தடுப்பூசியை திணிக்கும் முயற்சியை உடனே நிறுத்துங்கள்!

மருத்துவர் கோ. பிரேமா

சமீபத்தில் தமிழக சுகாதாரத் துறையின் ஒரு சுற்றறிக்கை மக்களிடையே பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதை கேள்விக்கு உள்ளாக்குவதாக – கட்டுப்படுத்தும் தோரணையில் – உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல் நலன் சார்ந்து முடிவெடுத்து உயிர் வாழும் உரிமை உள்ளது!  தடுப்பூசியை திணிக்கக் கூடாது என நீதி மன்றங்கள் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளன!அதை உறுதிபடுத்துவதே அரசாங்கத்தின் கடமை! அதை மீறுவதாக அந்த சுற்றறிக்கை இருந்ததையடுத்து அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார் மருத்துவர் பிரேமா!

மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக 19/11/2021 வெள்ளி இரவு முதல், பல்வேறு ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.

18/11/2021 தேதியிட்டு பொது சுகாதாரத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை இதை சொல்லியிருக்கிறது.

 

இதில் சட்டத்திற்கும், உண்மைக்கும், அறிவியலுக்கும், அறத்திற்கும் புறம்பான தகவல்கள் குறப்பிடப்பட்டுள்ளன. இதன் உண்மைத்தன்மையை அறிய விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளால் மக்களுக்கு இதுபோன்ற அழுத்தங்கள் நேர்ந்த வண்ணம் உள்ளது.

இவை பற்றி முதலமைச்சர், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. ஆயினும் இதுபற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

# ஒரு பரிசோதனை தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது அரசியல் சாசன விரோத செயல். மக்கள் உரிமையை நிராகரிப்பதாகும்.

# தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் தொற்று பரப்புவர்கள் என்பது அறிவியற்பூர்வமற்றது.‌

# தடுப்பூசி பிரச்சாரத்தில் குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மையை அரசு கையாளவேண்டும்.

ஆரோக்கியமான நபர் தடுப்பூசி போடும்முன் அதன் நன்மை தீமை புரிந்து பின் விருப்பத்தேர்வாக மட்டுமே  அதை போடும் உரிமை வேண்டும். இதுவே அடிப்படை மருத்துவ அறம்.

# தற்போதைய பரிசோதனை தடுப்பூசிகள் எந்த விதத்திலும் தொற்று பரவுவதை தடுக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை தடுப்பூசி நிறுவனங்களும், உலக சுகாதார நிறுவனமும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன.

இளம் வயதினர் நெஞ்சு வலிக்காக மருத்துவமனையில்!

ஆனால், இந்த உண்மை மக்களுக்கு  தடுப்பூசி பிரச்சாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் சொல்லப்படுவதில்லை.

# இப்பரிசோதனை தடுப்பூசிகளில், இரத்தம் உறையும் தன்மை இருப்பதாக தொடர்ந்து பல மருத்துவ ஆய்வு கட்டுரைகள் வந்தவண்ணம் உள்ளது.

திடீர் மாரடைப்பு,  பக்கவாதம், மூளையில் இரத்தக்கசிவு, திடீர் மூச்சுத்திணறல், நரம்பியல் பிரச்சினை, மரணம் போன்றவை பரிசோதனை தடுப்பூசி போட்டவர்களில் இளம்வயதிலேயே ஏற்படுவதை பல நாடுகளும் , மருத்துவ அறிஞர்களும் எச்சரித்து வருகின்றனர்.

மேலும் பெண்களுக்கு கருக்கலைப்பு, அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதையும் பலர் எச்சரித்து வருகின்றனர்.

பல பரிசோதனை கட்டங்களை தாண்டும் மருந்துகளும் தடுப்பூசிகளுமே பின்னர் நாட்பட்ட பின்விளைவுகள் ஏற்படுத்துவது நாம் அறிந்ததே. இப்பரிசோதனை தடுப்பூசியில் எம்மாதிரியான நாட்பட்ட பின்விளைவுகள் ஏற்படும் என்பது இனிவரும் காலங்களில் மட்டுமே தெரிந்துகொள்ளமுடியும்‌.

இவற்றை பரிசோதனை தடுப்பூசி பிரச்சாரத்தில் அரசு மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் தெரியப்படுத்த வேண்டும்.

# இப்படியான இக்கட்டான நிலையில் இவை அனைத்தையும் தாண்டி, இப்பரிசோதனை தடுப்பூசியை இப்பேரிடர் காலத்தில் மக்களின் நலன் கருதியே அவர்களின் விருப்பத்தேர்வாக அரசு தீவிரமாக கொண்டு  செல்வதாகவே இருந்தாலும் இந்த பரிசோதனை தடுப்பூசியின் பின்விளைவுகளுக்கு எம்மாதிரியான பொறுப்பை தமிழ்நாடு அரசு ஏற்றுள்ளது என்ற விபரம் மக்களுக்கு  இதுவரை தெரியவில்லை.  இது பற்றியும் மக்களுக்கு பரிசோதனை தடுப்பூசி பிரச்சாரத்தின் போதே அரசு வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க வேண்டும்.

# மேலும், இப்பரிசோதனை தடுப்பூசியின் பாதகங்களுக்கு எம்மாதிரியான இழப்பீடு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்பதையும் தடுப்பூசி பிரச்சாரங்களில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்கவேண்டும்‌.

நம் தமிழ்நாட்டிலும் இதுவரை பரிசோதனை தடுப்பூசி போட்டபின்னர் திடீர் மரணமும், தீவிர நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவற்றை நாம் அலட்சியமாக கடந்து செல்ல முடியாது.

இவர்களுக்கு எம்மாதிரியான பொறுப்பை அரசு ஏற்கிறது என்பதை மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் தெரியப்படுத்தவேண்டும்‌.

# ஆரோக்கியமான எவருக்கும் போடப்படும் தடுப்பூசியின் பின்விளைவுகளை அரசிடம் முறையிட மக்களுக்கு நேரிடையான வெளிப்படையான தளம் வேண்டும்.

இப்போதுள்ள AEFI Adverse Events Following Immunisation முறைப்படி பாதிப்படைந்தவர் மருத்துவர் மூலமாகத்தான் புகார் அளிக்கமுடியும்‌ . ஆனால் இங்கு அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு AEFI அவசியம், அறிவியல் அறம் பற்றிய போதிய அறிவு இல்லை. இதனால் மக்களால் தடையின்றி புகார் அளிக்க  முடிவதில்லை.

# தடுப்பூசி பாதகங்கள் புகார்களுக்கு விசாரனை மற்றும் இழப்பீடு பெற தற்போது இருக்கும் நீதிமன்ற முறையானது நம் மக்கள் பலருக்கு சிக்கலான நடைமுறையாக உள்ளது. மக்களுக்கு எளிமையாக தடுப்பூசி தனி நீதிமன்றம் வேண்டும்‌.

# அரசு அதிகாரிகளின் இதுபோன்ற மக்கள்விரோத முடிவுகளை/ஆணைகளை வெளியிடுவதை அரசு உடனுக்குடன் தலையிட்டு தடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட இந்த சுற்றறிக்கையை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இதை வெளிப்படைத்தன்மையுடன் ஊடகங்களில் பொதுமக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

மறைமுக கட்டாய தடுப்பூசி திணிப்பு என்பது மக்கள் விரோத, பாசிச, அறிவியலுக்கும் அறத்திற்கும் புறம்பான செயல். இதை எந்த அரசு அதிகாரியும், ஆட்சியரும் இனி ஒருபோதும் செய்யாமல் இருக்க  இவர்களுக்கு தக்க தண்டனையும் வழங்கவேண்டும். உலகம் முழுக்க கட்டாய தடுப்பூசிக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

மாற்று சிந்தனைகளுக்கும், மாற்று கருத்துகளுக்கும் விவாத இடமளிக்கும்,  சமூகநீதி, வேளாண்மை, சூழலியல், கல்வி என பல நல்ல மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளை செய்வதன் மூலம் திமுக அரசு மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்றுவரும் இவ்வேளையில் மருத்துவம் மற்றும் மக்கள் ஆரோக்கியம் சார்ந்த கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகள் மக்களுக்கு விரோதமாகவே உள்ளது.

இது மக்கள் உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது.

அரசு பரிந்துரைக்கும் இப்பரிசோதனை தடுப்பூசிக்கு வெளிப்படைத்தன்மையுடன் அரசே பொறுப்பேற்றால் மட்டுமே மக்களும் நம்பிக்கையுடன் பரிசோதனை தடுப்பூசியை போட முன்வருவார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இது சார்ந்து நல்முடிவை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

Dr. கோ. பிரேமா MD(Hom),

(தடுப்பூசி திணிப்பை விரும்பாதவர்கள் தங்கள் ஆட்சேனையை கீழ்க்கண்ட இமெயிலுக்கு அனுப்பலாம்)

மருத்துவர் பிரேமா

Mailed this to [email protected]

With cc to

[email protected]

[email protected]

[email protected]

[email protected]

[email protected]

[email protected]

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time