அறம் தழைத்தோங்க உரம் இடுங்கள்!

-சாவித்திரி கண்ணன்

அறிவார்ந்த வாசக நண்பர்களே

அறம் இணைய இதழ் தனித் தன்மையுடன், எத்தகைய சார்பு நிலைக்கும், சமரசத்திற்கும் இடமின்றி கடந்த ஐந்தாண்டுகளாக வந்து கொண்டுள்ளது.

வெகுஜன பத்திரிகைகள் ஒரு போதும் கவனம் காட்டாதவற்றை கவனப்படுத்துவது, ஆட்சிகளின் அதிகார மையங்களையும், கட்சிகளின், அதிகார மையங்களையும் பொது நலன் சார்ந்து கேள்விக்கு உட்படுத்துவது, எளியோரின் குரலாக ஒலிப்பது.. எனச் செயல்படுகிறோம்.

எளிய மக்களும், பல துறை சம்பந்தப்பட்டவர்களும் தங்களுக்கான நீதி கேட்கும் குரலாக அறத்தைப் பார்க்கின்றனர். ஒரு சிறிய இணைய சிற்றிதழ் தான் எனினும், அக்கினி குஞ்சாக அது தகதகத்து அநீதிகளை சுட்டிக் காட்டுகிறது. நியாயம் பெற விழைகிறது.

வாசகர் அல்லாத நிறுவனங்களிடமோ, அரசியல்வாதிகளிடமோ, தொழில் அதிபர்களிடமோ நாம் விளம்பரங்களோ, நன்கொடைகளோ கேட்பதில்லை. ஆகவே அறம் தொடர்ந்து வருவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு வாசகர்களுக்கே உள்ளது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக விரல்விட்டு எண்ணத்தக்க மிகச் சில வாசகர்களே தொடர்ந்து தவறாமல் சந்தா தருகின்றனர். மிகப் பெரும்பான்மையினர் படித்து கடந்து விடுகின்றனர்.

அறம் வாசிப்பை ஒரு சமூக கடமையாக பாவிக்கும் வாசக நண்பர்களுக்கு மட்டுமே இந்த நினைவூட்டல்;

வாசகர்களிடம் மட்டுமே சந்தா எதிர்பார்க்கிறோம். ஆகவே, எப்போதோ பங்களித்ததோடு நிறுத்திவிடாமல், மாதாந்திரமாகவோ, அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ உங்கள் மனோ தர்மப்படி சந்தா வழங்குங்கள்! ’அறம்’ பொழுது போக்கிற்காக நடத்தப்படும் இதழன்று! பொழுதெல்லாம் சமூகத் தொண்டாய் செயல்படுவோரை ஒருங்கிணைக்கும் முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது!

அறம் தழைக்க, அவரவர் சக்திக்கு உகந்த முறையில் உரம் போடுங்கள்!

www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி சப்கிரைப்ஸ் செய்துவிட்டீர்கள் என்றால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் உடனுக்குடன் அனுப்பப்பட்டுவிடும்!

சாவித்திரி கண்ணன்

ஆசிரியர் – அறம் இணைய இதழ்

https://aramonline.in/support-aram/

Google pay 9444427351

Bank Name: STATE BANK OF INDIA

Bank Account No: 39713109068

Account Name:ARAM ONLINE

Branch: SHASTHRI NAGAR

IFSC code:SBIN0007106

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time