ஆள் தூக்கி அரசியல் மூலம் தப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது, தவெக ! ஆள் தூக்கி அரசியல் என்பது சுயத்தை இழக்க வைக்கும் ஒரு தற்கொலைப் பாதையாகும். அதிமுகவுடனான விஜய்யின் அணுகுமுறை விவேகமற்றது மட்டுமல்ல, வினையில் முடியக் கூடியது! மற்றொரு அதிமுகவாக மாறுவது தான் தவெகவின் தணியாத லட்சியமா..? இதன் விளைவுகள் என்னாகும் தெரியுமா?
‘புத்தம் புதிய இளைஞர் கூட்டம்! அரசியல் ஊழல் திமிலங்களை வென்று வந்துள்ளார்கள்! பார்ப்போம், நல்ல மாற்றங்கள் வராதா?’ என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்க,
”அதிமுகவில் இருந்து மேலும் 15 நபர்கள் வருவார்கள்” என்கிறார், செங்கோட்டையன்
”அதிமுக ஒரு லெட்டர் பேடு கட்சியாகிவிட்டது” என்கிறார், நிர்மல் குமார்!
”உண்மையான அதிமுக நாங்கள் தான்…! எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நாங்கள் பின்பற்றுகிறோம்” என்கிறார், ஆதவ் அர்ஜுனா!
மற்றொரு அதிமுகவாக மாறுவதற்கு எதற்கு தவெக…? பேசாமல் உங்க கட்சியை கலைத்து விட்டு, ‘புதிய அதிமுக’ என்று வைத்துக் கொள்ள வேண்டியது தானே!
ஏற்கனவே ஆறு அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜுனாமா செய்து தவெகவில் இணைந்த விவகாரமே அறத்திற்கு எதிரானது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுவும் வில்லாதி வில்லனான வீராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் இவர்களை தவெகவில் சேர்த்த பாவத்தை எந்த கங்கையில் போய்க் குளித்தாலும் கரைக்க முடியாது. அதிமுகவின் ஊழல் பேர்வழிகளின் பாவங்களையும், மக்கள் வழங்கிய சாபங்களையும் தவெக ஏன் தலையில் சுமக்க வேண்டும்?

அது போதாது என்று இதற்குப் பிறகு எக்கச்சக்கமானோர் அதிமுகவில் இருந்து பல்வேறு நிலைகளில் வந்து சேர்ந்த வண்ணம் இருந்தனர். ஒரு உண்மையான அதிமுக தொண்டன் இந்தச் சூழல் கண்டு மனம் கலங்கி, ”இது போல் செய்யாதீங்க” என்று விஜய்க்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்து தற்கொலை செய்து கொண்டான். இத்தனைக்கு பிறகும் அதிமுகவில் இருந்து ஆட்களை உருவிக் கொண்டிருக்க தவெக ஆசைப்படுவதேன்? உங்களால் சுயமாக நிற்க முடியாதா?
கடந்த காலத்தில் இதே போல அதிமுகவினர் பலர் திமுகவில் சேர்ந்தனர். அவர்களில் 16 பேர் அமைச்சர்களாயினர். பலர் ஸ்டாலினுக்கு தளபதிகளாக மாறினர். அப்ப அதே திமுக பாணியில் தான் தவெகவும் செயல்பட நினைக்கிறதென்றால், திமுகவை எதிர்த்துப் பேசும் தார்மீகத் தகுதியையே தவெக இழந்துவிடுகிறதல்லவா…?
இது தவெக தனித் தன்மையுள்ள கட்சி என்று நம்பி அதில் சேர்ந்தவர்களுக்கும், அதற்கு வாக்களித்தவர்களுக்கும் முகத்தில் கரியை பூசும் காரியம் அல்லவா?
அதிமுக தமிழகத்தை முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த கட்சி. அந்தக் கட்சியின் பெயரைக் கூட உச்சரிக்காமல் மற்றும் பலர் என்று தொடர்ந்து விஜய் பேசிக் கொண்டு இருக்கிறார். மேலும் மூச்சுக்கு முன்னூறு தரம் திமுகவின் பெயரையும், ‘ஸ்டாலின் அங்கிள்’ என்று உரிமை கொண்டாடியும் பேசுகிறார், விஜய். இதனை ‘திமுகவை நான் பெரிதும் மதிக்கிறேன். அதிமுகவையோ, அதன் தலைவரையோ நான் கிஞ்சித்தும் மதிக்கமாட்டேன்’ என விஜய் சொல்லாமல் சொல்வதாகத் தான் அதிமுக தொண்டன் புரிந்து கொள்வான்.
ஆக, அதிமுக அழிய வேண்டும் என நினைக்கும் தவெகவிற்கு அதில் உருவான தளபதிகள் மட்டும் வேண்டுமாக்கும்?
இப்படிப்பட்ட ஒரு சூழலில் தன்மானமுள்ள அதிமுகவினர் யாருக்குமே தவெக மீது தணியாத பெருங் கோபமே ஏற்படும். அதாவது கடந்த 59 ஆண்டுகளாக திமுகவை பரம எதிரியாகக் கருதி வந்த அதிமுகவினரை, தவெகவின் எதிரியாக மாற்றும் காரியத்தை தான் விஜய்யும் அவரது தளபதிகளும் செய்து கொண்டுள்ளார். மேடையில் விஜய் திமுகவைத் தான் தங்கள் பிரதான எதிரி என்று சொல்லிவிட்டு, நிஜத்தில் அதிமுகவை அழிப்பதையே பெரும் செயல்திட்டமாக வைத்திருக்கிறார்!
தவெகவிற்கு திமுக தான் பிரதான எதிரி என்றால், திமுகவை காலங்காலமாக எதிர்த்து வந்திருக்கும் அதிமுகவை நேச சக்தியாக அல்லவா கருதி இருக்க வேண்டும்..? ஆனால், தவெகவின் செயல்பாடுகளோ, ‘திமுகவே பரவாயில்லை போலிருக்கிறதே’ என்று அதிமுகவினரை எண்ண வைத்துவிடும் போல் இருக்கிறது.
ஆக, பல்லாண்டுகள் எதிரும், புதிருமாக இருந்தவர்களை கை கோர்க்கத் தூண்டி, அவர்களை தவெகவின் பொது எதிரியாக்கி பலப்படுத்துவதன் மூலம் தவெக தன்னைத் தானே அல்லவா அழித்துக் கொள்கிறது..?
இன்னொரு கட்சியை பலவீனப்படுத்தி, அங்கேயிருந்து ஆள் தூக்கி அரசியல் நடத்துவதன் மூலம் தவெகவை வளர்த்து விடலாம் என தவெக நினத்தால், அது தப்புக் கணக்காகத் தான் முடியும். புதிதாக வருபவர்கள், இருப்பவர்களின் அதிகாரத்தை பறிப்பார்கள். வாய்ப்புகளை பறிப்பார்கள், தங்கள் அரசியல் கலாச்சாரத்தையும் இங்கே திணிப்பார்கள். இதனால் தவெக தான் பலவீனப்படும்.
இன்றைக்கு அதிமுகவுக்கு நீங்கள் செய்து கொண்டிருக்கும் அநீதி நாளை நிச்சயம் உங்களுக்கே திரும்பவும் வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தில் சி.பி.எம் கட்சியில் இருந்து ஆள்தூக்கி அரசியல் செய்தார், மம்தா பானர்ஜி. அப்படி கட்சி தாவியவர்கள் எல்லாம் தற்போது திரிணாமுள்ளில் இருந்து பாஜகவுக்கு தாவிவிட்டனர் . அதாவது ஆட்சி சுகத்தை அனுபவித்துவிட்டு ஒரு இக்கட்டான நிலையில் மம்தா பானர்ஜி முதுகில் குத்திவிட்டு போய்விட்டனர். ஆம், ஆள் தூக்கி அரசியல் திருப்பி தாக்கக் கூடியது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். எச்சரிக்கை!
சாவித்திரி கண்ணன்
























ஆள்தூக்கு அரசியல் த.வெ.க.வுக்கு அழகல்ல என்பது மெய்யே. இதனை விஜய் உணர்தல் தகும். மெய்யான அரசியல் பாடம் கற்கும் இளைஞர், இளைஞிகளை, தேர்ந்த மக்களை அடையாளம் கண்டு புதிய தாங்கள் விரும்பும் ஊழற்ற, கலெக்ஷன் கரப்ஷன் இல்லாத மக்களை த.வெ.க. உருவாக்குதலே தேர்ந்த அரசியல் பாதை என்பதை உணர்க.,
15 நபர்கள் அல்ல; 15 எம். எல். ஏ க்கள் ! யாரையும் இவர்கள் துப்பாக்கி முனையில் சேர்க்க வில்லை; அவர்கள் தங்கள் இப்போதைய பதவிகளைத் துறந்து விட்டுத்தான் சேரப்போகிறார்கள்; மீண்டும் “த. வெ. க” எம். எல். ஏ ஆக மக்களால் தேர்ந்தெடுக்கப்படலாம்; தோற்றும் போகலாம்; அதனால் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆனாலும் ஆகலாம்; பெட்டி பாமா என்று கேலி செய்யப்படலாம்; இவ்வளவு பெரிய உருவத்தை வைத்துக் கொண்டு எப்படித்தான் பல்டி அடிக்கின்றாரோ என்று உருவ கேலிக்கு உள்ளாகலாம்; இன்னும் ஐந்தாண்டுகள் த. வெ. க. ஆட்சியில் நீடிக்க வேண்டுமே; ஒன்று இரண்டு எம். எல் ஏ க்கள் வைத்துள்ள கட்சிகளின் தினசரி அலப்பறைகள் தாங்க முடியவில்லையே; தேர்தலுக்கு முன்பும் பின்பும் அ. தி. மு. க , த. வெ. க. வுடன் கூட்டணி அமைக்காததன் விளைவு தான் இது;
இப்போது கூட எடப்பாடி இடம் கொடுத்தால் இது தவிர்க்கப்படலாம்.
Good article
தமிழக மக்களின் ஆதரவையும், அன்பையும், அபரிதமாக பெற்று இருக்கும் விஜய், அதிமுகவினரை வகை தொகை இன்றி சேர்த்ததால் தன் மாண்பை இழந்து வருகிறார்
Tvk is run by Senthil Kumar and Nirmal Kumar
Vijay is just a toy like modi, use for nothing. On shooting spot he will give speech, cry laugh as usual. Nothing has changed on the ground it’s getting worse. Admk rule was way better than dmk. Don’t even consider TVK as administrator its drama company Mr savithri kannan open your eyes and see. Tvk is worst of all govt.
Tharam ketta arasiyal nadathum vijay ondrum . Cinema kavarchiyal Tamil naatu pengal potta vittal vandhavar. Pen puthi pin puthi endru ootu potta pengale indru varundugirargal. Poiyana reels pottu indru pPM padhavi meedhu vere aasai. Tamil naatu karan endru sollave vetka kedaga ulladhu. Hindu makkal majority aga illa oru idathil Christian CM. Ootu potta pengale konjam yosinga. Cinema vera, life vera. Avanuku naatil enna nadakiradhu endre theriya villai. Indru vilai vasi enna nilai. Aangal padum padu enna theriyuma.
Ungaluku enna. Cinema karanukku vottai pottu vittargal.