கோதாவரி- காவேரி இணைப்பு ஏன் ஒரு போதும் சாத்தியப்படாது?

-  டாக்டர் ம. புகழேந்தி

சமீபத்தில் முதல்வர் விஜய் கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நீர் இணைப்புக்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்ததில் அவர், பிரதமர் மோடி ஆதரவுடன் விரைவில் இந்த திட்டம் செயல் வடிவம் பெறும் என்றார். அப்பாடா! நமது தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கவுள்ளது என நம்ப வாய்ப்புள்ளதா? இது  உண்மையில் நடைமுறை சாத்தியமா? என ஆராய்ந்தால் அதிர்ச்சியே மிஞ்சுகிறது;

முந்தைய தமிழ்நாடு முதலமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும் கூட மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோதாவரி – காவேரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் தமிழ்நாட்டின் தண்ணீர் பற்றாக்குறை சரி செய்யப்படும் என அவர்கள் பெருமቅ நம்புகின்றனர். இதன் உண்மை நிலையினை விரிவாகப் பார்க்கலாம்.

கோதாவரி – காவேரி நதிநீர் இணைப்புத் திட்டம்: விரிவான பார்வை

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், இந்திய நதிகளை ஒருங்கிணைத்து, பல மாநிலங்களில் பெருமழை வெள்ள சேதங்களைக் குறைக்கவும், நாட்டின் ஒரு பகுதியில் கிடைக்கும் உபரி நீரை தண்ணீர்ப் பற்றாக்குறை மாநிலங்களுக்குத் திருப்பவும் திட்டமிட்டனர். இதன்படி வழி தேசிய நீர் வள – மேம்பாட்டு முகமை வட இந்தியாவில் 14 நதி இணைப்புகளையும், தென்னிந்தியாவில் 16 நதி இணைப்புகளையும் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தது.

அதன்படி தென்னிந்தியாவில் திட்டமிடப்பட்ட நதிநீர் இணைப்புகளில் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவேரி – வைப்பாறு இணைப்பு ஆகும். (மகாநதியில் கிடைக்கும் உபரி நீர்தான் இன்னும் முற்றிலும் இறுதி செய்யப்படாததால்) முதற்கட்டமாக கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவேரி – வைப்பாறு இணைப்பினைச் செயல்படுத்துவதற்கான தேசிய நீர் வள மேம்பாட்டு முகமை – விரிவான திட்ட அறிக்கையினை மார்ச் 2019 இல் சமர்ப்பித்துள்ளது.

இத்திட்ட அறிக்கையின்படி, கோதாவரி நதியில் உபரிநீராக மதிப்பிடப்பட்ட 7,000 மில்லியன் கன மீட்டர் நீரைத் ( 247 டி.எம்.சி) திருப்பி – தென்பெண்ணையாற்றுக்கு 83 டிஎம்சி, மேலையாற்றுக்கு 81 டிஎம்சி மற்றும் தமிழ்நாட்டிற்கு 83 டிஎம்சி வழங்குவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

திட்டச் செலவு மற்றும் நீர் பகிர்வு விவரங்கள்

கோதாவரி நதி (இச்சம்பள்ளி / இராமகுண்டம்) யிலிருந்து காவேரி (கடுவூர் வரை) 59 கி.மீ நீளத்திற்குத் திறந்த கால்வாயாகப் மற்றும் 21.87 கி.மீ நீளத்திற்குச் சுரங்கங்கள் வழியாக நீரைக் கொண்டுவர, 2018 – 2019 விலை நிலைப் படியில் ரூ.60,361 கோடி திட்டச் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. (2021 – 2022 ஆண்டு விலைப்பட்டியல் என்றால், திட்டச் செலவு ரூ.80,000 கோடி ஆகலாம்.

நிறைவேற்ற 2026 ஆம் ஆண்டு என்றால், ரூ.97,200 கோடிகளுக்குப் போகும்.

இவ்வாறு திருப்பப்படும் உபரி நீரானது 200 டிஎம்சி பாசனத்திற்காகவும்,18.40 டிஎம்சி தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காகவும்,13.57 டிஎம்சி குடிநீர் வழங்குவதற்காகவும் பிரித்து வழங்கப்படும்.

கோதாவரி (இச்சம்பள்ளி நீர்நிச்சக்கம்) – காவேரி (கடுவூர்) கால்வாய் தூரம் 87 கி.மீ சுரங்கங்கள் உட்பட) -1,251.59 கி.மீ ஆகும்.

# இதில் 38 கிளைக் கால்வாய்கள் + 7 நேர் மழைகள் மூலம் பாசனத்திற்க்கான தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு38 லட்சம் ஹெக்டேர் (23.18 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசனம் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

# ஆண்டில் ஜூன் முதல் அக்டோபர் வரை 143 நாட்களுக்கு இத்தண்ணீர் திருப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புப் கால்வாயில் திருப்பப்படும் நீரினால் மூன்று மாநிலங்களிலும் சேர்த்து 7,94,733 ஹெக்டேர் (19.64 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் கூடுதல் விளைபொருட்களின் மதிப்பு ரூ.7,968.89 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

# கால்வாய் வரும் வழித்தடங்கள்

கோதாவரி நதியில் புதியதாக உருவாக்கப்படும் இச்சம்பள்ளி நீர்நிச்சக்கத்திலிருந்து கிருஷ்ணா நதிக்கு எடுத்துச் செல்லப் பின்வரும் வழித் தடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன:

#  கோதாவரி (இராமகுண்டம் / இச்சம்பள்ளி) – கிருஷ்ணா (நல்கொண்டா) இணைப்பு

#  கிருஷ்ணா (நல்கொண்டா) – பெண்ணாறு (நாகார்ஜுனா) இணைப்பு

#  பெண்ணாறு (நாகார்ஜுனா) – காவேரி (கடுவூர்) இணைப்பு (தமிழ்நாடு அரசு – கடுவூருக்குப் பதிலாக புதியதாக காடூரில் கட்டியுள்ள புதிய தடுப்பணைக்கு இணைக்குமாறு கோரியுள்ளது).

மத்திய நீர்ஆணையம் (Central Water Commission) மதிப்பீட்டின்படி, 50% நம்பிக்கை அடிப்படையில் கோதாவரியில் 247 டிஎம்சி-க்கு குறைவின்றி தண்ணீர் கிடைக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

பயன்பெறும் பகுதிகள்: 1252 கி.மீ நீளமுள்ள திறந்த கால்வாய் வழித்தடங்கள் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு மற்றும் காவேரி படுகைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்கள்; தென்பெண்ணையாற்றில்: ஜுராம்பட்டி, கோட்டிக் கல்கம், கம்மம், தொவூர்யல், சூரியா பேட், ஏய்ந்ஹோத்லா; மேலையாற்றில்: குஞ்சூர், பிரதாபூர், நெல்லூர், சித்திரூர்; தமிழ்நாட்டில்: திருத்துறைப்பூண்டி, காடிறுகுடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் பெருங்களூர் & திருச்சிராப்பள்ளி காய்ப்பாடியன இக்கால்வாய் நீரினால் பயன்பெறும்.

தேவையான கட்டமைப்பு: தமிழ்நாட்டிற்குள் வரும்போது குறைந்தபட்சம் தண்ணீரை  83 டிஎம்சி பெற 143 நாட்களில் நீரைக் கொண்டுவர 30 மீ + 50 மீ அகலமும் 10 மீட்டர் உயரமும் கொண்ட திறந்த கால்வாய் தேவைப்படும்.

நிலப்பரப்பு விவரம்: இதனால் தமிழ்நாடு – 7,62,850 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். மொத்தமாக மூன்று மாநிலங்களிலும் மொத்தப் பரப்பு 23,18,174 ஏக்கர் பலன் பெறும். இந்த அளவு நீரைக்கொண்டு செல்லும் வழித்தடத்திலுள்ள இயற்கையான மட்ட அளவுகளைக் கருதி 4 கட்டங்களில் 50 மீட்டர் உயரத்திற்கு நீரேற்றமும் செய்ய வேண்டி வருகிறது. இதற்காக நீரேற்றும் நிலையங்களையும் புதியதாக நிறுவ வேண்டியிருக்கிறது.

இத்திட்டத்தில் உள்ள பாதிப்புகள் மற்றும் சிக்கல்கள்

# நீர் இழப்பு & பற்றாக்குறை: கோதாவரியிலிருந்து காவேரிக்குத் தண்ணீர் கொண்டுவரும் கால்வாயின் மொத்த நீளம் 1,252 கி.மீ. வரும்போது நீர் ஆவியாதலால் 50 டிஎம்சி அளவு குறைந்துவிடும். எனவே தமிழ்நாட்டிற்குச் உரிய பங்காகிய 83 டிஎம்சி அளவு நீர் நிச்சயமாக வராது.

 

# ஒரிசா அரசின் ஒப்புதல்: மகாநதியின் துணைநதியான இந்திரவதி ஆற்றின் உபரி நீர் இன்னும் மிகச் சரியாக இறுதி செய்யப்படவில்லை. ஆனால் NWDA அறிக்கை அந்த மதிப்பை 760 டிஎம்சி ஆகக் கணக்கில் கொண்டு 247 டிஎம்சி நீரை எளிதாகத் திருப்பலாம் என மதிப்பிட்டுள்ளது. இருப்பினும் ஒரிசா அரசு இத்திட்டத்திற்கு இந்நாள் வரை ஒப்புதல் அளிக்கவில்லை.

# மற்ற மாநிலங்களின் திட்டங்கள்: தென்பெண்ணையாறு அரசு சமீபகாலங்களில் பெரு நீர்வரத்துப் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. கோதாவரி நதியிலிருந்து 195 டிஎம்சி நீரை நீரேற்றிகள் மூலம் மேலேற்றும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால், எதிர்காலத் தேவை கருதி மற்ற மாநிலங்களும் முழு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருகின்றன.

#  உயரும் திட்டச் செலவு: தோராய மதிப்பீட்டுத்தொகை ரூ.97,200 கோடி எனினும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுரங்கங்கள் அமைத்தல் போன்றவற்றுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகும். இதனால் திட்டமதிப்பும் ரூ.1,45,800 கோடியாக உயரும். இதில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.48,600 கோடி அளவுக்கு இருக்கும்.

#  சுற்றுச்சூழல் பாதிப்பு: 29,800 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்துவதால் அந்த நிலங்களில் வாழும் மக்களை இடமாற்றம் செய்வதில் பெரிய எதிர்ப்பு எழும். மிகப் பெரிய அளவில் காடழிப்பு ஏற்படும்.

#  தமிழ்நாட்டின் மாற்று வாய்ப்புகள்: இத்திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கிடைக்கவிருக்கும் நீரின் அளவு 83 டிஎம்சி (காவேரிக்கு வரும் போது 48 டிஎம்சி மட்டுமே). இந்த குறைந்த அளவு நீரைப் பெற தமிழ்நாடு அரசு ஏன் ரூ. 48,600 கோடி செலவழிக்க வேண்டும்? 2001 ஆம் ஆண்டில்B.S.விசயராகவன் IAS நிபுணர் குழு சுட்டியபடி, தமிழ்நாட்டில் ஏரிகளைத் தூர் வாருதல், தடுப்பணைகளைக் கட்டுதல் மற்றும் மழைநீர் சேகரிப்புத் திட்டங்களைச் சரியாக நிறைவேற்றினால் மொத்தமாக 250 டிஎம்சி நீர் ரூ.25,000 கோடிக்கும் குறைவான செலவில் எளிதாகக் கிடைக்கும்.

#  தமிழ்நாடு அரசின் அணுகுமுறையில் மாற வேண்டியவை

தமிழ்நாடு அரசு பழைய திறனற்ற, செலவு அதிகம் பிடிக்கும் திட்ட அணுகுமுறையினை முற்றிலும் விட்டுவிட்டு, இன்றைய மேம்பட்ட கட்டுமானப் பொருட்களையும் நவீன தொழில்நுட்ப முறைகளையும் பின்பற்றிட முன்வர வேண்டும். மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதால் திட்டச் செலவுகளைப் பாதியாகக் (50%) குறைக்க முடியும்.

அருகிலுள்ள மாநிலங்களின் தண்ணீருக்காக ஆண்டுக்கணக்கில் காத்திராமல், தமிழ்நாட்டின் நீர் வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத்தக்க வகையில் நவீன தொழில்நுட்பங்களைக் கைக்கொள்ள வேண்டும். இதற்காக மற்ற மாநிலங்களைப் போன்று மெகா திட்டங்களைத் தீட்டி விரைவாகச் செயல்படுத்துவதே சிறந்த வழி. இதன் வழியாகவும் நீர் தற்சார்பு தமிழ்நாட்டை சாத்தியமாக்கலாம். இத்தகைய ஆலோசனைகளை வழங்க கட்டுமானப் பொறியாளரும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கமும் தயாராக உள்ளதுடன், தமிழ்நாடு அரசு அதைப் பயன்படுத்திக்கொள்ள முன்வரும் என்று நம்புகிறோம்.

 டாக்டர் ம. புகழேந்தி,

 மூத்த பொறியாளர்.

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time