மக்கள் பாதை பேரியக்கத்தின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்…

-தங்கவேலு

உ.சகாயம் ஐ.ஏ.எஸை வழிகாட்டியாகக் கொண்டும், நாகல்சாமி. ஐ.ஏ.எஸ்சை (ஓய்வு) தலைவராகக் கொண்டும் செயல்படும்  மக்கள் பாதை பேரியக்கம் செப்டம்பர் 14 தொடங்கி   முதல் நீட்டுக்கு எதிராக தொடர் உண்ணாவிரப் போராட்டத்தை சென்னை சின்மயா நகரிலுள்ள அதன்  தலைமை அலுவலகத்தில் முன்னெடுத்துள்ளது. சுமார் 40 பேருடன் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பல்வேறு மாவாட்டங்களில் இருந்து நிர்வாகிகள்  வந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து கலந்து கொண்டனர்!

முன்னதாக நீட் தேர்வுக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்த மாணவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து திருச்சியில் நீட்டுக்கு எதிரான ஒரு கண்டண ஆர்பாட்டம் நடத்தவும் முடிவாகியுள்ளதாம்!

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான, பெண் கல்விக்கு எதிரான, மாநில பாடத்திட்டத்தின் உரிமையை பறிக்கும்  நீட் தேர்வை ரத்து செய் மற்றும் கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டுவந்து  நிரந்தரமாக்கு எனும் கோரிக்கைக்கு அழுத்தம் தெரிவிக்கும் கோஷங்கள் எழுப்பபட்டன!

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான எழுச்சியை வெகுஜன மக்களிடம் கொண்டுசெல்லும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டமும், 25-இலட்சம் தமிழ் மக்களின் கையெழுத்து பெற்று மத்திய அரசின் சிறப்பு கவனத்தை ஈர்க்கும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளது மக்கள் பாதை!

நேர்மையின் சின்னமாக தமிழக மக்களால் கொண்டாடப்படும் மக்கள் பாதை பேரியக்கத்தினர்  உ. சகாயம் ஐ.ஏஎஸ் வழிகாட்டுதல்படி இதற்கு முன்பு ஸ்டெர்லைட்டு எதிராக உண்ணாவிரதம் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குருதி கொடை கொடுப்பதில் இந்த இயக்கத்தின் இளைஞர்கள் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளனர்! இது வரை சுமார் 5,000 க்கும் மேற்பட்ட குருதி கொடை வழங்கியுள்ளனர். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான போது கருஞ்சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். சமூக ஆர்வலர்களுக்கு பாதிப்பு நேரும் போது குரல் கொடுத்துள்ளனர்.

“அறிவாளியை தேர்வு செய்வதில் சமரசம் செய்துகொள்ளமுடியாது” எனும் ஒற்றை வரியை பிரதிபலித்து 22-08-2017 அன்று தீபக் மிஸ்ரா தலைமையிலான கரியன் ஜோசப் மற்றும் அமிதவ் ராய் அடங்கிய உச்சநீதிமன்ற 2-வது அமர்வின் தீர்ப்பினால் கட்டாயமாக்கப்பட்ட  நீட் தேர்வு சமூகத்தின் எளிய பிரிவினர் மருத்துவ கல்வியை பெறமுடியாத நிலைமையை தோற்றுவித்துள்ளது

உண்மையிலேயே அறிவாளிகள்தான்  நீட்டில் தேர்வு செய்யப்படுகிறார்களா? என்பதையும் நீட் தேர்வில்  நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களூக்கு கிடைக்காத மருத்துவ கல்வி வெறும் 15% மதிப்பெண் பெற்ற வசதிபடைத்தோருக்கு எப்படிக் கிடைக்கிறது..?’’என்ற கேள்வியை முன்வைத்த மக்கள் பாதை நிர்வாகிகள் தங்கள் உரையில், ’’எளிய மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்’’ என்றனர்.

நீட் டை எதிர்க்கும் மக்கள் பாதை பேரியக்கத்தின்  போராட்டம் தமிழக இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உருவாக்கியுள்ளது

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time