திருத்தங்கள் தேவைப்படும் குடியேற்ற மசோதா..!

- ஆர். எம்.பாபு

Emmigration Bill 2021 – குடியேற்ற மசோதா 2021

வெளி நாடுகளில் வேலை தேடி படித்தவர், படிக்காதோர் எனப் பலரும் முயற்சிக்கின்றனர். அதிகமான ஏமாற்றுவோரையும், ஏமாறுவோரையும் கொண்ட இந்த விவகாரத்தில் பாதிக்கப்படுவர்களையும், பாதிப்பு ஏற்படுத்துபவரையும்  பிரித்து பார்க்க வேண்டாமா அரசாங்கம் ? மனித நேயத்துடனும், மதங்களைக் கடந்தும் அணுக வேண்டியது இந்த விவகாரம்!

வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போலவே, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லிக்கொண்டு மோசடிகளை அரங்கேற்றுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த கோவிட் 19 சூழலில் இந்திய வெளியுறவுத்துறை பல்வேறு நெருக்கடிகளையும், அதை சமாளிப்பதற்காக பல்வேறு திட்டங்களையும் செயலாற்றியதன் மூலம் மிகப்பெரிய அனுபவம் பெற்று இருக்கும் சூழலில் தான் சில நடைமுறை பிரச்சனைகளை கையாளும் வகையிலே இந்த மசோதாவை அரசு இந்த குளிர்கால கூட்டத்தொடரில் இந்திய குடியேற்ற சட்டம் 1983 ஐ மாற்றி புதிய குடியேற்ற மசோதாவை Draft Emmigration Bill – 2021 ஐ மத்திய வெளியுறவுத்துறை இணையத்தில் பதிவேற்றி மக்களின் கருத்தை பதிவிடுமாறு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  https://mea.gov.in/emigrationbill.htm

வரைவு குடியேற்ற மசோதா, 2021 தற்போதுள்ள குடியேற்றச் சட்டம் 1983 ஐ மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது  வெளிநாடுகளில் இந்தியத் தொழிலாளர்கள் படும் சிரமங்களை பல்வேறு ஆய்வு அறிக்கைகள் வந்து இருப்பதையும் கருத்தில்கொண்டு இந்த மசோதாவை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

இந்த மசோதா பல்வேறுவிதமான கட்டுக்கோப்புக்களை வகுத்து இருந்தாலும் கூட, வெளிநாடு செல்ல இருக்கும் ஏஜெண்டுகளுக்கு மிக அதிக சுதந்திரத்தை கொடுத்திருப்பதோடு, ஏதேனும் ஒருவர் வெளிநாட்டில் சட்ட விரோதமாக இருந்தால் அவருக்கு ரூ. 50,000/= வரை அபராதம் என்று தெரிவித்திருப்பது பாதிக்கப்பட்ட அல்லது ஏமாற்றப்பட்ட நபரை மேலும் தண்டிப்பது போல உள்ளது.

புலம்பெயர்ந்தவர்களின் வகைப்பாடு

#  ஒழுங்கற்ற புலம்பெயர்ந்தோர்

#  ஒழுங்கற்று நுழைபவர்கள்

# கடத்தல்

# விசா திரும்பப் பெறுதல்

# தஞ்சம் தேடுவோர்

# தொழிலாளர் புலம்பெயர்ந்தோர்

# மாணவர்கள்

# குடும்பத்தினர்

புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான மனித உரிமை கட்டமைப்பு இல்லை.

புலம் பெயர்ந்து செல்லும் பாமரர்களுக்கு பிற நாடுகளில் உள்ள சட்டங்களை பற்றிய புரிதல் இல்லாததால், கல்வி அறிவில்லாதவர்கள் குற்றங்கள் புரிந்தவராக கருதி தண்டிக்கப்படுகிறார்கள்.  அதற்கான பொறுப்புக்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சட்டம் சர்வதேச தரத்துடன் ஒத்திசைக்கப்படவில்லை

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பெரும் கடனில் சிக்கிக் கொள்கிறார்கள், ஏனென்றால், அவர்கள் தங்கள் சேமிப்பை இழக்கிறார்கள், அதிக வட்டிக்கு வேலை செய்கிறார்கள், கடன் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள், மற்ற நாடுகளில் வேலை தேடுகிறார்கள்.

தொழிலாளர் இடம்பெயர்வின் பாலின அம்சம் குறித்து இந்த மசோதா தெளிவுபடுத்தவில்லை.

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு குறைவான முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்கள் முறைசாரா துறைகள் மற்றும்/அல்லது தனிமைப்படுத்தப்பட்ட தொழில்களில் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதில் தொழிலாளர், உளவியல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் பொதுவானதாக உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த சட்டத்திலே இந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகள் பற்றியோ குடும்பம் பற்றியோ அல்லது மாணவர்கள் பற்றியோ பெரிதாக விளக்கங்களும், திட்டங்களும் இல்லாதது மிகப்பெரிய குறையே

இடம்பெயர்வு தொடர்பான கொள்கைகள், செயல்முறைகளை நெறிப்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் செயல்பாட்டில் எளிதாகவும், சுமுகமாகவும் கொண்டு வருவதற்கும், இடம்பெயர்வதில் உள்ள சிரமங்களை குறைப்பதற்குமான வழிமுறைகளை இந்தியா உருவாக்க வேண்டும். பிற நாடுகளில் வேலை தேடும் நபர்களுக்கு வழிகாட்டும் ஆவணமாக செயல்படும் கொள்கைகளை உருவாக்குவதே இந்த தருணத்தின் தேவை. முக்கியமாக, புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குடும்பங்களின் கண்ணியம் மற்றும் மனித உரிமைகளை அது நிலைநாட்ட வேண்டும்.

முன்மொழியப்பட்ட மசோதாவில் எழுப்பப்பட்டுள்ள திருத்தங்களை பாராளுமன்றம் நிவர்த்தி செய்ய வேண்டும், வெளிநாட்டில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்தவும் மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், நிறுவப்பட்ட சர்வதேச தரத்தின்படி சுரண்டல் நடைமுறைகளுக்கு எதிராக அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

பிரிவு 2.1 (e)

“Emigrate” மற்றும் “Emigration” முறையான ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தம் இல்லாமலோ வெளிநாடுகளில் வேலை தேட இந்தியாவை விட்டு வெளியேறுவதைக் குறிக்கிறது.

திருத்த வேண்டிய அம்சம்

இந்த வரையறையில் மாணவர்கள் மற்றும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இல்லை, இவை இரண்டு முக்கியமான புலம்பெயர்ந்தோர் வகைகளாகும்.

பிரிவு 2.1 (f)

“Emigrant” என்பது இந்தியாவின் எந்தவொரு குடிமகனும், பதினெட்டு வயதுக்குக் குறையாத, வேலை தேடி புலம்பெயர முனையும்

திருத்த வேண்டிய அம்சம்

புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் மாணவர்களைக் கொண்டுள்ளனர் மற்றும் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம்.

பிரிவு 2.1(j)

“Human Smuggling” ஏதேனும் ஒரு நபர் குடிமகனாகவோ (Citizen) அல்லது வசிப்பவராகவோ (Resident) ஆகவோ இல்லாத வேறொரு நாட்டிற்கு சட்ட விரோதம் என்று தெரிந்தும் சட்டவிரோதமாக (Illegally) பணத்திற்கு அந்த நாட்டிற்குள் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்து தரும் செயலை குறிக்கிறது.

திருத்த வேண்டிய அம்சம்

“சட்டவிரோதமாக” என்ற வார்த்தைக்கு பதிலாக “ஒழுங்கற்ற” (Irregular) என்று மாற்றப்பட வேண்டும். ஒரு நாட்டில் ஒரு நபர், நிதி ஆதாயங்களைப் பெறுவதற்காக, அவர்/அவள் குடியுரிமை பெற்றவர் அல்ல.

United Nations – International Organisation for Migration (UN-IOM) – Glossary No. 3410.

“The procurement, in order to obtain, directly or indirectly, a financial or other material benefit, of the irregular entry of a person into a State, of which the person is not a national or a permanent resident.”

பிரிவு 3.(2)

அலுவலகம் குடியேற்றக் கொள்கை மற்றும் திட்டமிடலின் தலைவரைக் கொண்டிருக்கும்

The Bureau referred to in sub-section (1) shall consist of a Chief of Emigration Policy and Planning, who shall be an officer not below the rank of a Joint Secretary to the Government of India or equivalent, and other officers of such appropriate ranks as may be determined by the Central Government.

திருத்த வேண்டிய அம்சம்

“மசோதா” பல பங்குதாரர் பொறுப்பை வழங்குகிறது, இதில் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு முகவர்கள், கல்வி நிபுணர்கள் போன்ற அரசு சாரா பங்குதாரர்களை உள்ளடக்கியது.

The “Bill” provides multi-stakeholder responsibility which includes Government Officials and similar inclusion of non-governmental stakeholders such as recruiting agents, academic experts.

பிரிவுகள் 5(1) (2) (3)

சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதைத் தடுக்கவும் சரிபார்க்கவும், வரையறுக்கப்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைப்பது அவசியம்.

திருத்த வேண்டிய அம்சம்

சோதனைச் சாவடியில் தரவு சேகரிப்பு மையங்களை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்

பிரிவுகள் 9(i) (ii)

டிஜிட்டல் வடிவில் தரவுகளை  பராமரிக்கவும்: – அரசு நிறுவனங்களின் நிர்வாகத் துறை, குடியேற்றப் பணியகத்தில் இருந்து பிற நாடுகளுக்குப் பயணம் செய்யும் நபர்களின் தரவைச் சேகரிக்க வேண்டும். தடுப்புப்பட்டியலில் உள்ள வெளிநாட்டு முதலாளிகளின் பட்டியல். வேலைவாய்ப்புக்காக இடங்களுக்குச் செல்லும் நபர்களைச் சரிபார்க்க தரவை நிறுவவும்.

திருத்த வேண்டிய அம்சம்

இ-மைக்ரேட் போர்ட்டலில் தற்போதைய குடியேற்ற அனுமதித் தரவு கிடைக்கும் விதத்தில் யாரால் அதை பார்க்க முடியும்?  ஆகவே, பொதுமக்களால் பார்க்க வசதி செய்யப்படவேண்டும்.

பிரிவு 17(x)

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்ப பதிவு செய்த நபர்கள் இவர்களின் துணை எஜென்ட்டுக்கள் இந்த சட்டத்தின்படி நடக்கிறார்களா என்று கண்காணிக்கப்படும்

திருத்த வேண்டிய அம்சம்

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்ப பதிவு செய்த நபர்கள் இவர்களது முகவர்கள் பற்றிய தகவல்களும் ஒப்பந்தங்களும் கண்காணிக்க இந்த மசோதாவில் திருத்தம் வேண்டும்

பிரிவுகள் 25, 26.

அதிக எண்ணிக்கையிலான இந்திய குடியேற்றவாசிகளைக் கொண்ட நாடுகள், இந்தியக் குடியேற்றவாசிகள் தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிக்க தொழிலாளர் மற்றும் நலப் பிரிவை நிறுவலாம். சட்டத்தின் நோக்கத்திற்காக, இந்திய புலம்பெயர்ந்தோரின் குறைகளை மேற்பார்வையிடவும், மதிப்பாய்வு செய்யவும், வழிநடத்தவும், நிவர்த்தி செய்யவும் ஒரு குழுவால் தூதரகத்திற்கு அறிவிக்கப்படலாம்

திருத்த வேண்டிய அம்சம்

தொழிலாளர் மற்றும் நலவாரிய அமைப்பு மற்றும் அதிகாரங்கள் என சரியாக வரையறுக்கப்படவில்லை..

அதிக எண்ணிக்கை என்ற வரையறைக்கு பதிலாக எங்கெல்லாம் இந்திய தூதரகம் உள்ளதோ அங்கெல்லாம் என்று மாற்றி அமைக்க வேண்டும்.

பிரிவு 28

குழுவின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள்

திருத்த வேண்டிய அம்சம்

புலம்பெயர்ந்தோர் நலன் குழுவிற்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தவிர மாணவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர்ந்த பிற வகையினருக்கு அவர்கள் எவ்வாறு உதவுவார்கள் என்பதில் தெளிவு இல்லை. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தூதரகங்களால் தேவையான நிதி ஒதுக்கீடு தேவைப்படும்.

பிரிவு 30

ஆட்களை கடத்தும் செயலில் ஈடுபடுவோர் அல்லது குற்றமாக கருதக்கூடிய வேறு எந்த சட்டத்திலும் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!

திருத்த வேண்டிய அம்சம்

ஆட்கடத்தலுக்கான தண்டனைகளைக் குறிப்பிடுகிறது, ஆனால் அத்தகைய கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அல்லது மறுவாழ்வு பற்றி குறிப்பிடத் தவறிவிட்டது. இத்தகைய மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொத்தடிமைத் தொழிலாளர் முறை (அழித்தல்) சட்டம், 1976 ஐ சேர்க்க வேண்டும்.

 

பிரிவுகள் 31(1)

சட்டம் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முரணாக பிரிவு 46 (b) ஐ மீறி எவர் (அ) குடிபெயர்ந்தாலும். புலம்பெயர்ந்தோர் அபராதம் செலுத்த வேண்டும், இது பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாத சில சமயங்களில் ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாம்.

Whoever (a) emigrates in violation of Section 46 (b) in contravention of any provision of the act or the rules and regulations made thereunder.

திருத்த வேண்டிய அம்சம்

“வேலைவாய்ப்புக்காக அல்லது அது சம்பந்தமாக இடம்பெயர்வதற்கான நோக்கம்” என்பது முற்றிலும் தெளிவற்றது மற்றும் தீர்மானிக்க மிகவும் கடினமானதாகும்.

The term “intention to migrate for or with regards to employment “is absolutely vague and extremely difficult to determine.

பிரிவுகள் 31(1)

வெளிநாட்டு வேலைக்காகச் செல்லும் அனைத்து இந்தியப் பிரஜைகளும் விதிகளால் பரிந்துரைக்கப்படும் விதத்தில் ஒரு அறிவிப்பைச் செய்ய வேண்டும்

All Indian nationals proceeding for overseas employment shall make a declaration in such manner as may be prescribed by the rules.

திருத்த வேண்டிய அம்சம்

Declaration என்பது என்ன அம்சங்களை கொண்டு இருக்க வேண்டும் என்பது வரையறுக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர்; ஆர். எம்.பாபு

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time