சாதி ஆதிக்கத்தை சாதுரியமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்தியக் கிரிக்கெட்டில் விளையாட்டில் சந்தர்ப்பவசமாக நுழைந்து சாதனை படைக்கும் பிராமணர் அல்லாத விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் ஊடக வரவேற்பும், சாதிக்காமலே இருந்தாலும் கூட பிராமண வீரர்களுக்கு தரப்படும் பில்டப்களையும் குறித்த ஒரு அலசல்;
தற்போது நடைபெற்று வரும் 2026 ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டை இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் சேர்ந்து நடத்துகிறது. இந்த ஆட்டம் தொடங்கியது முதலே பெரும் ஏமாற்றத்தை தந்து கொண்டிருக்கிறார்கள் முன்னணி நம்பிக்கை நட்சத்திரங்கள்.. அதில் ஒருவர் அபிஷேக் சர்மா.
ஆகோ, ஓகோ என்று மீடியாக்கள் இவரை பற்றி பில்டப் கொடுத்தது. பாகிஸ்தான் அணியும்கூட அபிஷேக் சர்மா இருந்தால் எங்களுக்கு இன்னும் ஒரு செலஞ்சாக இருக்கும் என்றெல்லாம் கூறியதாக பேசப்பட்டது. இந்த சர்மா ஜி என்ன செய்தார் என்றால், இவர் விளையாடிய சூப்பர் 8 என்கின்ற தேர்வு நிலை விளையாட்டில் முதல் மூன்று ஆட்டத்தில் இவர் வெறும் பூஜ்ஜியாத்தோடே பெவிலியன் திரும்பினார். இருந்தும் அவர் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படவில்லை. காரணம் அவர் சர்மா என்பதாலே. இந்த சூப்பர் 8 ல் தேர்வு செய்யப்படுகிற அணிகள் தான் அடுத்த சுற்றான செமி பைனலுக்கு முன்னேறும். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் பேட்டை சுமந்து கொண்டு வீறு நடைபோட்டு வருவார் சர்மாஜி வந்தவுடனே பேட்டை சுற்றுவார் அவுட்டாகி வந்த வேகத்தில் திரும்புவார்.

இவர் தான் தேவ தூதன் இந்திய அணியை கைபிடித்து தூக்குவார் என்று வெட்டியாய் மாலை நேரத்தில் நான்கு மணி நேரம் டிவியையே முறைத்து பார்த்து கொண்டிருக்கும் ஐம்பது கோடி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர் எல்லோருக்கும் ஏமாற்றத்தையே விட்டு சென்றார்.
ஆனால் இறுதி ஆட்டமான கடந்த ஞாயிறு மாலை (01.02.2026) மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் நிஜமான ஒரு தேவ தூதன் சஞ்சு சாம்சன் வந்தார் நின்று நிதானமாக விளையாண்டு 50 பந்துகளில் 97 ரன் எடுத்து 120 கோடி இந்தியர்களின் மானத்தை காப்பாற்றி சென்றார். அவரால் மட்டுமே இந்தியா உலக கிரிக்கெட்டில் வெட்கி தலைகுனியாமல் போனது. தொடர்ந்து இவர் ஓரங்கெட்டப்பட்டாலும் தனக்கு கிடைத்த ஒரு அறிய சந்தர்ப்பதை சரிவர புத்திசாலிதனத்துடன் பயன்படுத்திக் கொண்டு தாய் மண்ணின் மனத்தை காப்பாற்றினார்.

இவர் தன்னுடைய ஆட்டதின் மூலம் மட்டும் இவர்களுக்கு செருப்படி கொடுக்கவில்லை. தனக்கு அந்த வெற்றியை பெற்று தந்த தன்னுடைய தெய்வத்திற்கு நன்றி கூறும் விதமாக வெற்றி பெற்றவுடன் அதே மைதானதில் முழங்கால்படி இட்டு சிலுவை போட்டுக்கொண்ட செயல் மூலமும் தன்னை ஒதுக்கி வைத்திருந்த அக்ரஹார கும்பல் தலையில் குட்டு வைத்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
கிரிக்கெட் விளையாட்டு பற்றி அறிஞர் பெர்னாட் ஷா “11 முட்டாள்கள் விளையாடி 11,000 முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு” என்று கூறினார். அவர் அப்படி கூற காரணம் கால்பந்து ஹாக்கி போன்ற விளையாட்டில் அத்தனை பேரும் ஒருங்கிணைந்து விளையாடுவதைப் போல விளையாடப்படுவதல்ல, கிரிக்கெட். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தால் இந்தியாவில் பரப்பப்பட்ட இந்த விளையாட்டை ஆரம்ப காலங்களில் மேல் தட்டு மக்கள் மட்டுமே விளையாடினர். இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு அரசாங்க ஆதரவு அபரிதமாக கிடைத்தபடியால் இது வேகமாக பரவி வியாபித்து இன்று வியாபார ரீதியில் பெரும் வெற்றிகரமான விளையாட்டாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் ஐந்து நாட்கள் ஆட்டம் மட்டுமே இருந்தது. கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கே இந்த ஐந்து நாள் ஆட்டம் சலித்து போனதால், ஐம்பது ஓவர் ஒரு நாள் விளையாட்டாக உருமாற்றம் பெற்றது. அது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் விளையாட்டு என்று இருந்தாலும் அதிலும் கூட திருப்தி அடையாத ஒரு கும்பல் 20 ஓவர் கிரிக்கெட்டை 2007 ல் தென் ஆப்பிரிக்காவில் முதன் முதல் அறிமுகம் செய்தது. அதில் இந்தியா பாகிஸ்தானை வென்று மகுடம் சூட்டியது. இதற்கு அடுத்த வருடம் 2008ல் ஒரு கும்பல் இதனையே ஏன் ஒரு சூதாட்ட கருவியாய் பயன்படுத்தக்கூடாது என்று தனியார் முதலைகள் எல்லாம் கூடி அமர்ந்து பேசி ஆடு மாடுகளை சந்தையில் ஏலம் எடுப்பது போல விளையாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து விளையாடுகிற ஒரு புதிய சர்வதேச உத்தி விளையாட்டில் புகுத்தப்பட்டது.
இதற்கு இந்தியன் பரீமியர் லீக் (ஐபிஎல்) என்று பெயர் சூட்டப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நமது பிள்ளைகள் ஆண்டு இறுதி தேர்வுக்கு படிக்கும் மார்ச் மாதம் முதல் வாரம் இந்த சூதாட்டம் விளையாடப்படும். இது ஒரு சூதாட்டம் தான் என்று 2013 ஐபிஎல் மேட்ச் பிக்ஸ்சிங் மூலம் தெரிய வந்தது . தமிழ் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் மாடி சிறை சென்றார். என்பதை நாடே அறியும்!
ஒரு காலத்தில் எல்லோரும் டாகடர் படிப்பு படித்து விட முடியாது என்கிற நியதி இருந்தது. சமஸ்கிருதம் அறிந்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்க முடியும். யாரை அவர்கள் கூறி வைத்து அப்படி எழுதாத சட்டம் வகுத்து வைத்திருந்தனர் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போலத் தான் கிரிக்கெட்டும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் விளையாட்டாக இருந்து வந்துள்ளது.
தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் இங்கு பிராமணர்களே பெரும்பாலும் பங்கெடுத்து வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் கிளப்புகளை உருவாக்கி நாளும், பொழுதும் வளர்த்தனர்! சி.டி.கோபிநாத், ரங்காச்சாரி, கவாஸ்கர்..என ஏகப்பட்ட பார்ப்பன கிரிக்கெட்டர்களே அன்று களத்தில் இருந்தனர். ஆகவே, இதை ‘ஜெண்டில்மேன் விளையாட்டு’ என்ற சொல் வழக்கை உருவாக்கி மற்ற பிரிவினர் நுழையாமல் பார்த்துக் கொண்டனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பிராமணர்களின் செல்வாக்கு பிரமிக்கதக்கது. விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் போதே அவாளாக இருக்குமாறு பார்த்துக் கொண்டனர்.!

இந்திய கிரிக்கெட் அணியில் 75% கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பிராமண சமூகத்தை சார்ந்தவர்கள். தமிழ்நாட்டை சார்ந்த கிரிக்கெட் வீரர்களில் பெருமளவினர் அந்த சமூகத்தை சார்ந்தவர்களே.
எடுத்துக்காட்டாக, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், டபிள்யூ . வி. இராமன், சிவராமகிருஷ்ணன், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, அனில் கும்ளே, சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, சடகோபன் இரமேஷ், லஷ்மிபதி பாலாஜி, முரளிகார்த்திக், ஹேமங்பதானி, பத்ரிநாத், இரவிச்சந்திரன் அஷ்வின், ராகுல் திராவிட், அபினவ் முகுந்த், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா, மணீஸ் பாண்டே, ஹர்த்திக் பாண்டே, அமித் மிஸ்ரா, ஸ்ரீசாந்த், நிலேஷ் குல்கர்னி, அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஸ்ரீயாஸ் ஐயர், வருண் சக்கரவர்த்தி … என்று பிராமண சமூகத்தவர்களே பெரும்பாலும் தேர்வாகி வந்துள்ளனர்.

வேறு சமூகத்தை சார்ந்த உங்களுக்கு என்ன தான் தனித்திறமை இருந்தாலும் நீங்கள் ஓரங்கெட்டப்படுவீர்கள். அதையும் மீறி தலை எடுத்த கபில் தேவும், வீராட்கோலியும் எத்தனையெத்தனையோ அவமானங்களை சந்தித்தனர் என்பதை வரலாறு சொல்லும். இதனை முன் வைத்து தான் புளூ ஸ்டார் போன்ற திரைப்படங்கள் எல்லாம் வெளிவந்தன.
அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் வேற்று சமூகத்தினரை நாம் பார்க்க முடியும். அப்படி வேறு ஒரு சமூக பின்னணியில் வந்திருந்து களம் இறங்கியவர்கள் எல்லோருமே தங்களை நிரூபித்து சென்றுள்ளனர். இன்றைக்கு அதிக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரே கிரிக்கெட் விளையாட்டு வீரர் எம்எஸ்.தோனி பிராமண சமூகத்தை சார்ந்தவர் அல்லர். அவரின் தனித்திறமை தான் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. நம்ம ஊர் சேலம் நடராஜன் கூட தன்னுடைய தனித் திறமையை நிரூபித்து முன்னேறி வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் பயணிக்க முடியாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் ஐபிஎல் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.

அதே சமயம் தன்னுடைய சொந்த ஊரில் சொந்தமாக ஒரு கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி கிராமபுற இளைஞர்களை கிரிகெட்டிற்கு பயிற்றுவிக்கிறார்.
இந்திய அணியை அலங்கரித்துக்கொண்டிருக்கும் 75% நபர்களால் சாதிக்க முடியாது போனதை சாம்சன் சாதித்திருக்கிறார். எண்ணிக்கையில் தான் அவர்கள் இருக்கிறார்கள் கபில்தேவ் காலம் தொட்டு நிஜத்தில் சாதனை புரிபவர்கள் – இந்திய கிரிக்கெட் அணியின் மானத்தை காப்பவர்கள் – எளியோர்களே.
கட்டுரையாளர்; வசந்த் பாரதி






















தங்களின் அனைத்து கருத்துகளில் நானும் உடன்படுகிறேன். ஆனால்… தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே எல்லோரும் எப்படி வந்தார்கள்?!
நான் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை இந்திய தேசிய அணிக்கு விளையாடிய தமிழக வீரர்கள் என்று பட்டியலிட்டால்……
ஸ்ரீகாந்த், WV ராமன், வெங்கட்ரமண, எல் சிவராமகிருஷ்ணன், T முருகன், ஹேமாங் பதானி, சடகோபன் ரமேஷ், பத்ரிநாத், அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, சேலம் நடராஜன்…….. மற்றும் பலர்..!!!
யாருடா நீ நீங்க எல்லாம் எங்கடா இருக்கீங்க எப்ப என்ன பண்ணலாம்னு உன்கிட்ட யாராவது கருத்து கேட்டாங்களா கிரிக்கெட்டை கிரிக்கெட் அ பாருங்க உங்களுக்கு சாதி மதம் இத தவிர வேற எதுவும் பேச வராதாடா
விளையாட்டிலும் இட ஒதுக்கீடு எடுத்துட்டு வாங்கடா நாய்கla
Poda tharkuri…