கொரோனா தடுப்பூசிக்கு கே.வி.ஆனந்த் மற்றொரு பலியா..?

-சாவித்திரி கண்ணன்

இது கொரானா தடுப்பூசிக்கு எதிரான பதிவல்ல. அவரவர்கள் தங்கள் சொந்த பட்டறிவையும், பகுத்தறிவையும் சார்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்! ஆனால்,சில நிதர்சனங்களை புறம் தள்ளாதீர்கள் என சொல்வதற்காகவே இதை எழுதுகிறேன். கே.வி.ஆனந்த் மிக சமீபத்தில் தான் கொரானா தடுப்பூசி முதல் டோஸ் போட்டார்! அது போடும் வரை உற்சாகமாக இருந்தவர் போட்ட பிறகு உடல் நலன் குன்றியுள்ளார். இதற்கு முன்பில்லாத வகையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமமும், நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை சென்று சோதித்ததில் அவருக்கு கொரானா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ரத்த உறைதல் ஏற்பட்டதா..? எனத் தெரியவில்லை.

AEFI எனப்படும் சர்வதேச தடுப்பூசி கண்காணிப்பு கமிட்டியின் விதிகளின்படி தடுப்பூசி போட்டதிலிருந்து 28 நாட்களுக்குள் ஒருவருக்கு ஏற்படும் இன்னல்கள், உடல்மாற்றங்களை கணக்கில் கொள்ள வேண்டும்.பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்! அந்த வகையில் விவேக், கானாத்தூர் எஸ்.ஐ மகேந்திரன்,கே.வி.ஆனந்த் ஆகியோர் மரணங்களை பரிசீலியுங்கள்.

தடுப்பூசி போடும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, உங்களுக்கு தடுப்பூசி ஏற்றுக் கொள்ளுமா, அல்லது உங்கள் உடல் அதை ஏற்காத நிலையில் உள்ளதா..? என விசாரித்து அறிந்து முடிவு எடுங்கள்!

இன்றைக்கு ஏதோ சுண்டல் வாங்க கியூவில் நிற்பது போல நின்று மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்! பெரும்பாலான மருத்துவர்கள், தடுப்பூசி போடுபவர்களிடம் உங்களுக்கு ரத்த கொதிப்பு உள்ளதா? பிரஷர் எந்த நிலையில் உள்ளது. சர்க்கரை வியாதி உள்ளிட்ட மற்ற பிரச்சினைகள் உள்ளனவா..? மது அருந்தும் பழக்கம் உள்ளதா..? என ஒரளவேணும் விசாரிக்கலாமே!

நமது இந்திய மருத்துவ கழகம் இதை ஒரு பொது விதியாக்கலாமே! தடுப்பூசி ஒவ்வாமை யார்யாருக்கு ஏற்படுகிறது என்பது பற்றி திறந்த மனதோடு விவாதம் செய்ய முன்வாருங்கள்! அதற்கு ஒவ்வாமை ஏற்ப்பட்டவர்கள் புகார் கொடுப்பதற்கு வசதியாக ஒரு கம்பிளையண்ட் மையத்தை உருவாக்குங்கள்.அதற்கு நேரில் தான் வர வேண்டும் என்பதில்லை. ஆன்லைனிலேயே புகார் தர வசதி ஏற்படுத்துங்கள்..!

நம்ம நாட்டில் வருகிற கொரானாவானது 90 சதவிகிதம் பாதிப்பு ஏற்படுத்தாமல் மைல்டாக தான் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனமே கூறியுள்ளது! குறிப்பாக 15% மானவர்களுக்கே சிகிச்சை தேவைப்படுகிறது. அதிலும் மிகக் குறைவானவர்களையே கடுமையாக தாக்குகிறது! அதாவது பெரும்பாலானவர்களுக்கு மைல்டாக வந்து போகிற ஒரு நோயை அனைவருக்கும் கட்டாயப்படுத்தக் கூடாது! ஆனால், இன்றைக்கு என்ன நடக்கிறது. மே-2 ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வருபவர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்கிறது தேர்தல் ஆணையம்.

நமது மத்திய அரசாங்கத்தின் சுகாதாரத்துறை கோவிட் சிகிச்சைகள் குறித்து சமீபத்தில்  first covid-19 management guidelines ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வெளிப்பட்டுள்ள அலட்சியங்களை பட்டியலிட்டு அனுப் அகர்வால் என்ற மூத்த மருத்துவர் ஆங்கில இந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

காட்சி மொழியின் கவிஞன் கே.வி.ஆனந்த்

அதன் சாரம்சம் என்னவென்றால், நமது சுகாதாரத்துறை கோவிட் நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை தர வேண்டும் என வழிகாட்டிய அம்சங்களும்,பரிந்துரைத்த மாத்திரைகளும், கொரானாவிற்கு வேலைக்காவாது என புறம் தள்ளப்பட்டவையாக உள்ளது என்கிறார். உதராணமாக ஹைடாராகிசிக்ளோரோக்வின் போன்ற மாத்திரையை பரிந்துரைத்துள்ளது.இதை எந்த நாட்டிலும்,எந்த மருத்துவரும் கொரோனா நோயாளிக்கு தருவதில்லை. காரணம் கொரானாவிற்கு எந்த மருந்து தருவது என தெளிவற்று இருந்த ஒரு காலகட்டத்தில் அது பரிந்துரைக்கப்பட்டு, அதில் பலனில்லை என புறம் தள்ளப்பட்டுவிட்டது. இது ஒரு சாம்பிள் தான். இந்த மாதிரி ivarmectin என்ற உலக சுகாதார நிறுவனத்தால் வேண்டாம் என கூறப்பட்ட ஏகப்பட்ட காலாவதி விவகாரங்களை கைட்லைனாக பரிந்துரைக்கிறது நமது சுகாதாரத்துறை என்றால்.., நம்ம நாட்டு மக்களின் நிலை என்னாவது..? எவ்வளவு சீரியசான ஒரு பெருந்தொற்று சமயத்தில் நமது சுகாதாரதுறை மேலிடம் எவ்வளவு தூரத்திற்கு தங்களை அப்டேட் செய்து வருகிறார்கள் என்பதற்கு இதுவே சிறிய உதாரணம்.

Budesonide என்ற ஆஸ்த்துமாவிற்கான மருந்தையும் கொரானாவிற்கு பரிந்துரைத்துள்ளது சுகாதாரத்துறை.ஆனால், இது ரொம்ப சீரியஸ் கண்டிஷனில் மூச்சுவிட சிரம்மப்படுவர்களுக்கு முயற்சி செய்து பார்க்கப்படுகிறது. சாதாரணமானவர்களுக்கு தேவையில்லை. இப்படி பரிந்துரைப்பதால் இதை வாங்கி பலர் ஸ்டாக் செய்தால் உண்மையிலேயே தேவைப்படுவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுமல்லவா? என்கிறார் அனுஅகர்வால். இதில் சகிக்கமுடியாத ஒரு விவகாரம் உலக சுகாதர நிறுவனம் பயனற்றது எனக் கூறியுள்ள ரெம்டெசிவர் மாத்திரை இங்கே டிமாண்ட் லெவலுக்கு ஆகிவிட்டது.

பிளாஸ்மா சிகிச்சையும் நோ யூஸ் என நிருபணமாகிவிட்டது. அதையும் நம்ம அரசு பரிந்துரைக்கிறது! இந்த லட்சணத்தில் சச்சின் டெண்டுல்கரை வைத்து பிளாஷ்மா தானம் செய்யச் சொல்லி பிரச்சாரம் வேறு!

இதில் கொடுமை என்னவென்றால்,இந்த கைட்லைனைத் தான் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டுமாம். ஆனால், நமது அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சொந்த அனுபவம் சார்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள்! அதனால் தான் 98.5 சதமானவர்கள் பிழைத்துவிடுகிறார்கள்.

மற்றொரு எம்.பி.பி.எஸ் மருத்துவர் ஒருவர் கொரானா தடுப்பூசியால் ரத்த உறைவு வருவதால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது என பேசியுள்ளார்.

ICMR எனப்படும் நமது இந்திய மருத்துவ கழகம் இது பற்றி வாய் திறந்தால் நல்லது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time