்சியில் நகர விரிவாக்கம், கிராமங்களை இணைத்தல் என்பதில் தொடங்கி TIDCO – SIPCOT – SIDCO என எல்லா அரசு நிர்வாகங்களும் போட்டி போட்டுக் கொண்டு கிராமங்களையும் அதன் பசுமை வெளிகளையும் அழிக்க முனைகிறார்கள். மேல்மா உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை விழுங்க அரசு செய்யும் கோல்மால்கள் எடுபடுமா? ஒரு அலசல்;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செழிப்பான விவசாய நிலங்களை கொண்டது தான் மேல்மா. இந்த மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு சிப்காட் தொழிற் கேந்திரங்கள் உள்ளன. அதிலேயே சுமார் 1,200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பயன்படாமல் வறண்டு கிடக்கும் நிலையில் அதிரடியாக 3,174 ஏக்கர் விளை நிலத்தை சிப்காட்டிற்கு கையகப்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்ததில் இருந்து இரண்டாண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள்;
திருவண்ணாமலை இருக்கும் சிப்காட்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட வட இந்திய இளைஞர்கள் தான் வந்து வேலை செய்து கொண்டுள்ளனர். இப்போது அமைய உள்ள சிப்காட்டிலும் அது போல வட இந்திய இளைஞர்களுக்கு தான் பெருமளவு வேலை வாய்ப்பு போகவுள்ளது.
வட மாநிலத்தவர்கள் இன்றி தொழில் நிறுவனங்களை நடத்த முடியாது என்றால், அத்தகைய தொழில் நிறுவனங்கள் எங்கே அமைய வேண்டும்..?
வடமாநிலத்திலா? அல்லது தமிழ்நாட்டிலா? என்பது தான் அடிப்படை கேள்வி.
அதற்கு விடை தேடி தான் நாம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா மேல்மா கிராமத்தை சுற்றிய பகுதிகளுக்கு செல்கிறோம்._
சென்னையில் இருந்து 100 முதல் 120 கி.மீ சுற்றளவில் தொழில்துறை நிலங்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக, திண்டிவனத்தில் இருந்து சுமார் அறுபது கி.மீ தொலைவில் உள்ளதும் சிப்காட் I & II பகுதிகளை ஏற்கனவே கொண்டதுமான மேல்மா உட்பட ஒன்பது கிராமங்களில் இருந்து 3,174.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களை அழித்து சிப்காட் பகுதி -III உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு தொழில்துறை சிப்காட் -LA அரசாணை எண் – 77, நாள். 05-04-2022 கூறுகிறது. இதில் 7.10 ஏக்கர் நீர்நிலைகள்// ஈர நிலங்கள், 2805.38 ஏக்கர் வறண்ட நிலங்கள், 361.84 ஏக்கர் பொறம்போக்கு நிலங்கள் என்றும், இதன் மையப்பகுதியில் 72.87 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது என்றும் விவரிக்கிறது. இவை தவறான தகவல்கள்!
மீண்டும் மீண்டும் தங்களது பகுதிகள் குறி வைக்கப்படுவதால் விவசாயிகள் பொங்கி எழுகின்றனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து அவர்களை ஒடுக்கியது மட்டுமின்றி, விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கும் போட்டது மாவட்ட நிர்வாகம். ஆனால், விவசாயப் போராளி அருள் ஆறுமுகம் தலைமையில் மக்கள் உறுதி குலையாமல் போராடி வருகிறார்கள்.

சிப்காட் அறிவித்துள்ள 3,174.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களில், நெல், கரும்பு விளையும் நன்செய் நிலங்களை எல்லாம் வறண்ட மேட்டு வகை நிலங்களாக தமிழக அரசு காண்பித்து இருப்பது தான் அப்பகுதி விவசாயிகளின் கடும் கோபத்திற்கு காரணம்.
இதைத் தான் எட்டு வழி சாலை திட்டத்திலும் தமிழக அரசு செய்தது.
ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு நல்லது செய்வார்கள் மேலும் அரணாக இருப்பார்கள் என்று நம்பித் தான் அவர்களுக்கு ஓட்டு போடுகிறோம். ஆனால் அவர்கள் துரோகத்தை மட்டுமே நம் மீது விளைவிப்பது எந்த விதத்தில் நியாயம் ?
நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link -ன் உள்ளே காணலாம்.
Understanding Nanjai vs Punjai Land: Differences and Importance in Tamil Nadu – Chennai’s Verified.RealEstate Community https://share.google/AJen7WTWu6b8gSwrp
சிப்காட் அறிவித்துள்ள 3,174. ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களில், சர்வதேச அளவில் வகைப்படுத்தப்பட்ட பஞ்சமி நிலம் உட்பட அனாதீனம் நிலம், கால்வாய், மந்தைவெளி, தரிசு, சாலை, பாதை, கல்லாங்குத்து, மேய்ச்சல், வெள்ள வாரி, மேய்க்கால், ஓடை, பாட்டை, தோப்பு, வாய்க்கால், மயானம், நடைபாதை, நீர்ப்பிடிப்பு, ஏரி கால்வாய், குளம், கோவில் நிலம், மதிப்பிட படாத தரிசு என அனைத்து வகையான நிலங்களும் அடங்குகின்றன. இவ்வளவு விபரங்களை நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்திருக்கும் சிப்காட் நிர்வாகம், மேல்மா, வீரம்பாக்கம், குரும்பூர், தேத்துரை, இளநீர்குன்றம், நெடுங்கல், நர்மாபள்ளம், மற்றும் ஆத்தி மற்றும் வட ஆளப்பிறந்தான் ஆகிய ஒன்பது கிராமங்களில், தேத்துரை மற்றும் நெடுங்கல் எனும் இரண்டு கிராமங்களில் உள்ள தொல்லியல் துறை நிர்வாகத்தின் கீழ் வரும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இரண்டு குறித்து எந்த தகவலும் இல்லை.

பொதுவாக, Archaeological Survey of India (ASI) மற்றும் Ancient Monuments and Archaeological Sites and Remains (AMASR) Act. படி அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குறைந்தபட்சம் 300 மீட்டர் சுற்றளவு வரை எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது. அதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.
தமிழ்ச் சமூகம் கட்டி காத்து வந்த மான்செஸ்டர் கோவை வட்டாரம் வட மாநிலத்தவர்கள் இல்லாமல் இயங்காது என்னும் நிலைக்கு தள்ளப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டது, நெற் களஞ்சியம்!
தஞ்சையோ ஒரு படி மேலே போய் அழிவது மழை வெள்ளத்தாலும் வீழ்வது நீரின்றியும் என ஒருவித கோரப் பசியை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் நகருகிறது. இந்த இரண்டு சிக்கல்களையும் தீர்ப்பதற்கான செயல்திட்டம் முன்னாள் மற்றும் இந்நாள் ஆட்சியாளர்களிடம் இல்லாமல் போனது.
வட சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் படரும் வட மாநிலத்தவர் ஆதிக்கமானது. வரும் காலங்களில் கல்வி மாநிலப் பட்டியலுக்கே வந்தாலும் கூட, நீட் போன்ற பொது நுழைவுத் தேர்வை தமிழக அரசால் நீக்க முடியாது எனும் நிலமையை உறுதி செய்யும் போல. இதன் மூலம் அவர்களுக்கோ அல்லது அவர்களது குழந்தைகளுக்கோ தேவைப்படும் கல்வியை நாம் கொடுக்க வேண்டியதும் கட்டாயமாகிறது. கல்வி பெறுவதில் Pro Rata Quota எனும் விகிதாசார சமவாய்ப்பு, OC-OBC-SC, ST மற்றும் OC, BC, BCM, MBC, SC, SCA, ST என இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டு விட்டதால் இன்னொரு விகிதாசார சமவாய்ப்பு வழங்க இயலாது என்பதை நீதிமன்றங்கள் அவ்வப்போது கூறி வருகின்றன.

1971 ல் தொடங்கப்பட்ட SIPCOT நிறுவனம் 2021 வரை, 15 மாவட்டங்களில் 24 தொழில் துறை வளாகங்களையும், 35,043 ஏக்கர் பரப்பளவில் ஆறு துறை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் (SEZ) உருவாக்கியுள்ளது. ஆனால், தற்போது ஐந்தே ஆண்டுகளில் தொழில் முனைவோர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக என்று சொல்லி 45,000 ஏக்கர் பரப்பளவு வரையிலான நிலங்களை விழுங்க செயல்பட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில் நில வங்கி மூலம் தொழில் துறை பூங்காக்கள் உருவாக்க திட்டமிட்டது. இதனால் தமிழகம் முழுக்க உள்ள விவசாய நிலங்கள் அதிரடியாக தொழிற்பேட்டையாக அறிவிக்கப்பட்டு அபகரிக்கப்படுவதால் விவசாயிகள் ஆங்காங்கே கொந்தளித்து போராடி வருகிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Link -ன் உள்ளே விரிவான விபரம் காணலாம்.
SIPCOT – State Industries Promotion Corporation of Tamil Nadu https://sipcotweb.tn.gov.in/Upcoming_parks
வருங்கால திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டு உள் ,அளவீடு செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும்//எஞ்சியிருக்கும் தொழில்- மனைகள் கொண்ட முப்பதுக்கும் மேற்பட்ட தொழில்துறை பூங்காக்கள் அடங்கிய விபரத்தை 22-07-2025 தேதியன்று சிப்காட் வெளியிட்டது. _ இதில் திண்டிவனம் தொழிந்துறை பூங்காவில் மட்டும் நாற்பது தொழில்- மனைகள் மற்றும் மேல்மா பகுதி -II ல் விற்பனை ஆகாமல் இருக்கும் இரண்டு தொழில்- மனைகளும் அடங்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள Link -ன் உள்ளே விரிவான விபரம் காணலாம்.
SIPCOT https://share.google/nD1sbvbtzqPeCgDiJ
சர்க்கரை ஆலை, சமையல் எண்ணெய் நிறுவனம், மினரல் வாட்டர், அரசி, கோதுமை மற்றும் மாவு ஆலை உட்பட பதினேழு உற்பத்திகள் ஊக்கத்தொகைக்கு தகுதியற்ற தொழில்களாக சிப்காட் நிறுவனம் அறிவித்திருக்கும் இன்னொரு அறிக்கை நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது._
கீழே கொடுக்கப்பட்டுள்ள Link -ன் உள்ளே விரிவான விபரம் காணலாம்.
SIPCOT https://share.google/W9TdXLO42x73kmKIA
ஓரிரு மாதங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தில் அன்னலட்சுமி என்னும் ஒரு பெண்மணியின் குடும்பத்தை ஒடுக்குவதற்காக 600-க்கும் மேற்பட்ட போலீசாரை மாவட்ட நிர்வாகம் குவித்ததை பல தளங்களில் எழுதியிருக்கோம். இதற்கெல்லாம் காரணமாக காவல்துறை கை காட்டுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நிர்வகித்து நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகளைத் தான்.
Also read
மாவட்டந்தோறும் District Mineral Foundation Committee, ஊராட்சி ஒன்றியங்கள் அளவில் Biodiversity Management Committee, 1926 வருடத்திய Re-Settlement Register ஆவணம் படி நீர் நிலைகள் அளவீடு என நிலம் சார்ந்து எதுவுமே இன்று வரை தமிழகத்தில் முறைபடுத்தபடவில்லை.
அ. வை. தங்கவேல்
சமூக செயற்பாட்டாளர்















1960 களில் விவசாயிகளின் காவலர்களாக இருந்த காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இன்று விளைநிலங்கள் பறிக்கப்பட்டதை பார்த்து மவுனமாக இருப்பது அரசியல் சோரம் தேர்தல் பேரம் வாக்காளர் தேடிய வேதனை