சுவாசத்தை சுகமாக்கினால், கொரோனாவிற்கு குட்பை சொல்லலாம்!

சாவித்திரிகண்ணன்.

சுவாசம் என்பது சுகமாக நடந்தால் அது சொர்க்கமான வாழ்க்கையாகும்!.அந்தசுவாசமே சுமையாகிப் போனால் அது நரகமான வாழ்வாகும்!

அதைத்தான் ஆஸ்துமா என்றழைக்கிறார்கள்!  ஆஸ்துமா வந்தவர்கள் அடையும் அவஸ்த்தை அதைப் பார்ப்பவர்களையும் பதைபதைக்க வைக்கும்!ஆஸ்த்துமா வந்தவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்! ஆக,ஆஸ்துமா வந்தவர்கள் கொரோனா வராமல் தவிர்த்துக் கொள்ள கீழ்கண்ட இயற்கை வாழ்வியலை பழகி வெற்றி கொள்ளுங்கள்!

இப்படியாகஆஸ்துமாவில்அவதிப்படுபவர்கள்இந்தியாவில்இரண்டுகோடிபேர்என்பதுஅதிகாரபூர்வதகவல்! ஆனால்இந்தஎண்ணிக்கைஇரண்டுமடங்கிற்கும்அதிகமாகவேஇருக்கலாம்!

காரணம், ஆஸ்துமா வருவதற்கான சுற்றுச்சூழல்கேடு இந்தியாவில் இங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருப்பதால் வியாதிஸ்தர்களும் விருத்தியாகிக் கொண்டே உள்ளனர்.

குப்பைக் கூளங்கள், சாக்கடை நாற்றம், வாகனப்புகை, தொழிற்சாலைப் புகை, ரசாயனமருந்து, பூச்சிக் கொல்லிமருந்துகளின் நெடி, காற்றோட்டமில்லா வீடுகள், அதீதவெப்பம், அதீதக்குளிர், புகைப்பிடிக்கும்பழக்கம், பான்பராக், குட்கா, மதுப்பழக்கங்கள் ஆஸ்த்துமாவிற்கு அடித்தளமிடுகின்றன.! இந்தச் சூழல்களில் உழல்பவர்களுக்கு  கொரோனா வைரஸ் கூப்பிடாமலே வரும்! சொல்லாமலே உயிரை அள்ளிச் செல்லும்!

மனதை சமநிலையில் வைக்கஇயலாமல் எடுத்ததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு குறிப்பாக கோபம், பயம், படபடப்பு, கவலை, அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகள் மிகுந்திருப்பவர்களுக்கு சுவாசம் சீராக இல்லாமலாகிவிடுவது இயல்பே.

வலி நிவாரண மாத்திரைகள், ஆஸ்பரின் போன்றவற்றை அதிகமாக உட்கொள்பவர்கள் கொரோனோவிலிருந்து தப்புவது கடினம்!

அடிக்கடி இருமல்,  சளி,  தொடர்தும்மல்,  மூக்கடைப்பு, மூக்குஒழுகல் உள்ள குழந்தைகளை உடனே கவனிக்காவிட்டால்ஆஸ்த்துமாஅவர்களைஅரவணைத்துக் கொள்ளுவதோடு கொரோனாவும் கூப்பிட்டுக் கொள்ளும்!

எப்படி நமக்கு ஆஸ்துமா வந்தாலும் அதை இயற்கைவாழ்வியல் மூலம் இல்லாதொழிக்க முடியும்.

ஆனால், ஆங்கில மருத்துவத்தில் ஆயுள்முடியும் வரை மருந்துமாத்திரைகளை உட்கொண்டுஆஸ்த்துமாவை கட்டுப்படுத்துகிறேன் என்று முயற்சித்து கலங்கித்தவிப்பது தான் நடைமுறையாகவுள்ளது.

மற்ற பல வியாதிஸ்தர்களை விட ஆஸ்த்துமாநோயாளிகள் அனுபவிக்க முடியாத உணவுகளின் பட்டியல் நீளமானது!  ஆனால், அதேசமயம் இயற்கைவாழ்வியலோடு இரண்டறக் கலந்து  வாழ முடிந்தவர்கள் ஆஸ்த்துமாவை அஸ்தமிக்க வைக்கவும், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை அனுபவிக்கவும் முடியும். முதலில் ஆஸ்த்துமா வந்துவிட்டதால் கொதிநீரில் தான் குளிக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையிலிருந்து வெளியேறுபவர்கள் தான் முழுநிவாரணத்திற்கான முதல்படியில் கால் வைப்பவர்களாவர்.அதிகாலையும், மாலையும் பச்சைத்தண்ணீர் குளியலானது.பஞ்சபூதசக்திகளில் ஒன்றான நீர்சக்தியின் ஆற்றலை நமக்குள் நிறைத்துக் கொள்வதாகும். குளித்த பிறகு தலையை ஈரமில்லாமல் நன்கு துவட்டவேண்டியது அவசியம்.

பிறகு சூரிய நமஸ்கார ஆசனத்தை 10 முறையேனும் செய்ய வேண்டும்.பிறகு பிராணாயமங்களை குறைந்தது 30 நிமிடங்கள் செய்யவேண்டும்.அத்துடன்தினசரி 2 முறை 10 முதல் 15 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.

இவை நம் சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதோடு, ஆக்சிஜன் மூலமாக நம் உடல் பெறவேண்டிய ஆற்றல்களை முழுமையாகப் பெற்றுத் தரும். எவ்வளவுக்கு எவ்வளவு மனிதன் நிதானமாகவும், ஆழ்ந்தும் மூச்சு இழுத்து விடுகின்றானோ அவ்வளவுக்கு ஆரோக்கியமாகத்திகழ்வான்!

நம்மில்பலர் ஆழ்ந்து சுவாசிப்பதில்லை. ஒவ்வொரு சுவாசத்திலும் நாம் உள்ளிழுக்கும் காற்றின் அளவு குறைந்தது 500 மில்லியாவது இருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான மனிதன் ஒருநிமிடத்திற்கு 15 முதல் 18 தடவை சுவாசிக்கிறான்.

ஆனால், பிராணாயாமம், யோகா, தியானம், முதலியவற்றில் பயிற்சி உள்ளவர்களின் சுவாசத்தின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருக்கும். சுவாசத்தின் எண்ணிக்கை குறையக்குறைய ஆயுள் அதிகரிக்கும்! நிமிடத்திற்கு 38 முறை மூச்சிழுத்துவிடும் முயலின் ஆயுள் 8 ஆண்டுகளே! ஆனால், நிமிடத்திற்கு 5 முறைமூச்சிழுக்கும் ஆமையின் ஆயுள் 155 ஆண்டுகளாகும்!

பிரணாயாமத்தால் உடலின் இயங்குசக்தி அதிகரிப்பதோடு காற்றுமண்டலத்தின் காந்தசக்தி நம்முள் கலக்கிறது. நம் மூக்கில் சுமார் 6 கோடி நுகர் நரம்புசெல்களை ஆண்டவன் சிருஷ்டித்துள்ளான்.அவற்றின் ஆற்றல்அளப்பரியது.ஆனால், அவற்றை உணராமலேயே அனேகரின் ஆயுள் முடிந்து விடுகிறது.

நமது மூக்கிற்கு தேவை தூயகாற்று மட்டும்தான்! விதவிதமான வாசனைகளால் அது வலுப்பெறுவதில்லை. எனவே, வாசனை திரவியங்கள் அவசியமில்லை. நாக்கு சுவைக்காக நாளெல்லாம் அலைந்து தேடித்தின்று சுகமடையும் நாம் மூக்கின் ஆழ்ந்த சுவாசத்திற்காக ஒருநாளில் அரைமணி நேரம் செலவழிக்கக்கூடாதா?

பொதுவாக நாம் தூங்கும் நேரம் தவிர படுக்கையைத் தவிர்க்க வேண்டும். ஓய்வு என்பது உட்கார்ந்த நிலையில் அமைவதே நல்லது.காரணம்,படுத்த நிலையில் எப்போதும் நம் சுவாசம் பாதிஅளவில் தான் நடக்கும்.ஆனால், உட்கார்ந்த நிலையிலோ முழுமையாக நடக்கிறது.

சரி, இனி உணவுக்கு வருவோம்.

ஆஸ்த்துமாவிற்கு அறவே தவிர்க்க வேண்டியவை;

பால், தயிர், நிலக்கடலை, கடலைமிட்டாய், பொறித்தமற்றும்வறுத்தஉணவுகள், செரிமானத்தைசிரமமாக்கும்அதீதபுரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகள், முட்டைஉள்ளிட்ட மாமிசஉணவுகள், வெள்ளைச்சீனி, டால்டா, ரீபைன்ட்ஆயில், அவரைக்காய், உருளைக்கிழக்கு, பீன்ஸ், பீட்ரூட், செவ்வாழை, நாட்டுப்பழம் தவிர அனைத்து வாழைப்பழங்களையும் தவிர்க்கவும், கருணைக்கிழங்கை தவிர அனைத்து கிழங்குகளையும் தவிர்க்கவும். கேக், சாக்லேட், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து பேக்கரி அயிட்டங்களையும் தவிர்க்கவும்! பழங்களில் செரிமானத்திற்கு சிரமம் தரும் பலாப்பழத்தை தவிர்க்கவும், புளிப்புத்தன்மையுள்ளஆரஞ்சு, திராட்சை பழங்கள்ஆகாது.

சாப்பிடவேண்டியஉணவுகள்;

குதிரைவாலி, சாமை, காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, சீரகம், சுக்கு, பூண்டு, பாகற்காய், முட்டைக்கோஸ், வாழைக்காய், பச்சைசுண்டைக்காய், வெண்டைக்காய், நெல்லிக்காய், நாட்டுகொய்யா, கொருக்காய்புள்ளி, முந்திரிப்பழம், இலந்தைப்பழம், பப்பாளி, புளிப்பில்லாதஆரஞ்சு, சாத்துகுடி, அன்னாசி, தூதுவளை, முசுமுசுக்கை, முருக்கைக்கீரை, கல்யாணமுருங்கை, கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கன்னி, அகத்திக்கீரை, மணத்தக்காளி, கொத்தமல்லி, புதினா, தேன்… இவை ஆஸ்த்துமாவை காணாமலாக்கும் கண்கண்ட உணவாகிய மருந்துகளாகும்!

இளஞ்சுடான தண்ணீரை அடிக்கடிபருகலாம். அதில் துளசிஇலைகளை போட்டு குடிக்கலாம்.கரிசலாங்கண்ணியை அரைத்து தண்ணீரில் கொதிக்கவிட்டு சிறிது பனைவெல்லம் சேர்த்துப் பருகுவது நல்ல பலனளிக்கும்.

அரிசி மற்றும் கோதுமை உணவுகளை மிகஅளவோடு எடுத்துக் கொள்ளலாம்.பொதுவாக வயிறுமுட்ட எப்போதுமே சாப்பிடக்கூடாது என்பதை மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளவும். அரிசி மற்றும் கோதுமை உணவுகளை மிக அளவோடு எடுத்துக்கொள்ளலாம். அடிக்கடி சிறு அளவில் உண்ணாவிரதம் இருப்பதும், ஆகமட்டும் இயற்கையான சமைக்காத உணவுகளை சாப்பிடுவதும் மிக நல்ல பலனைத்தரும்!

எலுமிச்சைப் பழத்தை இளஞ்சூடான தண்ணீரில் பிழிந்து, சிறிது தேன் சேர்த்து உட்கொள்ளலாம்.லவங்கபட்டை தேநீர் சாப்பிடலாம்.மிளகுரசம், பூண்டுக்குழம்பு, சிவப்பரிசி அவல், குதிரைவாலி, சாமையில் சோறு அல்லது கஞ்சி சாப்பிடலாம்!

வெற்றிலையில் காம்பைக்கிள்ளி எறிந்துவிட்டு மிளகுத்தூள் சிறிதுசேர்த்து சாப்பிடலாம்.ஆஸ்த்துமாகாரர்கள் அனைத்து சோப்புகளையும், ஷாம்புகளையும், வாசனை திரவியங்களையும் தவிர்த்து, நலங்குமாவு, மஞ்சள் சேர்த்த குளியல்பொடிகளைப் பயன்படுத்த வேண்டும்.பொதுவாக அனைவருக்குமே இது நல்லதாகும்!

ஆஸ்துமா வந்தால் ஆயுள் முழுக்க அவதிக்குள்ளாவதும்,கொரோனாவிற்கு பலியாவதும் என்பதும் எழுதப்படாத விதியாகவுள்ளது.ஆனால் ஆஸ்துமாவை அறவே ஒழிக்க முடியும் என்பது இயற்கைவாழ்வியல் சார்ந்த அறக்கோட்பாடுகளால் அனுபவபூர்வமாக நிரூபணமாகியுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் இதற்கு அத்தாட்சியாகும்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time