அறம் நிலைக்க கைசேர்த்துக் கொள்ளுங்கள்!

- சாவித்திரி கண்ணன்

அந்தகார இருள் படிந்திருக்கும் சமூகத்தில் அறத்தின் ஒளியை பாய்ச்சியவாறு ஆறாம் மாதத்தில் காலடி எடுத்து வைக்கிறது நம் அறம் இணைய இதழ்!

அறிவில் சிறந்த ஆன்றோர்களும், கல்வியில் சிறந்த சான்றோர்களும் நடக்கும் அநீதிகளை எதிர்த்து தட்டிக் கேட்டால் தான் ஒரு சமூகத்தில் அறம் தழைக்கும்! அப்படி நடக்காவிட்டால் நாமும் அமைதியாய் இருந்துவிட்டு போவோமே என்பதில் எனக்கு உடன்பாடில்லை! பொது நலனுக்கு குரல் கொடுக்க, பணியாற்ற, நேர்மையான யாருக்கும் உரிமையுண்டு!

சில நேரங்களில் இதில் சந்திக்க நேரும் அவமானங்களும்,ஆபத்துகளும் அயர்ச்சியை ஏற்படுத்தினாலும், அறச் சீற்றங்களை அழுத்தி வைத்துக் கொள்ள முடியாதவனாயிருக்கிறேன்! பிறகு தான் அறிய வருகிறது நம்மைப் போலத் தான் மிகப் பலரும் எண்ணுகின்றனர். என்ன அதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை! காலம் என்னை தன் கருவியாக்கிக் கொண்டுள்ளது! காலத்தின் கட்டளையாக அறம் வருகிறது!

ஆனால், அதே சமயம் ஒற்றைக் கம்பியில் நடக்கும் கழைக் கூத்தாடியைப் போல எந்தப் பிடிமானமும் இல்லாமல் அறப்பாதையில் நடக்கிறேன்! இது கட்டணமில்லா இதழ்! அவரவர்களும், அவரவர்களின் மனசாட்சிக்கு செவி சாய்த்து ஏதாவது ‘காண்டிரிபூசன்’ செய்தால் தான் உண்டு! நூற்றில் ஒன்றிரண்டு சதவிகிதமான வாசகர்களின் தன்னிச்சையான பங்களிப்பால் தான் அறம் உயிர்பித்திருக்கிறது! அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி! அவர்கள் தங்கள் சமூகக் கடமையாக இந்த பங்களிப்பை அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள்! ஆனால், 98 சதவிகிதமானவர்கள் – பல்லாயிரக் கணக்கானோர் – பார்வையாளர்களாகவே உள்ளனர்! வாழ்த்துச் சொல்லியும்,பாராட்டியும் கடந்து போகின்றனர். விரைவில் பார்வையாளர் என்ற நிலையில் இருந்து பங்களிப்பாளராக மாறுங்கள்! இல்லாவிட்டால் தாக்குபிடிக்க வழியின்றி, அறம் தடைப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்! மாவட்ட வாரியாக அறம் வாசகர்வட்டம் உருவாக்கப்பட வேண்டும்!

பல நூறுபேர் அறத்தின் பதிவுகளை முக நூல்களிலும், வாட்ஸப்களிலும், தாங்கள் நடத்தும் இதழ்களிலும் பகிர்ந்து கொள்கின்றனர்! அதுவும் ஒர் பங்களிப்பே! ஆனால், அது போதுமானதல்ல! அவரவர்களும் தங்கள் சக்திக்கேற்ப நிதி பங்களிப்பை தாருங்கள்! நீங்கள் தருவதை நண்பர்கள் மத்தியில் வெளிப்படுத்தி, அவர்களையும் தரச் செய்ய உந்துசக்தியாய் செயல்படுங்கள்!

தினமும் www.aramonline.in க்கு விசிட் செய்து படியுங்கள்!

எப்படி நிதி தரலாம் என்பதற்கு கீழ் உள்ள வழிமுறைகளில் ஒன்றை தெரிவு செய்யுங்கள்.

1.Online Bankinghttps://aramonline.in/support-aram/

2. கூகுள் பே 9444427351

3. Bank Name: STATE BANK OF INDIA

Bank Account No: 39713109068

Account Name:ARAM ONLINE

Branch: SHASTHRI NAGAR

IFSC code:SBIN0007106

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time