விஜய் ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அடிப்படையில் லஞ்சம் வாங்காமல், நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டும் என்ற முனைப்பு தென்படுகிறது. சக அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதையும் தடுத்து வைத்துள்ளார். இதைப் பற்றி தனக்கு கிடைத்த பல்வேறு தரவுகள், தகவல்களை இந்த கட்டுரையில் விவரிக்கிறார், மூத்த ஊடகவியலாளர் கே.ஆர்.அதியமான்;
”தற்போது தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதே மிகப்பெரிய ஒரு விடுதலைக்குச் சமமான விஷயம்தான். அதை நோக்கி தான் நமது அரசும் செயல்பட்டு வருகிறது. லஞ்சம், ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவது தான் முழுமையான சுதந்திரம்’’ என தவெக அரசின் முதல் சுதந்திரதின உரையில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளது பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில் ஆட்சியின் ஊழல் ஒழிப்புக்கான முன்னெடுப்புகள், முயற்சிகள் குறித்து என் கவனத்திற்கு வந்தவற்றை இங்கு பகிர்கிறேன்.
கடந்த மாதம் முகநூல் இன்பாக்ஸில் ஒரு நண்பர் எனக்கு அனுப்பிய செய்தி : “வணக்கம் அதியமான் சார். தற்போதைய விஜய் ஆட்சியில் ஜவுளி ஏற்றுமதித் துறையில் லஞ்சம் ஒழிக்கப்பட்டு இருப்பதைப் பற்றிய உங்கள் பதிவு படித்தேன். நான் Housing and Urban Development துறையில் உயர் அதிகாரியாக பணி புரிந்தேன். DTCP அப்ரூவல் எங்கள் டிபார்ட்மெண்ட் தான் கொடுக்கிறார்கள். பணத்தைக் கொட்டிக் கொடுப்பதில் டாஸ்மாக், பத்திரப் பதிவுக்கு அடுத்து வருவது எங்கள் துறைதான்.
ஆயிரம் கோடியை திட்டவட்டமாக தவிர்த்தார்:
இது வரை ஆட்சியில் இருந்த அனைத்து முதல்வர்களுக்குமே காசைக் கொட்டிக் கொடுத்தது எங்கள் துறை. போன ஆட்சி வரைக்கும் இருந்த எல்லா முதல்வர்களுக்கும் DTCP Rs.500 Cr. CMDA Rs.500 Cr. என வருடத்திற்கு ரூ.1,000 கோடி லஞ்சமாக முதல்வர் ஒருவருக்கு மட்டுமே போய்க் கொண்டு இருந்தது.
விஜய் பதவியேற்ற அடுத்த நாளில் இருந்து Housing Secretary வழியாக
முதல்வருக்கு அந்தத் தொகை வேண்டாம் என்று திட்டவட்டமாக செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. இது எங்க டிபார்ட்மெண்ட்ல உள்ள high level officer ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
அவர் கட்சி சார்பற்றவர். ஏதோ ஒரு மாற்றம் நிச்சயம் ஏற்பட உள்ளது
இதை கமெண்ட்டில் வெளிப்படையாகக போட நான் விரும்பவில்லை.
உங்களுக்கு தகவலுக்காக சொல்கிறேன்.” எனு அனுப்பி இருந்ததை படித்து நான் உள்ளபடியே நெகிழ்ந்தேன்.
சென்னையைச் சேர்ந்த ஜி ஸ்கொயர் ( சபரீசன் தொடர்புடையதாக சொல்லப்படுவது) என்ற மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் இதை உறுதி செய்து வெளியிட்ட காணொளி இது : https://www.facebook.com/reel/1353742626668668
மின்சாரத் துறையில் தவிர்க்கப்பட்ட லஞ்சம்;

தமிழ்நாடு மின் துறை அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் மின்சார துறைப் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டு, அதைப் பற்றிய தெளிவான, நுட்பமான விளக்க உரை அளித்தது, நேர்மையான நிர்வாக முனைப்புக்கு ஒரு சான்றாகும். அவரது அணுகுமுறை குறித்த மற்றொரு ஆதாரம் எனக்கு சமீபத்தில் கிடைத்தது. கரூரில் இருந்து குடும்ப நண்பர் ஒருவர் தொலைபேசினார். அவரது மகன் தமிழ்நாடு மின் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர் மகன் மற்றும் பல்வேறு இதர பொறியாளர்களுக்கு சமீபத்தில் மிக நேர்மையான, வெளிப்படையான முறையில் பதவி உயர்வும், இட மாற்ற உத்தரவும் அளிக்கப்பட்டதை சிலாகித்து பேசினார். முந்தைய ஆட்சிகளில் இது சாத்தியமில்லை என்றும், விருப்பமான இடத்திற்கு மாறுதல் பெற ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், தற்போது லஞ்சம் வாங்காமல், தகுதி மற்றும் பணி மூப்பு (merit and seniority ) அடிப்படையில் பதவி உயர்வுடன் கூடிய இட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்கள், தங்களின் புதிய யூனிட்களுக்கு EB இணைப்பு பெற மெகா வாட் ஒன்றுக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது என்றும், தற்போது அவரின் நண்பர் ஒருவர் எதுவும் கொடுக்காமல், தனது புதிய யூனிட்டிற்கு இணைப்பு பெற்றதாக தெரிவித்தார். 10 மெகா வாட் உற்பத்தி மையம் என்றால் மொத்தம் ரூ.2.5 கோடி லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது இந்த லஞ்ச ‘கட்டணத்தை’ வெகுவாக ஏற்றி விட்டிருந்ததை, அவருக்கு பிறகு அமைச்சராக இருந்த முத்துசாமி தொடரச் செய்தார். தற்போது நிர்மல் குமார் இதை முற்றிலும் ஒழித்து, மிகச் சிறப்பான, பாராட்டுகுரிய முன்னெடுப்பை செய்துள்ளார். இது அருமையான, பாரட்டுக்குரிய நற்செயல்.
நாமக்கல் மண்டலத்தில் மிக அதீக அளவுக்கு லஞ்சம் வாங்கி அட்டூழியம் புரிந்து கொண்டிருந்த ஒரு மூத்த செயற்பொறியாளரையும், அவரின் சக உயர் அதிகாரி ஒருவரையும், அவர்களின் அலுவலகத்தில் சந்தித்த நிர்மல் குமார், அவர்களை கடுமையாக எச்சரித்ததாகவும், இனி லஞ்சம் வாங்கினால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடுமையாக கூறியதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த இரண்டு உயர் அதிகாரிகளும் லஞ்சம் வாங்காமல், ஒழுங்காக பணியாற்றுவதாக தனது மகன் தெரிவித்ததாக கூறினார்.
கல் குவாரிகளில் தடுக்கப்பட்ட கையூட்டு;
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய கல் குவாரி நிறுவனம் ஒன்றில் கூட்டாளியாக இருக்கும் எனது உறவினர் ஒருவருடன் கடந்த வாரம் தொலைபேசினேன். ஆண்டுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு turn over செய்யும் அவரின் நிறுவனத்தின் சார்பில் மாதத்திற்கு சுமார் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை லஞ்சமாக அதிகாரிகளுக்கு கொடுத்து, permits, NoCs, etcஐ பெற வேண்டிய நிலை பல ஆண்டுகளாக இருந்ததாக கூறினார். தற்போது விஜய் ஆட்சியில் ஒரு ரூபாய் கூட கொடுக்க தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளதாக கூறி, மிகவும் பாராட்டினார். இத்தனைக்கும் அவர் பாஜக, அதிமுக சார்புடையவர். சட்ட விரோத குவாரிகளை இந்த அரசு மூடச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கல்வித்துறையில் தடுக்கப்பட்ட கட்டாய வசூல்:

முந்தைய ஆட்சிகளில் புதிய சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்குவதற்கான தடை இல்லா சான்றிதழ் (NOC) பெற ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், பள்ளிகளின் அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இடைத்தரகர்கள் மூலம் கட்டாய வசூல் செய்யப்பட்டதாகவும், பணம் தராத பள்ளிகளின் கோப்புகள் பல ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்துப் பின்னர் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தற்போதைய சூழலில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால், பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் NOC சான்றிதழ்களைப் பெற இனி ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என உறுதியளித்துள்ளார்.
டாஸ்மாக்கில் அரசு கஜானாவிற்கு மடைமாற்றப்பட்ட லஞ்சம்;
டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் வழங்கும் ஆலைகள், முந்தைய ஆட்சியாளர்களுக்கு, மாதந்தோறும் 51 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கமிஷனாக கொடுத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக நாளிதழில்களில் வெளியான செய்தியை தொடர்ந்து, கமிஷன் தொகையை இனி வரியாக மாற்றி, அரசு கஜானாவில் செலுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பீர் பெட்டிக்கு 40 ரூபாயும், மதுபான பெட்டிக்கு 90 ரூபாயும் அரசுக்கு கூடுதல் கட்டணமாக செலுத்த, மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
முந்தைய திமுக, அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பள்ளி கல்வித்துறையில் லஞ்சம் புரையோடிப் போயிருந்ததாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் ஜூன் மாதத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமைச்சர்கள் மட்டத்தில் லஞ்சம் வாங்கல் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், கீழ் மட்டத்தில் லஞ்சம் வாங்குவது முற்றிலும் ஒழியவில்லை. இதை முற்றிலும் ஒழிப்பது சாத்தியமும் இல்லை. ஆனால் தொடர் ரெய்டுகள் மற்றும் கைதுகளினால், கீழ் மட்டத்தில் லஞ்சம் வாங்குவது சற்று குறைந்துள்ளது. லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மத்தியில் ஒரு வித அச்சம் நிலவுகிறது.
கே.ஆர். அதியமான்
மூத்த ஊடகவியலாளர்,
சென்னை























லஞ்சத்தில் கொழித்த அரசு ஊழல் அதிகாரிகள் இந்த ஆட்சிக்கு கெட்டபெயர் உண்டாக்க முனைவார்கள். உளவுத்துறை, லஞ்ச தடுப்புத்துறை, மக்கள் தொடர்புத் துறைகளை சீரமைக்க வேண்டும். அரசியல், சேவை செய்ய மட்டுமே என்பதை நிலைநாட்ட வேண்டும்
ஊழலற்ற நிர்வாகம் தொடர வாழ்த்துகள்
Let the govt become corruption free then ask public to change and become honest. This was just an excuse given by all corrupted both in govt, pvt and public in the past. I see some hope for a structural change provided this effort lasts till the last bit of corruption is eradicated.
I am in UAE, dont have practical experience the detailed anti corruption. But, personally i feel (just my feeling). all these are propaganda and narrative set for the interim election which is going to take place.
this narrative will help to win the election and it will boast their image.
i really dont believe that corruption could be wiped out, as it is part of administrative system.
i really doubt the intention of all the ministers including CM.