அறம் இணைய இதழ் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது! இரண்டாம் ஆண்டில் நடை போட தொடங்கியுள்ளது. உண்மையை உரக்கச் சொல்லும் இந்த ஊடகப் பயணம் வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன்.
சமூகத்தின் பல்வேறு வெளிப்பாட்டுத் தளங்களாம்
அரசியல் முதல் ஆன்மீகம் வரை,
வயல் வெளி முதல் வணிகத் தளம் வரை,
போராட்டக் களம் முதல் பொழுதுபோக்குத் துறை வரை
தொடர்பான உண்மைகளை ஓங்கிச் சொல்லுவது ஊடகத்தின் ஒப்பிலாப் பணி.
இந்த கருத்துப் பணியை கச்சிதமாகச் செய்கிறது அறம்.
அத்துமீறுகிற அதிகார வர்க்கத்திற்கு ஒத்துப்போவது, அதனை ஓங்கிப் புகழ்வது, அதற்கு அடிபணிவது, அதனை ஆராதிப்பது. இப்படித் தான் இருக்கின்றன சில ஊடகங்களின் பணிகள்!
ஊரைச் சூறையாடும் ஊழல் கயவர்களுக்கு உத்தம பிம்பம் கட்ட ஓடி, ஓடி உழைக்கின்றன இன்னும் சில ஊடகங்கள். இவற்றிற்கு நடுவில் அறம் தனித்து நிற்கிறது. தாகம் தனியாது நிற்கிறது.
ஆம் அது நேர்மை தாகம். நீதி தாகம். இதனையே அறம் அடைகாக்கிறது. இதுவே அறத்தை அடையாளப் படுத்துகிறது.
அறம் இதழில் வெளி வந்த நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் உண்மையும் அதை சொல்லுகிற உள்ள வன்மையும் நிரம்ப உண்டு என்பதே நிஜம்.
அறம்,
அநீதி கண்டு ஆவேசம் கொள்ளும்
நியாயம் அறிந்து நெகிழ்ந்து சொல்லும்
கடைக்கோடி மனிதனுக்காய் கசிந்துருகும்
கயமை செய்வோரை காறி உமிழும்
இப்படித்தான் அறத்தை நான் நம்புகிறேன்.
Also read
இந்த எழுத்தோட்டத்திற்கு அடிநாதமாக இருப்பவர் இதன் ஆசிரியர் திரு.சாவித்திரி கண்ணன் அவர்கள். இவர் நிறுவனங்களுக்குள் நீண்ட காலம் நிலைக்க முடியாத நேர்மைக்குச் சொந்தக்காரர். கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாதவர். அதற்காக தனிப்பட்ட இழப்புகளை தாங்கிப் பழகியவர். அறம் அவரது முயற்சி. அவரையும் அவரது குழுவினரையும் பாராட்டுகிறேன். நேரிய, அறம் மிகுந்த சமூகம் உருவாக விரும்புவோர் அனைவரும் “அறம் ” முயற்சியை ஆதரிக்க வேண்டும்.
இன்னும் ஊழலுக்கு எதிராக வலுவாக எழுதிடவும், ஈழத்தமிழர் உள்ளிட்ட தேசிய இனங்களின் விடுதலைக்காகவும் அறம் தன் எழுதுக்கோளை வலுவாக பிடிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.
கட்டுரையாளர்; உ.சகாயம் (முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி),சமூக செயல்பாட்டாளர், கிரானைட் கொள்ளையை அம்பலப்படுத்தியவர். ஆட்சிப்பணியின் போது நேர்மையான செயல்பாட்டின் விளைவாக 22 முறை இடமாற்றத்திற்கு உள்ளானவர்.
மகிழ்ச்சி. வாழ்த்துகள்
He
Not a derseved person to comment B team of bjp
சகாயம் அவர்களே
இந்த அறம் தளம் திமுகவின் ஊதுகுழலாய் ஊடக கரையானாய் செயல்படுகிறதே. உங்களை போன்ற நேர்மையானர்கள் இது போன்ற நடுநிலையற்ற இதழ்களை ஆதரிப்பது வேதனை அளிக்கிறது.
அப்படியே வேதனை பட்டுக் கொண்டே இரு தம்பி.. அதுதான் எங்களுக்கும் வேண்டும்..