அறமெனும் அக்கினிக் குஞ்சு….!

-சாவித்திரி கண்ணன்

சில லட்சம் மக்களை ஒன்பது மாதத்திற்குள் அறம் சென்றடைந்துள்ளது!

நேர்மையான, சமரசமற்ற இதழியலை சாத்தியப்படுத்தும் ஒரு எளிய மனிதனின் முயற்சியே இது!

அறம் ஒரு பெரிய ஊடகமல்ல, பாரதி சொல்லியதைப் போல,

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை

ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு; தழல்

வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று உண்டோ…!

என்பது தான் உண்மை!

இந்த இதழியல் முயற்சிக்கு நான் வாசகர்களை நம்பித் தான் குருட்டாம் போக்கில் என் முழு உழைப்பையும் அர்ப்பணித்து இயங்கி வருகிறேன். எந்த நல்ல முயற்சிகளுக்கும் உடனே ஆதரவு கிடைத்துவிடுவதில்லை. முதல் ஒன்றரை மாதங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்த பிறகே வாசகர்களிடம் விண்ணப்பித்தேன்.

அதற்கு ஒரு பத்து,பதினைந்து நண்பர்கள் அனுப்பினார்கள். ஒரு சிறிய நம்பிக்கை துளிர்த்தது. நான் மாதாமாதம் வேண்டுகோள் வைத்து எழுதும் போதெல்லாம் பத்து முதல் பதினைந்து பேர் வரை புதிதாக ரெஸ்பான்ஸ் செய்கிறார்கள்! இன்று வரை 23 வாசகர்களே ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்கின்றனர். இது போதுமானதல்ல! நாம் விளம்பரத்தை நம்பி இயங்கக் கூடாது என்பதில் உறுதி காட்டி வருகிறோம். தேர்தல் நேரத்தில் கூட விளம்பரத்திற்கான எந்த முயற்சியும் நாம் செய்யவில்லை. விரும்பி படிக்கும் வாசகர்களே இந்த இதழுக்கு பங்களிக்க வேண்டும்.

மகாத்மா காந்தியின் நோக்கங்களுக்கு வடிவம் தருவதற்கு கூட வசதியான தொழில் அதிபர்களின் உதவி இன்றியமையாத தேவையாக இருந்தது!

என் மரியாதைக்குரிய திரைத்துறை நண்பர் அறத்தில் வெளி வரும் கட்டுரைகள் தொடர்பாக விசாரித்து, சிரமான நிலை அறிந்து மாதம் ஐயாயிரம் வீதம் ஆறு மாதத்திற்கு உதவுவதாக வாக்களித்து, அந்தப்படியே அவரது நண்பர்களான இரு தொழில் அதிபர்களையும் ஐயாயிரம் வீதம் ஆறு மாதத்திற்கு உதவச் செய்தார்! அந்தக் கெடு இந்த மாதத்துடன் முடிகிறது. என்னால் அவர்களுக்கு எந்த பிரதி உபகாரமும் இல்லை. ஆயினும் அவர்கள் சமூகத்தின் பொது நலன் கருதி இந்த உதவியை செய்தனர்.

தேர்தல் நேரத்தில் அறத்தின் பங்களிப்பு எதிர்பாராத வீச்சை பெற்றது! தேர்தல் என்பதை மையப்படுத்தி இயங்கும் நோக்கம் கொண்டதல்ல நமது இதழ். சமூகத்தின் எளிய பிரிவு மக்கள் படும் துயரங்களை, மற்ற வெகுஜன இதழ்கள் கவனிக்கத் தவறும் விஷயங்களை. யாரும் சுட்டிக் காட்டத் தயங்கும் அநீதிகளை வெளிப்படுத்தி தீர்வு காண வேண்டும் என்பதே நம் இலக்காக கொண்டு செயல்படுகிறோம்.

செப்டம்பர் மாதம் அறம் துவங்கப்பட்டது. மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்கள் தான் தேர்தல் தொடர்பாக நாம் எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது!

இந்த தேர்தலில் ஜனநாயகத்தையும், மாநில அரசின் சுயமரியாதையும், தமிழ் நாட்டின் பிரத்தியேக நலன்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்பது நம் நிலைபாடு. அதை நாம் சிறப்பாகவே செய்தோம். அறத்தின் பதிவுகள் பல்வேறு பத்திரிகைகளில் மறுபிரசுரம் செய்யப்பட்டன! ஜனசக்தி, தீக்கதிர், முரசொலி, விடுதலை …உள்ளிட்ட கட்சி பத்திரிகைகளிலும், வேறு பல சிற்றிதழ்களிலும் வெளியாயின! வாட்ஸ் அப்களில் சில லட்சம் மக்களை எப்படியோ சென்றடைந்து விடுகின்றன!

தேர்தல் நேரத்தில் நமது பதிவுகளை பெருந்திரளான அரசியல் ஆர்வலர்கள் தீவிரமாக பின் தொடர்ந்தனர். நாம் சுட்டிக்காட்டும் விஷயங்களை அவர்கள் உரிய இடங்களுக்கு கொண்டு சேர்த்தனர். இதனால் அறத்தில் சுட்டிக் காட்டப்படும் விஷயங்களுக்கு உரிய தீர்வுகளும் உடனடியாக ஏற்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் சி.ஏ.ஏ மற்றும் எட்டு வழிச்சாலை விடுபட்டதை சுட்டிக் காட்டினோம். அது உடனே கவனம் பெற்று அடுத்த நாளே இணைக்கப்பட்டது. அது போல அரவக்குறிச்சியில் மிகப் பெரிய தொய்வு இருப்பதை சுட்டிக் காட்டினோம். உடனே அந்த நிலைமை சீர் செய்யப்பட்டதாக அரவக்குறிச்சி ஊடக நண்பர்கள் தெரிவித்தனர்.

அறத்தில் வெளியாகும் கட்டுரைகளின் கண்டெண்ட் தங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாக பிரபல இதழ்கள் மற்றும் தொலைகாட்சி ஊடகத்தின் நண்பர்கள் அவ்வப்போது தொலைபேசியில் பேசுகின்றனர். இந்த தேர்தலில் நமது ஜனநாயக பங்களிப்பு மிகச் சிறப்பான இடம் பெற்றதாக ஆங்காங்கே உள்ள வாசகர்கள் தொலைபேசியில் தெரிவித்தனர்.

இவ்வளவு வீரியம் இருந்தும் நம் இதழ் பொருளாதார ரீதியாக தற்சார்பு பெற முடியாத சூழல் உள்ளது. அதை நிறைவு செய்ய வேண்டியது வாசகர்களின் கடமை! அவரவர் சக்திக்கு உட்பட்ட வகையில் பங்களிப்பதோடு இரு நண்பர்களை அறத்திற்கு சந்தா செலுத்த தூண்டுங்கள்!

அன்புடன்

சாவித்திரி கண்ணன்

ஆசிரியர் – அறம்

எப்படி நிதி தரலாம் என்பதற்கு கீழ் உள்ள வழிமுறைகளில் ஒன்றை தெரிவு செய்யுங்கள்.

1.Online Banking – https://aramonline.in/support-aram/   

கூகுள் பே; 9444427351

வங்கி மூலம் செலுத்த விரும்பினால்;

Bank Name: STATE BANK OF INDIA

Bank Account No: 39713109068

Account Name:ARAM ONLINE

Branch: SHASTHRI NAGAR,ADYAR, CHENNAI

IFSC code:SBIN0007106

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time