துப்புறவுப் பணியாளர்களை கண்ணியத்திற்குரியவர்களாக நடத்த வேண்டும் என களத்தில் இறங்கிப் பணியாற்றியவர் மகாத்மா காந்தி! ’’மீண்டும் ஒரு பிறவி எனக்கிருந்தால் துப்புறவாளனாக பிறக்க விரும்புகிறேன்’’ என்று கூறிய காந்தியின் நினைவு நாளில் இன்னும் இந்தியாவில் துப்புறவு பணியை நவீனப்படுத்தாமல் இருப்பது மட்டுமல்ல, இந்தியாவில் மிக அதிகமாக சுரண்டப்படுபவர்களும், அழுத்தப்படுபவர்களுமாக துப்புரவு தொழிலாளர்களே உள்ளனர் என்ற வகையில், அவர்கள் குறித்த உண்மை நிலவரத்தை விளக்கும் அ. சகாய பிலோமின்ராஜின் நேர்காணலே இது!
”துப்புரவு பணியை கண்ணியமான தொழிலாக மாற்ற வேண்டும்’’ என்பதற்காக எழுதியும்,பேசியும் சமூகப் பணியாற்றும் இவர் மதுரையை சார்ந்த வழக்கறிஞர் மட்டுமல்ல, ஒரு இயேசுசபைத் துறவியும் கூட! சகாய பிலோமின்ராஜ் “மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வு’’ (சட்டமும், விளக்கமும்) என்ற கையேட்டை எழுதியுள்ளார்!
தெற்காசியாசியாவைத் தவிர, மற்ற நாடுகளில் துப்புரவு பணி இழிவாகக் கருதப்படுவதில்லை என்று உங்கள் நூலில் கூறியிருக்கிறீர்கள் ,அப்படியா?
துப்புரவுப் பணியை இங்கு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களே பெருமளவு செய்கிறார்கள். ஆனால் மேலை நாடுகளில் துப்புரவு பணி ஒரு தொழிலாகத் தான் பார்க்கப்படுகிறது. அதை எல்லோரும் செய்கிறார்கள். துப்புரவுப்பணி நவீனமயமாகும்போது; பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தொழில்நுட்பரீதியில் பணியை மேற்கொள்ளும்போது தான் இந்தியாவிலும் இந்த நிலை மாறும்.
துப்புரவுப் பணியை செய்பவர்களை அரசு ஊழியராக அங்கீகரித்து அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்குரிய பலன்களைத் தரும்போது இந்த நிலை மாறும். அப்போது இந்த வேலையைச் செய்ய எல்லா சாதிகளில் இருந்தும் ஆட்கள் முன் வருவார்கள்.
இப்போது மாநகராட்சி, நகராட்சிகளில் துப்புரவு பணியில் ஈடுபடுபவர்கள் அரசு ஊழியர்களாக இல்லையா?
மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகள் போன்ற பெரும்பாலான இடங்களில் துப்புரவுப் பணியாளர்களுக்கு கடைநிலை ஊழியர்களுக்குரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை. தினக்கூலிகளாக, தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களாக, ஒப்பந்த தொழிலாளர்களாகத் தான் பணிபுரிகிறார்கள். உலகமயமாக்கல் சூழலில் நிரந்தரப் பணி என்பது இல்லை. கிராமப் பஞ்சாயத்துகளில் 30 ஆண்டுகள் 35 ஆண்டுகள் பணிபுரிந்தாலும் கூட “பகுதி நேர ஊழியர்களாக” தான் (Part time workers) ஆகத்தான் இன்னமும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மிக சொற்ப தொகையே சம்பளமாக வழங்கப்படுகிறது.
மாநகராட்சி, நகராட்சிகள் துப்புரவுப் பணியை ஒப்பந்ததாரர்களிடம் கொடுத்துவிட்டார்கள். ஒப்பந்தக்காரர்கள் துப்புரவுப் பணியாளர்களை சுரண்டி வருகிறார்கள். முப்பதாயிரம் பேர் வேலையை செய்ய வேண்டிய துப்புரவுப் பணியை 7,000 பேரை வைத்து வேலை வாங்குகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில், உரிய அளவீட்டின் படி போதுமான எண்ணிக்கையில் துப்புரவு பணியை செய்வதற்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் நேரடியாக ஊழியர்களை நியமிப்பதில்லை. அரசு, அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து துப்புரவுப் பணி செய்யும் ஊழியர்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள். அரசும் தனதுப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
‘தூய்மை இந்தியா திட்டம்’ பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த திட்டம் காந்தி பெயரிலான ஒரு விளம்பரத் திட்டம். புள்ளி விவரங்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கிய நிதி எவ்வளவு, விளம்பரத்திற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதை பார்த்தாலே இது ஒரு ஏமாற்றுத் திட்டம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தங்களைத் தாங்களே விளம்பரப் படுத்தி கொள்கிறார்கள். இதனால் அடிப்படையில் நிகழ்ந்திருக்க வேண்டிய எந்த மாற்றங்களும் நிகழவில்லை!
2013ஆம் ஆண்டு மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றும் தடைச்சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது.மறு ஆண்டு 2014 ல் பாஜக அரசு பதவிக்கு வந்தது. மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை குற்றமென்று இந்தச் சட்டம் சொல்கிறது. அப்படி அள்ள வைப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பதே சட்டமாகும்! இந்த ஏழு ஆண்டுகளில், இந்தச் சட்டப்படி இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. இன்னும் உள்ளாட்சி அமைப்புகளிலும், ரயில்வே நிர்வாகத்திலும் , பொது மருத்துவமனைகளிலும் மனித கழிவை மனிதனே அகற்றுகிறார்கள்.இதை எப்படி அனுமதிக்கிறார்கள் ?
தமிழ்நாட்டில் 1993 ஆம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 206 பேர் மலக்குழிகளைச் சுத்தம் செய்யும்போது இறந்திருக்கிறார்கள். இந்த மரணங்களை அடிப்படையாக வைத்து 2013 ஆண்டு சட்டத்தின் கீழ் ஒருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் மலக்குழி மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
Bhasha Singh என்ற பத்திரிகையாளர் “unseen: The truth about India’s manual scavengers ” என்ற நூலை எழுதி இருக்கிறார். அதில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29 மாநிலங்களில் 1,96,25,326 பேர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளார்.
2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முன்பு கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தில் இந்தியாவில் 9.6 மில்லியன் உலர் கழிவறைகள்( Dry Latrines) உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இப்போது 7 லட்சம் பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசு புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் 12 லட்சம் பேர் மனித கழிவை மனிதன் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இதில் பணியாற்றும் தன்னார்வலர்கள் கூறுகின்றனர். இந்த நிலையை மாற்ற இவர்கள் செய்தது என்ன ?
இந்த துறையில் பணியாற்றி வரும் பேஜ்வாடா வில்சன் ( Bezwada Wilson) அவர்களைச் சந்தித்து இருக்கிறீர்களா ?
தேசிய துப்புரவுப் பணியாளர் இயக்கம் ( National Safaikaramchari Andholan) என்ற அமைப்புதான் உச்சநீதிமன்றத்தில் 2000 உச்சநீதிமன்றத்தில் மனித கழிவை மனிதன் அகற்றுவதைத் தடை செய்யக் கோரி வழக்கு தொடுத்தது. இதற்கான தீர்ப்பை 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கியது. இதன் விளைவாகத்தான் இந்த சட்டம் 2013 ல் வெளிவந்தது. இதில் முக்கியப் பங்காற்றியவர் பேஜ்வாடா வில்சன். ஆசிய கண்டத்தின் மிக உயரிய விருதான “மகசேசே விருது” பெற்றவர். அவரை மதுரைக்கு அழைத்து வந்து கூட்டம் நடத்தி இருக்கிறோம்.இப்போதும் அவரோடு தொடர்பில் இருக்கிறோம்.
சிறையிலிருக்கும் கிறிஸ்தவ துறவியான ஸ்டேன் சாமி அவர்களைச் சந்தித்து இருக்கிறீர்களா ?
ஸ்டேன் சாமி அவர்களும் என்னைப்போலவே இயேசு சபை துறவிதான். அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணிபுரிகிறார். நான் தமிழ்நாட்டில் பணிபுரிகிறேன். அவரைப் பலமுறைச் சந்தித்து இருக்கிறேன்.
ஒரு துறவியான நீங்கள் இந்தப் பணியில் ஈடுபட காரணம் என்ன ?
மலக்குழி மரணங்கள் என்பது பொதுவெளியில் அதிகம் பேசப்படாத ஒரு விஷயம். இறப்பவர்கள் அனைவரும் ஏறக்குறைய இள வயது தொழிலாளர்கள். இந்த பணியை செய்வதற்கு இப்போதும் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் சத்தமில்லாமல் வருவார்கள். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமானது. ஆனால் மனிதனுடைய கழிவை மனிதன் அகற்றுவதை எந்த நாகரீக சமுதாயமும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால்தான் அதிகமாக பேசப்படாத இந்த சட்டம் குறித்து, ஒரு நூலை வெளியிட்டேன். இது குறித்த புரிதலை தொழிலாளர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதற்கான பயன்பாட்டு நூலாக இது இருந்தது. இதைத் தவிர களப்பணியாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இது குறித்து பயிற்சி அளித்து வருகிறேன்.
இந்த சட்டத்தை அமலாக்கும் பொறுப்பில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு ஆய்வாளர்கள், பொறியாளர்கள், ஆணையாளர்கள் ஆகியோருக்கு பல கூட்டங்களை நடத்தி வருகிறோம். தங்கள் எல்லையில் இப்படி ஒரு சம்பவம் இல்லவே இல்லை என்று அடித்துக் கூறுவார்கள்.
Also read
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மேலோட்டமாக பார்த்து, கண்ணில் தென்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் 254 பேர் மனித கழிவை மனிதன் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதை ஒரு பொதுநல வழக்காக மதுரை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்தோம். புகைப்படங்களை ஆதாரமாக இணைத்தோம்.அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.
‘திறந்தவெளி கழிப்பிடம் இல்லா நகரம்’ என்று உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றனவே ?
மத்திய அரசு கொடுத்து வரும் அழுத்தம் காரணமாகத் தான் இப்படி உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றன. இல்லையென்றால் அவர்களுக்கு நிதி வராது. ‘திறந்தவெளி கழிப்பிடம் இல்லா நகரம்’ என்று அறிவிக்கும் பலகையைச் சுற்றி மலம் கழிப்பதை நாம் பல இடங்களில் பார்க்க முடியும். மதுரை மாநகராட்சியில் ‘பீ தெரு’ என்று ஒரு தெரு உள்ளது. இந்த அசுத்தங்களை அகற்றுவது யார் ? விஞ்ஞானத்தில் எவ்வளவோ நம் நாடு முன்னேறிவிட்டதாக ஆட்சியாளர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.ஆனால், பொது சுகாதாரத்தில் மிகப் பின் தங்கிய நிலையில் தான் நம் நாட்டை வைத்துள்ளனர் நம்மை ஆள்வோர்!
இப்போது மாநகராட்சி, நகராட்சிகளில் துப்புரவு பணியில் ஈடுபடுபவர்கள் அரசு ஊழியர்களாக இல்லையா?
மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகள் போன்ற பெரும்பாலான இடங்களில் துப்புரவுப் பணியாளர்களுக்கு கடைநிலை ஊழியர்களுக்குரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை. தினக்கூலிகளாக, தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களாக, ஒப்பந்த தொழிலாளர்களாகத் தான் பணிபுரிகிறார்கள். உலகமயமாக்கல் சூழலில் நிரந்தரப் பணி என்பது இல்லை. கிராமப் பஞ்சாயத்துகளில் 30 ஆண்டுகள் 35 ஆண்டுகள் பணிபுரிந்தாலும் கூட “பகுதி நேர ஊழியர்களாக” தான் (Part time workers) ஆகத்தான் இன்னமும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மிக சொற்ப தொகையே சம்பளமாக வழங்கப்படுகிறது.
natural health affiliate programs
flexible work from home jobs for moms
health blog affiliate marketing case study
affiliate programs for natural skincare supplements
Prescription-free medication for diabetes underground pharmacy for diabetes drugs
Affordable diabetes medication Cheapest place to order Insulin online