சைனஸ் பிரச்சினைக்கு சரியான தீர்வு என்ன?

-எஸ்.கே.ராமசுப்ரமணியம்

சுற்றுச் சூழல்கள் மிகவும் சீர்கெட்டு இருக்கும் நவீன உலகில் சைனஸ் பிரச்சினை என்பது சகலரையும் பாதிக்கும் நோயாக மாறி வருகிறது. கொஞ்சம் கவனமாக இருந்தால் சைனஸ் வருவதை தவிர்க்கலாம். வந்தாலும் இம்சை தரும் சைனஸிலிருந்து விரைவில் விடுபடுவது எப்படி எனப் பார்க்கலாம்;

நமது மூக்கைச் சுற்றிலும் முக எலும்புகளுக்குள் காற்று நிரம்பிய சிறிய அறைகள் உள்ளன.. அவை சைனஸ் என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் நான்கு சைனஸ் அறைகள் உள்ளன.

நெற்றிப் பகுதியில் ஒரு பிரதான சைனஸ் அறை உள்ளது.

கன்ன எலும்புகளின் உள்ளே இருப்பது தான் மிகப் பெரிய சைனஸ் அறையாகும்.

கண்களின் நடுவிலும் சிறிய காற்று அறையான சைனஸ் அறை உள்ளது.

மூக்கின் பின்புறம் தலையின் ஆழத்தில் ஒரு சைனஸ் அறை உள்ளது.

இந்த நான்கும் சீராக இயங்க வேண்டுவது அவசியமாகும். இதில் தடை ஏற்படும் போது- அதாவது இந்த அறைகளில் அழற்சி அல்லது தொற்று ஏற்படுவதை சைனடிஸ் என்றழைக்கிறோம். மாசு அதிகமுள்ள நகர்புறங்களில் வசிப்போரை சைனஸ் பிரச்சினை அதிகம் பாதிக்கிறது.

இது முதலில் சாதாரண சளிப் பிரச்சினையாக ஆரம்பிக்கும். அதைத் தொடர்ந்து மூக்கடைப்பு ஏற்படும். பின்னர் தலைவலி ஏற்படும். அதைத் தொடர்ந்து முக வலியும் சிலருக்கு உருவாகலாம்.

சைனஸின் பொதுவான அறிகுறிகள்;

# தொடர்ந்து மூக்கடைப்பு.

# மூக்கில் சளி வடிதல்

# மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சளி வருதல்.

# நெற்றி மற்றும் கன்னத்தில் வலி.

# தலை கனக்கும் உணர்வு.

#ஆலை நேரத்தில் பிரச்சினை அதிகம் இருப்பது.

# தொண்டை எரிச்சல், அல்லது கரகரப்பு.

# இரவு நேரத்தில் இருமல்.

# வாசனை உணர்வு குறைவது.

யாருக்கெல்லாம் சைனஸ் வரும்?

குழந்தைகளைத் தான் சைனஸ் அதிகம் தாக்கும்.

அலர்ஜி உள்ளவர்களை அதிகம் பாதிக்கும்.

அடிக்கடி சளி பிடிப்பவர்களுக்கு வரும்.

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வரும்.

மாசு நிறைந்த சூழலில் வசிப்போரை சுலபத்தில் தாக்கும்.

சைனஸிற்கான காரணங்களும், தவிர்க்க செய்ய வேண்டியவையும்;

குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி.

அலர்ஜி மற்றும் டான்சில் பிரச்சினைகள்.

அதிகமான ஏசி பயன்பாட்டினாலும் சைஅனஸ் ஏற்படுகிறது.

மூக்கில் நீர் வடிதல் இருந்தால் சைனஸ் பாதிப்பின் தொடக்கமாகும்.

மாசு அதிகமுள்ள மற்றும் வாகனப்புகை, தொழிற்சாலைப் புகை அதிகம் உள்ள பகுதிகளில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

பிரிட்ஜில் வைத்து சாப்பிடும் உணவை தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும்.

மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும்.

சைனடிஸ் வகைகள்;

அக்கியூட் சைனடிஸ்: இது சில நாட்களோ அல்லது நான்கு வாரங்கள் வரையிலுமோ தொல்லை தரும்.

கிரானிக் சைனடிஸ்;

இது 12 வாரங்கள் அல்லது மூன்று மாதங்களுக்கு மேல் கூட தொல்லை தரும்.

அலர்ஜிடிக் சைனஸ்;

அலர்ச்சி காரணமாக ஏற்படுவதாகும்.

ரீ கரண்ட் சைனடிஸ்;

மீண்டும், மீண்டும் ஏற்பட்டு தொல்லை தருவது.

சைனஸ் வந்தவர்கள் சிலர் கடுமையான தலைவலியில் அவதியுறுவார்கள். சிலருக்கு கண்களை சுற்றிலும் வீக்கம் இருக்கும். அதிக காய்ச்சல் ஒரு அறிகுறியாகலாம். முகத்தில் அழுத்தம் மற்றும் வலி போன்றவை தோன்றலாம். மூச்சுவிட சிரமம் ஏற்படலாம். இரவு முழுக்க இருமலால் அவதியுறும் நிலை தோன்றலாம். இவை ஏற்படும் போது உடனே கவனித்து முக்கியத்துவம் தர வேண்டும்.

சைனஸால் நமது நடைமுறை வாழ்க்கையில் தூக்கமின்மை, வேலையில் கவனம் குறைதல், எரிச்சல் மன நிலை, சோர்வு தோன்றுதல், படிப்பில் ஆர்வமின்மை ஆகியவை தோன்றும்.

ஹோமியோபதியில் நல்ல தீர்வு;

ஹோமியோபதி ஒரு மென்மையான சிகிச்சை முறையாகும். இது சைனஸை இயற்கையான முறையில், பக்க விளைவுகள் அற்ற வகையில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து குணப்படுத்துகிறது.

ஹோமியோபதியில் இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்றில்லாமல், ஒவ்வொரு தனிப்பட்ட நோயாளிக்குமான சிகிச்சை மாறுபடும். நோய்க்கான காரணம் துல்லியமாக கண்டறியப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது. ஹோமியோபதியில் நோயாளியின் உடல் குறிகளோடு உளவியல் குறிகளையும், உணர்ச்சி போக்குகளையும் கவனத்தில் கொண்டு சிகிச்சைக்கான மருந்து தரப்படுகிறது. மருத்துவர் சொல்லும் காலகட்டம் வரையில் மருந்தை எடுக்கும் போது ஒருவர் பூரணமாக குணமடைவார். இதில் உடல் மனம் இரண்டிற்கும் புத்துணர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனைகளை தூண்டும்.

சைனஸ் வந்தவர்கள் செய்ய வேண்டியவை;

சைனஸ் வந்தவர்கள் வெந்நீர் உட்கொள்வது நல்லது.

காய்கறி சூப் வகைகளை உணவில் சேர்க்கலாம்.

மிளகுரசம் எடுத்துக் கொள்வது நல்லது.

தூதுவளைக் கீரை மிகவும் நல்லது.

உணவில் இஞ்சி,மிளகு ஆகியவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக சத்தான காய்கறி மற்றும் பழ வகைகளை சாப்பிடுவது நல்லது.

தினசரி சுடு தண்ணீரில் நீராவி பிடித்தல் ஆரோக்கியம் மேம்பட உதவும்.

போதுமான தூக்கத்தை உறுதிபடுத்த வேண்டும்.

உடற்பயிற்சி செய்தல் நல்லது.

ஐந்து நிமிடங்களேனும் மூச்சுப் பயிற்சி செய்தல் மிக நல்லது.

கட்டுரை; எஸ்.கே.ராமசுப்ரமணியம்

ஹோமியோ மருத்துவர்

தொடர்பு எண்; 9841108754

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time