தடுப்பூசித் திணிப்பு என்பது மருத்துவச் சர்வாதிகாரம்!

அ.உமர் பாரூக் M.Acu, M.Sc (Psy), (Ph.D(Psy))

உலகம் முழுவதுமுள்ள அரசுகளையும், மக்களையும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய நோய் – கொரொனா. கொரானா தாக்கத்தாலும், அதன் மீது உருவான மிகை அச்சத்தாலும் எண்ணற்ற மக்கள் செத்து மடிந்தனர். அலோபதியில் முறையான சிகிச்சை கண்டுபிடிக்கப்படாமலேயே கொரொனா கட்டுக்குள் வந்து விட்டதாக உலக அரசுகள் அறிவிக்கத் தொடங்கின. மரபு வழி மருத்துவங்களில் சிகிச்சைக்கான சாத்தியங்கள் இருந்தும் அவற்றுக்கான முறையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதெல்லாம் பழைய கதை.

கொரோனா அச்சம் பரவிய போதே மருந்து நிறுவனங்களும், அரசுகளும் தடுப்பூசி என்ற சொல்லை உச்சரிக்கத் துவங்கின. படிப்படியாக நோய்த்தாக்கம் குறைந்து கொண்டிருந்த காலத்தில் கோவிட் தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதல் பொதுமுடக்கத்தின் இறுதியில் இந்தியாவுக்கு வந்து சேர்ந்த தடுப்பூசிகள் மிக மெதுவாகவே பரவலாக்கப்பட்டன. தடுப்பூசிகள்தான் ஆபத்பாந்தவான், சர்வரோக நிவாரணி போன்ற தோற்றம் உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டன.

இதில் என்ன நகைச்சுவை என்றால், ஒரு சாதாரண மருந்தைத் தயாரிப்பதற்கே பல ஆண்டுப் பரிசோதனைகள் அவசியம். விலங்கு வழி ஆய்வுகள், மனித வழி ஆய்வுகள் என்று குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளில் பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தத் தடுப்பூசிகள் முழுமையாக ஆய்வு முடியுமுன்னே அவசர கோலத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. உலகையே அச்சுறுத்தும் ஒரு நோய்க்கெதிராக குறைந்தபட்சத் தேவை அடிப்படையில் கோவிட் ஊசிகள் ‘பரிசோதனை’ அடிப்படையில் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டன.தன் விருப்பத்தின் அடிப்படையில் மக்கள் இத்தடுப்பூசிகளைப் பயன்படுத்திக் கொள்ள WHO பரிந்துரைத்தது.

மிரட்டும் மெகா மருத்துவ முகாம்கள்!

இப்போது 120 கோடி தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு இணையதளச் செய்தி கூறுகிறது. இதிலும் முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் 78 கோடி. இரண்டாம் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் – 48 கோடி. இரண்டையும் கூட்டித்தான் உலகம் முழுவதும் நமது ஒன்றிய அரசு பெருமையடித்துக் கொள்கிறது.. “ 120 கோடி டோஸ்கள் செலுத்தி விட்டோம்” என்று. உண்மையில் இந்த எண்ணிக்கை மக்களால் தன்னார்வமாகச் செலுத்திக்கொள்ளப்பட்டதா..? மாநில அரசும், ஒன்றிய அரசும் விதம் விதமான நெருக்கடிகளை உருவாக்கித்தான் இந்த எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறார்கள். பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், கல்லூரிக்குச் செல்ல வேண்டுமானால் பேராசிரியர்களும் மாணவர்களும் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.இவ்வளவு ஏன்…? நூறு நாள் வேலைக்குச் செல்ல வேண்டுமானால் கூட தடுப்பூசிகள் அவசியம் என்று அரசுகள் கொடுத்த நெருக்கடியின் வழியாகத்தான் இத்தனை கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை மறைமுகமாக இருந்த தடுப்பூசிக் கட்டாயம் இப்போது வெளிப்படையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒருசில நாட்களுக்கு முன்பு வெளிவந்துள்ள தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கை ஒன்று தடுப்பூசி கட்டாயம் என்ற வலியுறுத்தலை நேரடியாகச் செய்கிறது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஒருபுறம் ஊடகங்களில் “இந்தியா ஜனநாயக நாடு.. தடுப்பூசியைக் கட்டாயப் படுத்த முடியாது” என்று சொல்லிக் கொண்டே,”இந்த சுற்றறிக்கையால் அதிகம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நல்லதுதானே?” என்று கேட்கிறார்.

“தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதியில்லை” என்று தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இது 1939 ஆம் சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் இந்த சுற்றறிக்கை குறிப்பிடுகிறது. இதனை அரசாணை போலவும், சட்டம் இயற்றப்பட்டது போலவும் ஊடகங்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

இந்தப் பேரிடர் காலத்தின் அரசு முன்வைக்கும் தடுப்பு முயற்சிகளில் பிரதானமானது தடுப்பூசி. அவசரத்தேவை காரணமாக உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசிகளின் முழுமையான ஆய்வுக் காலம் நிறைவடையாமலே பரிசோதனை அடிப்படையில் ஊசிகளுக்கு அனுமதி அளித்தது. யாரையும் கட்டாயப்படுத்தாமல், தன் விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு WHO அறிவித்திருந்தது. எனவே தான், உலகம் முழுவதும் இது கட்டாயமாக்கப்படாமல், விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. சில நாடுகள் ’தடுப்பூசி கட்டாயம்’ என்று அறிவித்த நிலையில் மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து வருவதையும் சர்வதேச ஊடகங்கள் வழியாக நம்மால் அறியமுடிகிறது.

அலோபதி எனும் ஒரு மருத்துவம் முன்வைக்கும் தடுப்பு முறைதான் – இந்த தடுப்பூசிகள். அவற்றை அரசு பிரச்சாரம் செய்து, பெரும்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை. இப்போது அதையும் தாண்டி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது வெளிக்கே வரக்கூடாது என்று அறிவித்திருப்பது சர்வாதிகாரமான நடவடிக்கை ஆகும்.

‘டார்கெட்’ நிர்ணயித்து ‘டார்ச்சர்’ தரும் தலைமைகள்!

# கோவிட் தடுப்பூசிகள் தன்னார்வ அடிப்படையில் பயன் படுத்துபவை தானே தவிர, கட்டாயம் அல்ல என்பதை ஒன்றிய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. அதையும்மீறி, தமிழ்நாட்டில் பலதனியார், அரசு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி பல மாதங்களாக வலியுறுத்தி வந்தனர். ஆனாலும், இது வெளிப்படையாக நடைபெறாததால் பெரிய சிக்கல் எதுவும் எழவில்லை. இந்தச் சூழலில் வெளிவந்திருக்கும்இச்சுற்றறிக்கை. தடுப்பூசி கட்டாயம் என்பதை மறைமுகமாக வலியுறுத்துகிறது.

# கோவிட் தடுப்பூசிகளின் நம்பகத்தன்மைக்கோ, மரணம் உள்ளிட்ட பின்விளைவுகளுக்கோ மருந்து நிறுவனங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. அரசுகளும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசின் தடுப்பூசி விளைவுகளை ஆராயும் குழு (AEFI) அளித்த வழிகாட்டு நெறிமுறைகளும் தடுப்பூசி முகாம்களில் பின்பற்றப்படுவதில்லை.

ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் 30 நிமிடங்கள் அங்கேயே இருக்க அனுமதிப்பதும், அவசர சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் முகாமில் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் AEFI  கூறும் அடிப்படை விதி. தமிழகத்தில் இதுவரை நடந்த எந்த முகாமும் இப்படி நடக்கவில்லை. அதே போல, தடுப்பூசி செலுத்திக் கொண்டவரை 30 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அவருக்கு ஏதேனும் பின்விளைவுகள் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தடுப்பூசிக்குப் பின்னால் ஏற்படும் தொந்தரவுகள் என்று தமிழ்நாட்டில் இதுவரை எந்த மருத்துவரும் எந்த பின்விளைவையும் பதிவு செய்யவில்லை. இந்தியா முழுவதும் இதே நிலைதான்.

விவாதிக்க மறுக்கப்படும் தடுப்பூசியின் தாக்கங்கள்!

# அலோபதி மருத்துவர்கள் உள்ளிட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்களைக் கொண்ட குழு அவேக்கன் இந்தியா மூவ்மெண்ட் (AIM) அமைப்போடு, பல தன்னார்வலர்கள் இணைந்து தடுப்பூசிக்கு பிறகான மரணங்கள் குறித்து செய்தித்தாள்களில், சமூக வலைத்தளங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தொகுத்து வருகிறோம். நவம்பர்- 24,  இரவு வரை அப்படி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை –9,743. இதில் இரண்டு மரணங்களை மட்டுமே அரசு ஏற்றுக் கொள்கிறது. மற்ற மரணங்கள் அனைத்தும் எந்த விதமான அறிவியல்பூர்வமான  காரணங்களும் இன்றி நிராகரிக்கப்படுகிறது. தடுப்பூசிக்குப் பிறகான பின்விளைவுகள் கோடிக்கணக்கில் இருக்கின்றன. சில நூறுகளைக் கூட அரசுகள் பதிவு செய்யவில்லை. AIM அமைப்பின் ஆய்வாளர்கள் இந்த மரணங்களைப் பல நூறு மடங்கு அதிகம் இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

# இப்போது தொடரும் தினசரி கொரொனா பாதிப்புகளிலும், இறப்புகளிலும் எத்தனை சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்ற அடிப்படை விவரமே அரசு புள்ளி விவரங்களில் இல்லை. செப்டம்பர் 17 ஆம் தேதி இங்கிலாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தடுப்பூசி போட்டவர்கள் – போடாதவர்கள் என்ற வேறுபாடின்றி கொரொனா தாக்கம் இருப்பதையும், தடுப்பூசி போட்டவர்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, கேரள அரசின் நவம்பர் முதல் வார அறிக்கையில் தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா தொற்று அதிகமாக ஏற்பட்டிருப்பதைப் பதிவு செய்துள்ளது. மேற்கண்ட அறிவியல் பூர்வமான காரணங்களின் அடிப்படையில் தடுப்பூசிகளின் மேலும், அதைக் கட்டாயப்படுத்தும் அரசுகள் மீதும் அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

பல மரபுவழி மருத்துவங்களை பல்லாண்டுகளாகப் பின்பற்றும் தமிழக மக்களை குறிப்பிட்ட மருத்துவத்தையோ, தடுப்பூசியையோ எடுத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துவது ஒரு மருத்துவத்துக்கு ஆதரவான, பன்முகத்தன்மைக்கு எதிரான செயல்பாடாகும். விருப்பமும், நம்பிக்கையும் உள்ளோர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளட்டும்.இயற்கை வாழ்வியலைப் பின்பற்றும் தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்களை கட்டாயப் படுத்துவது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது.

# இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மருத்துவ உரிமையின் அடிப்படையில் ஒரு இந்தியக் குடிமகன் தான் விரும்பும் மருத்துவத்தைத் தேர்வு செய்யும் உரிமையையும், விரும்பாத மருத்துவத்தை நிராகரிக்கும் உரிமையையும் பெற்றுள்ளான். இந்த சுற்றறிக்கை தனி மனிதனின் உரிமையில் தலையிடுகிறது. கூடுதலாக, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொதுவெளிக்கு வரவே கூடாது என்று அறிவிப்பதன் மூலம் தனிமனிதனின் வாழ்வுரிமை, தொழில் உரிமை என அனைத்துவிதமான உரிமைகளையும் பறிப்பதாக அமைந்துள்ளது.

# உச்ச நீதிமன்றத்தில் டாக்டர் ஜேக்கப் புலியேல் எனும் அலோபதி மருத்துவர், பிரசாந்த் பூஷன் மூலமாகத் தொடர்ந்த தடுப்பூசிக்கு எதிரான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

மருத்துவத் திணிப்பு என்பது படிப்படியாக தனி மனித உரிமைப் பறிப்பு எனும் நிலை வரைக்கும் சென்று விட்டது.தடுப்பூசியை ஆதரிக்கிறோமா? இல்லையா? என்பது ஒருபுறம் இருந்தாலும், அடிப்படை மனித உரிமை மீறலை நாம் ரசித்துக் கொண்டிருக்க முடியாது. இந்த கட்டாயத் திணிப்புக்கு எதிராக சமூக நல இயக்கங்கள் குரல் கொடுக்க வேண்டும். அவ்வறு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கத் தவறினால் அது வரலாற்றுப் பிழையாக மாறிவிடும்.

ஒன்றிய அரசின் பல சிக்கலான, சர்வாதிகாரமான திட்டங்களை எதிர்த்து நடக்கும் ஆட்சி தமழ்நாட்டில் நடந்து வருகிறது. சமூக நீதி, ஒற்றைக் கலாச்சாரம், கல்வி, மருத்துவம் என பல துறைகளிலும் மாற்றுக் கருத்துகளையும் உள்வாங்கி, சரியான திட்டங்களை முன்வைக்கும் தமிழக முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, மக்கள் உரிமை காக்கும் பணியைச் செய்வார்கள் என்பது என் போன்ற சமூகச் செயல்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பு.

கட்டுரையாளர்; அ.உமர் பாரூக் M.Acu, M.Sc (Psy), (Ph.D(Psy))

அக்கு ஹீலர், மருத்துவத்தின் அரசியல், வீட்டுக்கு ஒரு மருத்துவர், உடலோடு பேசுவோம் உள்ளிட்ட  பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

பின் இணைப்புகள்:

# தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

# ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தடுப்பூசி அறிவிப்பில் ’கட்டாயமில்லை’ என்ற குறிப்பு

# மார்ச் 2021 இல் ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணம்

# AIM மற்றும் தன்னார்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பூசி மரணங்கள் குறித்தஆவணம்

# அகமதாபாத் உயர்நீதிமன்றத்தின் தடுப்பூசி குறித்த ஆணை

# உயர்நீதிமன்றத்தின் தடுப்பூசி குறித்த ஆணை

# தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு..

பின்னிணைப்பு –1

பின்னிணைப்பு – 2

ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தடுப்பூசி அறிவிப்பில் ’கட்டாயமில்லை’ என்ற குறிப்பு https://www.mohfw.gov.in/pdf/FAQsonCOVID19VaccineDecember2020.pdf

 

பின்னிணைப்பு –3

 

பின்னிணைப்பு  –4

  1. AIM மற்றும் தன்னார்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பூசி மரணங்கள் குறித்தஆவணங்கள்

(https://drive.google.com/file/d/1uikc1a6_KDzUx7HNLrfwaI1NJRt0D_YP/view?usp=sharing)

 பின்னிணைப்பு –5

 

பின்னிணைப்பு –6

மேகாலயா உயர்நீதி மன்ற ஆணை

http://meghalayahighcourt.nic.in/sites/default/files//pil62021.pdf

 பின்னிணைப்பு –7

தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு..

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time