கொரானா  பெயரில் கொடுமைகளை அரங்கேற்றுவீர்களா..?

-எழில் முத்து

மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள்..! ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், கெடுபிடிகள், நெருக்கடிகள்! இன்னும் எத்தனைக் காலம் கொரானா,ஒமிக்கிரான் பயம் காட்டி மக்களை இம்சிக்க போகிறார்களோ..? வாழ்வதா..? சாவதா..?

மக்களை நிம்மதியாக வாழவிடக் கூடாது என உலகில் சில அரசாங்கங்களே சங்கல்பம் எடுத்துக் கொண்டதாக நினைக்கத் தோன்றுகிறது!

நோய்கள் வரும், போகும்! மனிதகுலம் நோயை எதிர்த்துப் போராடும் மனவலிமை கொண்டது தான்! மனிதனின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி வரலாற்றில் பல நோய்களை எதிர் கொண்டு வெற்றி பெற்றுள்ளது.

இன்றைக்கு அரசாங்கங்கள் கடை பிடிக்கும் அராஜக அணுகுமுறைகள் நோய்க்கு எதிரானதாக இல்லை. மனிதனின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதாக உள்ளது!

இவர்களால் நோயையை இது வரை இன்னதென்று சரியாக அடையாளம் காண முடியவில்லை. அப்படி அடையாளம் காண முடியாத நோய்க்கு தடுப்பூசியை கண்டு பிடித்துவிட்டார்களாம்! ஆக, நோய்க்கான சரியான மருந்தையும், தீர்வையும் நோக்கி இவர்களின் அணுகுமுறை இல்லை.

தடுப்பூசி போட்டவர்களில் குறைந்தது ஐந்து சதமானோர் தோல் அரிப்பு, கண் எரிச்சல், நெஞ்சு வலி, உடல் பலவீனம் என அவஸ்த்தைக்கு ஆளாவதை கணக்கில் எடுத்துக்  கொள்ள மறுப்பது என்ன மாதிரியான அரச நீதியாகும்? தடுப்பூசி கர்ப்பிணி பெண்கள் பல பேருக்கு கர்ப்பம் கலைந்து வருகிறதே..இந்தப் பாவச் செயலை செய்யும் அதிகாரத்தை யார் உங்களுக்கு தந்தது?

இந்த தடுப்பூசியில் விளைவை இன்னும் ஐந்தோ, பத்தோ வருடம் கடந்து நாம் எதிர்கொள்ள நேருமானால்..அதை நினைக்கும் போதே நடுங்குகிறது.

மருத்துவ மாபியாக்களின் பிடியில் அரசாங்கங்கள் கட்டுண்டு கிடக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உள்ளுர் டாக்டர்கள் வரை மருத்துவ மாபியாக்கள் விரித்த வலையில் விழுந்து, தடுப்பூசியை கட்டாயப்படுத்துகிறார்கள்! கொஞ்சமாவது மனசாட்சியும், சுய புத்தியும் உள்ள மருத்துவர்கள்  இருக்கமாட்டார்களா..? என்று பார்த்தால், புகழேந்தி போன்ற ஒரு சிலர் தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள்!

ஒரு வேளை அதிகரித்து வரும் உலக மக்கள் தொகையை குறைக்கவே, திட்டமிட்டு தடுப்பூசியைத் தருகிறார்களோ என்னவோ!

முதலில் கொரானா வந்தது! ஏகப்பட்ட கெடுபிடி தந்தனர். அதை சமாளித்து மீண்டு வரும் போது தான் தடுப்பூசியை திணித்தார்கள். தடுப்பூசி திணிக்க தொடங்கிய பிறகு தான் கொரானா பரவல் அதிகரித்தது. இரண்டு தடுபூசியும் செலுத்தப்பட்டதின் விளைவாக தற்போது புதிதாக வைரஸ் தன்னை உருமாற்றிக் கொண்டு ஒமிக்ரானாக வந்து நிற்கிறது.

உருமாறிய வைரஸ் எப்படி பழைய தடுப்பூசிக்கு கட்டுப்படும். இந்த அடிப்படை கேள்விக்கு பதில் சொல்லாமல் இரண்டு டோஸ் முடித்துவிட்டால் பூஸ்டர் ஊசி போடுங்கள் என்கிறார்கள்! இப்படி வாழ்நாளெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஊசி போட்டால் மனிதன் அற்பாயுசில் தான் சாவான்!

கொரனா என்ற நோயே திட்டமிட்டு உலக சுகாதார நிறுவனம் – அலோபதி மருத்துவம்  தங்களின் வியாபார சந்தைக்கு, சூதாட்டத்துக்கு மக்களை ஆட்படுத்தி  கொள்ளை அடிக்க போட்ட திட்டமிட்ட சதி என்று சொல்லப்படுவது பற்றி எனக்கு சரியாக விபரம் தெரியாது.

ஆனால், முதலில் இதற்கு சீனா மேல் பழிபோட்டு முதலில் குளிர்காய்ந்தனர். அப்படியே இது சீனாவில் தோன்றினாலும் எச்சரித்த அத்தேசம் சில மாதங்களிலேயே அதனை ஒரு மாகாணத்துக்குள்ளேயே அடக்கி, ஒடுக்கி அதிலிருந்து விடுபட்டது. ஆனால், உலக சுகாதார நிறுவனம் இதனை தனக்குச் சாதகமாக்கி அலோபதி மருத்து வியாபாரத்துக்கு அடிகோலிட்டு, பல உயிர்களை தடுப்பூசி என்ற பெயரில் மருந்து சந்தையை உருவாக்கி கொன்றொழித்தது. கொன்றொழித்தும் வருகிறது.

இதற்கு அச்சமும் அடிமைச் சிறுமதியும் கொண்ட தேசங்கள் மக்களை அச்சத்துக்கும், பயத்துக்கும் ஆளாக்கி, பொது முடக்கம் என்ற பெயரில் மக்களின் வாழ்வியலில் சித்து விளையாடி வருகிறது.

குறிப்பாக இந்நோய் இந்தியாவில் பன்னெடுங்காலமாக சளி, இருமல், காய்ச்சல் என்றவகையில் இருந்து வருகிறது. இதனை நமது எளிய மருத்துவமுறைகளால், சித்த, ஆயூர்வேத மருந்துகளால் தீர்த்து வருவது அனைவரும் அறிந்ததே. மேலும் இந்நோயானது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டவர்களாயே தாக்குகிறது என்பது மருத்துவக் கண்டுபிடிப்பு.

இதன் பேரில் தடுப்பூசி என்ற பெயரில் உலகில் உள்ள ஆறு பெரும் நிறுவனங்களுக்கு தயாரிப்பு உரிமை வழங்கி வர்த்தக சூதாட்டம் நடைபெறுகிறது என்பதே நிதர்சனம்.

இப்போது மேலும் ஒரு புதிய கண்டுபிடிப்பாக ஒமைக்ரான் என்று உருவாக்கு, ஏற்கெனவே இரண்டு ஆண்டுகளாக மக்களின் வாழ்வாதாரத்தை வாழ்வியலை முடக்கிப் போட்டு குளிர்காயும் இந்திய அரசும், அரசியல் வியாபாரிகளும் கொள்ளையடிக்க தொடர்ந்து ‘ஊரடங்கு’ என்ற பெயரில் சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறது. இதனை உண்மையை உணர்ந்த அரசியலாளர்களும், புத்திஜீவிகளும் ஊடகங்களும் வாய் மூடி மெளனியாக இருப்பது பெரும் அவலம். இது 200 ஆண்டுகாலம் அடிமைப்பட்டுக் கிடந்த மனோபாவத்தின் அடையாளமா?

இதன் பேரில் நடக்கும் அவலங்கள், மக்களை அலைகழிக்கும் செயல்பாடுகள் சொல்லிமாளாது. உலகத்தில் கொரானாவைத் தவிர, மற்ற நோய்களே இல்லையா? மற்ற வகை நோய்க்கு ஆட்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை மறுக்கபடலாமா? அரசுமருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில், பல்வேறு நோய்களுக்கு அட்மீட் ஆன நோயாளிகளை அதிரடியாக வெளியேற்றி வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்று டிஸ்சார்ஜ் செய்யும் அவலம் நடைபெறுகிறது.

இந்நோயாளிகளை அரவணைக்கும் குடும்பத்தினர் இதனால் விழிபிதுங்கி நிற்பதும், தனியார் மருத்துவமனைக்குச் அழைத்துச் சென்று அவர்களின் மருத்துவக் கொள்ளைக்கு ஆட்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும், பலர் உயிரை இழக்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதன் விளைவாகவே உயிரை பறிகொடுத்தோர் எண்ணிக்கை அதிகம்.

130 கோடிக்கு மேல் வாழும் தேசத்தில் ஒரு சில லட்சம் பேர்  இந்நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த மக்களை பலிகடாக்குவது என்ன நியாயம்…?

இப்போது ஒமைக்ரான் பயம் காட்டி வர்த்தக பொருட்காட்சி, புத்தகக் கண்காட்சிகள் தடை போட்டுவிட்டனர்! புத்தகக் கண்காட்சியை நம்பித் தான் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் ஆயிரக்கணக்கான புத்தகங்களை இலட்சக்கணக்கில் அச்சிட்டு  இதற்காக செலவு செய்து உள்ளனர். ஏற்பாடுகள் முழுமை பெறவுள்ள தருவாயில் இப்படி அதிரடியாக தடை போட்டால் கொடுமை அல்லவா? அத்தனையும் விழலுக்கு இரைத்த நீராக செல்வதும், இதனால் பாதிக்கப்படும் புத்தக நிறுவனங்கள், குறும் வியாபாரிகள் நிலை வீதிக்கு தள்ளப்படுகிறது.

புத்தகக் கண்காட்சி திறப்பு விழாவுக்கு ஜனவரி ஆறாம் தேதி முதல்வர் தான் தேதி கொடுத்தார். ஆனால், தற்போது நாம் கேள்விப்படுவது என்னவென்றால், தமிழகத்தில் முதல்வருக்கும் மீறிய ஒரு அதிகார மையமாக சுகாதாரத்துறை செய்லாளர் ராதா கிருஷணன் செயல்படுகிறார். அவருக்குள்ள மத்திய அரசு மற்றும் பன்னாட்டு தொடர்புகள் காரணமாக பல்லாண்டுகளாக சுகாதாரத் துறையில் கோலோச்சுகிறார். அவர் ஒன்றைச் சொன்னால், அதை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.

அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளை எல்லாம் கொரானா பரவல் காரணம் காட்டி வெளியேற்றும் ஈவிரக்கமற்ற கொடிய செயலை அமைச்சரையும் மீறி அமல்படுத்துகிறார் ராதா கிருஷ்ணன். இன்னும் என்னென்ன கொடுமைகளை இந்த அதிகப் பிரசங்கி அதிகாரியால் தமிழக மக்கள் சந்திக்கப் போகிறார்களோ..?

மேலும் இப்போதுதான் பள்ளிக்குச் சென்று சகோதர உணர்வுபூண்டு மகிழ்ந்து பாடம் பயிலத் துவங்கி இருக்கும் மாணவர்கள் படிப்பை  முடக்குவது சரியல்ல. இல்லாத கட்டுப்பாடுகளை விதித்து சிறு, குறு தொழில் நடத்துவோரை முடக்கிப்போடுவதும் என்ன நியாயம்…?

இது குறித்து பல முக்கிய அரசியல் கட்சிகள் வாய் மூடி மெளனிகளாக இருப்பதும், ஒத்து ஊதுவதும் என்ன அவலம்!

இந்நோய்க்கு நமது பாரம்பரிய மருந்துகளான, சித்தம், ஆயூர்வேத மருத்துவமுறைகளை கையாள மறுப்பதின் பின்னணி என்ன?

மேலும் இதன் வழியே ஏராளமானோர் சிகிச்சைப் பெற்று பலன் அடைந்துள்ளதைக் கூட அங்கீகரிக்க மறுப்பது ஏன்? மற்ற மருத்துவத்தில் உள்ள நல்ல அம்சங்களை பயன்படுத்திக் கொள்வதில் அரசுகளுக்கு என்ன தயக்கம்?

ஆக ஒட்டுமொத்தமாக இந்த நோயின் மருத்துவ சூதாட்டத்துக்கு அரசுகள் துணை போய், பிற நோய்களான புற்றுநோய், முடக்குவாதம், டி.பி. வாத நோய்கள் என பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்து, மேலும் நோய்களுக்கு ஆட்படுத்தி, மக்களின் அன்றாட வாழ்வியல் செயலினை முடக்கி, சதா சர்வ காலமும் துன்பத்தில் ஆழ்த்த அரசு முயற்சிக்கிறதோ என்று நினக்காமல் இருக்க முடியவில்லை.

இது குறித்து மக்களிடத்தில் எச்சரிக்கை தேவை.

கட்டுரையாளர்; எழில் முத்து,

பத்திரிகையாளர்- எழுத்தாளர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time