பல நூறு கோடி செலவில் அள்ளி இரைக்கப்படும் தமிழக அரசின் அளவுக்கு மீறிய சுய விளம்பரங்கள் ஒரு வகையில் அதன் பலவீனத்தையும், பதற்றத்தையும் தான் உணர்த்துகின்றன.
நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று கூவிக் கூவி தம்பட்டமடிப்பதன் மூலம் தன் குற்றவுணர்வை மறைக்க துடிக்கிறது எடப்பாடி அரசு.
ஒரு நல்ல அரசுக்கு, அரசினால் பலன் பெற்ற மக்களின் உணர்வுகளும், உள்ளார்ந்த பேச்சுக்களும் தான் விளம்பரமாகும்! அதை தன் செயலின் மூலமாக செய்யத் தவறிய அதிமுக அரசு விளம்பரங்களின் மூலமாக அந்த உணர்வை செயற்கையாக உருவாக்கிட மெனக்கிடுவது எதிர்மறையாகக் கூட முடியும்!
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் தான் உள்ளது என்ற விளம்பரம் தவிர்க்க முடியாமல் எல்லோரையும் பொள்ளாச்சி சம்பவங்களையும், அதில் சம்பந்தப்பட்ட ஆளும் கட்சி பிரமுகர்களின் வாரிசுகளையும் நினைக்க வைக்கிறது.
பெரும் அதிகாரத்தில் உள்ள ஒரு அரசு தான் நடந்து கொண்ட விதத்தால், மக்கள் மனதில் இடம் முடியாமல் போய்விட்டதை விளம்பரம் செய்து ஈடுகட்ட முயற்சிக்கிறது. தங்கள் அனுபவத்தில் மக்கள் என்ன உணர்கிறார்களோ..அது தான் உண்மையான மதிப்பீடாகும்.
எந்த அரசு அலுவலகத்திற்கு சென்றாலும் கையூட்டுப் பணம் தராமல் காரியம் நடக்காது என்ற கசப்பான அனுபவத்தை ஆயிரம் கோடி விளம்பரங்களைக் கொட்டியும் மாற்றமுடியாது.
உள்ளாட்சிகளில் பல ஆண்டுகள் துப்புறவு பணியாளராய் நிரந்தரப்படுத்தபடாமல் காண்டிராக் சிஸ்டம் மூலம் தினக் கூலியாக அலைகழிக்கப்படும் லட்சக்கணக்கான தொழிலாளி மனதில் ஒரு மதிப்பீடு இருக்கும். இப்ப வரும் விளம்பரங்கள் எல்லாம் நம் வயிற்றில் அடித்துப் பறித்த கமிஷன் காசில் தரப்படும் விளம்பரங்கள் தானென்று!
இலவசத் திட்டங்கள் பலவற்றை விளம்பரப்படுத்தும் போது, ’’அடப்பாவிகளா இன்னும் தமிழ் நாட்டை எத்தனை காலத்திற்கு இப்படி பிச்சைக்கார நாடாக வைத்து பிழைப்பு நடத்த உத்தேசம்..?’’ என கேட்கத் தோன்றுகிறது.
தன்நிறைவான வாழ்க்கையை மக்களுக்கு உத்திரவாதப்படுத்த முடியாத, கையாகாலாத எடப்பாடி பழனிச்சாமி, தனக்குத் தானே தற்பெருமை சேர்க்கும் விளம்பரத்தால் தன் இயலாமைகளைத் தான் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்! ஏனென்றால், தாங்கள் அனுபவிக்கும் நிஜ வாழ்க்கையை ஒப்பிடக் கூடிய வாய்ப்புகளை அல்லது தூண்டுதல்களை அந்த விளம்பரங்கள் ஏற்படுத்திவிடுகின்றன.
‘’தோ பாருடி..இன்னாமா எடப்பாடி புளுகுறாரு..’’ என்று சாதாரண பெண்களும் கிண்டல் அடிக்கின்றனர்! அதுவும் அதீத விளம்பரம் சலிப்பையே தந்து கொண்டுள்ளது.
எல்லா தினசரிகள், தொலைகாட்சிகள், இணைய தள இதழ்கள் மற்றும் யூ டியூப் சானல்களுக்கு கூட விளம்பரங்கள் இடையறாது தரப்படுகின்றன! அரசாங்க பணம் என்பது மக்கள் செலுத்திய வரிப்பணம்.அதை மக்களுக்காக பயன்படுத்தாமல் எதிர்கால வெற்றிக்காக சுயநலத்துடன் வாரி இறைப்பது பஞ்சமா பாதகமாகும்! அந்த பஞ்சமா பாதகம் அளவுக்கு மீறி போவதை கண்டிக்க வேண்டிய ஊடகங்களோ அறவுணர்வை இழந்து அதில் பலனடைந்தால் நாட்டிற்கு விடிவு தான் ஏது?
இப்படி அள்ளி இறைக்கப்படும் விளம்பரம் என்பது ஒரு வகையில் இந்த ஆட்சியின் குறைகளை சுட்டிக் காட்டாமல் தவிர்க்க ஊடகங்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சப் பணம் என்பது தான் உண்மை! இந்த லஞ்சப் பணத்தை பெறுவதில் போட்டா போட்டி வேறு! ’’அவங்களுக்கு அதிகமாக தந்து இருக்கீங்க..எங்களுக்கு குறைவாக கொடுத்திருக்கீங்களே..’’ என்ற நச்சரிப்புகளாம்! இந்த லட்சணத்தில் ஊடகங்கள் இருந்தால், ஆட்சியாளர்கள் எவ்வளவு அநீதிகள் செய்தாலும் அவை அவ்வளவு சுலபத்தில் மக்கள் கவனத்திற்கு வந்துவிடாது என்பதே யதார்த்தமாகும்.
ஜெயலலிதாவிற்கு ஒரு பிரம்மாண்ட சமாதி கட்டுவதே ஒரு ஊதாரித்தமான செலவென்றால், அதை விளம்பரப்படுத்த மேலும் ஊதாரித்தனமான விளம்பரங்கள்! அரசு திட்டங்கள் பல அட்டகாசமாக விளம்பரப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தாமல் அம்போ என விடப்படுவதும் நடக்கிறது.
Also read
இது வரை தரப்பட்டுள்ள விளம்பரங்களின் மதிப்பு சுமார் ஆயிரம் கோடியாக கூட இருக்க கூடும் என்று தோன்றுகிறது. இந்த ஊதாரித்தமான விளம்பரச் செலவுகளை செய்வது ஐந்து லட்சம் கோடி கடனாளியாக தமிழகத்தை நிதி நெருக்கடிக்கு தள்ளியுள்ள ஒரு அரசு தான் என்ற உண்மையை நாம் எப்படி மறப்பது?
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
உள்ளாட்சிகளில் பல ஆண்டுகள் துப்புறவு பணியாளராய் நிரந்தரப்படுத்தபடாமல் காண்டிராக் சிஸ்டம் மூலம் தினக் கூலியாக அலைகழிக்கப்படும் லட்சக்கணக்கான தொழிலாளி மனதில் ஒரு மதிப்பீடு இருக்கும். இப்ப வரும் விளம்பரங்கள் எல்லாம் நம் வயிற்றில் அடித்துப் பறித்த கமிஷன் காசில் தரப்படும் விளம்பரங்கள் தானென்று!
அறம் என்ற பெயர்க்கு ஏற்றது போல் கட்டுரை எழுதுவது நல்லது.
Anti AIADMK writer…
cheap cialis dicalcium phosphate, tricalcium phosphate and calcium hydrogen phosphate, sodium citrate, water, aqueous solutions e