எதற்கிந்த கெடுபிடிகள்! தேவை இல்லாத பரிசோதனைகள். அத்தனை மக்களுக்கும் இது சாத்தியமா? இதனால் நேரவிரயமும், நெருக்கடிகளுமே கூடும். பெரும் மக்கள் திரளுடன் தேர்தல் பிரச்சார ஜனநாயகத் திருவிழா இத்தனை நாட்களாக நடந்தது தானே! அப்ப என்ன கொரோனா ஓய்வெடுக்கப் போனதா? நாளை அது வாக்குச் சாவடிகளுக்கு ‘ஸ்பெஷல் விசிட்’ செய்ய இருப்பதாக அதிகாரிகளுக்கு சொன்னதா..? வாக்குப் பதிவின் போது கொரானா நெருக்கடிகளை செய்வதன் உள்நோக்கம் என்ன?
ஆறடி இடை வெளியிட்டு தான் நிற்க வேண்டும்.
முகக் கவசம் போட்டுத் தான் வர வேண்டும்.
சாணிடைசர் கொண்டு கைகளை நினைக்க வேண்டும்.
நினைத்தால் மட்டும் போதாது. கையுறை தரப்படும். அதை போட்டுக் கொண்டு தான் பட்டனை தட்ட வேண்டும்.
டெம்பரேச்சர் பரிசோதனை செய்யப்படும்.
டெம்பரேச்சர் அதிகமாக காண்பித்தால் உங்களுக்கு கொரோனா இருக்கலாம்.
ஆகவே ஆறு மணிக்கு மேல் வாருங்கள்! அப்போது வாக்காளர் தொடங்கி பூத் அலுவலர்கள் ஏஜெண்டுகள் அனைவரும் உடல் முழுக்க மறைக்கும் தடுப்பு உடைகளை போட்ட பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது!
கொரோனா கெடுபிடிகளால் ஊரடங்கு, வேலை இழப்பு, தொழில் பாதிப்பு, வாழ்வாதார இழப்பு..என சொல்லொண்ணா துயரங்களைக் கடந்து இப்போது தான் ஒரளவு ஆசுவாசமானார்கள் மக்கள்! மீண்டும் இழந்து போன வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டத்தில் இருக்கின்றனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டது. உற்சாகம் பிறந்தது! பிரச்சாரங்கள் சூடுபிடித்தது. தலைவர்களின் பிரச்சாரங்களில் எல்லாம் அலைகடலென மக்கள் திரண்டனர். குழந்தைகளை தூக்கி கொஞ்சி பெயரிட்டனர்.கிழவிகளை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறினர். தாய்மார்களின் காலை தொட்டு வணங்கினார்.ஆரத்தி எடுத்தால் பணம் என்பதால், ஆரத்தி எடுக்கும் போட்டி போட்டனர். வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று ஓட்டு கேட்டனர். தேனீர் கடைக்கு சென்றால் டீ ஆற்றினார்கள், பரோட்டா கடைக்கு சென்றால் பரோட்டா சுட்டார்கள். துணி துவைக்குமிடம் சென்றால் துணி துவைத்தார்கள். இள நீர் கடை சென்றால் இளநீர் வெட்டிக் கொடுத்தார்கள் நடைப் பயிற்சியின் போது எதிர்ப்படூவோரிடம் கைகுலுக்கினார்கள்,ஆளாளுக்கு செல்பி எடுத்தார்கள்! கொரோனா பற்றி யாருக்குமே பிரக்ஜை இல்லாமல் இருந்தது. இத்தனை செயல்பாடுகளையும் ஏகப்பட்ட மீடியாக்கள் முட்டிமோதி படம் பிடித்து மக்களுக்கு காட்டினார்கள்! யாருக்குமே அச்சம் இல்லை. இத்தனையிலும் பரவாத கொரோனா நாளை ஓட்டுப் போட வந்தால் வந்துவிடும் என முடக்க நினைப்பீர்களா…?
கொரானா பரவப் பரவத் தான் அதற்கான எதிர்ப்பு ஆற்றலை இந்த பிரபஞ்சத்திலிருந்து மனித உடல் பெற முடியும். நாம் வீட்டுக்குள் முடங்கினால் கொரானா தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும். கடந்த ஒரு வருடமாக கொரோனாவை எப்படி எதிர் கொள்வது என்பதை அவரவர்களும் தங்கள் சொந்த அனுபவப் புரிதலில் உணர்ந்து உள்ளனர். மக்கள் தைரியத்தோடு கொரானாவை எதிர்க்கும் தைரியத்தை,ஆற்றலை பெற்று உள்ளனர். நாளும்,பொழுதும் கடைவீதிகளில் உள்ள கூட்டமே இதற்கு சாட்சி. தற்போது ஹரித்துவாரில் கோடிக்கணகான மக்கள் கும்பமேளாவில் பங்கு பெற்றுள்ளனர்.அங்கு அரசால் எந்த கட்டுப் பாட்டையும் அமல்படுத்த முடியவில்லை.
மீண்டும் கெடுபிடிகள் செய்ய காத்துக் கிடந்த அதிகார வர்க்கம், தேர்தல் வாக்கு பதிவின் போது கொரோனா பயத்தை மிகைப்படுத்தி,பிரச்சாரம் செய்து இல்லாத கட்டுப்பாடுகளை அமல்படுத்தப் போவதாக சொல்லியுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஏதாவது ஒரு உயர் அதிகாரி நாட்டின் யதார்த்தம் தெரியாமல், ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவம் தெரியாமல் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
வாக்களிப்பதற்கான கியூவில் சில மணி நேரம் நிற்கும் போது அக்கம்,பக்கம் உள்ளவர்களோடு பேசிப் பழகி கால்கடுக்க காத்திருக்கும் வலியை மறந்து போவது தான் மக்கள் இயல்பு! ஏகப்பட்ட கெடுபிடிகள், அவமானங்களை சந்தித்து தான் வாக்களிக்க மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றால், அது வாக்கு பதிவின் சதவிகிதத்தை வெகுவாகக் குறைத்துவிடும். ஒரு வேளை ஆளும் கட்சிக்கு ஆதரவான அதிகார வர்க்கம் அதைத் தான் விரும்புகிறார்களோ..என்னவோ…? சமீபத்தில் அஸ்ஸாமிலும்,மேற்கு வங்கத்திலும் நடந்த தேர்தலில் இந்த சமூக இடைவெளியெல்லாம் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்ற யதார்த்தைதை உணர்ந்து கொள்ளுங்கள்! வாக்குப்பதிவை அதன் இயல்பு போக்கில் நடக்கவிடுங்கள்!
தள்ளித் தான் நிற்க வேண்டும் என்றால், அது ஆங்காங்கே இருப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். இப்படி இல்லாத,பொல்லாத கண்டிஷன்களைப் போடும் படித்த,மேல் தட்டு வர்க்க பயந்தாங் கொளிகள் வீட்டை விட்டு வெளியே கூட வரமாட்டார்கள். எந்த தேர்தலிலும் தங்கள் ஜனநாயகக் கடமையை செய்திருக்கவே மாட்டார்கள். அதனால். எளிய மக்கள் பெருந்திரளாக கிளம்பி வாக்குபதிவு செய்வதை இவர்கள் எரிச்சலோடு பார்ப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் குரலுக்கு மதிப்பளித்து நாளைய தினம் நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் முக்கிய வாக்குப் பதிவு நிகழ்வுக்கு இடையூறு செய்யக் கூடாது.
Also read
மக்களை அங்க நிற்காத இங்க நிற்காத,பேசாத, போகாதே..என்றெல்லாம் நாளை போலீசைக் கொண்டு கெடுபிடி செய்தால் அது வாக்குப் பதிவில் பெரும் பின்னடைவைத் தான் ஏற்படுத்தும். தேர்தல் என்பது ஒரு ஜனநாயகத் திருவிழா! அது கோலாகலமாக இது நாள் வரை நடந்தது! அதை போலவே நாளைக்கும் நடக்கட்டுமே! நாளை மட்டும் என்ன இல்லாத கண்டிஷன்களை போடுகிறீர்கள். டெஸ்டுகள்! டெம்பரேச்சர் பரிசோதனை என்றால், இப்படி செய்ய நினைத்தால் அது மிகுந்த நேர விரயத்தையே ஏற்படுத்தும்! யாருக்காவது உனக்கு டெம்பரேச்சர் அதிகமாக இருக்கு ஆகவே வாக்களிக்க முடியாது என்று திருப்பி அனுப்ப முன்றால், அது மிகப் பெரிய அவமானமாக கருதப்பட்டு சண்டை வெடிக்க வழிவகுக்கும். நாளை தேர்தலின் கிளைமாக்ஸ் முடிவுக்கு வரும் நாள்! அது சுதந்திரமாகவும்,அமைதியாகவும் நடப்பதை அனுமதியுங்கள்! கெடுபிடிகளைச் செய்யாதீர்கள்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
தள்ளித் தான் நிற்க வேண்டும் என்றால், அது ஆங்காங்கே இருப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். இப்படி இல்லாத,பொல்லாத கண்டிஷன்களைப் போடும் படித்த,மேல் தட்டு வர்க்க பயந்தாங் கொளிகள் வீட்டை விட்டு வெளியே கூட வரமாட்டார்கள். எந்த தேர்தலிலும் தங்கள் ஜனநாயகக் கடமையை செய்திருக்கவே மாட்டார்கள். அதனால். எளிய மக்கள் பெருந்திரளாக கிளம்பி வாக்குபதிவு செய்வதை இவர்கள் எரிச்சலோடு பார்ப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் குரலுக்கு மதிப்பளித்து நாளைய தினம் நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் முக்கிய வாக்குப் பதிவு நிகழ்வுக்கு இடையூறு செய்யக் கூடாது.
Al