கைகோர்க்க வாருங்கள்!

-சாவித்திரி கண்ணன்

சிறு தீப்பொறியாலும் பெருங்காட்டை அழிக்க முடியும் என்பதற்கேற்ப சிற்றிதழ் என்றாலும், அறச் சீற்றத்தின் வீச்சு காரணமாக அறம் இணைய இதழின் வெளிப்பாடுகள் பரந்துபட்ட மக்களிடமும், கருத்து சென்று சேர வேண்டிய உரிய தளங்களிலும் சென்று சேர்ந்த வண்ணம் தான் உள்ளது!

தேர்தல் காலங்களில் நாம் எழுதிய கட்டுரைகள் பிரபல பத்திரிகைகளிலும்,சிறு பத்திரிகைகளிலும் எடுத்து பிரசுரம் செய்யப்பட்டன. வாட்ஸ் அப்களில் பெரிய அளவு வலம் வந்ததன. மொத்தத்தில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின. அறம் தன் வாசகர்களோடு இணைந்து அதன் சமூகக் கடமையை சிறப்பாக செய்தது! அவ்வளவே!

வாசக நண்பர்களே.., அறம் வாசகர்கள் பலத்தால் நின்றுவிட முடியும் என்ற அழுத்தமான நம்பிக்கையில் தான் நடந்து கொண்டு வருகிறது. ஆனால், வெகு சிலரே இதற்கு சந்தா செலுத்த முன் வந்திருக்கிறீர்கள்! சமூக மனசாட்சி மீது நம்பிக்கை வைத்து மாதம் ஒரு முறை நாம் வைக்கும் வேண்டுகோளையடுத்து ஒரு எட்டு அல்லது பத்து பேர் அந்த நேரத்திற்கான ஒரு ரெஸ்பான்ஸ் செய்கின்றதை தவிர, முன்னேற்றம் நடந்துவிடுவதில்லை.

அறத்திற்கான சந்தாவை அறம் வழியாக கேட்பதைவிடுத்து, தனிப்பட்ட முறையில் தொடர்பெடுத்து நாம் யாரிடமும் கேட்பதில்லை. அறம் தழைப்பதற்கான சமூகக் கடமையாக எண்ணி, தங்கள் பங்களிப்பை தந்து கொண்டிருப்பவர்களுக்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தரமுடியாமல் நிறுத்திவிட்டாலும், தந்த வரைக்குமானதற்கு நெஞ்சில் நிறுத்தி நன்றி பாராட்டி என் பயணத்தை தொடர வேண்டிய நிலையில் தான் உள்ளேன்! ஆகவே, தொடர்ந்து அதரவு தர வேண்டுகிறேன்.

ஒரு நல்ல இதழியலை காப்பாற்ற வேண்டிய கடமை அதை வாசிப்பவர்களுக்கு உள்ளது. இது வரை எந்த சந்தாவும் செலுத்தாதவர்கள் – வெறுமனே படித்து வாழ்த்தி கடந்து போகாமல் கை கொடுக்க முன் வாருங்கள்! வெறும் பார்வையாளர்களாகவே மக்கள் திரளில் பெரும் பான்மையினர் இருக்கும் வரை எந்த நல்ல முயற்சியும் நிலைபெற முடியாது! எனவே, அவரவர் சக்திக்கு உட்பட்ட வகையில் பங்களிப்பதோடு உங்கள் நண்பர்கள் ஒரு சிலரையேனும் அறத்திற்கு சந்தா செலுத்த தூண்டுங்கள்!

அன்புடன்

சாவித்திரி கண்ணன்

ஆசிரியர் – அறம்

எப்படி நிதி தரலாம் என்பதற்கு கீழ் உள்ள வழிமுறைகளில் ஒன்றை தெரிவு செய்யுங்கள்.

1.Online Banking – https://aramonline.in/support-aram/   

கூகுள் பே9444427351

வங்கி மூலம் செலுத்த விரும்பினால்;

Bank Name: STATE BANK OF INDIA

Bank Account No: 39713109068

Account Name:ARAM ONLINE

Branch: SHASTHRI NAGAR,ADYAR, CHENNAI

IFSC code:SBIN0007106

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time