இன்சூரன்ஸ் எடுப்பதை பெருமளவு தவிர்த்திடுங்கள்…!

-ஜானகிராமன்

’’இன்சூரன்ஸ் பண்றீங்களா சார்…” என்று யாராவது கேட்டால் உஷாராகிவிடுங்கள்!  இன்றைக்குப் பல இன்சூரன்ஸ்கள் தேவையற்றது. கட்டுபவர்களைவிட நடத்தும் முதலாளிகளின் லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டது.இதைப் படித்தால் இன்சூரன்ஸ் விஷயத்தில் உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது. 

இன்சூரன்ஸ் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி ஆகும். இவை மத்திய அரசு நிறுவனமாகும். பல வருடங்கள் இந்தியாவின் மிகச்  சிறந்த நிறுவனமாகத் தனித்து செயல்பட்டுவந்தது. ஆனால், எல்.ஐ.சியை இருக்க 2000வது ஆண்டில்  தனியார் இன்சூரன்ஸ்  நிறுவனங்கள் தொடங்கினார்கள். அன்று தொடங்கிப் பல ஆபத்துகளை  இன்சூரன்ஸ்துறை சந்திக்கிறது!  இன்று எல்.ஐ.சிக்கு போட்டியாக 24 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படுகிறது. பல லட்சம் கோடிகள் பரிமாறும் தொழில் ஆகும். எல்.ஐ.சியில் மட்டும் சில மாதம் பிரிமியம் கட்டி இடையில் நிறுத்தியவர்கள் தொகை மட்டும் பல ஆயிரம் கோடிகள் உண்டு.

நாம் கட்டுவது சிறிய தொகைதான் ஆனால் தாவது அசம்பாவிதம் நடந்தால் மிகப் பெரிய தொகையை இன்சூரன்ஸ்  நிறுவனங்கள் கொடுக்கிறது! அப்போ நிச்சயம் இந்த நிறுவனங்கள் நஷ்டத்தில்தானே செய்யப்படவேண்டும் என்று கேள்விகள் தோன்றலாம். ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை.. எந்த நிறுவனமும் நீண்ட காலம் நஷ்டத்தில்  இயங்க முடியாது இன்றும் எந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமும் நஷ்டம் என்று சொல்லி மூடியது இல்லை. இவ்வளவு பிரீமியம் வசூலித்து உள்ளோம் என்று ஒவ்வொரு வருடமும் அதிகமாகத்தான்  காட்டிவருகிறார்கள்.. உண்மையில் பல  கோடி  லாபத்தில்தான் இந்த நிறுவனங்கள் இயங்குகிறது. மிக  பிரம்மாண்டமாக இன்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வளர்ந்து உள்ளது.

பல லட்சம் மக்கள் தங்கள் பணத்தை இன்சூரன்ஸில் கட்டி வருகிறார்கள். அவற்றைச் சேமிப்பாக நினைத்து எதிர்காலம் பணத்தேவைக்கு இந்த பணம் உதவும் என்று நினைக்கிறார்கள்.. இன்னும் பல நபர்கள் 10 பாலிசி கூட எடுக்கிறார்கள். நான் சந்தித்த நபர் 23 பாலிசி எடுத்து உள்ளார். மிக ஆச்சரியமாகி எதற்கு இத்தனை பாலிசி  எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு எதிர்கால சேமிப்பு என்று சொன்னார். உண்மையில்  இன்சூரன்ஸ் என்பது சேமிப்பு இல்லை வாழ்க்கை பாதுகாப்பு ஆகும்.. இன்சூரன்ஸ் பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொண்டால் ஒரு பாலிசியை தவிர வேறு எந்த பாலிசியும் வேண்டாம் என்று தோன்றும் அவற்றை விரிவாக பார்ப்போம்… 

கடல் கடந்து தொழில் செய்துவந்த ஆரம்பக்காலத்தில் புயல், சூறாவளி போன்ற காரணங்களால் பலரின் சரக்கு கப்பல் கடல் நீரில் மூழ்கிவிடும்.. பல ஆண்டுகள் தொழில் செய்பவர்கள் நஷ்டம் அடைந்து பலர் தொழிலிலிருந்து விலகினர்.  பல வருடங்கள் கடந்தும் இதற்குச் சரியான தீர்வு இல்லாமல் இருந்தது.  பிறகு சரக்கு கொண்டு செல்பவர்களிடம்  இருந்து சிறு தொகையை வசூலித்து யாருடைய சரக்குகள் கடல் நீரில் முழுகிவிடுகிறதோ அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்குத் தகுந்தாற்போல் வசூலித்த தொகையைக் கொடுத்தனர். இவை மிகச் சிறந்த முறையாக இருந்தது. பலரும் மீண்டும் தொழில் செய்யத் தொடங்கினர். இவைதான் இன்சூரன்சின்  தொடக்கம்.

காலப்போக்கில் இன்சூரன்ஸில் பல மாறுதல்கள் அடைந்து இன்று இன்சூரன்ஸ் என்பது சேமிப்பு என்று ஆகிவிட்டது. உண்மையில் சேமிப்பு என்பது வேறு காப்பீடு(insurance) என்பது வேறு. இன்றும்  இதில் பலருக்குக் குழப்பங்கள் உண்டு. நம் பணத்தைச் சேமிக்கவும் வேண்டும் அதே சமயம் வாழ்க்கை பாதுகாப்புக்கும் இருக்க வேண்டும். ஆனால் இவை இரண்டையும் இன்சூரன்ஸ் வழியாக அடையமுடியாது. உதாரணம் மூலம் பார்த்தால் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.

பணத்தை சேமிக்கப் பல வழிகள் உண்டு. வங்கி சேமிப்பு, தங்கத்தில் முதலீடு, இடம் வாங்குவது, நல்ல நிறுவன ஷேர் வாங்குவது, பரஸ்பர நிதியில் முதலீடு  செய்வது, அரசு கடன் பத்திரத்தில் முதலீடு செய்வது என்று பல வழிகள் உண்டு.. ஆனால் சேமிப்பில் இன்சூரன்ஸ்  என்பதை இணைக்கக் கூடாது.  உங்களுடைய  மாத  வருமான 25000 ரூபாய் என்று உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். இதில் வீட்டு வாடகை, மளிகை, கடன் கட்டுதல், சேமிப்பு, இதர செலவுகள் இருக்கும். இந்தியாவில் பல குடும்பங்கள் வீட்டில் உள்ள ஒரு நபரின் வருமானத்தில்  இயங்குகிறது. திடீர் என்று அந்த நபர் வேலை இழக்கலாம் அல்லது தொழில் நஷ்டம் அடையலாம் அப்பொழுது மீண்டும் புதிய வேலை கிடைக்கும் வரை நாம் சேமித்த பணத்திலிருந்து அடுத்து சில மாதங்கள் வீட்டுச் செலவு செய்து கொள்ளலாம்.   இதற்குச் சேமிக்கும் பணம் பயன்படும்.

எப்படி சரக்கு கொண்டு சென்ற கப்பல் நீரில் முழுகினால் மீண்டும் அவற்றை எடுத்து உபயோகப்படுத்த முடியாதோ அதே போல் பணம் சம்பாதிக்கும் நபர் எதிர்பாராமல் அவருக்கு அசம்பாவிதம் நடந்துவிட்டால் அந்த குடும்பம் அடுத்த மாதத்தில் இருந்து என்ன செய்யும். காரணம் இவரை நம்பித்தான் குடும்பம் இருந்தது. வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் போன்ற பல கடன்கள் இருக்கும். இந்த இடத்தில் சேமிக்கும் பணம் மட்டுமே பயன்படாது. இந்த இடத்தில் தான் நமக்கு உதவ இன்சூரன்ஸ் வருகிறது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்வோம். சேமிக்கும் இடத்தில்  இன்சூரன்ஸ் வரவில்லை.

அந்த நபர் எவ்வளவு இன்சூரன்ஸ் எடுத்து உள்ளார் என்று பார்த்து அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் அவருடைய நாமினிக்கு அந்த பணத்தைக் கொடுத்துவிடும். இதற்கு மட்டும் நாம் இன்சூரன்ஸ் எடுத்து கொள்ள வேண்டும் இதைத் தவிர்த்து மற்ற எந்த காரணத்திற்கும் நாம் இன்சூரன்ஸ் எடுப்பதைத் தவிர்ப்போம். இவற்றை Term insurance என்று பெயர். ஆனால் இன்று நம்மிடம் விற்பனை செய்யப்படும் இன்சூரன்ஸ் பெரும்பாலும் இவ்வளவு பணம் கட்டினால் இவ்வளவு தொகை வரும் நல்ல சேமிப்பாக இருக்கும் என்பதாகவே இருக்கும். இந்த வகை இன்சூரன்ஸ் பாலிசியில் எடுப்பது தவிர்க்கவேண்டும்.  உதாரணமாக நம் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ULIP பாலிசி, சில வருடங்களுக்கு ஒருமுறை சிறு தொகையைத் திருப்பி தரும் மணிபேக் பாலிசி, 60 வயதிற்குப்பிறகு வருமானம் என்று சொல்லக்கூடிய ஓய்வுகால பாலிசி ஆகும்.

இன்சூரன்ஸ் தொடக்கம் பாதிப்பு அடைந்த சரக்கு கப்பல் நபர்களுக்கு மட்டுமே பணம் கொடுத்தனர். அதே நேரம் ஒழுங்காகச் சரக்கு சென்ற கப்பல் நபர்களுக்கு எந்தவித இழப்பீடும் தரவில்லை. அவர்கள் கட்டிய சிறுதொகையும் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படாது. ஆனால் அவர்கள் மிகப் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். நம் சரக்கு கப்பல் கவிழ்ந்தாலும் பணம் கிடைத்துவிடும் என்ற மிக பெரிய நம்பிக்கை இருந்தது. தொடர்ந்து தொழில் செய்தனர். இன்றைய காலத்திலும் நாம் அவற்றையே பின்பற்ற வேண்டும்.. நம் குடும்பம் எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து டேர்ம் இன்சூரன்ஸ்(Term insurance) எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்கு நாம் சேமிப்பு என்று கட்டும் இன்சூரன்ஸ் பாலிசியை விட மிக குறைவான தொகையே கட்டினால் போதும் உதாரணமாக 30 வயது நபர் 50 லட்சம் தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் ஒருவர் எடுத்தால் வருடத்திற்கு  3900 ரூபாய் மட்டுமே கட்டுவார். அவருக்கு ஏதாவது என்றால் அவர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாயை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும்.

வருடம் 3900 ரூபாய் என்பது சிறிய தொகைதான் ஆனால் இந்த இன்ஸுரன்ஸில் யாரும் கவனம் கொள்வதில்லை. சேமிப்புக்கு என்று சொல்லப்படும் பாலிசியில் வருடம் 10000 ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதைவிட சிறிய தொகை கட்டும் டேர்ம் இன்சூரன் பாலிசியை ஒருவர் எடுத்துக் கொண்டு மீதி தொகையை வேறு முதலீட்டில் செலுத்தலாம். இதன் மூலம் வேலை, தொழில் போனால் அதில் இருந்து மீண்டு வரும் வரை சேமிப்பு பணத்தை எடுத்து செலவு செய்யலாம் மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி இருப்பதால் குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்..

ஒருவர் எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். ஒருவரின் ஆண்டு வருமானம் எவ்வளவோ அந்த தொகையை 12ஆல் பெருக்கிக்கொள்ள வேண்டும். மூன்று லட்சம் ரூபாய் வருட வருமானம் என்றால் அவற்றை 12ஆல் பெருகினால் 3600000(முப்பத்தி ஆறு லட்சம்) லட்சம் தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்தால் போதும். அதற்கு வருடம் 30 வயது நபருக்கு 3000 ரூபாய் கட்டினால் போதும். வயது பொறுத்து டேர்ம் இன்சூரன்ஸ் கட்டும் தொகை மாறுபடும். தொழில், வேலை செய்பவர் அனைவரும் எடுக்க வேண்டிய பாலிசி ஆகும்.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time