இந்தியாவை 100 பகுதிகளாகப் பிரித்து, அவையாவும் டில்லியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வால்கர் வலியுறுத்தி வந்தார்! மாநில அரசுகளே இருக்கக்கூடாது என சொல்லி வந்தார். ஆர் எஸ் எஸ்ஸும், அதன் அரசியல் முகமான பாஜகவும் கூட்டாட்சி முறைக்கும், மொழிவழி மாநிலங்களுக்கும் எதிரானவை !
மாநில கலாச்சார ,மொழி அடையாளங்களை, அவற்றின் தனித்தன்மைகளை அழித்து ” ஒரே நாடு, ஒரே மக்கள்” என கோஷமிட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க வேண்டும் என்பது தான் அவர்கள் நோக்கம் !
தமிழ்நாட்டை இரண்டாக அல்லது மூன்றாக பிரிக்க வேண்டும் ! அதில் முதல் கட்டமாக கொங்கு நாடு பகுதியை யூனியன் பிரதேசமாக ஆக்க வேண்டும் என பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்களின் ஒரு குரலை தினமலர் நாளிதழ் மூலமாக ஒலிக்க வைத்திருக்கிறார்கள் !
அமையப் போகும் கொங்குநாடு ஒன்றியப் பகுதியில் 9 மாவட்டங்களும்,10 நாடாளுமன்ற தொகுதிகளும் இருக்குமாம் !
யாரும் இதுவரை கேட்காத ஒரு கோரிக்கையை , அதுவும் உரிமைகள் இல்லாததொரு யூனியன் பிரதேசத்தை, தமிழகத்தை பிரித்து உருவாக்க பாஜக தலைமை சதித்திட்டம் போடுகிறது !- ஆர்.எஸ்.எஸ் திட்டப்படி!
தமிழ்நாட்டு அரசை மறைமுகமாக மிரட்டிப் பார்க்கும் நாலாந்தர இழிநிலை போக்கு இது !
மற்றைய மாநிலங்களை எல்லாம் விட ஒன்றிய அரசின் அதிகாரச் சுரண்டலுக்கு எதிராக, தமிழ் மண்ணிலிருந்து எதிர்குரல் எழும்பி வருவது பாஜக தலைமைக்கு எரிச்சலை ஊட்டுகிறது !
ஜி எஸ் டி வரி வசூலில் பல மாநிலங்களை வஞ்சிப்பது, ஹைட்ரோகார்பன்,பெட்ரோல் கிணறுகளை அமைப்பதை எதிர்ப்பது, அணு ஆலைகளுக்கு எதிர்ப்பு, இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பது, “நீட்” தேர்வை எதிர்ப்பது, மாநில உரிமைகளை அத்துமீறி அபகரிப்பது போன்றவைக்கு எதிராக தமிழ்நாடு அரசும், மக்களும் எதிர்ப்பதற்காக வஞ்சம் தீர்க்க, வஞ்சகமாக போடும் திட்டமே ” கொங்கு நாடு பிரிவினை மிரட்டல் !
இந்தியாவில் மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப் பட வேண்டும் ! அப்போது தான் பாமரனின் மொழி அம் மாநிலத்தின் ஆட்சி மொழியாகும் என கனவு கண்டார் காந்திஜி ! அதை செயலாக்க 1954 ல் பஸல் அலி, ஹச்.என்.குன்ஸ்ரூ, கே.எம்.பணிக்கர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது !
அதன் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் எல்லைக்கோடுகள் புதிதாகப் போடப்பட்டன.
அப்போது மார்ஷல் நேசமணி அவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த நாஞ்சில் நாட்டைப் பிரித்து தமிழ்நாட்டோடு சேர்க்க வீரப்போர் நிகழ்த்தினார் ( அன்று ராமசுப்பு அய்யரின் தினமலர் நாளிதழ் நற்பணியாற்றியது! ஆனால் அது தரம் கெட்டு, தறிகெட்டு கீழான நிலைக்கு தாழ்ந்த நிலைக்கு சென்று விட்டது)
கூட்டாட்சி வேண்டாத ஒற்றையாட்சி!
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம் ! உத்ராகண்ட் பிரிந்தும் கூட உ.பி.யில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 80.
அங்கிருந்து தான் நேருஜி, இந்திரா காந்தி, சாஸ்திரி, ராஜீவ்காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், வாஜ்பாயி மற்றும் இன்றைய பிரதமர் மோடி உட்பட 8 பிரதம மந்திரிகள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் .
அந்த மாநிலம் 6 பிரதான பகுதிகளைக் கொண்டது ! 20 கோடி மக்கள் தொகையைக் கொண்டது !.
(பிரிட்டன்,பிரான்ஸ்,ஜெர்மனி — ஆகிய மூன்று நாடுகளின் மக்கள் தொகைக்கு சமமானது)
உ.பி.மிகப்பெரிய மாநிலமாக இருப்பதால் முன்னேற்றமின்றி, வறியவர்கள் அதிகம் வாழும் பின் தங்கிய மாநிலமாகவே நீடிக்கிறது! அது பல பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பது பல்லாண்டுகளாக இருந்து வரும் கோரிக்கை!
மாயாவதி உ.பி.யின் முதலமைச்சராக இருந்த போது 2000- ஆம் ஆண்டு உ.பி.யின் விதான் சபா (சட்டமன்றம்) பாஹல்கண்ட்,ரோஹில்கண்ட்,புந்தல்கண்ட்,பூர்வாஞ்சல் என நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அனைத்து அரசுகளும் கிடப்பில் போட்டுவிட்டன !
பஸ்சிம் பிரதேஷ் வேண்டும் ! 22 மாவட்டங்களை கொண்டது. 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் உ.பி.யில் எழுந்த கோரிக்கை அப்படியே இருக்கிறது!
அவத் பிரதேஷ் வேண்டும் ! 14 மாவட்டங்கள் உள்ளன. 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டது. 7 கோடி மக்கள் உள்ளனர் !
பூர்வாஞ்சல் 32 மாவட்டங்களை கொண்டுள்ளது. 30 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்டது. கோராக்பூரை தலை நகராக்கி தனி மாநிலம் வேண்டும் என்கிறார்கள்.
புந்தல்கண்டில் ஏழு மாவட்டங்கள் உள்ளன! இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களை கொண்டுள்ளது. அது தனிமாநிலமாக வேண்டும் என்கிறார்கள்!
Also read
இது போன்ற அங்குள்ள மக்களின் சுமார் 60 ஆண்டுகால கோரிக்கை மதிக்கப்படவே இல்லை ஆனால், எப்போதும், எவராலும் எழுப்பப்படாத கொங்கு மண்டலம் தனி ஆட்சிப் பகுதியாக ஆக வேண்டும் என்பது எத்தகைய கீழ்த்தரமான வாதம்!
80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் உத்தரபிரதேசத்தை நான்காகப் பிரிக்காது, 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் கொங்கு நாடு தனி ஆட்சிப் பகுதியாக்கப்பட வேண்டும் என்பது கடைந்தெடுத்த அரசியல் கயமை !
கட்டுரையாளர்; பசுபதி தனராஜ்
எழுத்தாளர்,
வழக்கறிஞர்,
முது பெரும் காங்கிரஸ்காரர்.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்.
திரு. பசுபதி ராஜ் அவர்களின் கருத்துரை சரியான நேரத்தில் வந்துள்ள சரியான நிலைபாடு. தமிழ்நாட்டுக்கு எதிரான ஆர்.எஸ்.ஏஸ்–பாஜக-வின் தரந்தாழ்ந்த நான்காம் தர நிலைபாடு என்பதும் மிகமிகச் சரியானதே! போட்டுப்பார்க்கும் தினமலரின் சூது நிச்சயம் மண்ணைக் கவ்வும். 2024தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வரக் கூடாது!
திருவாளர் சாவித்திரி கண்ணன் அவர்களே திருவாளர் நல்லக்கண்ணு அவர்கள் மொழிவழி மாநில பிரிவினையை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார் . அதை படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பதிய விடவும். கொங்கு நாடு என மத்திய அரசு அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தாங்கள் அப்படித்தான் பிரிக்க போகிறார்கள் என்ற கற்பனையின் அடிப்படையில் பதிய விடவேண்டாம். தவறான நோக்கத்தின் அடிப்படையில் எழுதுவது தான் ஊடக தர்மாம? கிடைக்கும் சந்தில் சிந்து பாட வேண்டாம். ஆர்.எஸ்.எஸ். இதில் எங்கே வந்தது. 1947-ல் நாடு பிளவு பட்ட போது, ஆர.எஸ்.எஸ். என்ன சொன்னது என்பதை தற்போது விவாதிக்க முடியுமா ஒரே நாடு ஒரே மக்கள் என கூறுவது தவறு என்றால், மகாகவி பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என எவ்வாறு குறிப்பிட்டார் என்பதையும் விளக்க வேண்டும்
#சர்வசக்திஇந்தியா சமத்துவ மக்கள் பிரதிநிதித்துவ குடியரசு:
நாட்டில் நிலவும் பிரச்னை பலவற்றுக்கு தீர்வாக சிறு முயற்சி, முன்மொழிவு:
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒன்று படாவிட்டால் அனைவருக்கும் தாழ்வே!”
“சிறுதுளி பல சேர்ந்தால்தான் பெருவெள்ளம் சிறுமை படுத்தினால் பலமில்லை”
மக்களவை மாநிலங்களவை இணைந்த பாராளுமன்ற ஒன்றிய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற ஊரகம் நகரம் பாகுபாடு கொண்ட உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட அரசியலமைப்பு.
ஒருங்கிணைந்த
ஐயுயர்நிலை மக்கள் மன்றம் & செயலக அமைப்பு:
INTEGRATED
5-TIER HIERARCHICAL COUNCILS OF PEOPLE & SECRETARIATE SYSTEM:
PRIME COUNCIL OF PEOPLE (Consisting a group of words representatives)
முதன்மை மக்கள் மன்றம்,(பகுதிகளின் பிரதிநிதிகளை கொண்டது)
BLOCK COUNCIL OF PEOPLE (Union of Prime Councils of People)
வட்ட மக்கள் மன்றம், (முதன்மை மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
DISTRICT COUNCIL OF PEOPLE (Union of Block Councils of People)
மாவட்ட மக்கள் மன்றம் (வட்ட மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
STATE COUNCIL OF PEOPLE (Union of District Councils of People) மாநில மக்கள் மன்றம், (மாவட்ட மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
SUPREME COUNCIL OF PEOPLE INDIA (Union of Skate Councils of People). இந்திய உச்ச மக்கள் மன்றம். (மாநில மக்கள்
மன்றங்கள் ஒன்றியம்.)
மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்புக்கு மாற்றாக பரவலாக்கப்பட்ட பொறுப்பும் கடமையும், உரிமையும் கொண்ட அமைப்பு முறை.
முதன்மை கடமை, பொறுப்பு, உரிமை கொண்ட முதன்மை மக்கள் மன்றங்கள் அமைப்பு.
அந்தந்த பகுதி தொகுதி அளவிலான கடமை பொறுப்பு கடமை, பொறுப்பு, உரிமை வழங்கப்பட்ட உயர்நிலை அமைப்பு முறை.
ஒரு குடியுரிமையாளருக்கு, ஒரு பகுதிக்கு ஒரு பிரதிநிதி என்ற அமைப்பு.
மக்கள் மன்றம் முதல் மாநில மக்கள் மன்ற வரையிலான பகுதி தொகுதி அனைத்தும் சம பரப்பளவு கொண்ட அமைப்பு.
ஒரு பகுதி பிரதிநிதி உச்சமன்ற பெருந்தலைவர் ஆகும் வாய்ப்பு முறை.