உள் குத்துக்களில் உச்சம் தொட்டுள்ள தமிழக பாஜக!

-சாவித்திரி கண்ணன்

இந்தத் தேர்தலில் மேற்படி நால்வரை தோற்கடிக்க துடிக்கின்றனர், அண்ணாமலை விசுவாசிகள்! இந்த நால்வரும் திராவிடச் சொம்புகளாம்! டெல்லி பாஜக தலைவர்கள் திமுக விஷயத்தில் காட்டும் உறுதியற்ற  அணுகுமுறைகளால் தமிழக பாஜக தொண்டர்களிடையே கொந்தளிப்பும், குழப்பமும் உருவாகி உள்ளது அம்பலமாகியுள்ளது;

தமிழ்நாடு தேர்தல் வெற்றி வியூகம் தொடர்பாக பாஜக  மிகவும் அடக்கி வாசிப்பதாகவும், திமுகவின் வெற்றிக்கு வழி விடுவது போலவுமான பேச்சு பாஜக தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது…! இதற்கான பல அறிகுறிகள் டெல்லி பாஜகவின் நகர்வில் வெளிப்படுகின்றன;

பாஜகவின் விசுவாசியாக இருந்த ஒ.பன்னீர் செல்வத்தை திமுகவுக்கு அனுப்பியது. தங்கள் கூட்டணியில் இருந்த தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பி அதிகத் தொகுதிகள் பெறக் காரணமானது. ஆர்.எஸ்.எஸ்சின் காரியகர்த்தாவான தமிழர் தேசம் செல்வகுமார் திமுக கூட்டணியில் இணந்ததது ஆகியவை தமிழக பாஜகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தான் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த தங்கள் தலைவர் அண்ணாமலையை பதவி நீக்கம் செய்துவிட்டதோடு, அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கொந்தளித்துக் கொண்டுள்ளனர், பெருவாரியான பாஜக தொண்டர்கள்.

அதிமுகவையும், அதன் தலைவர்களையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் தான் அவர் பதவி பறிக்கப்பட்டது என்ற கருத்தாக்கம் முன்பு சொல்லப்பட்டது.

ஆனால், தற்போதோ பாஜக குறைந்த தொகுதிகளுக்கு ஒத்துக் கொண்டதும், சில குறிப்பிட்ட தலைவர்கள் மட்டும் தாங்கள் விரும்பிய தொகுதியை அதிமுகவிடம் பெற்றுக் கொண்டு, அண்ணாமலை, வினோத் பி.செல்வம், அஸ்வத்தாமன் ஆகியோர் விரும்பிய தொகுதியை பெறத் தவறியதும் அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது என்பது பாகஜவின் அதிகார பூர்வ முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் வழியாக அறிய முடிகிறது.

அவற்றை அப்படியே இங்கு தருகிறோம்.

அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் ஒருவர், ‘’வரலாற்றில் முதன் முறையாக பாஜக தொண்டர்களால் பாஜக வேட்பாளர்கள் தோற்கப் போகும் முதல் தேர்தல்அண்ணாமலை’’ எனப் பதிவிட்டுள்ளார்.

அருள் சிபி அருள்; அண்ணாமலை இல்லாத பிஜேபி தமிழ்நாட்டில் அழிவை நோக்கி செல்லும் பிஜேபி வேட்பாளர் அனைவரும் தோற்கடிக்கப்படுவார்கள்.

ராஜசேகரன் ராமசாமி; மற்ற கட்சிகளை ” குடும்ப கட்சி” என்று பிஜேபி கட்சிக்காரங்க முன்பு சொன்னார்கள்.

ஆனால், தமிழக பிஜேபி தமிழிசை, வானதி, முருகன்,  நயினார் நாகேந்திரன் ஆகியோர் அரசியலில் இருப்பதற்காக மட்டுமே நடத்தப்படும் கட்சி.இவர்களில் ஒருவருக்கு கூட தமிழகத்தின் அடிமட்ட தொண்டர்களிடம் செல்வாக்கு கிடையாது.

ஒரு இளம் தலைவனை நம்பி அவனது உழைப்பை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் இதுவரை பிஜேபியே இல்லாத இடங்களில் எல்லாம் பல உள்ளூர் பெரிய தலைகளை எதிர்த்து கட்சிக்குள் வந்தோம். ஆனால் அவை அனைத்தும் வீண் என ஆகி விட்டது.

தினேஷ் கண்ணன்; தோல்வி நிச்சயம். உண்மையான பாஜக தொண்டர்களின் விருப்பம்.திராவிட சொம்புகள் டெபாசிட் இலக்க வேண்டும்.

கே.ராஜா; தமிழிசை, வானதி அக்கா, முருகன் ஜி, நைனார்.. இவங்க நால்வரும் பாஜகவை குத்தகைக்கு எடுத்துள்ளார்கள்.

பாரதி.எஸ் ; வரலாற்றில் முதன்முறையாக… ரோட்டில் கொடி கட்டி,  போஸ்டர் ஒட்டி, கோசம் போட்ட அடிமட்ட தொண்டர்களே… தங்களது கட்சியின் வேட்பாளர்களையே — குறிப்பாக அந்த 4 பேரை —தோற்கடிக்க முடிவு செய்த தேர்தல் இது.

 இளங்கோ; தமிழ் நாட்டில் அண்ணாமலை என்ற ஒரு நபர் இல்லாமல், பாஜக ஒருமயிரையும் புடுங்க முடியாது

சங்கர நாராயணன்; தமிழகத்தில் திமுக கூட்டணி சுலபத்தில் ஆட்சி அமைக்கும்.

கோபிநாத் ராமு; ஒரு சில நயவஞ்சக சிகுனிகளின் சூழ்ச்சிகளால் அண்ணாமலை இன்று ஒதுக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கப்பட்டுள்ளது. பாஜக வெளியிட்ட பட்டியலில் உள்ள சதி செய்த அந்த துரோகிகள் தோல்வியடைய வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனை.

25 ஆண்டுகளில் பஜக/NDA க்கு மட்டும் வாக்களித்து இந்த தேர்தலில் நோட்டாவுக்கு போடும் சூழ் நிலை வருத்தம் அளிக்கிறது

தவசி; தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வளர்க்க அரும்பாடுபட்ட தலைவர்களில் நம்ம அண்ணாமலையும் ஒருவர் அவருடைய உழைப்பு வீணாகி விட்டது அண்ணாமலை இல்லாமல் எந்த பாரதிய ஜனதா கட்சி காரனும் சேர விட மாட்டார்கள் வளர்க்கப்பட்ட பாரதிய ஜனதாக் கட்ச்சியினர் தாமரைச் சின்னத்தில் தான் போடுவோம் கூட்டணி தர்மம் காப்போம். ஆனால்,  திமுகவை ஒழிக்க உங்களால் முடியாது.

செந்தில் சிபி; அண்ணாமலை என்கின்ற இந்த மனுஷன் எதார்த்த அரசியலுக்கு என்றுமே ஒத்து வரவே மாட்டார் போலவே படுகிறது. எதிலும் ரொம்ப ஓவர் ஆட்டிடியூட் காட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.

கிட்டத்தட்ட பத்து நாட்களாக பாஜகவின் ஃப்யுஸ் கோயல்லையூம், அண்ணாமலையை ஏதோ இரட்சகர் என்று நினைக்கும் தமிழக அப்பிரானி பாஜகவினரையும், அநியாயத்திற்கு கெஞ்ச விட்டிருக்கிறார்.

இதில் இவருக்கு ஒரு குரூர திருப்தி, நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது.

ஏதோ ஒரு வகையில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே எப்பொழுதும் முயற்சி செய்கிறார்.

நல்லவேளை மிகச் சரியாகவே மத்திய பாஜக இவருக்கு எந்த பதவியும் கொடுக்காமல் வைத்திருக்கிறது. நல்ல வேலை மத்திய தலைமை இவரது பலவீனத்தை மிகச் சரியாக கனித்து, இவரை ஒதுக்கி வைத்திருக்கிறது.

இவர் இது வரை அடைந்த உயரம்தான் இவரது அரசியல் வாழ்வில் அடைந்த மிகப்பெரும் உயரம். இதற்கு மேல் இவர் வளர்ச்சி பெறப்போவது இல்லை.

மோடியும் அமித்ஷாவும் எவ்வளவோ மாநிலங்களில் கூட்டணிகளை அனுசரித்துத் தான் சாதிக்கிறார்கள்.

எனவே, இவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது இவருக்கும் தமிழக பாரதிய ஜனதாவிற்கும் நல்லது. இவர் போட்டியிட்டால் தொடர்ந்து மூன்றாவது முறை தோல்வி அடைந்தவர் என்று முத்திரை விழுந்து விடும் என்று அநியாயத்திற்கு பயப்படுகிறார்.

இவர் அப்படி ஒன்றும் 234 தொகுதிகளிலும் என்டிஏ வேட்பாளர்களுக்காக ஆதரவு பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அதை என் டி ஏ வில் உள்ள கட்சிகளில் ஒரு கட்சி கூட அதை எதிர்பார்க்கவும் இல்லை.

குறிப்பாக, அதிமுக போன்றவை அவர் பிரச்சாரத்திற்கு வராமல் இருந்தால் நல்லது என்று நினைக்கிறார்கள். ஏனென்றால், இவரது நடவடிக்கைகள் மேலும், தமிழகத்தை திருட்டு திராவிட கும்பலின் கைகளுக்கு போவதற்காக மட்டுமே வழி செய்யும் போலிருக்கிறது, எனவே இதிலும் இவருக்கு தோல்வி மட்டுமே மிஞ்சும்.

தல ராஜா; ஆழ்ந்த இரங்கல்கள் 4 பேருக்கு; நயினார், வானதி சீனிவாசன் தமிழிசை, முருகன் மிக்சர்

செந்தில் கொங்கு; தாமரை கூந்தலில் கூட மலராது.

அருள் பிரசாத்; மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கும், பல்வேறு வாய்ப்பு வழங்கியும் தொடர் தோல்வியை சந்திந்தவர்களுக்கு மட்டுமே மீண்டும் ஏன் வாய்ப்பு வழங்கப்படுகிறது… மாவட்ட, ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் நிற்க முடியாது என்கிற எழுதப்படாத விதி எதும் இருக்கிறதா…? விருப்பமனு கூட வாங்க ஏன் மனமில்லை? ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து நாம் கண்ட பலன் என்ன?

இந்த வகையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி, எல். முருகன் ஆகியோரை திமுகவோடு மறைமுக டீல் வைத்துள்ள  திராவிடச் சொம்புகள் என்ற ரீதியிலும், அண்ணாமலைக்கு எதிரானவர்கள் அண்ணாமலை திமுகவோடு மறைமுக டீலிங் வைத்து ஆதாயம் அடைந்து தன்னை வளர்த்துக் கொண்டார் என்பதாகவும் குற்றம் சாட்டுகின்றார்கள்.

ஆனால், டெல்லி பாஜகவின் தலைவர்கள் ஐந்து வருட திமுக ஆட்சியின் மித மிஞ்சிய ஊழல்கள் மீது எந்த உருப்படியான நடவடிக்கையும் இல்லாமல் வாய்ச்சவடால் மூலம் திமுகவை எதிர்ப்பது போல பாசாங்கு காட்டியும், அதிமுகவை தனியே அணி அமைத்து ஜெயிக்க விடாமல் நிர்பந்தித்து கூட்டணி கண்டதன் மூலமும் பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் சிந்தாமல், சிதறாமல் திமுகவுக்கு மட்டுமே செல்வதற்கு வழி வகுத்து விட்டனர்.

த.வெ.கவுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து அந்த அணிக்கு செல்லும் என்பதால், அவ்வாறு நடப்பதை தவிர்க்க ஆடிட்டர் குருமூர்த்தி, ”திமுகவும் காங்கிரசும் பிரிவது நல்லதில்லை. பாஜக எதிர்ப்பில் இந்தியாவிலேயே வலுவாக உள்ள திமுகவை காங்கிரஸ் விட்டுவிடக் கூடாது” எனப் பதிவிட்டார்.

ஆகவே, ‘தமிழகத்தில் தங்கள் விரும்பும் சட்ட, திட்டங்களை எதிர்ப்பது போல பாசாங்கு செய்து ஆதரிக்கும் திமுகவையே மறுபடியும் அரியணையில் ஏற்றினால் நல்லது’ என்றும், சந்திரபாபு நாயுடுவோ, நிதீஸ்குமாரோ ‘ஜகா’ வாங்கினால், ஆதரவளிக்கத் தயாராக இருக்கும் திமுகவிடம் ‘சாப்ட்டாக’ நடந்து கொள்ள வேண்டும் என்பதே டெல்லி பாஜகவின் நகர்வாகத் தெரிகிறது.

2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவைப்பட்டால், திமுகவை தங்கள் கூட்டணிக்கு இழுத்துக் கொள்ளும் நோக்கமும் பாஜகவுக்கு இருக்கலாம் என்பதே என்னைப் போன்ற சில அரசியல் விமர்சகர்கள் கருத்தாகும்.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time