கொரோனா இரண்டாம் அலைக்கும், தடுப்பூசிக்கும் தொடர்புண்டா..?

-சாவித்திரி கண்ணன்

எப்போது தடுப்பூசி ஒரு பேரியக்கமாக தொடங்கப்பட்டதோ ..அப்போது முதல் கொரோனா இரண்டாம் அலையும் அதற்கேற்ப வீரியம் கொண்டு வருகிறது என்றால், தடுப்பூசிக்கும், கொரோனா பரவலுக்கும் என்ன தொடர்பு…?

கட்டுப்படுத்த முடியாத கொரோனா பெருக்கத்திற்கு என்ன காரணம்..?

இன்றைக்கு நம் அரசுகள் நோய் தீர்க்கவென்று நீர்பந்திக்கும் அணுகுமுறைகளே காரணம்!

இந்த மருந்தை தான் உட்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசியால் தான் நோய் தொற்றை தவிர்க்க முடியும் என அரசாங்கம் நமக்கு அடையாளம் காட்டி நிர்பந்திப்பதன் வழியாகத் தான் நோய் வீரியம் அடைகிறது என்ற குற்றச்சாட்டு பல தரப்பிலும் இருந்து இன்று வர ஆரம்பித்துள்ளது!

இந்தியாவில் தடுப்பூசி அறிமுகமானது தொடங்கித் தான் கொரோனா தொற்றும் அதிகரித்தது என்கிறார் prof.shamika ravi. இவங்க கொரோனா தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு எக்ஸ்பர்ட்! அடிப்படையில் ஒரு எக்னாமிஸ்ட் ஆன ஷாமிகா ரவி பிரதமர் மோடியில் பொருளாதார ஆலோசகராக இருந்தவங்க. இவங்களோட ஒரு ஆய்வுப்படி, ’’கொரோனா தடுப்பூசிகளை போடும் வேகத்திற்கேற்ப இந்திய சமூகத்தில் கொரானா தொற்றின் வேகமும் சமச்சீராக வளர்கிறது என்கிறார். தடுப்பூசியை குறைக்கும் போது கொரானா பரவலின் வேகமும் குறைவதாக உள்ளதே… இதை விஞ்ஞானிகள் விளக்க வேண்டும்’’ என்கிறார்!

உலகத்திலேயே அதிக தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டது செசல்ஸ் என்ற ஒரு சின்னஞ் சிறிய தீவு நாடாகும். ஆனால், அங்கு தான் கொரானா பரவல் அதிகமாகியுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

நம் இந்திய அளவிலான ஒரு சின்ன புரிதலுக்கு வர வேண்டும் என்றால், தடுப்பூசிகளை அதிகம் எடுத்துக் கொண்ட கேரளா, கர்நாடகா, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் தான் கொரானா பரவலும் அதிகரித்துள்ளது என்பதையும் டாக்டர் மதிவாணன் போன்ற சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். அதே சமயம் தடுப்பூசிகளை அங்கீகரிகாத – மரபு மருத்துவத்தை மட்டுமே கடைபிடிக்கும் ஆப்ரிக்காவில் எந்த கொரானா அலையும் மீண்டும் சென்று தாக்கவில்லை என்று மதிவாணன் சுட்டிக் காட்டுகிறார்.

மீண்டும் ,மீண்டும் கொரானா தடுப்பூசி போட்டவர்கள் இறப்பது தொடர்கதையாக உள்ளது! அரசு மருத்துவமனை செவிலியரான சாமுண்டீஸ்வரி இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில் கொரானா வந்து இறந்துள்ளார். அதே போல ராசிபுரம் அருகில் உள்ள மங்களபுரம் தலைமை காவலர் இரண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில் கொரானாவிற்கு பலியாகியுள்ளார்! இது போனாற தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இவை குறித்து எந்த விசாரணையுமின்றி, நாம் முரட்டுத்தனமாக தடுப்பூசியே தீர்வு என ஓடிக் கொண்டிருக்கிறோம்! இந்த நிலையில் நமது கோவேக்சினை பிரேசில் நாடு இது கொரானா தொற்றுக்கே வழி வகுக்கும் எனக் கூறி புறக்கணித்ததை நாம் நினைவு கூற வேண்டியதாகிறது!

Raman Gnagekhadkar என்ற ICMR ல் பணியாற்றிய விஞ்ஞானி இந்தியாவில் மித மிஞ்சிய ரெம்டெசிவர் பயன்பாடும், பிளாஷ்மா சிகிச்சையும் தான் உருமாறிய கொரானா வலுப்பட்டதற்கு காரணமாகும் என்கிறார். ஆதாரபூர்வமற்ற சிகிச்சைகள் வலிந்து திணிக்கப்பட்டு வருகிறது என்கிறார் அவர்!

நாம் குருட்டுத்தனமாக அலோபதியை ஆதரிக்கத் தொடங்கியதன் விளைவாக நமது மெடிக்கல் ஷாப்களில் இருக்கும் மருந்து,மாத்திரைகளில் பெரும்பாலானவை பயனற்றவைகளாக குவிக்கப்பட்டுள்ளன! இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தற்போது நமது மருந்து கடைகளில் புழக்கத்தில் இருப்பவற்றில் 90% பயனற்றவை தவறானவை என பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார், பிரபல மருத்துவரான ஆனந்த் பட்கே!

ஒரு காலத்தில் ஆகா, ஓகோ என்று புகழப்பட்டு, அதிக புழக்கத்தில் இருந்த மருந்து, மாத்திரைகள் பிறிதொரு காலத்தில் தடை செய்யப்பட்டவையாகவும், தீமையானது என்று சொல்லி நிராகரிக்கப்பட்டும் உள்ளன நமது அலோபதி மருத்துவத்தில் நிறைய உதாரணங்கள் உள்ளன!

இந்த ரெம்டெசிவர், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவை தவறானவை, தவிர்க்க வேண்டியவை என இன்னும் ஒரு சில ஆண்டுகளிலேயே கூட அலோபதி மருத்துவர்களாலும், அரசாங்கத்தாலும் அறிவிக்கப்படலாம்!அதற்குள் இவை என்னென்ன விளவுகளை ஏற்படுத்தி இருக்குமோ.. !

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time