ஊரடங்கும், தடுப்பூசியும் தீர்வல்ல! பிரச்சினைகளுக்கே அடிகோலும்!

-சாவித்திரி கண்ணன்

எல்லோரையும் சட்டம் போட்டு முடக்கிவிடறாங்க..ஆனா, கொரோனாவை முடக்க வழி தெரியல!

தீர்வு என்ன என்று தெரியாமல் குருட்டாம் போக்கில் ஏதாவது செய்தாக வேண்டுமே என நினைத்து செய்யப்படுவது தான் ஊரடங்கு!

‘’இதுவும் தீர்வாகுமா பார்ப்போமே..’’ என்ற நம்பிக்கையே தடுப்பூசி..!

மொத்ததில் சிக்கலை அதிகப்படுத்துகிறோம்!

தீர்வை கண்டடைய முடியவில்லை. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் சக்திக்கு மீறி வேலை பார்த்து சோர்வுற்ற வண்ணம் உள்ளனர்! புதிதாக பொறுப்பேற்ற அரசாங்க தலைமையும் சரி, அனைத்து மட்டத்தில் இருப்பவர்களும் சரி பம்பரமாக சுற்றிச் சுழன்று பணியாற்றுகின்றனர்!

கொரானா வைரஸ் எப்படி தாக்குகிறது. அது எங்கிருந்து வருகிறது! எதை தவிர்ப்பதன் மூலம் அதை தவிர்க்கலாம்… யாருக்கும் புரியவில்லை!

பாதிப்பு தரும் ஒரு கிறுமியை அழிக்க முயலாமல் பாதிக்கக் கூடிய மனிதனைத் தான் மேலும் இம்சிக்கிறார்கள்!

அந்த கிருமி எப்படி தோன்றுகிறது..? எங்கிருந்து வருகிறது அதை உருவாகும் போதே அல்லது தோன்றுவதற்கான சாத்தியக் கூறின் ஆரம்பத்திலேயே அழிக்க முடியாதா..? இந்தக் கேள்விகள் எதற்கும் விடையில்லை

கண்ணுக்குத் தெரியாத எதிரியை அழிக்க கத்தியை சுழற்றிப் பார்த்து அழைக்க முடியாத கோபத்தில் கண்ணுக்கு தெரிந்த மனிதனை தண்டித்துவிடுகிறார்கள்! கட்டுப்படுத்த முடியாத அதன் பெருக்கத்தால் ஏற்ப்பட்ட தோல்வியை மறைக்க மனிதனுக்கு கட்டுபாடுகள் போடுகின்றனர்!

ஊரடங்கு தீர்வல்ல என்று நான் மட்டுமே சொல்லவில்லை. நமது முதல்வருமே அதை சொல்லிக் கொண்டுள்ளார். தில்லி முதல்வர் கேஜ்ரிவாலுமே கூறியுள்ளார்! டாக்டர். கிருஷ்ணசாமி உள்ளிட்ட மருத்துவர்களும், பொருளாதார வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர்!

ஊரடங்கு தான் மக்களை நோயாளியாக்கும். உடலுக்கு அசைவு கொடுக்காமல் முடக்கி வைப்பதில் நோய்களே தோன்றும். உள்ளத்தையும் ஊனமாக்கும். எது ஒன்றால் நமக்கு தீமை என தன் அனுபவத்தால் மனிதன் உணர்கிறானோ..,அதிலிருந்து அவனே விலகிக் கொள்வான்! அவன் அனுபவத்தில் ஏற்க முடியாத ஒன்றை நீங்கள் எவ்வளவு தான் தினித்தாலும் அவன் முழுமையாக ஏற்பதில்லை!

ஏழை,எளிய, அன்றாட கூலி உழைப்பாளர் தொடங்கி அனைத்து நிலையில் உள்ளவர்களையும் பொருளாதார சிக்கலில் தள்ளும். ஏற்கனவே கொரானாவில் வேலை இழந்தவர்கள், வாழ்வாதரங்களை இழந்தவர்களை மேன்மேலும் வதைக்கும்! கட்டுபாடுகள் போடும் போது தான் நெருக்கடி உருவாகிறது!

நோய் பரவலை சர்வதேசியமாக்கியவர்களே நோய்க்கான தீர்வையும் சர்வதேசியமாக்குகிறார்கள்! நம்மகிட்ட மருந்து இருக்கு. தடுத்து, தற்காத்துக் கொள்ளும் வழிமுறை இருக்கு என்றால், அவர்களுக்கு பதற்றம் வந்துவிடுகிறது.

அந்தக் காலத்தில் நமக்கு அம்மை போட்ட போது, எப்படி நாம் நம் சொந்த – பாரம்பரிய முறையிலான – வீட்டு வைத்தியத்தின் மூலம் மீண்டோம். டாக்டர்கள் கூட தலையிடமாட்டார்கள். இதை நினைவுபடுத்தியுள்ளார் எழுத்தாளர் நண்பர் க.சு.வேலாயுதம்.

பறவைகள் பயந்து கூட்டிலேயே முடங்கவில்லை! பூனைகளும், நாய்களும், மாடுகளும், கோழிகளும் எந்த பயமும் இன்றி வெட்ட வெளியில் உலவுகின்றன. மனிதன் சமூக விலங்காகி விட்டபடியால் சமூகமும், அரசும் சதா அவனை கட்டுப்படுத்தி, அதன் மூலம் தங்கள் ஆளுமையை நிலை நாட்டிக் கொள்ளத் துடிக்கின்றன!

அவர்கள் இது தான் தீர்வென்றால், அதற்கு நாம் உடன்பட வலியுறுத்துகிறார்கள்! அவர்கள் தாம் ரெம்டெசிவரை நல்ல மருந்தென்றார்கள்! அதற்காக மக்கள் அடித்து, பிடித்து கியூவில் காத்திருந்து வாங்கினார்கள். இன்று அது சரியான மருந்தல்ல, என்கிறார்கள்! இறந்தவர்களில் எத்தனை பேர் ரெம்டெசிவர் பாதிப்பால் இறந்திருப்பார்களோ…!

ஒரு நோய் உடலில் இருக்கும் போதே அதற்கு தடுப்பூசி போடக் கூடாது என்பது பொது விதியாகும். ஆனால்,பலருக்கு உடலில் கொரானா சாதரணமாக வீரியமில்லாமல் மறைந்திருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால், அந்த கொரானா வீரியம் கொண்டுவிடும்! அவர்கள் கொரானாவை பரப்புபவர்கள் ஆகிவிடுவார்கள். அவசர,அவசரமாக திணிக்கப்படும் தடுப்பூசி இந்த விளைவைத் தான் ஏற்படுத்திக் கொண்டுள்ளது!

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வைரலாஜிஸ்ட் டாக்டர் லுக் மாண்டோக்னிர் அவர்களின் கூற்றை நமது டாக்டர். Mathi Vanan  மேற்கோள் காட்டியுள்ளார்!

கொரானா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரானாவை உருவாக்குகிறார்கள். பெருந்தொற்று காலத்தில் கொரானா தடுப்பூசி போடுவது நினைத்தும் பார்க்க முடியாத தவறு.

 

கொரானா தடுப்பூசியை பெருமளவு மக்களுக்கு போடுவது அறிவியல் தவறு மட்டுமல்ல, மருத்துவ தவறுமாகும்.

கொரானா தடுப்பூசி போட்டவர்கள் உடலில் வைரஸ் உயிர் வாழ தன்னை மாற்றி கொள்கிறது. அது தீவிர கொரானா வைரசாக மாறுகிறது. பிறருக்கு பரவுகிறது.

கூடுதலாக கொரானா தடுப்பூசி உருவாக்கிய ஆண்டிபாடி வைரசை நன்றாக பிடித்து கொண்டு, உடலுக்குள் செலுத்தி தீவிர தாக்குதலையும் நடத்துகிறது.

உலகெங்கும் கவனித்து விட்டேன். கொரானா தடுப்பூசி போட துவங்கியபின், உருமாறிய தீவிர கொரானா வருவதும், பெருந்தொற்று அதிகமாவதும், மரணங்கள் கூடுவதும் நடக்கிறது. எனது ஆய்வகத்திலும் கொரானா தடுப்பூசி போட்டவர்கள் உருமாறிய கொரானாவை உருவாக்குவதை கவனிக்கிறேன்.

நோயியல் வல்லுநர்கள் தெரிந்தும் அமைதி காக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இந்த தவறுகள் பதிவாகும்.என டாக்டர் லுக் மாண்டோக்னிர் தெரிவித்துள்ளார்!

ஆகவே, நல்லது செய்கிறோம் என்ற நினைப்பில், அவசரப்பட்டு அனைவரையும் தடுப்பூசிக்கு நிர்பந்தித்து புதுப் புது பிரச்சினைகளுக்கு வழி வகுக்காமல், நடந்து கொண்டிருப்பதை – யதார்த்ததை – எப்படி எதிர் கொள்வது என்று நிதானமாக பார்க்கும் போது தான் தீர்வு கிடைக்கும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time