அறம் தழைக்க உரம் இடுங்கள்!

- சாவித்திரி கண்ணன்

அறம் வாசக நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் வணக்கம்!

அறம் நான்காம் மாதத்தில் அடியெடுத்து வைத்து பயணிக்க தொடங்கிவிட்டது!

நாள்தோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன! படிக்கும் வாசகர்களால் மேன்மேலும் பகிரப்படுவதன் வாயிலாகவே இந்த வாசகர்தளம் வளர்ந்து கொண்டுள்ளது!

வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற, உண்மையான இதழியலுக்கான அடையாளமாக அறம் வந்து கொண்டுள்ளது.

ஆணவமிக்க அதிகாரமையத்திற்கு எதிரான அறச் சீற்றங்கள்

சமரசமற்ற விமர்சனங்கள்!

எல்லா கட்டுரைகளிலும் வெளிப்படும்,குழப்பமற்ற தெளிவான பார்வை!

பாசாங்கில்லாமல் நேர்பட எழுதும் எளிமை!

இவையே அறத்தின் இயல்பாக வெளிப்பட்டு வருவதை நீங்கள் உணரலாம்!

‘ஊருக்கு உழைத்திடல் யோகம் – நலம்

ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்’.

என்ற பாரதியின் சொற்களை மனதில் நிறைத்து இயங்கிவருகிறேன்!

கட்டணமில்லா இதழாக இருப்பதாலேயே பல்லாயிரக்கணக்கனவர்களை இது சென்றடைய முடிகிறது.

ஆயினும் படிப்பவர்களில் ஓரிரு சதவீதமானவர்களேனும் சந்தா மற்றும் நிதி உதவி என்ற வகையில் அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் தொடர்ந்து ஆதரித்து அரவணைக்கும் பட்சத்தில் தான் அறம் தொடர்ந்து தளராமல் வெளிவர இயலும்!

இதுவரை ஆதரிக்க முன்வந்த முன்னோடிகளுக்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்! நீங்கள் ஆதரிப்பதோடு நிறுத்தாமல் உங்கள் நட்பு வட்டாரத்தையும் இதை படிக்கவும் அதன் மூலம் அவர்களாகவே முன்வந்து ஆதரிக்கும்படியாகவும் செய்யுங்கள்!

சில நண்பர்கள் சந்தா அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும்,ஆனால், வேலைபளு காரணமாக அனுப்பாமல் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.அவர்கள் உடனே அனுப்பி வைக்க வேண்டுகிறேன்!

தங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் அறத்தையும் இணைத்துக் கொண்டதாகக் கருதி, இரண்டு மற்றும் மூன்று மாதங்களாக தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் சந்தா அனுப்பி வருகின்ற சுமார் பத்து நண்பர்கள் கிடைத்துள்ளனர் என்பதே எனக்கு பெரு மகிழ்ச்சியளித்தாலும் இந்த எண்ணிக்கை ஐநூறாகும் பட்சத்தில் தான் அறம் நின்று நிலைக்கும்!

ரேசர் பே, கூகுள் பே, வங்கி கணக்கு இவற்றுடன் யூ ஆர் கோடும் தந்துள்ளோம்.அனுப்பியவர்கள் தங்கள் பெயர்,தொலைபேசி எண்ணை அவசியம் தரவும்! அப்போது தான் நன்றி கூறவும்,தொடர்ந்து உங்கள் கைப்பேசிக்கே செய்திகட்டுரைகளை அனுப்பவும் சவுகரியப்படும்!

கூகுள் பே நம்பர்;  9444427351

ரேசர் பே;  https://aramonline.in/support-aram/

ரேசர் பேவிற்குள்ளாகவே QR கோடு உள்ளது.

வங்கி கணக்கில் செலுத்த விரும்புபவர்கள்

Bank Name: STATE BANK OF INDIA

Bank Account No: 39713109068

Account Name:ARAM ONLINE

Branch: SHASTHRI NAGAR

IFSC code:SBIN0007106

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time