களைகட்டியது சென்னை புத்தக கண்காட்சி..!

-எழில்முத்து

சற்றே காலதாமதம் தான்! ஆனாலும், எதிர்விளைவுகள்,விற்பனையை பற்றி பொருட்படுத்தாமல் நடத்தப்படுவதே சிறப்பு தான்!  இந்த ஆண்டு கொரானாவை கடந்து  பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்துவருகிறது. இது மார்ச் மாதம் 9-ஆம் தேதி வரை சென்னை  நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருத்தரங்க நிகழ்வுகளுடன் நடக்கும்.

இது இந்தியாவின் முக்கிய புத்தகத் திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. 1976 ல் இச்சங்கம் ஆங்கில நூல்கள் வெளியிடும் பதிப்பகத்தாரால் சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி மருமகன் கே.கிருஷ்ணமூர்த்தி அவர்களைக் கொண்டு ஆரம்பத்தில் 34 கடைகளுடன் சென்னை அண்ணாசாலையில் உள்ள மூஸ்லீம் பள்ளி மைதானத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து இன்று செம்மொழி பூங்கவாக இருக்கும் முன்பு இருந்த உட்லண்ட் ஓட்டல் மைதானத்தில் நடந்தது! இதைத் தொடர்ந்து,  காயத்தேமில்லத் பெண்கள் கல்லூரியில் நடந்தது. இந்த காலகட்டத்தில் தான் இதன் வீச்சு அதிகமானது. பல லட்சம் வாசகர்களை வசப்பப்படுத்தியது! அந்த இடப்பரப்பும் போதவில்லை என பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜான் பள்ளி மைதானத்தில் நடந்தது. வருகின்ற கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரிப்பு அந்த இடத்தையும் கடந்து தற்போது விரிந்து பரந்த நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நிலை நிறுத்தியுள்ளது. என தொடர்ந்து இது 44 வது ஆண்டு புத்தகத் திருவிழா! தற்போது 700 கடைகள் வரை விரிந்து பரந்து பெரும் புத்தகத் திருவிழாவாக உருவெடுத்து மக்களிடத்தில் பெரும் வர வேற்ப்பை பெற்று நடந்தேறி வருகிறது.

இச்சங்கத்தின் தலைவர்களாக ஹிக்கீம் பாதாம்ஸ் நிறுவனர் சந்திரசேகர் தொடங்கி சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத் தலைவர் முத்துகுமாரசுவாமி, கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம். காந்தி கண்ணதாசன், புகழேந்தி, வைரவன்,  இன்றைய தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வரை பொறுப்பேற்று இவ்வாண்டு பெரும் மாற்றங்களுடன், வசதிகளுடன் மக்களின் வாசிப்புத்தளத்தை விரிவாக்கி கொண்டு சென்றுள்ளது.

இன்றைய நவீன அறிவியல் உலகில், விரல் நுனியில் உலகம் சுருங்கிய காலகட்டத்தில் மக்களிடத்தில் வாசிப்பு பழக்கம் எப்படி இருக்கிறது என்று நோக்கும்போது பார்க்கும்போது ஆங்கிலம் – தமிழ் புத்தக வாசிப்புத்தளம் சுருங்கிக் கொண்டு போகும் வாசக தளத்தை விரிவுபடுத்த இதகைய கண்காட்சி அவசியமாகிறது.

கடந்த சில ஆண்டுகளில் வாசிப்பு என்பது கைப்பேசி மூலம் அனைத்தும் அறிந்து கொள்ளும் சூழலுக்கு வந்துள்ளது! தற்போதைய காலக்கட்டத்தில் இளம் தலைமுறையினரிடம் நேரிடையான புத்தக வாசிப்புத்தளம் சற்றே குறைந்திருக்கிறது . அதை அதிகரிக்க செய்ய வாசிப்பு கலாச்சாரத்தை வளர்க்கின்றன இது போஓன்ற நிகழ்வுகள்! பல்வேறு வகையான பல்துறை சார்ந்து நூல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக   வெளிவந்து கொண்டு தான் உள்ளன!

இந்த புத்தக கண்காட்சியிலேயே அச்சுவடிவமற்ற வெறும் ஒலி வடிவில் புத்தக விற்பனைக்கான ஒரு அரங்கும் உள்ளது!

முன்பெல்லாம் பதிப்பகத்தார் குறைந்தது ஆயிரம் நூல்கள் அச்சிட்டு விற்பனை செய்த நிலையில் இக்காலகட்டத்தில் பியூடி எனும் நவீன கம்யூட்டர் சாதன அச்சு மூலம் நூறு, இருநூறு தேவைக்கேற்ப அச்சிட்டே  விற்பனைக்கு கொண்டுவருகின்றனர்.

இது குறித்து பதிப்பகத்தாரரிடம் கேட்டபோது, முன்புபோல் அரச ஆணை மூலம் நூல்கள் வாங்குவது குறைந்துவிட்டதும், மக்களிடம் புத்தக வாசிப்புக் குறைந்து ஈபுக், நெட், கூகுள் என வேறு வடிவில் படிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளால் அதிகப் பிரதிகள் அச்சடித்து அதனை தேக்கிவைத்திருப்பது பெரும் சுமையாய் இருக்கிறது” என்கிறார்கள்.

மேலும் இப்புத்தகத் திருவிழாக்கள் 2004-க்கு பிறகு மாவட்டம்தோறும் விஸ்தரித்துள்ளன! இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே இத்தகைய வாசிப்பைத் தளம் விரிந்துகொண்டு சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கொரனா காலகட்டத்தில் பெரும்பாதிப்புக்கு உள்ளான வர்த்தக உலகில் பதிப்புத்துறையும் முக்கியப் பங்குவகிக்கிறது. இதன் மூலம் இன்றைய தினம் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்கள் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி சிலர் 20 முதல் 30 சதவிகிதம் வர கூட தள்ளுபடி தருகின்றனர்!

இவ்வாண்டு நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் சமூக இடைவெளியோடு இடத்தை விஸ்தரித்து கூடும் மக்கள் ஓய்வெடுக்க இடங்களை ஒதுக்கியும், குழந்தைகளுக்கான வாசிப்புப் பழக்கத்தை மெருமகற்றும் வகையில் குழந்தை களுக்கான கதைச்சொல்ல அரங்கம் தனியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓவியம், கலை, பண்பாட்டினை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் கலை விமர்சகர் இந்திரன் அவர்களால் இவை  குறித்து நூல்கள், ஓவியங்கள், சிற்பங்கள் கூடிய அரங்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கோட்டோவியம் எனும் அரங்கமும் இடம்பெற்றுள்ளது! ஸ்ரீராளன் ஜெயந்தன் அழகிய ஒவியஅரங்கை நிர்மானித்துள்ளார்!

வருடம் தோறும் புத்தகக் கண்காட்சி மூலம் படைப்பாளிகளை கௌரவிக்கும் முகமாக கலைஞர் அவர்கள் ரூ 1 கோடி தந்ததின் மூலம் ஆண்டுதோறும் பல்துறை சார்ந்த. அறிஞர்களுக்கு விருதுகள் தந்தும் பப்பாசி சிறப்பிக்கிறது.

இந்த ஆண்டு முதல் தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ 75 லட்சம் வழங்கி, இந்த புத்தகத்திருவிழா நடத்துவதில் பங்குதாராக ஆகி சிறப்பும் செய்கிறது.

ஆண்டுதோறும் சில கோடிகள் அளவில் விற்பனை செய்யும் இத்திருவிழா கொரானா காலத்துக்குப் பிறகு அத்தகைய விற்பனை முகத்தை எட்டுமா..? என்பதைத் பொறுத்திருந்து பார்ப்போமே.

சென்னை புத்தகக் கண்காட்சி  தவிர, தமிழகத்தில் நெல்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் கடந்த 15 ஆண்டுகளாகவும், ஈரோட்டில் மக்கள் வாசகர் பேரவை சார்பில் 10 ஆண்டுகளாக ஸ்டாலின் குணசேகரன் அவர்களாலும் சிறப்பாக நடந்தேறி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பக் காலகட்டத்தில் 10 அடிக்கு 10 அடி என ஒதுக்கப்பட்டு ஸ்டால்கள் அமைக்கப்பட்டன. பின் டபுள் ஸ்டால் என ஒதுக்கி சமீப காலங்கள்  ஃபோர்ஸ் ஸ்டால் என ஒதுக்கப்பட்டு இன்று போர்ஸ்டால் 144., டபுல் ஸ்டால் 224., சிங்கிள் ஸ்பார் 124- என700 கடைகள் விஸ்தரித்துள்ளது.

இதன் மூலம் மக்கள் கடைகளில் இலகுவாகச் சென்று பல்வேறு தலைப்புகளில் நூல்களை வாங்கவும் எளிதாக அமைகிறது.

இக்காட்சி குறித்தும் இன்றைய புத்தக விற்பனை குறித்து ஒருபதிப்பகத்தாரிடம் கேட்ட போது”. கொரானா காலத்திலும்கூட ஆன்லைன் மூலம் புத்தகம் வாங்குவதும், ஈபுக் மூலம் வாசிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் நேரடியாய் புத்தகம் வாசிப்பு நுகர்வதற்கு இப்புத்தகக் கண்காட்சி உதவுகிறது” என்றார்.

மேலும் பதிப்பகத்தார் ஒருவரிடம் கேட்டபோது,” இன்றைய தலைமுறை தேர்ந்த, அதாவது சீரியஸ் லிட்டரேச்சர் வாசிப்புப் பழக்கம் குறைவே என்றும் இன்றையச் சுழலில் எழுதுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள் வாசிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள் ” என்றார்.

மேலும் ஒரு வாசகர் தாம் கல்லூரி பாடப்புத்தக சம்பந்தமான நூல்களையே வாங்கியதாகவும் அதற்கு இத்தகைய புத்தகக் கண்காட்சி உதவுவதாகவும் குறிப்பிட்டார்

ஒரு புத்தகாகக் கடை ஊழியர் இவர் 20 ஆண்டுகாலம் இப்பணியே செய்து வருகிறவர் குறிப்பிடும்போது, முன்புபோல் புத்தக வியாபாரம் இல்லை. பெரும்பாலான மக்கள் அதாவது 70 சதவீதம் வேடிக்கைப் பார்கவும் 20 லிருந்து 30 சதவீதத்தினரே புத்தகம் வாங்கிச் செல்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

முதலில் வேடிக்கையாகத் தான் அனைத்தும் ஆரம்பிக்கும், அப்புறம் வாசிப்பு வெறியே கூட ஏற்பட்டுவிடும்..!கடை விரித்தாயிறு..அறிவை அறுவடை செய்துபோக அதற்குரியவர்கள் வந்து கொண்டுள்ளனர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time