தேர்தல்பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்தித்த அவலங்கள்!

-மானுடப் பிரியன்

ஜனநாயகத்‌ திருவிழாவான தேர்தல்‌ நடந்து முடிந்துவிட்டது. ஆனால்,இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடும் பல்லாயிரகணக்கான அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்கள், துயரங்கள்,சொல்லமுடியாத வலிகள் பொது வெளிக்கு தெரிவதில்லை! இதைக்‌ குறித்து உங்கள்‌ அனுபவங்களைக்‌ கூறுங்கள்‌ என்று அவர்களைக்‌ கேட்டிருந்‌தோம்‌. வழக்கமான தேர்தல்‌ பணி நடைமுறைகளைக்‌ கடந்து தற்போதைய 2021 சட்டமன்றத்‌ தேர்தல்‌ பணிகள்‌, பல அழுத்தங்‌களை ஆசிரியர்களுக்குத்‌ தந்துள்ளதாக பரவலான கருத்துகள்‌ தமிழகமெங்கும்‌ இருந்து வந்துள்ளன..! அவற்றை இங்கு தொகுத்து தந்துள்ளோம்.

கடமையைச்‌ செய்ய யாரும்‌ மறுக்கவில்லை. ஆனால்‌ ஆசிரியர்களை அதிக தூரம்‌ அலைய வைப்பதுதான்‌ வருத்தப்படவைக்கிறது. கொரோனா அச்சம்‌ சற்று கவலையைத்‌ தருகிறது. சரியான வசதிகள்‌ செய்யாமல்‌ இருப்பது. பெண்களுக்கு சிரமம்‌ அதிகமாக இருக்கிறது என நிறைய கருத்துகள்‌ வந்துள்ளன.

மேலும், அந்தந்த தொகுதியிலேயே பணி செய்ய கூடாது என்பதற்காக சுமார் 80 கி.மீ தொலைவில் தேர்தல் பணிக்கு அமர்த்தி தேர்தலுக்கு முன்பான இரண்டு வகுப்புகள் , தேர்தல் நாளுக்கு முன்பாக ஒரு‌வகுப்பு , அன்றைய நாளில் வழங்கப்படும் தேர்தல் பணியிடத்தினை அறிந்து அங்கு சென்று அன்று இரவு தங்குதல் , அடுத்த நாள் தேர்தல் பணியாற்றுதல் , வாக்கு பதிவு இயந்திரங்களை தேர்தல் முடிந்த நாள் நள்ளிரவு அல்லது அதிகாலை வரை காத்திருந்து ஒப்படைத்து அந்த நேரத்தில் போக்குவரத்து வசதிகள் இன்றி காத்திருந்து வீடு திரும்புதல் என இப்பணிகளின் கடினம் மிக பெரியது.  அதுவும் அன்றிரவு பெண் பணியாளர்களின் நிலையை யாரும் கருத்தில் கொள்வதில்லை. இதற்கென சிறப்பு பேருந்துகள் கூட இயக்கப்படாது.

தெரியாத ஓர் குக்கிராமத்தில் ‌ஒரு வேலை உணவுக்காக யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய அவலம்தான் எப்போதும். இந்த உணவு வழங்கும் பணி யாருக்கானது ? என்பதே இதுவரை யாருக்கும் தெரியாது.

பொதுவாக ஊர் தலைவர், யாராவது கட்சி பிரமுகர் சார்பாகவே இது செய்யப்படுகிறது. ஆனால் தேர்தல் செலவினங்களில் கணக்கில் இதுவும் சேர்க்கப்பட்டிருக்கும்!

அன்றைய இரவு புது இடம் என்பதால் கண்டிப்பாக தூக்கம் இருக்காது, அதுவும் வெயில் காலம் கட்டான் தரை, கொசுகடியில், காலையில் கழிவறை குளியல் அறையில் ஏற்படும் சிரமங்கள்‌.

1000 பேர் வரை வாக்களிக்கும் மையங்களில் உணவு உண்ண கூட நேரம் இருக்காது.

தேர்தல் நாளில் கட்சி பூசல்களை சமாளித்து வாக்கு பதிவை முடித்து அன்று மாலை வாக்கு இயந்திரங்களை சீல் வைக்கும் வரை  அலுவலர்களின் மனநிலையை மக்கள் யாரும் நினைத்து பார்க்க வாய்ப்பில்லை. அதிலும் குடித்துவி்ட்டு சண்டை போடும் ஞானத்தோடு வரும் கட்சி சார்ந்த அடிமட்ட தொண்டர்களுக்கு.

இத்தனையும்‌ தாண்டி இரண்டு நாட்கள் தூக்கத்தை தொலைத்து தேர்தல் பணியை முடித்து வீட்டிற்கு திரும்பும் வழியில் தூக்க கலக்கத்தில் விபத்திற்குள்ளான ஒருவரின் மகிழுந்துதான் நீங்கள் காண்பது. Airbag காரணமாக உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லாவிட்டாலும்  கால் மற்றும் இடுப்பு பகுதியில் உள்காயம் மற்றும் லேசான முறிவுகள் .

சிலர் BP ஏறி மருத்துவ மனையில் அனுமதி, சிலருக்கு மன உலைச்சலில் இருந்து மீள முடியா நிலை.   எனவே, எந்த பணியையும் சுலபமான பணி என்று நினைக்க வேண்டாம்.

திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருந்த உடற்கல்வி ஆசிரியர் மாரடைப்பால் பரிதபமாக உயிரிழந்தார்.  சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே, திருவேகம்பத்தூரைச் சேர்ந்த ரஜினிகாந்த், வாராப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியர். சட்டப்பேரவை தேர்தலில் பணியாற்ற திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட காரையூர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலராக ரஜினிகாந்த் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

முந்தின நாள் இரவு முதல் ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்பதனால் , அவரால் காலையில் தேர்தல் பணிக்குச் செல்ல இயலவில்லை.ஆயினும், அவர் வர நிர்பந்திக்கப்பட்ட நிலையில் தேர்தல் பணியாற்றும் போது நெஞ்சு வலி வந்து உயிர் இழந்துள்ளார்.

உடனடியாக காரையூர் வாக்கு சாவடி மையத்திற்கு, மாற்று அதிகாரி நியமிக்கப்பட்டு தேர்தல் பணி தொடர்ந்துள்ளது.ஆனால், இதை முதல் நாளே செய்திருந்தால் அவர் உயிர் இழந்திருக்கமாட்டார்!

வாக்குப்‌ பதிவு முடிந்து திரும்பும்போது எந்த  விதமான போக்குவரத்து வசதியும்‌ இருக்காது. நடுஇரவில்‌ நடு ரோட்டில்‌ நின்ற அனுபவம்தான்‌. பல தேர்தல்‌ பணிகளில்‌ கிடைத்தது. தேர்தல்‌ ஆணையம்‌ தேர்தல்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ ஊழியர்களை மனிதர்களாக நினைப்பது இல்லை என்ற வருத்தமான பகிர்வுகளையும்‌ முன்வைக்கின்றனர்‌.

சில இடங்களில்‌ மருத்துவ விடுப்பில்‌ உள்ளவர்களை நேரில்‌ வரவழைத்து மருத்துவக்‌ குழுவினர்‌ முன்‌ சோதனை செய்த நிகழ்வைக்‌ குறித்து சொல்லும்‌ ஒரு தகவலைக்‌ கேட்கும்‌ போதே மற்றொருவர்‌ கூறுவது திடுக்கிட வைக்‌கிறது. ஒருவர்‌ கொரோனா பாதிப்பில்‌: இருக்கும்போது தேர்தல்‌ பணிப்‌ பயிற்சிக்கு. அவரால்‌ வர இயலவில்லை. குறிப்பிட்ட நபர்‌ வென்டிலேசனில்‌ இருப்பதைப்‌ புலனத்தில்‌: படமாக அனுப்பித்‌ தெரிவிக்கும்‌ போது அதை ஏற்காமல்‌, நேரில்‌ வந்து மருத்துவச்‌ சான்றை: ஒப்படைக்கக்‌ கூறியதும்‌, அதே போல்‌ கோவிட்‌ 19 பாதிப்புள்ளவர்‌ நேரடியாக: வந்து மருத்துவச்‌ சான்றை ஒப்படைத்துச்‌ சென்றதும்‌ கூடுதல்‌ அதிர்ச்சி.

கடுமையான உடல்‌ நலம்‌ பாதிக்கப்பட்டு தொடர்‌ சிகிச்சையில்‌ உள்ளவர்களையும்‌, கருவுற்று இருக்கும்‌ சகோதரிகளையும்‌ பணி யேற்கச்‌ சொல்லித்‌ திணிக்கிறது இன்றைய அணுகுமுறை. சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின்‌ நியாமான குறைகளைக்கூட காது கொடுத்துக்‌. கேட்க முடியாத அலட்சியப்‌ போக்கிலேயே இன்றைய தேர்தல்‌ பணி திணிக்கப்படுகிறது. என்கிறார்கள்‌. தேர்தல்‌ பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள்‌. பெரும்பாலானோருக்கு 70 கி.மீ, தூரத்திற்கும்‌ அதிகமான தொலைவில்‌ பணியாணை வழங்கப்‌ பட்டுள்ளது.

குறிப்பாக சிதம்பரம்‌, குமராட்சிப்‌’ பகுதி ஆசிரிய சகோதரிகள்‌ பலருக்கு திட்டக்‌ குடியில்‌ பணி வழங்கப்பட்டுள்ளது என்கிற தகவலையும்‌ கடலூர்‌ மாவட்ட ஆசிரியர்கள்‌ பகிர்கின்றனர்‌. தொடர்ந்து 13 மணி நேரம்‌ இடைவெளி ‘ன்றிப்‌ பணியாற்ற வேண்டிய சூழலை மனித உரிமை மீறலாகவே கருதுகிறேன்‌ என்கிறார்‌. ஆசிரியர்‌ ஒருவர்‌. குறிப்பாக, பெருந்தொற்றுக்‌ காலத்தில்‌ பணி செய்வது மிகக்‌ கடினம்‌.

100 கிலோ மீட்டர்‌ கடந்து தேர்தல்‌ பணி, இதற்குமேல்‌ அங்கிருந்து வாக்குச்சாவடிக்கு இன்னும்‌ எவ்வளவு தூரம்‌ பயணப்பட வேண்டி. இருக்குமோ? என்ற வினாவையும்‌ முன்வைக்‌கின்றனர்‌. கொடைக்கானலில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்‌ ஜான்‌ பெளலா, தனது பயிற்சி முதல்‌ முறை பனியிலும்‌ இரண்டாம்‌ வகுப்பு திண்டுக்கலிலும்‌ நடைபெற்றது. 37 கிலோ மீட்டர்‌ பேருந்து வசதியே இல்லாத பகுதி அது. இரு பயிற்சி வகுப்புகளுக்கும்‌ தனி வாகனம்‌. வைத்துச்‌ சென்று வர  பத்தாயிரம்‌ ரூபாய் செலவாகியுள்ளது…!

தேர்தல்‌ பணி எப்பொழுதும்போல்‌. மன அழுத்தமானது. இவ்வளவு தொழில்‌: நுட்பங்கள்‌ வளர்ந்த போதும்‌, இன்னும்‌ கூட தபால்‌ ஒட்டு நடைமுறை மாற்றப்படவேண்டும்‌.. தேர்தலுக்கு முன்பே ஈவிஎம்‌ மூலம்‌ வாக்க ளிக்கும்‌ முறை வரவேண்டும்‌ பணியில்‌: ஈடுபடும்‌ அரசு ஊழியர்களுக்கு என்கின்றனர்‌. தேர்தல்‌ மதிப்பூதியம்‌ என்ற பெயரில்‌ _ தரப்படும்‌ சொற்ப கனதியத்தைத்‌ தாண்டி பெரும்‌ செலவு செய்ய வேண்டியுள்ளது. தேர்தலுக்கு. முந்தைய இரண்டு நாள்‌ பயிறசிக்குச்‌ சென்று வருவது, ஒரு நாள்‌ தேர்தலுக்கு இரண்டு முழு நாட்கள்‌ பணியாற்றுவது என 4 (அ) 5 நாட்கள்‌ செய்யப்படும்‌ பணிக்கு மதிப்பூதியம்‌ மிகக்‌குறைவு என்ற கருத்தும்‌ முன்‌ வைக்கப்படுகிறது. அதாவது தலைமை அலுவலருக்கு 1,700 ரூபாய், மற்ற இரண்டாம் நிலை பணியில் உள்ளவர்களுக்கு 1,300 ரூபாய் தான்!

இந்த தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வாக்களிக்க, அவர்களின் வீடு தேடிச் சென்று ஓட்டு பதியும் முறையை கொண்டு வந்தனர். அதற்காக ஏழு பேர் கொண்ட – ஒரு வீடியோகிராபரையும் உள்ளடக்கிய குழு – தெருத் தெருவாக அலைந்து முதியவர்களை கண்டடைந்து ஓட்டுகள் பதிவு செய்தது! இப்படி பணியாற்றிய யாருக்கும் ஊதியமே நிர்ணயிக்கவும் இல்லை.கொடுக்கவும் இல்லை.

ஒவ்வொரு தேர்தலிலும்‌ தேர்தல்‌ பணியை ஆசிரியர்கள்‌ சரியாக நியாயமாக நேர்மையாகச்‌ செய்வதால்தான்‌ தேர்தல்‌ சரியாக நடக்கிறது என்கின்றனர்‌ ஆசிரியர்கள்‌.

வாக்குச்‌ சாவடிகள்‌ என்பவை வழக்கமான 60,000 தாம்! ஆனால், கொரோனா. பெருந்தொற்றின்‌ காரணமாக 90,000 என ஏறக்குறைய முப்பதாயிரம்‌ வாக்குச்‌ சாவடிகள்‌ அதிகரிக்கப்பட்டன.

ஆகவே பணி செய்வதற்காக நேர்மாறல்‌, விகிதம்தான்‌, சாவடிகளின்‌ எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வேலை செய்யும்‌ நபர்களின்‌ எண்ணிக்கையும்‌ அதிகரித்ததன்‌. விளைவே யாவரையும்‌ விட்டு வைக்காமல்‌ ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌ என எல்லோரை யும்‌ தேர்தல்‌ பணிக்கு ஈடுபடுத்த நிர்ப்பந்திக்கிறது தேர்தல்‌ ஆணையம்‌. இதில்‌ ஆண்‌, பெண்‌, நோயாளி, ஒய்வு பெறும்‌ வயது என்ற எந்தப்‌ பாகுபாடுமில்லை. ஏதாவது தனிப்பட்ட முறையில்‌ உடல்‌, குடும்பம்‌ சார்ந்த பிரச்சனைகள்‌ என்று உயரதிகாரிகளை அணுக முயன்றால்‌, கலெக்டர்‌ ஆர்டர்‌ என ஒரே பதில்‌,

‌ ஒரு சில ஆசிரியர்களுக்கு இரண்டு பணி ஆணைகள்‌ வந்திருப்பதும்‌ பயிற்சிகளில்‌ ஒன்றில்‌ கலந்து கொண்டவர்‌ ஒரே சமயத்தில்‌ இரு இடங்களில்‌ கலந்துகொள்ள முடியாத நிலையை எடுத்துக்‌ கூறக்‌ கால அவகாசமே தராமல்‌ தண்டனைகள்‌ அளிப்பதும்‌ குழப்பமான சூழலை உருவாக்கியுள்ளன..!

ஜனநாயகத்‌ திருவிழா எனும்‌ தேர்தல்‌ விழாவில்‌, தேரின்‌ வடம்பிடித்து நிலை சேர்க்கும்‌ முக்கியப்‌ பொறுப்பு ஆசிரியர்களுடையது என்பதால்‌ இதனை மகிழ்வுடனே – ஆனால்‌ நடைமுறைச்‌ சிக்கல்களையும்‌ தேர்தல்‌ கமிஷன்‌ வட்டாரங்கள்‌ புரிந்து கொண்டு – சற்றே இவர்களது பிரச்சனைகளுக்கும்‌ காது கொடுக்கலாம்‌.

விலங்குகளைப்‌ போல விரட்டி யடிக்கப்படும்‌ சூழல்‌ ஆசிரியர்களுக்கு உருவாகாமல்‌ பார்த்துக்‌ கொள்ளவேண்டும்‌. மேற்சொன்ன முரண்பாடுகளைக்‌ களைந்து சீர்படுத்திய தேர்தல்‌ பணிகளை முறையாக வழங்கிட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள குறைகளை ‌ பக்கங்கள் போதாது.

மாவட்ட ஆட்சியரின்‌ ஆணை என்ற பெயரில்‌ ஆசிரியர்களையும்‌ அரசு ஊழியர்களையும்‌ பயழுறுத்தாமல்‌ தேர்தல்‌: பணிகளை நல்லுறவுடன்‌ சுமூகமாக ஏற்க. அவர்களை அயத்தப்படுத்த வேண்டும்‌. மாபெரும்‌ ஜனநாயக நாட்டில்‌ எதிரில்‌ உள்ளோர்‌ கருத்துகளை ஏற்கும்‌ மனப்பக்குவமும்‌ நடைமுறையும்‌ கூடுதல்‌ தேவை, அதிகாரங்களை  வைத்து ஜெயிப்பது வெற்றி அல்ல, ஆகவே இனி வரும்‌ காலங்களில்‌ இந்தத்‌ தேர்தல்‌ குறித்த நடைமுறைப்‌ பணிகளில்‌ சீர்திருத்‌தங்களை எதிர்பார்க்க ஆவலாக உள்ளோம்‌. உணவு, போக்குவரத்து வசதி இல்லாமல் பெண் ஆசிரியர், அலுவலர்கள் கடும் அவதியடைந்தனர். ஏப்.6ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலைகளிலும் பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்றினர். இவர்களில் 70 சதவீதத்திற்கு மேல் பெண் ஆசிரியர்களாவர். ஏப்.5ல் மூன்றாம் கட்ட பயிற்சி நடந்த அன்று பயிற்சி நடந்த இடத்தில் இருந்து அவரவருக்கு பணி ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றனர்.

கூடுதலாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் ரிசர்வில் வைக்கப்பட்டு ஒவ்வொரு யூனியன் தலைமையிடத்திலும் அரசு அலுவலகங்கள், தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஏப்.5ம் தேதி பிற்பகலில் இருந்து இரவு வரை கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் பெண் ஆசிரியர், ஊழியர்கள் கடும் அவதியடைந்தனர்.

மேலும் தேர்தல் நாளில் இரவு 7மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் நேற்று அதிகாலை வரை எடுக்கப்பட்டது. இதனால் வாக்குச்சாவடியிலேயே இரவு முழுவதும் பெண் ஆசிரியர், அலுவலர்களும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் வீடுகளுக்கு திரும்ப போக்குவரத்து வசதி இல்லை. இதுபோல் ரிசர்வில் தங்க வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. அவர்கள் தங்கியிருந்த ஊர்களில் பெரும்பாலான ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட அவர்கள் கூறியதாவது: தேர்தல் அன்று இரவு முழுவதும் வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் அதிகாலை நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியாமல், போக்குவரத்து வசதி இல்லாமல் கடும் அவதியடைந்தோம். தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து என எந்த வசதியும் இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பெண் ஆசிரியர், பெண் அலுவலர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தடை செய்ய வேண்டும். இதனால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. இது போன்ற குழப்பத்தை தவிர்க்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றனர்.. தேர்தல் ஆணையத்தின் தொடர் பாராமுகத்தை  கண்டிக்கிறோம்.

எத்தனை கோரிக்கை மனுக்கள் எத்தனை சங்கங்களின் சந்திப்புகள் தேர்தல் ஆணையத்துடன் நடத்திய பின்பும் தேர்தல் நடத்தும் முனைப்பில் ஒரு விழுக்காட்டை கூட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கான அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்துவதில்லை.

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு வந்து போக முறையான வாகன வசதி, தங்குமிடம் , கழிவறை , குளியலறை ,  உணவு மற்றும் குறைந்த உழைப்பூதியம் என எதைக் குறித்தும் கவலைப்படாமல் தேர்தலை மட்டும் நடத்தி முடித்துவிட வேண்டும் என்ற தேர்தல் ஆணையம் நினைக்கக் கூடாது..

அடுத்து வரும் தேர்தல்களில் இது போன்ற அடிப்படை வசதிகள் முன்னமே உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுவோம் என்று அறிவிக்கும் நிலை உருவாகலாம்! இல்லையென்றால் தேர்தல் பணியை புறக்கணிக்கவும் தயங்க மாட்டார்கள்! தமிழகத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது’ என்கிற செய்திக்குப் பின்னால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் அசுரத்தனமான அர்ப்பணிப்பும் உழைப்பும் இருக்கிறது. இப்பணியை செய்து முடித்த அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time