தடுப்பூசி போடாதவர்கள் இனி பொதுவெளியில் நடமாட முடியாதா..?

-சாவித்திரி கண்ணன்

”தடுப்பூசியை விருப்பபட்டவர்கள் போட்டுக் கொள்ளட்டும். வேண்டாம் என்பவர்களை முட்டாள்களாகவோ,முரடர்களாகவோ நினைக்காதீர்கள்!” என்றால்,

”நாங்கள் போட்டோம், எந்த பாதிப்புகளும் இல்லாமல் தானே இருக்கிறோம். நீங்கள் மட்டும் மறுத்தால் எப்படி?” என கேட்கிறார்கள்!

”சபாஷ் , உங்கள் பாணியிலேயே இதற்கு பதில் சொன்னால் ஏற்பீர்களா..?” பார்ப்போம்.

உலகில் 750 கோடி மக்கள் வாழ்கிறார்கள்! அவர்களில் இது வரை கொரோனாவில் 45,66,000 பேர் தான் இறந்துள்ளனர். பாதிப்பு வந்தவர்களில் குணமடைந்தவர்கள் 19,71,00,000. ஆக மிகக் குறைவானவர்கள் இறக்கக் கூடிய – பெரும்பாலானவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் மீளக் கூடிய – ஒரு நோய்க்கு ஏன் தடுப்பூசி..?  உலக மக்கள் தொகையில் அரை சதவிகிதத்தினர் கூட மரணிக்காத ஒரு நோய்க்கு ஏன் தடுப்பூசியை கட்டாயப்படுத்துகிறீர்கள்.

சரி, வரக் கூடிய நோயை முன் கூட்டியே தடுக்க வேண்டும் என்பதில் நமக்கும் உடன்பாடு தான்! ஆனால், ‘அந்த தடுப்பை பில்கேட்ஸ் முதலான கார்ப்பரேட் முதலாளிகள் தரும் ஊசிகளால் மட்டுமே தடுக்க முடியும்’ என்று நீங்கள் சொல்வதில் தான் நமக்கு உடன்பாடு இல்லை. எங்கள் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவம் ஆயுர்வேதம், ஹோமியோபதி, நேச்சுரோபதி ஆகியவற்றின் மூலம் நோய் தடுப்பு நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்” என்றால் விட வேண்டியது தானே!

”தடுப்பூசி போட்டால் தான் ரயிலில் பயணிக்கலாம். அலுவலகத்திற்கு வரலாம், போட்டுக் கொண்டால் தான் கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையலாம். தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் டிரைவர்,கண்டக்டர்கள் பேருந்துகளை இயக்கலாம்..” என்பதெல்லாம் மறைமுகமாகவும், நேரடியாகவும் நிர்பந்திப்பது தானே!

ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால், ”தடுப்பூசி என்பது தன்னார்வமாக வருபவர்களுக்கு மட்டுமே போடப்படும். அதனால் தான் அதன் பாதிப்புகளுக்கு நாங்கள் நிவாரணம் எதுவும் தர வாய்ப்பில்லை” என்று பதில் தருகிறது சுகாதாரத் துறை அமைச்சகம்!

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தருண், தினேஷ், மணிந்திரகுமார் உள்ளிட்ட பலர் இந்த பதில்களை பெற்றுள்ளனர். மேகாலயா மற்றும் கவுகாத்தி உயர் நீதிமன்றங்களில் ’’தடுப்பூசியை கட்டாயப்படுத்தக் கூடாது’’ என தெளிவான தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன!இதை நம் அறத்திலும் விரிவாக எழுதியுள்ளோம்! நிர்பந்திக்காதே!

தடுப்பூசிக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புகளும் போராட்டங்களும்!

அப்படி இருக்க மீண்டும், மீண்டும் கொரோனா பீதியையும், தடுப்பூசி கட்டாயத்தையும் அரசாங்கங்கள் செய்து கொண்டுள்ளன! தடுப்பூசியை தவிர்க்கும் சுயாதீன பலம் உலகில் ஒரு சில நாடுகளுக்கே உள்ளன! அவை ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குகின்றன!( வட கொரியா, ஆப்கான்…மற்றும் ஆப்ரிக்க நாடுகள் சில)

தடுப்பூசியை அதிகமாக செலுத்திக் கொண்ட இஸ்ரேல் உலகத்திலேயே அதிக கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து பெற்ற வண்ணம் உள்ளது.

இஸ்ரேல் ஜுலை மாத கொரானா தொற்றில்,

தடுப்பூசி போட்டவர்கள் 15634 பேர்.

தடுப்பூசி போடாதவர்கள் 3038 பேர்!

ஆக, தடுப்பூசியை போட்டவர்களைத் தான் கொரோனா அதிகம் தாக்கிவருகிறது என தெரிய வருகிறது. ஆகவே தான் இரண்டு தடுப்பூசிகள், ஒரு பூஸ்டர் போதாது என்று அடுத்த பூஸ்டருக்கும் செல்கின்றனர்.

அதாவது, இந்த தடுப்பூசிக் கட்டாயம் என்பது ஆரம்பம் தான்! இதன் பிறகு மனித குலம் நிரந்தரமாக வருடா வருடம் மருந்து, மாத்திரைகளைக் கொண்டே தன்னை தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு மனித குலத்தை தள்ளுவது தான் இவர்களின் நோக்கமாகும்.

இந்தியாவில் 138 கோடி மக்களில் இது வரை 3 கோடியே 30 லட்சம் மக்களுக்கு மட்டுமே கொரோனா வந்துள்ளது! அதிலும் 4 லட்சத்து 41 ஆயிரம் பேர் தான் இறந்துள்ளனர். மற்றவர்கள் தங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலால் கொரோனாவை வென்றுள்ளனர். கொரோனாவில் இறந்தவர்களாக சொல்லப்படுபவர்கள் எண்ணிக்கையிலேயே கொரோனா பயத்தாலும்,வேறு சில முந்தைய நோய்களாலும் இறந்தவர்களே அதிகம்.

இந்திய தொற்றியல் நிறுவனத்தின் அறிவியல் அறிவுரை குழு தலைவர் மருத்துவர் ஜெயப்பிரகாஷ் முலியல் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்;

கொரானா மூன்றாம் அலை என்பது அதீத கற்பனை. மூன்றாம் அலை, குழந்தைகள் பாதிக்கபடுவர் என யாரோ விளையாடுகிறார்கள்.

நாட்டில் 67 சதம் பேர் கொரானாவுக்கு இயற்கை எதிர்ப்பு சக்தியை பெற்று விட்டார்கள். அது வாழ்நாள் முழுதும் நீடிக்கும். மீண்டும் கொரானா அலை உருவாக தொற்று தாக்காத பெரும் கூட்டம் வேண்டும். அப்படி இங்கு இல்லை. ஆங்காங்கே தொற்றுகள் உருவாகலாம். அவ்வளவுதான்.

பதட்ட நோய் போல எல்லாருக்கும் கொரானா டெஸ்ட் எடுப்பது தவறு. அறிகுறி உள்ளவருக்கு மட்டுமே எடுக்க வேண்டும். கொரானா சமூகத்தில் பரவிவிட்ட நிலையில், கட்டுப்படுத்த தனிமைப்படுத்தலும் தவறு. இனி பலவீனமானவர்கள் கொரானா தாக்கி இறக்காமல் இருக்க சிகிச்சை முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

கொரானா ஒழிப்பு என்பது அர்த்தம் இல்லாதது. அது என்றும் எல்லா நுண்ணுயிரிகள் போல சமூகத்தில் இருக்கும்.” என்கிறார்!

அரசாங்கங்கள் என்பவை ஆதிக்க சக்திகளின் கைக்கூலியாகவும், அராஜகத் தன்மையுடனும் தான் எல்லா காலங்களிலும் இருக்கும் என்பதற்கு தடுப்பூசி நிர்பந்தங்களே உதாரணமாகிறது!

ஒவ்வொரு மனிதனுக்குமே  தன் உடலின் நோய்க்கு எவ்வித மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட உரிமை…!  இதை அனைவரும் எடுத்து தான்‌ ஆகவேண்டும் என்று ஒற்றை மருத்துவமுறையை எதன் அடிப்படையில் திணிக்க முயல்கிறது அரசு அமைப்புகள்..? தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 43a மற்றும் 72a ன்படி ஒருவரின்  மருத்துவ தகவல்கள் என்பது ஒருவரது தனிப்பட்ட ரகசியம் ஆகும்.

 

தடுப்பூசி போட்டால் தான் பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் இயங்க முடியும், தடுப்பூசி கொரானாவை கட்டுப்படுத்தும் என்ற அறிவுரைகள், கட்டுப்பாடுகள் இயற்கைக்கு மட்டுமல்ல, அறிவியலுக்கே எதிரானவை, ஊசி போடும் நோக்கம் மட்டுமே கொண்டவை என்பதன்றி வேறென்ன..?

ஆகவே, உலக கார்ப்பரேட் முதலாளிகள் நிர்பந்தத்திற்கு அனைத்து அரசுகளும் உடன்படுகின்றன என்பதற்கான உதாரணம் ஒன்றை டாக்டர் மதிவாணன் சொல்கிறார்;

கொரானா அலை துவங்கும் முன்பே, ஊசியை உடலில் கலக்கும் நுண் ஊசிகளாக மாற்றி, நுண் தாமிரம் சேர்த்து, அதில் தகவல்களையும் சேர்த்து தோலுக்கடியில் செலுத்தும் திட்டம் பில் கேட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுள்ளது.

அதன் படி பில் கேட்சின் நிறுவனம்  தடுப்பூசி போட்டவர் யார், போடாதவர் யர் என கண்டுபிடிக்க ஒரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்க அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைகழகத்தை அணுகி,  பில் கேட்சின் நிதியில் ஆய்வை தொடங்கியது. அதன்படி தடுப்பபூசி போடாதவர்களை அறிவதற்கான தொழில் நுடபம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

தடுப்பூசி போட இனி ஊசிகள் தேவை இல்லை. 1.5 மில்லி மீட்டர் நுண் ஊசிகள் உடலில் செலுத்தப்படும். அவை உடலில் சென்றதும் தானாக கரைந்துவிடும். ஊசி மருந்து உடலில் கலந்துவிடும். ஆனால் அந்த நுண் ஊசிகளில் தாமிர நுண் பொருள்கள் மட்டும் தோலுக்கடியில் தங்கி விடும்.

அதில் தடுப்பூசி போட்ட நாள், வகை, கம்பெனி தயாரிப்பு எண் விவரங்கள் இருக்கும். வெறும் கண்ணுக்கு தெரியாத இந்த தாமிர நுண்பொருள்கள் அகச் சிவப்பு கதிர்களில் ஒளிர்வதாகும். அலைபேசி ஸ்கேனரில் தெரிந்து விடும்.

பில் கேட்சின் நிதியால் இனி தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை. உங்கள் தோலை ஸ்கேன் செய்தாலே போதும்… !  ஆறு மாதம் ஒருமுறை ஊசி, தாமிர நுண் துகள்களை தோலுக்கடியில் போட்டு கொள்ளுதல். இதைவிட மானிட குலத்தை அழிக்கும், அடிமைப்படுத்தும் திட்டம் வேறு இல்லை.

இயற்கை எதிர்ப்பு சக்தி வழியே கிருமிகளை எதிர்ப்போம். ஒப்புதல் இருந்தால் மட்டுமே எந்த பரிசோதனை, சிகிச்சை, தடுப்பு முறையும் செய்ய வேண்டும் என துவக்கத்தில் தான் எதிர்க்க, தடுக்க முடியும். பின்பு வழியில்லை.’’ என்கிறார் மதிவாணன்.

நம் பக்கத்து மாநிலமான கேரளாவில் தான் இந்தியாவிலேயே அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால், அங்கு தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது! கொரொனா தடுப்பூசிகளால் அந்த வைரஸ்கள் அதிக வீரியம் பெற்று தாக்குவது தான் நடக்கிறது. பிறகு அந்த வீரிய தாக்குதலுக்கும் ஊசி போட சொல்வார்கள்! இந்த நச்சு வளையத்தில் இருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ளாவிட்டால், பசுமை புரட்சி என்று சொல்லி இரசாயன உரங்களை நிர்பந்தித்து நிலத்தை மலடாக்கி, உணவை நச்சாகியதைப் போல, மனித குலத்தை கார்ப்பரேட்டுகள் நிரந்தர நோயாளிகளாக்கிவிடுவார்கள்! ஆகவே, தயவு செய்து தடுப்பூசியை நிர்பந்திக்காதீர்கள்! இரசாயன உரங்கள் போடாத நிலங்கள் தான் இன்று வளமாக உள்ளது என்பதை நினைவில் வையுங்கள்! தடுப்பூசி போடாதவர்களின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியால் தான் நாளை தடுப்பூசி போட்டவர்களை காப்பாற்ற முடியும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time