‘’சார், தினமலர்ல இருந்து பேசறோம்..இந்த..ஆ.ராசா..இப்படி ஆபாசமா பேசியிருக்காறே..அதப் பத்தி என்ன நினைக்கிறீங்க…?’’
‘’என்ன பேசியிருக்கார்..தெரியலையே..
அதாங்க…,முதல்வர் இ.பி.எஸ்சோட அம்மாவைப் பற்றி ஆபாசமா பேசியிருக்கார்..அது பற்றி உங்க கருத்து வேணும்’’
‘’நான் பார்க்கலையே எனக்கு ஒன்னும் தெரியாது…’’
‘’அதான்ங்க..இன்னைக்கு எங்க தினமலரில் கூட போட்டு இருந்தோமே..உங்களுக்கு வேணா வாட்ஸ் அப்பிலே அனுப்புகிறோம்..படிச்சுட்டு சொல்றீங்களா…’’
‘’நீங்க தினமலரா? இதுக்கு முன்னாடி எந்தெந்த விவகாரத்திற்கெல்லாம் எங்கிட்ட கருத்து கேட்டீங்க..எதுவுமே கேட்டதில்லை. இது என்ன புதுசா கேட்கிறீங்க..’’
‘’அப்படி இல்லீங்க..அரசியல்ல கண்ணியமா பேசணுமில்லையா..ஆனா, அவரு கண்டபடி இ.பி.எஸ்சோட அம்மாவைப் பற்றித் தரக்குறைவாக பேசியிருக்கார்.. நீங்க அதை சப்போர்ட் பண்றீங்களா…’’
‘’பாருங்க..இது வரை அவர் என்ன பேசினார் என்று எனக்கு தெரியலைன்னு தான்..உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன்..என்னன்னு தெரியாத ஒன்றை நான் சப்போர்ட் பண்றேனான்னு கேட்டால் எப்படி..?’’
‘’அப்படின்னா கண்டனம் தெரிவித்து சொன்னீங்கன்னா.. நாம அதைப் போடலாம்..அதான்!’’
‘’அப்ப அவர் சொல்லியிருக்கிறதப் பற்றி உங்களுக்கு என்னோட கண்டணம் வேண்டும். அதான் உங்க நோக்கமா..!’’
‘’ஆமா சார்! பெண்களை இழிவா பேசுறது தப்பில்லையா..? இதுக்கு எந்தெந்த அரசியல் தலைவர்கள் கண்டணம் தெரிவிக்கிறாங்கன்னு நாங்க கேட்டுக்கிட்டி இருக்கோம்..’’
‘’ஓ.. நீங்க பலர் கிட்டயும் இப்படி கேட்கிறீங்களா…?’’
‘’ஆமாம் சார் கனிமொழி கூட இதை கண்டிச்சிருக்காங்க…! .அதை இன்றைய தினமலர்ல போட்டு இருக்கோம்..!’’
‘’அப்படியா..அதான் அவங்க கண்டனம் சொல்லிட்டாங்களே…, பிறகு எதுக்கு எங்கிட்டயும் கேட்குறீங்க…!’’
‘’சார், அவர் ரொம்ப மோசமா பேசியிருக்கார்..அவங்க மட்டும் கண்டனம் சொன்னால் போதுமா..? இந்த மாதிரி ஆபாசமான பேச்சுக்களை உங்கள மாதிரியானவங்க கண்டும், காணாமல் போகலாமா?’’
‘’நான் தான் கண்டேன் என்றோ..படித்தேன் என்றோ நான் சொல்லவேயில்லை. ஆனா..பாருங்க நான் எதையோ கண்டதாகவும், கண்ட பிறகு காணாமல் போவதாகவும் சொல்றீங்க.. நீங்க இனிமேல் தான் வாட்ஸ் அப்பில் அனுப்பி நான் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கேன்.’’
‘’சாரி சார்…, சரி சார் உங்களுக்கு இப்போ உடனடியாக அனுப்பி வைக்கிறேன். பாத்துவிட்டு சொல்றீங்களா…”
‘’சரி, அனுப்புங்கள்..ஆனா..இப்ப நான் பிரச்சாரத்திற்கு புறப்பட்டுகிட்டு இருக்கேன்.. நீங்க சாயங்காலம் வேண்டுமானால் பேசுங்க சொல்றேன்.’’
‘’சார், சாயங்காலம் ஆயிடுமா…? சாயங்காலம் நீங்க ரொம்ப பிசியாடுவீங்க…எனக்கு உடனே வேண்டுமே. சார் ஒன்னு வேணா செய்யலாம் அவர் என்ன சொல்லி இருக்கார்னு நானே அப்படியே இப்ப சொல்லிடறேன். நீங்க சும்மா ஒரு நாலுவரி சொன்னால் போதும்.’’
‘’வெறும் நாலுவரி நான் சொல்றதுக்காகவா இப்படி மெனக்கிடறீங்க…’’
‘’சார் என்ன சார் பண்றது… நிறைய பேர் கிட்ட கேட்கிறோம் எல்லோர் கருத்தையும் போடறதுக்கு பேஸ் வேணுமே!’’
‘’நீங்க கேக்குற எல்லாருக்கும் அவர் என்ன பேசுனாருன்னு தெரிந்திருக்கா..?’’
‘’அதான் சார் சிலருக்கு தெரிந்திருக்கு, பலருக்கு தெரியலை.அதனால் நாங்களே அவர் பேசினதை விளக்கமாகச் சொல்லி கருத்து வாங்குறோம். எதிர் கட்சி, கூட்டணி கட்சி..முத்தரசன், காதர்மொதீன்..அப்படின்னு எல்லா தரப்பிலுமே கேக்குறோம்.. தங்கர் பச்சான் மாதிரியான சினிமா பிரபலங்களிடமும் கேட்கிறோம்..! எல்லாம் வரும் பாருங்க…”
‘’அவர் அவ்வளவு ஆபாசமாவா பேசியிருக்கார்…?’’
‘’ஆமா சார் இ.பி.எஸ் கள்ள உறவிலே பிறந்த குழந்தையின்னு சொல்லி இருக்காரு….இது தாய் குலத்தை அவமதிக்கும் சொல் இல்லையா..?’’
‘’ஆமா அதுல சந்தேகமேயில்லை…ரொம்ப தப்பு தான்.’’
‘’அதான் நாங்க அதை தினமலர்ல போட்டோம். இன்னைக்கு தமிழகம் முழுக்க இதுக்கு போராட்டம் நடக்கும் பாருங்க…’’
‘’அதெப்படி சொல்றீங்க…’’
‘’சார், இப்ப நான் உங்ககிட்ட சொன்னேன். நீங்க ரொம்ப தப்புன்னு சொன்னீங்க..ஆனா மகளீர் அணி, வழக்கறிஞர் அணின்னு பேசி இருக்கோம். அவங்கள, ஏதாவது போராட்டம் நடத்துவீங்களான்னு கேட்டோம்..பேசிட்டு சொல்றோம்னு சொன்னாங்க..அனேகமா ஏதாவது செய்வாங்க..அதை கவரேஜ் பண்ணி தினமர்ல போட்டோவோட போடுவோம்.. தேர்தல் நேரத்துல அவங்களுக்கும் பப்ளிசிட்டி தானே சார்..! எடப்பாடி தொகுதியிலயும் கேட்டு இருக்கோம்! நாளைக்குப் ( மார்ச்-28) பாருங்க தீயாய் இருக்கும்..!’’
‘’ஆக, இப்படியாக ஆ.ராசா ஒரு முறை பேசியதை.. நீங்க ஓயாமப் பேசிப்,பேசி மற்றவர்களையும் பேச வைத்து பரப்புறீங்க…தவறுன்னு சுட்டிக் காட்டி கண்டித்து, கடந்து போக வேண்டிய விஷயத்தை ஏன் இப்படி தூக்கிச் சுமந்து மூளைமுடுக்கெல்லாம் சேர்க்கிறீங்க.. இதுக்கு ஒரு பெரிய டீமையே போட்டு இதே வேலையா செய்யுறீங்க போல..! இதைப் பற்றி பக்கம் பக்கமா எழுதுவீங்க போல இருக்கு! அவர் சொன்னது திருக்குறளா? அல்லது நீங்க கொண்டாடுகிற கீதையா..? இவ்வளவு சின்சியரா அதை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கிறீங்க…! என்னோட நேரத்தையும் நீங்க வீணடிச்சுட்டீங்க..போனை வையுங்க…”
Also read
மேற்படி உரையாடல் தமிழகத்தின் ஒரு அரசியல் தலைவருக்கும், தினமலர் நிருபருக்கும் இடையில் நேற்று (மார்ச்-27) நடந்தது!
Super welcome
Super welcome
Super creation no reality
ஆமாமாம்…இந்த தினமலர் ரொம்ப மோசம்!
அது காலம்பூரா …இன்னொரு அமைச்சர்…ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு
தலைப்பே 96 பாயிண்ட்ல போடுவாங்க…கரெக்ட்ட்ட்ட்
//நீங்க ஓயாமப் பேசிப்,பேசி மற்றவர்களையும் பேச வைத்து பரப்புறீங்க…தவறுன்னு சுட்டிக் காட்டி கண்டித்து, கடந்து போக வேண்டிய விஷயத்தை ஏன் இப்படி தூக்கிச் சுமந்து மூளைமுடுக்கெல்லாம் சேர்க்கிறீங்க..//
இப்போ இந்த வேலைய நீங்களும் செஞ்சு…உங்க அரை மைய வேஸ்ட் பண்றீங்க…
நீட்டி மொழக்காம…ஒரு ரெண்டுவரியில கடந்து போகவேண்டியதுதானே?
//மேற்படி உரையாடல் தமிழகத்தின் ஒரு அரசியல் தலைவருக்கும், தினமலர் நிருபருக்கும் இடையில் நேற்று (மார்ச்-27) நடந்தது!//
யாரந்த அரசியல் தலைவர்ன்னு பேர் சொல்லக்கூட தைரியமில்லாமல்
பூசி மொழுகும் உங்கள் அரசியல் ’அனுபவ’ வரிகளில்…’அறம்’ தரம் தாழ்ந்து தக்காளி சாஸ் வழியுது..( கவர்ல காசு இருக்கும்…. மறந்துட்டு கிழிச்ச்ச்சுறப்போறீங்க.. 🙂
)
‘’ஆக, இப்படியாக ஆ.ராசா ஒரு முறை பேசியதை.. நீங்க ஓயாமப் பேசிப்,பேசி மற்றவர்களையும் பேச வைத்து பரப்புறீங்க…தவறுன்னு சுட்டிக் காட்டி கண்டித்து, கடந்து போக வேண்டிய விஷயத்தை ஏன் இப்படி தூக்கிச் சுமந்து மூளைமுடுக்கெல்லாம் சேர்க்கிறீங்க.. இதுக்கு ஒரு பெரிய டீமையே போட்டு இதே வேலையா செய்யுறீங்க போல..! இதைப் பற்றி பக்கம் பக்கமா எழுதுவீங்க போல இருக்கு! அவர் சொன்னது திருக்குறளா? அல்லது நீங்க கொண்டாடுகிற கீதையா..? இவ்வளவு சின்சியரா அதை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கிறீங்க…! என்னோட நேரத்தையும் நீங்க வீணடிச்சுட்டீங்க..போனை வையுங்க…”