ரஜினி அரசியலுக்கு  நிர்பந்திக்கபடுகிறார்! – சாவித்திரி கண்ணன்

- 'அந்திமழை' தமிழ்கனல்

இது ரஜினி பிறந்த நாளுக்கான சிறப்பு பதிவல்ல!

யதேச்சையாக அந்தி மழை இதழின் யூடியுப் சேனலுக்காக தம்பி, பத்திரிகையாளர் தமிழ் கனல் என்னை நேர்காணல் செய்தார்.

ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வெளிப்பட்டவிதம்,பிறகு அவருக்கு ஒரு சூப்பர்ஸ்டார் இமேஜ் கட்டமைக்கப்பட்ட போது எப்படி அவரது அணுகுமுறைகள் மாற்றம் கண்டண என கூறியுள்ளேன். அரசியல், ஆன்மீகம் குறித்த அவரது புரிதல்கள், அவரது இயல்பு…ஆகியவற்றை குறித்த என் மதிப்பீடுகளை இதில் பகிர்ந்துள்ளேன்!

ரஜினிகாந்த் குறித்து தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்,மாயைகள் எப்போது எந்த காலகட்டத்தில் இருந்து தொடங்கி,

பிழைப்புவாத இதழியல் துறையின் ரட்சகராக ரஜினி பார்க்கப்பட்ட காலத்தின் கோலத்தை இந்த பதிவில் ஆதியோடந்தமாக நான் விவரித்திருப்பேன்!

கடுகை மலையெனவும், கட்டெறும்பை சிங்கமென்றும்,

பெருக்கி வியந்தோதும் பிழைப்புவாத ஊடகச் சீரழிவின் உச்சகட்ட அவலம் – எம்.ஜி.ஆர் காலத்திலேயே உருவாகி இருந்தாலும் அது – ரஜினி காலத்தில் மிகப் பெரிய விஸ்வரூபமெடுத்தது!

இதில் சோவுக்கும், ரஜினிக்குமான நட்பை பற்றியும் விவரித்துள்ளேன்!

என்னுடைய 35 ஆண்டுகால ஊடகப் பயணத்தில் ரஜினி குறித்த என்னுடைய ’அப்சர்வேசனை’ மிகைப்படுத்தாமல் கூறியுள்ளேன். இது வரை வெளித் தளத்தில்  நான் பேசாத விஷயங்கள் அனேகம்! அதில் ஒரு சில முக்கியமான விஷயங்களை இதில் கூறியுள்ளேன்! இந்த யதார்த்ததை உணர்ந்து உள்வாங்க முடிந்தாலே போதும் ரஜினியை பற்றி கட்டமைக்கப்படும் பொய் பிம்பங்கள் எல்லாம் தரைமட்டமாகிவிடும்!

இது பகுதி 1, பகுதி 2 என பதிவாகியுள்ளது. கடந்த கால் நூற்றாண்டு தமிழக அரசியலை மட்டுமல்ல, ஊடக அரசியலையும் இதன் வழியே நீங்கள் உணர முடியும்!

 

https://www.youtube.com/watch?v=bZ5XzzKarxY&t=279s

https://www.youtube.com/watch?v=5m63UF5Nyvo&t=501s

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time